இருக்கிறது என்கிறார் "இறைவன்" தள நிர்வாகி சுந்தர் அவர்கள்!! "நம்" என்றால் யார்? இன்று வாழ்ந்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களா? இன்று வாழ்ந்துக்கொண்டு இருக்கும் மனிதர்களா? யார் இந்த "நம்"? அல்லது "இறைவன்" தள நிர்வாகியும் அவரது கருத்துக்கு ஆமாம் போடும் நபர்கள் தான் அந்த "நம்"ஆ!?
எல்லாவற்றிர்கும் காலத்தை நியமித்திருக்கும் தேவன், இதை மட்டும் "நம்" கைகளில் விட்டு விட்டார் போல்!!
கிறிஸ்து பிறப்பிற்கு 600 ஆண்டுகள் முன் அதை தீர்க்கதரிசனமாக எழுதிய ஏசாயா அவர் எந்த வருடம் பிறப்பார் என்று சொல்லவில்லை!!
இந்த காலம் எந்த காலம் என்று தேவனுடைய ஆவியைக்கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயாவிற்கு தெரியவில்லையே!!
காலத்தை தேவன் நம் கைகளில் கொடுக்கவில்லை. கிறிஸ்துவின் வருகையும் அப்படியே!! அதற்குண்டான அடையாளங்களை நமக்கு தெரிவித்திருக்கிறார், ஆனால் இந்த வருடம் இந்த காலத்தில் வருவார் என்பது நமக்கு தெரியப்படுத்தவில்லை!! இப்படி புறுடா விட்டு பலர் சபைகளை ஸ்தாபித்தும் இருக்கிறார்கள்!! வேதமாணவர்கள் சபையிலும் கூட ஆண்டவரின் வருகையின் காலத்தை அநேகர் சொல்லுகிறார்கள்!! ஆனால் வேதம் அவரின் வருகையின் அடையாளத்தை சொல்லுகிறது, காலத்தை அல்ல!!