இதோ மற்றுமொரு விசுவாசத்தை போதிக்கும் இன்னும் ஒரு தளம். வித்தியாசங்கள் நிறைந்த தளம், விசித்திரமான தளம். தனி மனித சுதந்திரம் இருக்கும் இந்த காலத்தில் தள நிர்வாகியின் விசுவாசத்திற்கு விரோதமான கருத்துக்களுக்கு இடம் இல்லையாம்!!
அதாவது என் ராகத்தில் பாடவேண்டும் என்றால் சேர்ந்து பாடுங்கள், இல்லாமல் போனால் இந்த இசைகுழுவில் உங்களுக்கு இடமில்லை என்பது போல்.
மிகவும் உறுத்தியது அவரது பதிவின் இந்த பகுதி.
-//வேதத்தை பற்றி :
வேதத்தின் வழியாக தேவனை பார்க்க முடியும் என்றாலும், தேவனுடனான உறவில் பலப்பட வேதத்திற்க்கு அப்பாலும் அதாவது ஒரு எறும்பிடம் பாடம் கற்க வேண்டி வந்தாலும் தயங்க மாட்டோம் என தெரிவித்து கொள்கிறோம். உதாரணமாக திரியேகம் அல்லது திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை. ஆனால் இந்த வார்த்தையின் மூலமாக தேவனுடனான உறவு வலுப்பெறும் என்பதால் இந்த வார்த்தையை என்ற குற்ற உணர்வும் இல்லாமல் உபயோகிக்கிறோம். இது போன்ற விஷயத்தில் யாரும் எங்களை குற்றப்படுத்த முடியாது என்பதை தெரிவித்து கொள்ளுகிறோம். தேவனும் எங்களை குற்றப்படுத்த மாட்டார் எனவும் அறிவோம். இல்லாத வார்த்தை இல்லாததுதான. அதற்காக வசனங்களை தேடி எடுத்து திரித்துவத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.//-
இது போன்ற துனிச்சலான வேதத்திற்கு புறம்பாக சொல்லும் இவர் எந்த தேவனை குறித்து தளத்தில் எழுதுவார்? வசனம் சொல்லுகிறது,
இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இது தான் நம் விசுவாசம் என்பது எப்படி உண்டாகிறது (தீமையினால்) என்று வசனம் சொல்லுவதை கிறிஸ்தவர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டும்!!
யாக்கோபு 5:12 விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.
பாவம் பிழைப்பில்லாமல் வேதத்தில் இவர்கள் இப்படி எல்லாம் வசனம் எழுதிக்கொடுத்தால், அதை போதிக்கும் நாங்கள் அதில் இல்லாவிட்டால் என்ன, எங்களின் விசுவாசமே மேன்மையானது என்பதை துனிச்சலாக சொல்லுவது தான் ஆச்சரியம். கடைசி காலத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகள் அநேகராக எழும்புவார்கள் என்று வேத வாக்கியம் நிறைவேறி வருவதில் சத்தியத்தின் மேல் வாஞ்சையுள்லவர்களுக்கு சந்தோஷமே!!
வசனம் தேவையில்லாமல் போதனை செய்ய வந்திருக்கும் ஒரு புதியத் தளம்! தொடரட்டும் அவரின் பணி!!