ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விசுவாசம் வைத்து போதித்துக்கொண்டு இருக்கிறார்கள்!! ஒரு கேள்வி என்வென்றால், இவர்கள் இப்படி மாறுபட்ட ஆவியில் மாறுப்பட்ட உபதேசங்களை கொடுத்தாலும், ஒன்றில் மட்டும் ஒன்றாக இருக்கிறார்களே, அதாவது 'தேவன்' இவர்களிடத்தில் பேசியதாக சொல்லுவதில், "பெட்டிக்கடை ஊழியர்" முதல் "நட்சத்திர ஹோட்டல் ஊழியர்" வரை ஒன்றாக இருக்கிறார்களே!! இது எப்படி?? ஒரே ஆவி, ஒரே விசுவாசத்தை போதிக்கும் வேதம் இப்படி மாறுப்பட்டவர்களிடம் ஒரே தேவன் வந்து பேசத்தான் முடியுமா?