kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லூக்கா 15:7


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
லூக்கா 15:7


லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எல்லோரும் பாவிகள் என்கிறது வேதம் ஆனால் இந்த வசனமோ அதற்கு முறனாக இருக்கிறதே!! இங்கு மனந்திருப்பச் சொல்லுவது ஒரே ஒரு மனுஷனையா அல்லது வேறு எதையோ இந்த வசனம் சொல்லுகிறதா??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Yes. A difficult question. And again jesus says. I come to call sinner not the righteous. This statement saying there is some righteous , how can they called as righteous i think they are called as righteous by faith and faithful works and expectation of redeemer the christ

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேவனின் படைப்புகளில் மனிதன் ஒருவனை தவிர வழிதப்பி போனது எதுவும் கிடையாது.

ரோமர் 3:12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை

ரோமர் 3:10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை

இப்படியாக ஆதாமின் பாவத்தினால் அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஜீவனை விட்டு அவன் மரணத்திற்குள் சென்றான் அவனுடன் அவனின் சந்ததிகளான முழு மனிதக்குலமும் பாவ சந்ததியாக இருக்கிறது. ஆனால் தேவனின் மற்ற படைப்புகளான சிருஷ்ட்டி அனைத்தும் அது எப்படி படைக்கப்பட்டதோ அப்படியே இன்று வரை செயல்ப்பட்டு வருகிறது! எதிலும் எந்த மாற்றமும் இல்லை!!

இப்படி தேவனின் பார்வையில் அவரின் பல்வேறு சிருஷ்ட்டிபுகளில் ஒருவனான மனிதன் (முழு மனிதக்குழம் ஆதாமிற்குள் அடங்கும்) மாத்திரமே பாவத்தில் விழுந்து போனான். ஆகவே கிறிஸ்து இயேசு வந்தது இந்த ஒரு மனிதக்குலத்தை மீட்பதற்கு மாத்திரமே!! அவரின் பார்வையில் அவரின் மற்ற சிருஷ்டிகள் அனைத்தும் நீதிமான்களே, ஆகவே தான் அவர் நீதிமான்களை அல்ல, பாவிகளை தேடி வந்ததாக வேதம் கூறுகிறது. இந்த ஒரு மனிதக்குலம் மாறிவிடுவதே பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாக்கும்!!

இந்த வசனம் இன்று சபைகளில் எப்படி போதிக்கப்படுகிறது என்றால், ஒரு மனிதன், அதாவது எந்த ஒரு தனிப்பட்ட மனிதன் பாவத்தில் இருந்து வெளியேறினாலே பரலோகத்தில் மகிழ்ச்சி என்று, என்னமோ அதற்கு பின் சபைக்கு போகிறவர்கள் பாவமே செய்யாதது போல். இந்த வசனம் சொல்லுகிறது அவர் நீதிமான்களை தேடி வரவில்லை என்று ஆனால் ரோம் 3:10ஐ வாசியுங்கள், முறனாக இல்லையா!?

இந்த உவமையின் படி மனிதக்குலம் ஒன்று மட்டும் தான் பாவத்தில் இருக்கிறது, அவரின் சிருஷ்டி அனைத்தும் அதன் அதன் வேலையை சிறப்பாக செய்து வருகிறது (நீதிமான்கள்). ஆக கிறிஸ்து இயேசுவின் பலியின் பயனால் மனிதன் பாவமும், அதன் சம்பளமான மரணத்திலிருந்து மீட்கப்பட்டு தேவ திட்டம் நிறைவேறுவதே மகிழ்ச்சிக்கான காரணமே தவிர, ஒரு தனிப்பட்ட மனிதன் திருந்துவதை இந்த வசனம் போதிப்பதில்லை!!

காதுள்ளவன் கேட்க்கடவன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எல்லோரும் பாவிகள் என்கிறது வேதம்; ஆனால் இந்த வசனமோ அதற்கு முறணாக இருக்கிறதே!! இங்கு மனந்திரும்பச் சொல்லுவது ஒரே ஒரு மனுஷனையா அல்லது வேறு எதையோ இந்த வசனம் சொல்லுகிறதா??//


சகோ.பெரியன்ஸ் அவர்களே! இப்படி ஒரு கேள்வியை கேட்டு, லூக்கா 15:7-க்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இந்த ஒரு வசனம் மட்டுமின்றி மேலும் பல வசனங்கள் “எல்லோரும் பாவிகள்” எனும் கூற்றுக்கு முரணாக உள்ளன. அவற்றிற்கும் விளக்கம் தரும்படி தங்களை வேண்டுகிறேன்.

ஆதி. 6:9 நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.

யாத். 23:7 குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக;

(தேவன் இப்படிச் சொல்வதால், குற்றமில்லாதவனும் நீதிமானும் இருக்கக்கூடும் என அர்த்தம் கொள்ளலாம் அல்லவா?)

உபாகமம் 25:1 நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.

சங்கீதம் 1:6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
(சங்கீதக்காரன் இப்படிச் சொல்வதால், இவ்வுலகில் நீதிமான்கள் உண்டு என அர்த்தம் கொள்ளலாம் அல்லவா?)

சங்கீதம் 34:15 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

நீதி. 11:31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

பிரசங்கி 8:14 பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

ஏசாயா 3:10 உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

ஏசாயா 57:1  1 நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

எசேக்கியேல் 18:5-9 ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும், ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

எசேக்கியேல் 33:18,19 நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான். துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

மல்கியா 3:17,18  என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே .... நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

மத்தேயு 1:19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

மத்தேயு 10:41 நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.

மத்தேயு 13:17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 13:43 அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

மத்தேயு 13:49,50 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

மத்தேயு 23:35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.

2 பேதுரு 2:8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க ...


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தாங்கள் குடுத்துள்ள வசனத்தில் இருப்பவர் அனைவருமே பாவிகள் தான்!! "பாவத்தின் சம்பளம் மரணம்" என்கிற வசனம் இவர்களுக்கு பொருந்தியதால் தான் இவர்கள் அனைவருமே நோவா, லோத் போன்றவர்களும் மரித்து போனார்கள். தன் பெண்கள் மூலமாக பிள்ளைகள் பெற்ற லோத் எப்படி நீதிமானாக இருக்க முடியும். இவர்கள் உட்பட அனைவருக்குமே லூக். 15:7 பொருந்தும்!!

விரிவாக பின்பு பதில் தருகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

"ஒரே" பாவி மனுக்குலம் மட்டும்தான். அந்த ஒரே பாவியும் மனந்திருப்புவான்(Change in thinking)



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஏசாயா 64:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

Isaiah 64:6 (New Living Translation)
 6 We are all infected and impure with sin.
      When we display our righteous deeds,
      they are nothing but filthy rags.
   Like autumn leaves, we wither and fall,
      and our sins sweep us away like the wind.

இது தான் நாம் பார்க்கும் நீதி. அது அழுக்கான கந்தைபோல் இருக்கிறதாம். உலகெமுங்கும் சென்று நற்செய்தியை சொல்ல சொன்ன இயேசு கிறிஸ்து நீதிமான்களை விட்டு விட்டு பாவிகளிடத்தில் மாத்திரம் சொல்லுங்கள் என்று சொல்லவில்லை.

ரோமர் 3:10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

Romans 3:10 (New Living Translation)
10 As the Scriptures say,
   “No one is righteous—      not even one.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Somebody saying. That romans states word. St paul using gentiler and jews are sinner's. So jesus blood must for them. For righteous jesus blood not applicable

__________________
T.balaji


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:

//"பாவத்தின் சம்பளம் மரணம்" என்கிற வசனம் இவர்களுக்கு பொருந்தியதால் தான் இவர்கள் அனைவருமே நோவா, லோத் போன்றவர்களும் மரித்து போனார்கள்.//

எல்லா விஷயங்களிலும் வேதாகமத்தை நுணுக்கமாக ஆராயக்கூடிய நீங்கள்: ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் பாவத்தின் விளைவாகவே ஒவ்வொரு மனிதனும் மரிக்கிறான் என எப்படிச் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.

பாவத்தின் சம்பளம் மரணமென்பது மெய்யேயாயினும், நமக்கு நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய மரணத்திற்குக் காரணம் நமது பாவமல்ல, ஆதாமின் பாவமே என்பதை நீங்கள் அறியத்தவறியது ஏனோ என்பது புரியவில்லை.

தாவீது பாவம் செய்தபோது, அவருக்கு சில தண்டனைகள் கொடுக்கப்பட்டபோதிலும், அவர் சாகாதபடிக்கு அவரது பாவம் நீங்கும்படி தேவன் செய்ததாக 2 சாமுவேல் 12:14 கூறுகிறது. உரியாவின் சங்கதி தவிர மற்றெல்லா விஷயத்திலும் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை தாவீது செய்ததாக 1 ராஜா. 15:5 கூறுகிறது.

உரியாவின் சங்கதியில் தாவீது செய்த ஒரே பாவத்தின் விளைவான மரணம் அவரைவிட்டு நீங்கும்படி தேவன் செய்துவிட்டார். அந்த ஒரு விஷயம் தவிர மற்றெல்லா காரியங்களிலும் தாவீது செம்மையாக நடந்தார். அவ்வாறெனில் அவருக்கு மரணம் நேரக் காரணமென்ன?

நீதிமான்கள் குறித்த எத்தனையோ வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளேன். ஆகிலும் நோவா லோத்து உட்பட அனைவரும் மரித்துப் போனதால் யாருமே நீதிமான் அல்ல என்கிறீர்கள். அவ்வாறெனில் நீதிமான்களைக் குறித்த வேதவசனங்கள் யாவும் பொய்யா? லோத்தை நீதிமான் என பேதுரு சொன்னது அறியாமையா?

ரோமர் 3:10-ஐ சுட்டிக்காட்டி நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்கிறீர்கள். நல்லது, ஆனால் ரோமர் 3:10-18 வசனங்களில் பவுல் மேற்கோள் காட்டுவது பழையஏற்பாட்டின் சில வசனங்களையே என்பதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். குறிப்பாக 10-ம் வசனத்தில் மேற்கோள் காட்டுவது, சங்கீதம் 14:3 மற்றும் 53:3 வசனங்களையே என்பதை அறிவீர்கள்.

சங்கீதம் 14 மற்றும் 53-ஐ முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

அவற்றில் 4-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள “என் ஜனம்” எனப்படுவது யார்? அவர்கள் 3-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள பிரிவினரில் அடக்கமா இல்லையா என்பதை நிதானமாகப் படித்து நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மனிதன் மரிப்பது தான் செய்யும் தனிப்பட்ட பாவங்களுக்கு அல்ல என்பதை அறிவேன்!! இந்த இடத்தில் அதற்கு விரோதமாக ஒன்றையும் வழியுறுத்தவில்லை!! நான் சொல்ல வருவது என்னவென்றால், இவர்களை வேதம் நீதிமான்கள் என்று சொன்னது எதற்காக என்பது தான்!! தனிப்பட்ட முறையில் இவர்கள் ஒவ்வொருவரும் பாவத்தில் இருந்த மனிதர்கள் தானே!! தேவன் இவர்களை தேர்ந்து கொண்டதால், இவர்கள் ஒரு வேலை மற்றவர்களை காட்டிலும் "நீதிமான்களாக" இருக்கிறார்கள்!! ஆனாலும் மரித்து போனார்கள் என்பது உண்மை தான்!! மொத்தத்தில் இந்த மாறி போன மனிதக்குலத்தை மாற்ற தேடி வந்தவர் தான் கிறிஸ்து இயேசு என்பது தான் லூக் 15:7 சொல்லுகிறது!! இந்த தலைப்பு நீதிமான்களை வேற் படுத்துவது அல்ல, மாறாக யார் அந்த கானாமற் போன  ஆடு என்பதை தெரிந்துக்கொள்ளவே!!

இந்த கானமற்போன ஆடு 'மனிதக்குலம் முழுவதுமே', ஏனென்றால் அனைவரும் பாவம் செய்து வழிதப்பி (தேவன் நியமித்ததற்கு விரோதமாக) போனவர்கள். இன்று கிறிஸ்தவ பொதகர்கள், சுவிசேஷர்கள் போதிப்பது போல், 'சகோதரனே, சகோதரியே நீ மனந்திருந்திவிட்டால் பரலோகத்தில் மிகவும் சந்தோஷம் உண்டாகும்' என்பதை இந்த லூக் 15:7ஐ சுட்டி காட்டுவது தவறு என்பது என் கருத்து!!

மற்றபடி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் யார் என்ன என்பதை வேறு தலைப்பில் பார்த்துக்கொள்ளலாமே, சகோ அன்பு அவர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

All old testament god people got righteous by faith of god. Today's humans called as righteous by faith of god which teach god rose jesus. But jesus died for all. Is comman and compulsory for resurrection. Because of adam. But in that death righteous is applicable for many not all who faith god through jesus.

__________________
T.balaji
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard