அடேங்கப்பா, ஊழியர்களை குறை கூறி எழுதுவது தவறு என்றும் அது ஒரு மன்னிக்கமுடியாத குற்றம் போல் ஊழியர்களுக்கு பரிந்து பேசும் சில்சாமின் தனி தளத்தில் 'மாயாவி ஜட்ஸன் அப்ரகாம்' என்கிற "ஊழியரின்" சாயம் வெளுக்க எழுதி தள்ளியிருக்கிறார்! இந்த தளத்தில் உலா வரும் சத்திய விரும்பிகள் கண்டிப்பாக இது போன்ற ஃப்ராடுகளின் (மாயாவி ஜட்ஸன் அப்ரகாம்) மாயாஜால வித்தையை அறிந்துக்கொள்ளட்டும், நன்றி சில்சாம் அவர்களே!! இது போன்ற பதிவுகளை நாங்கள் நிச்சயமாக தொடுப்பு கொடுத்து ஆதரிப்போம்!!
இப்படி தான் ஒவ்வொரு ஊழியரின் சாயம் வெளுக்க அந்த மாயாவிகளை ஆதரித்து வந்தவர்களே குரல் கொடுப்பார்கள், அநேகமாக இது ஒரு தொடக்கமே!!
//ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை.//
இது போன்ற துணிகரங்களுக்கு வித்திட்டதே மறைந்த டிஜிஎஸ் தான் என்பதை சில்சாம் அறிந்தால் நன்றாக இருக்கும்!! இன்று தமிழகத்தில் 'ஊழியர்கள்' என்கிற பெயரில் மாயாவிகள் தோன்றியதற்கு காரணமே அவர் தான்!! இவ்வுளவு ஏன், இவரிடம் 'தொழில்' கற்றவர்கள், அவர்களின் கோபுரத்தை பற்றி சொன்னாலே, டீவியில் தோன்றி சபிக்கிறார்கள் என்றால் எப்படிப்பட்ட 'ஊழியர்கள்'என்று அறிய வேண்டும்!! அன்புக்கும் இவர்களுக்கு ஏணி வைத்தால் கூட எட்டாது, இதை நேரடியாக நான் பார்த்து அனுபவித்திருக்கிறேன்!! இவர்களின் போட்டியே, அமேரிக்காவில் இருக்கும் 'பணம் பெருத்த' ஊழியர்களுடன் தான்!! பாஸ், எட்டி நின்று இன்னும் இவர்களின் போக்கை அமைதியாக கவணியுங்கள், உங்கள் தளம் இது போன்ற செய்திகள் இன்னும் தரும் என்றே நம்புகிறேன்!!
தினகரன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள சில்சாம், தன்னையறியாமலேயே தினகரனும் துணிகரங்களில் ஈடுபடக்கூடியவர் என்பதை அறிவித்து விட்டார்.
"இதுபோன்ற துணிகரங்களை டிஜிஎஸ் கூட முயற்சிக்கவில்லை" என்றால் என்ன அர்த்தம்? டிஜிஎஸ்-ம் பல துணிகரகங்களைச் செய்துள்ளார், ஆனால் ஜட்சனின் இந்தத் துணிகரத்தைப் போன்றதல்ல அவை என்றுதானே அர்த்தம்?
இப்படியாக டிஜிஎஸ்-ம் பல துணிகரங்களைச் செய்துள்ளதை மறைமுகமாக சில்சாம் கூறியுள்ளார்.
இது போன்ற துணிகரங்களுக்கு வித்திட்டவர் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை டிஜிஎஸ் எனச் சொல்லலாம்.
ஆனால் உலகளாவிய அளவில் இம்மாதிரி துணிகரங்களுக்கு வித்திட்டவர் பென்னிஹின் என்றுதான் சொல்லவேண்டும்.