///அந்த இந்து, இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை பெற்று, தேவ ஆவியின் வல்லமையால் அபிஷேகித்து நடத்தப்பட்டு, இந்துஆவியை பிடித்து வைத்திருக்கும் அசுத்த சக்திகளை மேற்கொண்டு ஜெயம்கொள்ள வேண்டும் அதன் பின்னரே கிறிஸ்த்துவின் வருகை உலக முடிவு மற்றும் நித்திய நியாயதீர்ப்பு நடைபெறும்!///
மொத்தத்தில் ஒரு குழப்பத்தின் ஆவி செயல்பட்டு வாசிப்போருக்கு குழப்பத்தின் ஆவியை தந்திருக்கிறது!! ஹிந்து நண்பர் ஒருவர் பரிசுத்த ஆவியின் துனையுடன் !! கேட்க நல்லா தான் இருக்கிறது, ஆனால் இப்படி எல்லாமா இருக்கும்!!
ஹிந்துக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெற்று ஆவியின் வல்லமையால் நடத்தப்பட்ட பிறகு தான் இயேசு கிறிஸ்துவின் வருகை என்பது ஒரு புதிய கள்ளத்தீர்க்கதரிசனம்!! மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை கான்பாரோ என்கிறது வசனம்,
லூக்கா 18:8 ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
ஆனால் இதோ ஒரு கள்ளத்தீர்க்கதரிசி கிளம்பிவிட்டார், ஹிந்துக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு தான் அவரின் வருகை என்று!! இதை தான் கடைசி நாட்களில் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்கிறது வேதம். இதை நாங்கள் சொன்னால், இதோ ஊழியர்களையும், தீர்க்கதரிசிகளையும் திட்டுகிறோம் என்று இது போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு பரிந்து பேசுபவர்கள் வருவார்கள்!!
இப்படிப்பட்ட வேதத்திற்கு புறம்பான கள்ளத்தீர்க்கதரிசினங்கள் (!!) மற்றும் தீர்க்கதரிசிகளை வெளிப்படுத்த இந்த தளம் நிச்சயமாக பயன்ப்படும்!!