மரணத்தை யாருமே விரும்புவதில்லை. மரணமில்லாத வாழ்க்கையை எதிர்பார்க்கும் பாடல்கள், எல்லோரும் சமாதானத்துடன் வாழும் சூழலுக்கான ஏக்கங்கள் தமிழ்த் திரைப்படப்பாடல்களில் அனேகம் உண்டு.
"....நாளை உலகில் நீயும் நானும் வாழ வழிகள் செய்வான் அவன்... என் பொன்மனிகள் ஏன் தூங்கவில்லை?" என்ற எங்கமாமா படப்பாடல்,
".... உதய சூரியனின் பாதையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே.... நல்லவரெல்லாம் நலம்பெருவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது... இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறது, எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை, மனிதர்கள் அன்பின் வழிதேடி இங்கு இயற்கையை வணங்குகிறார், மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழிவில் விளக்குகிறார்.. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது....." என்ற அன்பே வா பாடல்....
"யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலகதத்துவம். நண்பர் உண்டு பகைவர் இல்லை; நன்மை உண்டு தீமையில்லை.. எங்கும் சொர்க்கம், எங்கும் இன்பம் எல்லாம் அழகிய மாதங்கள்; எல்லா நாளும் சுகமாய் வாழ எல்லாம் இங்கே வாருங்கள்" நினைத்தாலே இனிக்கும்
போன்ற அநேக பாடல் வரிகள் உண்டு. ஹூம் நமக்கெங்கே இதற்கெல்லாம் நேரம்? எல்லாரும் நரகத்துக்குப் போகிறார்கள்; நான் மட்டும் சொர்க்கம் போவேன் என்று முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அன்பு பற்றி என்ன தெரியப்போகிறது....
உலகத்தார் நினைப்பது கூட வேத போதகர்கள் நினைப்பது இல்லை என்பது உண்மையிலேயே வேதனை நிறைந்த விஷயம்!! இப்படி தேவனின் அன்பை வெளிப்படுத்தும் பாடல்களை இவர்கள் சாத்தானின் ஏஜெண்ட் என்று ஒதுக்குவார்கள், ஆனால் நரகத்திற்கு அனுப்பும் இவர்களின் பிரசங்கம் இவர்களை யாரின் ஏஜெண்ட் என்று கான்பிக்கும்!!