kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாக வேட்டை!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தசமபாக வேட்டை!!


தசமபாகம் வேட்டை இன்று சபைகள் மத்தியில் போட்டி போட்டு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. எனக்கு தெரிந்தவர் ஒருவர் வட்டிக்கு கடன் வாங்கி தசமபாகம் கொடுத்தாராம்! அந்த அளவிற்கு தசமபாகம் சபைகளில் போதிக்கப்படுகிறது.

ஆலன் பால் (ஆசிர்வாதம் டீ.வி) போதனை (தேவன் இவரிடத்தில் தசமபாகத்தை குறித்தான வெளிப்பாடாம்)

"நீங்கள் 12 மாதங்கள் (அது என்ன கணக்கோ தெரியவில்லை) தசமபாகம் கொடுத்து தேவனை சோதித்து (!!) பார்க்க வேண்டுமாம், நண்மை ஒன்றும் நடக்கவில்லை என்றால் 13ம் மாதம் முதல் தசமபாகம் கொடுப்பதை நிறுத்தி விடலாமா!!"

யாருக்கு தசமபாகம் கொடுக்கவேண்டுமாம், தேவனுக்கு தரவேண்டுமாம், தேவன் அதை நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியாதாம், ஆகவே தான் ஆலன் பால் போன்ற நடுவர்கள் (இவர்கள் தான் அடிக்கடி தேவனிடத்தில் பேசும் திறமை படைத்த பரிசுத்தவன்கள் (!!))!! கிறிஸ்தவ சபை எங்கே போய் கொண்டிருக்கிறதோ!! தேவனே கொடுக்க சொல்லி அவரையே சோதிக்க சொல்லி, அவர் மூலமாக நண்மை கிடைக்காமல் போனால் நிறுத்திக்கொள்ளாமா!! என்ன ஒரு காமெடி, என்ன ஒரு துனிச்சல், தேவனையே தன் பிஸ்னஸ் பார்ட்னராக உப்யோகிக்கிறார்களே!!

இவர்கள் போன்ற கிறிஸ்தவ ஓநாய்களின் வேஷம் கழைய இன்னும் அதிக நாட்கள் இல்லை என்பது மாத்திரம் உறுதியாக சொல்ல முடியும், என்னிடத்தில் தேவன் வந்து சொல்லவில்லை, ஆனால் வேதம் சொல்லுகிறது!!

தசமபாகம் செலுத்துபவர்களே, வேதத்தை தயவு செய்து உங்கள் கண்களால தேவனின் துனையோடு (உங்கள் பாஸ்டரின் உதவியால் அல்ல) வாசித்து பாருங்கள், தசமபாகம் யார் யாருக்கு கட்டளையாக கொடுக்கப்பட்டது என்றும், அந்த தசமபாகத்தில் பணமாகவோ, வங்கி காசோலையாகவோ கொடுக்கப்பட்டதா என்று!! இந்த வேட்டை ஓநாய்களின் மாய்மாலத்திற்கு துனை போகாதீர்கள், உங்களின் உழைப்பின் பெலனை, தேவையானோருக்கு கொடுங்கள், அல்லது உங்கள் குடும்பம் உயர அந்த 'தசமபாக'த்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சாமான்யர்களாகிய நீங்களும் நானும் சில்சாமின் கருத்துக்கு எதிராகச் சொன்னால், நாமெல்லாம் துருபதேசக்காரர்கள்.

ஆனால் மக்கள் பணத்தை வஞ்சனையாகக் கவர்ந்து படோடாப டீ.வி. ஊழியம் செய்யும் ஆலன் பால், சில்சாமின் கருத்துக்கு எதிராகச் சொன்னால, அது ஆசீர்வாதம் டீ.வி.யின் புரட்சிகரமான கருத்து.

என்னே சில்சாமின் நேர்மை?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தானாகவே வந்து தன் பதிவுகளை நீக்கி சென்ற யொவன ஜனம் நிர்வாகியின் கருத்துக்கள் முரன்பாடாக தான் இருக்கிறது. வேதத்தில் நேரடியாக கொடுக்காததை போதிப்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் என்று பதிந்து இருக்கிறார் அவர் தளத்தில், அப்படி என்றால் 'திருத்துவத்தை' போதிப்பவர்கள் அப்படி தானே என்கிறதற்கு என்ன பதில் தான் வைத்திருக்கிறாரோ. இந்த தளத்தில் கொடுக்காவிட்டால் கூட பரவயில்லை, அவர் தளத்திலே பதில் தரலாமே! கொச்சயான எழுத்துக்களை தான் நான் நீக்குவேனே தவிர, எதிரான கருத்துக்களை அல்ல‌.

புரட்சி என்றால் என்னவென்று அவருக்கு தெரியவில்லை, பாவம்!! ஊழியக்காரன் (!!) என்ன செய்தாலும் அதில் தவறு இருக்காது என்கிறதை மனதில் வைத்துக்கொண்டு இருந்தால் இப்படி தான் கருத்துக்கள் வெளிப்படும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 7
Date:

Tithe was initiated to feed the Levites, (priests) because for them no inheritance.   Ezek 44 : 28, 15 to 31 Their only job was to serve the Lord. Now where are priests without any inheritance and serving in the temple of Lord Yaweh?. Once our Hign Priest Lord Jesus offered Himself as a sacrifice for our sins, no more priests and mediators required. Pastors and priests are ordained by the churches, but we belivers are ordained by our high priest as Royal priesthood. 1 Pet 2: 9. Now who all talk about tithes, visions and prophesy for the future , who else they can be than mentioned in II Peter 2 : 1-3 and Jer 14:14. Since people want worldly blessing they go behind their favourite and famous preachers. It is right time that believers to start reading the word of God from the Bible. Isaiah 34:16. Believe in Lord Jesus you and your house will be saved. Acts 16 : 31 Watching TV programmes will not save us. Only the Truth (Jesus) will set us free.  Let us follow Jesus our preacher and Master Mat 23 : 8 - 10.  Glory to JESUS.


__________________


Newbie

Status: Offline
Posts: 1
Date:



-- Edited by ponjose on Tuesday 25th of January 2011 08:41:16 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard