என்ற மாயைதான் இன்றைய கிறிஸ்தவத்தின் தலையாய பிரச்சனையே. அந்த அளவு இந்த ஊழியக்காரன்கள் அவர்கள் "கஸ்டமர்களை" குருடாக்கிவைத்திருக்கிறார்கள்.
எசெக்கியா பிரான்ஸிஸ் சரியில்லையா என்றால் ஆமாம் பிரதர்;
பால்தினகரன்? அவரும்தான் பிரதர்,
அலன் பால்? அவரும்தான் பிரதர்;
உங்கள் பாஸ்டர்.....?
ச்சேச்சே எங்கள் பாஸ்டர் நல்லவரு, வல்லவரு வல்லமயா ஜெபிக்கிறவரு, "ஊழியத்திலகம்" அவருகிட்ட ஒரு கொறயும் இல்ல பிரதர், என்று ஏறத்தாழ எல்லாக் கிறிஸ்தவர்களும் சர்டிபிகேட் கொடுப்பார்கள்.
நீங்கள் எப்படி?
சபை என்று சொல்லிக்கொள்ளும் எந்த அமைப்புமே அந்திகிறிஸ்துதான் என்று அறியீர்களா?
சபை என்ற பெயரில் உங்களைக் கட்டிவைத்து காசுபார்த்துக்கொண்டிருக்கிறார்களே, நீங்களும் கல்யாணத்துக்கும் அடக்கத்துக்கும்தானே சபையில் அங்கத்தினராக உள்ளீர்கள்.
என்றைக்காவது வேதத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறதா? வெளியில் கிறிஸ்தவன் என்று காண்பித்துக்கொள்ளத்தானே இத்தனை பிரயாசம்?
ஞாயிறு ஆனால் ஒரே பக்தி மயமாய் கையில் கருப்பு பைபிளை எடுத்துக்கொண்டுபோய் கற்றுக்கொள்வதெல்லாம் குப்பைகள்.
என்றைக்காவது உங்களுக்கு இயல்பாக வரும் கேள்விகளுக்கு உங்கள் போதகரிடம் பதில் கேட்டதுண்டா? பதிலால் திருப்தியடைந்ததுண்டா?
போதகனெல்லாம் கொம்பனில்லை அவன் உங்களை அடக்கிவைக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டவன் அவ்வளவே!
கிறிஸ்து மட்டுமே பிரதான ஆசாரியர் என்று அறிந்தும் போய் அறிவுகெட்ட மனிதர்களிடம் ஜெபிக்கச்சொல்கிறோமே ஏன்? நம் ஜெபத்தில் நமக்கே நம்பிக்கை இல்லையா?
ஆக, வேதம் எதையோ சொல்லிவிட்டுப் போகட்டும்; எனக்கு ஒரு அமைப்பு வேண்டும். கல்யாணம் கருமாதி செய்ய ஒரு பூசாரி வேண்டும். சத்தியம் எப்படியிருந்தால் எனக்கென்ன? என்று எண்ணித்தான் இன்றைய முழு கிறிஸ்தவமும் "பாபிலோன் மகாவேசி"யின் சுகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது, வெளியே வர மனதில்லாமல்... (வெளி 18:4)
நடக்கட்டும்!
-- Edited by soulsolution on Tuesday 14th of September 2010 01:56:27 PM
சபைக்கு தலையாக இருப்பவர் இயேசு கிறிஸ்து என்பதை மறந்துவிட்டு தசமபாகம் வாங்கும் பாஸ்டர் தான் தலைவர் என்கிற நினைப்பில் தான் இன்று அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்!! கத்தோலிக்கர்கள் சொல்லுவார்கள், வேளாங்கண்னி மாதாவிடம், அந்தோனியாரிடம், சூசையப்பரிடம் சென்றால் அற்புதம் கிடைக்கும் என்று, இந்த ஆவிக்குறிய சபைகள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் சொல்லுவது, "பிரதர், பால் தினகரன் கூட்டத்தில் சுகம் கிடைக்கும், எங்க பாஸ்டர் ஜெபித்தால் பிசாசு அப்படி அலறி அடித்துக்கொண்டு ஓடும் (அப்படி என்றால் இத்துனை மாதங்கள் அல்லது வருடங்கள் அந்த பாஸ்டருக்கு தெரியாமல் அந்த பிசாசு சபைக்கு வந்து போய் கொண்டிருந்தது போல்!! என்ன காமேடி), ஜட்ஸன் ஆபிரகாமிடம் போனார் கீழே விழுந்து எழுந்து வரலாம், இப்படி தான் சொல்லுகிறார்களே தவிர ஒருவராவது இயேசு கிறிஸ்துவிடம் இதை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்கிறார்களா!! இல்லையே, இல்லையே!!
இயேசு கிறிஸ்து அனைவரையும் சுகப்படுத்தும் ஒரு காலம் வருகிறது, அது இன்று கிறிஸ்தவம் போதிப்பது கிடையாது, உடனடி உணவு பொருட்கள் மாதிரி, உடனடி வசதிகள், உடனடி சுகம், உடனடி வேலை, உடனடி திருமனம் போன்றவற்றுக்காக தான் இன்று கிறிஸ்தவர்கள் சபைக்கும் பாஸ்டரையும் தேடி செல்வது இந்த நோக்கத்திற்காக தானே!!
ஏசா 35ம்,
1. வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
2. அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
5. அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
7. வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
9. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
3. தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். இதை தானே நாங்கள் பிரசங்கித்து வருகிறோம். இன்ஸ்டண்ட் சுகம் அவர் தரும் காலம் வருகிறது என்று!! ஏசாயா அன்று சொன்னதை தான் நாங்கள் இப்பொழுது சொல்லுகிறோம்!!