மாறுபாடனவைகளை அல்ல, சத்தியத்தை போதிப்பதினாலே சத்துருவானோம்.
கலாத்தியர் 4:16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?
சத்தியம் சொல்லும் இடத்தில் கூட்டத்திற்கு இடம் இல்லை!! இது ஊழியர்களை குறை சொல்லும் தளம் இல்லை, தங்களை பரிசுத்தவான்கள் என்றும் மற்றவர்களை பாவிகள் என்றும் முட்டாள்கள் என்றும் விமர்சிக்கும் ஒரு சில "தேவ மனுஷர்களை" வெளிச்சம் போட்டு காட்டும் தளம். இப்படி குறை கூறுவது அந்த மனிதனை அல்ல மாறாக அவர்களின் போலித்தனமான போதனைகளையே நாங்கள் சுட்டி காண்பிக்க விரும்புகிறோம்.
யூதர்களுக்கு கட்டளையாக இருக்கும் தசமபாகத்தை கிறிஸ்துவத்திற்குள் தினிப்பது போன்ற தவறான பிரசங்கத்தை நாங்கள் சுட்டி காண்பிக்கிறோம். இன்னும் இந்த தளத்தில் பதியப்பட்டிருக்கும் சத்தியங்களை இந்த தளத்தில் வந்து வாசித்து போவோர் இந்த தளத்திற்கும் மற்ற தளத்திற்கும் உண்டான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறோம்.
மரணம் பற்றியான தெளிவு, தேவனை அறிகிற அறிவு, பரலோகம் என்றால் என்ன, நரகம் என்றால் என்ன போன்றவைகளை அலசியிருக்கிறோம், இன்னும் கிறிஸ்தவம் என்றால் என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எல்லம் எழுதியது கிறிஸ்தவத்தில் போதிக்கப்படாத விஷயங்களாக இருக்கிறது, அது தான் சிலருக்கு நாங்கள் மாறுபாடானதை போதிக்கிறோம் என்கிற தோற்றத்தை அளிக்கும்.
பொய்யாக பிரசங்கம் செய்து இலட்ச்ச கணக்கில் கூட்டம் வேண்டும் என்றால் சேர்க்கலாம் ஆனால் அங்கு சத்தியத்தை போதிக்க முடியாது, ஆகவே நாங்கள் மாறுபாடானதை போதிப்பவர்களாகவே தெரிகிறோம்!!