சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் ஒரு மாபெரும் யுத்தத்தில் தேவன் தன்னால் படைக்கப்பட்ட ஜனங்கள் அழிவை(?) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து இவர்களைக் "காப்பாற்ற" என்னசெய்வதென்றறியாமல் ஊழியர்களைத் "தெரிந்து கொண்டு" அந்த ஊழியர்கள் உதவியால் ஏதோ ஒன்றிரண்டு ஆத்துமாக்களை நரகத்துக்குத் தப்பவைத்துக்கொண்டிருக்கிறார்.
இதில் ஊழியர்கள் பங்கு தேவனுடைய செயல்பாடுகளைவிட அதிகம். ஏனென்றால் இவர்கள் ஜெபிக்காவிட்டால் தேவனால் செயல்பட முடியாது. இவர்கள் பிரசங்கிக்காவிட்டால் 'தேவ செய்தி' ஜனங்களுக்குப் போய்ச் சேராது. அதனால்தான் முழங்கால் யுத்தம்; இந்தியா இயேசுவுக்கே என்றெல்லாம் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு மாவட்ட வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் இந்துக்கள் இத்தனைபேர்; முஸ்லீம்கள் இத்தனைபேர்; ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், ஆவியில்லாத கிறிஸ்தவர்கள் இத்தனை பேர், மாவட்ட பரப்பளவு இத்தனை சாராயக்கடைகள், இத்தனை சினிமா வளாகங்கள்... இத்யாதி என்று புள்ளிவிவரங்களோடு அந்த "மேப்" மீது கை வைத்து ஜெபிக்கிறார்கள்.
தேவனுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா? இந்தியா 2007ல் "கிறிஸ்தியா" என்று அழைக்கப்படும் என்று 2004ல் கோவையில் போலித்தீர்க்கதரிசனம் சொன்னவன் இந்த எசேக்கியா பிரான்ஸிஸ்.
ஆக, இந்த ஊழியக்கார (ஓ)நாய்கள் இல்லாமல் தேவன் ஒரு கையாலாகாதவராக இருக்கிறார் என்று ஒரு மாயையை உண்டுபண்ணி கேடுகெட்ட பிழைப்பு நடத்துகிறார்கள். இதைவிட ஒரு மாபெரும் தேவதூஷணம் இருக்க முடியாது.
கர்த்தரது வருகையின் வெளிச்சம் வர வர இந்த வேசிமார்க்க பாபிலோனியர்கள் லைட் போட்டால் ஓடி ஒளியும் கரப்பான் பூச்சிகள் போல ஓடி ஒளிவார்கள் என்பதில் ஐயமில்லை. அந்த வெளிச்சத்தின் ஒரு சிறு கீற்றுதான் இத்தளம். வெகு சீக்கிரம் இந்த ஓநாய்களின் தந்திரங்கள் வெட்ட வெளிச்சமாகும். குழப்ப பாபிலோனிலிருந்து ஏற்கனவே மக்கள் வெளியேற ஆரம்பித்துவிட்டனர்...
ஆடத்தெரியாமல் இல்லை. நாங்கள் "ஆடினால்தான்" தேவனால் தன் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று ஏமாற்றித்திரியவில்லை நாங்கள். இவர்கள்தான் தேவனால் எல்லோரையும் இரட்ச்சிக்க முடியவே முடியாது அது முழுவதும் மனிதனைச் சார்ந்த விஷயம் என்று தேவதூஷணம் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார்கள்.