ஒரு மூடனுக்கு தான் மிகவும் பெரிய யோக்கியன் என்று நினைப்பு போல். இந்த தளத்தில் வந்து நாகரீத்தை பற்றி பிரசங்கித்து விட்டு, தன் தளத்தில் பிறரை மூடர்கள் என்று எழுதுவது அந்த மூடனின் பிறப்பு உரிமை போல். அந்த மூடனுக்கு தேவன் யார் என்று தெரியாது போல்.
சங்கீதம் 33:14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
சங்கீதம் 33:5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
இந்த வசனங்கள் அந்த மூடனின் வேதத்தில் இல்லை போல். ஆகவே தான் அந்த மூடன் எழுதியதை பாருங்கள்,
பெரெயன்ஸ் எழுதியது, // தேவன் தன் பிள்ளைகள் (அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்) அனைவரின் மேலும் கண்ணோக்கமாக இருப்பதாக தான் வேதம் கூறுகிறது. //
மூடன் அதை தாக்கி எழுதியது. வேதத்துக்கு விரோதமானதொரு கொள்கையை வைத்துக்கொண்டு இவர்களெல்லாம் எழுத வந்துவிட்டார்கள்;
அந்த மூடன் சேர்த்துக்கொண்ட வசனங்களையே நம்பியிருப்பதால், இது போன்ற வசனங்களை தெரிந்திருக்க வாயிப்பில்லை. இந்த வசனங்கள் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை. பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார் என்பதை நாங்கள் நம்புகிறோம், இதை பிரசங்கித்தால் பொய் பிரசங்கியான அந்த மூடனால் தேவனின் இந்த வல்லமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது என்று நாங்கள் வேதத்தில் இருப்பதை சொன்னால் அந்த மூடனுக்கு இது பொறுத்துக்கொள்ள முடியவில்லை போல். எங்கே கூட்டம் சேர்க்கலாம், எத்துனை குடும்பங்கலை ஏமாற்றலாம் போன்ற தந்திரங்கள் எங்களிடம் இல்லை அப்படியே, நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் மாத்திரம் தான் உங்களுக்கு சுகம் கிடைக்கும் என்கிற தந்திர பேச்சுக்களினால் குடும்பங்களை கவிழ்த்துப்போடும் சூழ்ச்சியும், அதன் மூலமாக சம்பாரிப்பதும் எங்களூக்கு தெரியாது.
சத்தியம் என்றால் லாபம் என்று போதிக்கும் மூடர்களுக்கு நாங்கள் கிறிஸ்தவர்களாக தெரிய மாட்டோம். ஏனென்றால் இவர்கள் சேர்க்கும் கூட்டம் இந்த மூட பிரசங்கியார்கலை விட்டு விலகி இவர்களின் வருமானத்திற்கு வேட்டு வைத்துவிடுவோம் என்கிற அச்சம் இவர்களுக்கு. ஆகவே தான் இவர்களுக்கு எங்கள் போதனைகள் துர் உபதேசமாக தெரிகிறது. இந்த மூட பிரசங்கியார்கள் ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்ளட்டும், சத்தியத்தை நேசிப்பவர்களோ, அதை பின்பற்றுவோர் மிகவும் குறைவாக தான் இருக்க முடியும். 'இடுக்கமான வாசலை சிலரே தெரிந்துக்கொள்வார்கள், அதிலும் பிரவேசிப்பவர்கள் வெகு சிலரே". இந்த மூடர்களின் கூட்டம் நிச்சயம் அந்த இடுக்கமான வாசலை அறிய வாய்ப்பு இல்லை.
நரித்தனம் என்றால் இந்த மூடர்களின் பிரசங்ககளில் தான் வெளிப்படும். இவர்களின் செவிக்கு இனிமையான பிரசங்கமும், அதினால் சேர்க்கும் கூட்டமும், என்ன சொல்ல. நாங்கள் சொல்லும் சத்தியத்தை யார் கேட்டு என்ன பெரிய கூட்டத்தை சேர்த்து, என்னத்தை சம்பாதித்துவிட்டோம். எங்களுக்கு அது நோக்கமும் கிடையாது. இத்துனை காலம் இந்த மூடன் எங்கள் தளத்தில் உலா வந்து என்னத்தை தான் படித்தாரோ. நாங்கள் பாவம் இல்லை என்று எப்பொழுது சொல்லியிருக்கிறோம், மாறாக எல்லோரும் பாவிகள் என்று தான் சொல்லுகிறோம். இவர்கள் தான் ஏதோ இவர்கள் உலகத்தின் பெரிய பரிசுத்தவான்கள் போல் வேஷம் தரித்து நரித்தனம் பனிக்கொண்டு இருக்கும் கூட்டமாக இருக்கிறது.
உங்களை போல் "கிறிஸ்தவ ஊழியர்களுக்கு" ஜால்ரா போடும் கூட்டம் நாங்கள் அல்ல, அவர்கள் செய்யும் சுய விளம்பரத்தையும், ஜனங்களை மோசம் போக்கி சம்பாதிக்கும் திறமையும் எங்களுக்கு நிச்சயமாக இல்லை. ஆனால் இவர் அந்த கூட்டத்தாரில் இருப்பதால் அது நிச்சயமாகவே அவருக்கு பெரிய குறையாக தான் தெரியும். இந்த ஊழியர்களுக்கு ஜால்ரா போட்டு தான் நாங்கள் எங்களை கிரிஸ்தவர்கள் என்று சொல்லுக்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. நாங்கள் தேவனை அறிந்த கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ ஊழியர்களை போற்றி எழுதும் கிறிஸ்தவர்கள் அல்ல நாங்கள். பிறர் பணத்தில் வாழ்க்கை நடத்தி உல்லாசமாக இருப்பது கிறிஸ்தவ ஊழியனாக இருக்க முடியாது.
//மேற்கண்ட வாக்கியங்களின்படி எல்லோரும் பிள்ளைகளல்ல என்றாகிறது; இவர்களோ பாவம் இல்லை, நரகமும் இல்லை, மரணமுமில்லை, உயிர்த்தெழுதலுமில்லை என்று தானும் குழம்பி மற்றவரையும் குழப்பிக்கொண்டிருப்பதுடன் கீழ்த்தரமான தூஷண வார்த்தைகளை கிறித்தவ ஊழியர்களுக்கு விரோதமாக கட்டவிழ்த்துவிட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களைக் கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்;//
மூடனின் இந்த வாக்கியங்களின் ஒன்றிலும் உண்மை இல்லை. ரவுடி கும்பளை வைத்திருப்பவன் ஊழியக்காரனா. தன் குடும்பத்தை கட்டி காக்க முடியாதவன் ஊழியனா. இவர்கள் எல்லாம் ஊழியர்கள் என்று மூடர்கள் நினைத்தால், நாங்கள் நிச்சயமாக இது போன்ற ஊழியர்களுக்கு விரோதமாக இவர்களின் கீழ்த்தரமான காரியங்களை எழுதுவோம். மற்றபடிக்கு மரணமில்லை, உயிர்த்தெழுதலுமில்லை என்று நாங்கள் ஒரு போதும் போதித்தது கிடையாது. மாறாக இந்த மூடர்கள் தான் மரணம் இல்லை என்பதை போதிப்பார்கள். தாங்கள் எழுதுவது தாங்களே மறுப்பார்கள் போல். இது தான் இவர்களுக்கு கை வந்த கலையாச்சே!
இந்த சொரணை கெட்ட ஜென்மத்துக்கு எத்தனை சொன்னாலும் ஏறாது. பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தி எல்லாமே மரத்துப்போய்விட்டது போலும். துரத்தி, திட்டி விரட்டினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
உன் திறமையெல்லாம் உன் தளத்தில் இருக்கட்டும். வசனம் தெரியாத கூதரைகளுக்கு வாய்ச்சவடாலைப் பாரு. ஓசியில் ஒடம்பு வளர்க்கும் உனக்கு இவ்ளோ இருந்தா உழைச்சி சாப்பிடும் எங்களுக்கு எவ்வளோ இருக்கும்.
பாவம் உன் புலம்பலை எங்கள் தளத்துக்கு வராமல் உன் தளத்தை மட்டும் பார்ப்பவர்கள் உன்னைப் பைத்தியம் என்று எண்ணமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். அவர்கள் இத்தளத்துக்கு வந்தால் தெளிவடைந்து உன்னை ஒதுக்கிவிடுவார்கள். உனக்கே நீ வேட்டு வைக்கிறாய் பாவம்!
நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை, சும்ம ஊழியக்காரர்களை குறை கூறுவது மாத்திரமே எங்கள் நோக்கம் போல் விளம்பரம் செய்கிறீர்களே!! தேவன் யாவர் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார் என்கிற வசனம் கிடைத்தும் அதற்கு பதில் இல்லையே!!
மேலும் ஓநாய்களை ஓநாய் என்று தான் சொல்லமுடியும், மடியில் போட்டு கொஞச முடீயாது. அவர்கள் பாரம்பரிய கிறிஸ்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவும் அவர்கள் பெரிய "தேவ மனிதர்கள்" என்கிற போர்வையில் இருக்கிறார்கள் என்பதாலும், எங்களால் அந்த ஓநாய்களுக்கு ஜால்ரா அடிக்க முடியாது. உங்கள் தளத்தில் அதை செய்யுங்கள். ஆம என்றால் ஆம், இல்லை என்றால் அது இல்லை தான், நாங்கள் மதவாதிகளோ அல்ல மத தீவரவாதிகளோ கிடையாது. எங்கள் அன்புக்கு நாங்கள் சாட்சி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அடுத்தவனிடத்தில் பணம் வாங்கி நாங்கள் அன்பு செயலில் ஈடுப்படவேண்டிய அவசியமும் இல்லை. எங்களுக்கு தேவன் தந்ததை நாங்கள் செய்கிறோம், அது தேவனுக்கு மாத்திரமே தெரியும், உலகத்தாரிடம் பெயர் எடுக்க நாங்கள் எங்கள் செயல்களை செய்வதில்லை!! ஆகவே தான் அப்படி செய்கிற மதவாதிகள் மேல் எங்கள் கோபம், அவர்கலுக்கு ஜால்ரா அடிக்கும் உங்கள் மேலும்!! மற்றபடி நீங்கள் எப்படு வாழ்கிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள் போன்றவற்றை ஆராய இந்த தளம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!
தங்களின் அவதார் படத்தை வைத்தே தங்களின் அன்பின் வெளிப்பாட்டை தெரிந்துக்கொள்ளலாம்!!
"தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை."(சங்கீதம்.14:2,3 )
இதை தான் நாங்களும் சொல்லி வருகிறோம், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை என்று, ஆனால் நீங்கள் தான் சிலர் மாத்திரம் "தேவ மனுஷர்கள்" என்று அவர்களின் வெளிவேஷத்தை மகிமை படுத்துகிரீர்கள்!!
தேவன் பூமி முழுவதிலும் மனிதர்களை வைத்து விட்டு, கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் சுகம் தருகிறார், இல்லை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரம் சுகம் தருகிறார் என்பதை தான் நாங்கள் அபத்தம் என்கிறோம். தேவன் தன் "பிள்ளைகளுக்கு" மாத்திரம் தான் சுகம் தருகிறர் என்பதும் அபத்தம். அவரின் பிள்ளைகள் என்றால், கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகலாக இருப்பவர்கள், அவரோடு கூட ஆளுகை செய்யும் தகுதியடைய இருப்பவர்கள், அதற்கு தான் தாங்கள் காண்பித்த வசனம்,
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்." (யோவான்.1:12)
அவர் சிலருக்கு பிள்ளைகளாகும் அதிகாரங் கொடுத்திருக்கிறார்,அது அவரின் குமாரனான இயேசு கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யும்படியாக, ஆனால் தேவன் பூமியின் உள்ள அனைத்து மக்களின் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார் என்பது ஆளுகை தருவதற்கோ, அவர்களை பிள்ளைகள் என்று அழைப்பதற்கு அல்ல, மாறாக அவரின் அன்பை வெளிப்படுத்தவே!!
//கருத்தாய்வின் அடிப்படையில் மோதாமல் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்திப் பேசுவது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்ற ஆபத்தையறியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள்//
என்ன ரவுடி, தீவரவாதி இல்லை என்று சொல்லிவிட்டு அன்பான மிரட்டல் விட்டிருக்கிறீர்கள் போல். எங்களுக்கு தேவனுக்கு மாத்திரமே பயந்து பழக்கம், "தேவ மனுஷர்கள்" என்று நீங்கள் போற்றுபவர்களுக்கு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுக்கு இருக்கும் அந்த கொஞ்ச பலத்தை தயவு செய்து இப்படி பட்ட அயோக்கியமான ஊழியர்களிடம் இருந்து கிறிஸ்தவர்கள் தப்பிக்கும்படியாக விண்ணப்பிக்க உபயோகித்துக்கொள்ளுங்கள், அல்லது வரி துறை அதிகாரிகளின் கண்கள் திரக்கப்படும்படியாக விண்ணப்பம் செய்யுங்கள், நாட்டின் நலனுக்கு நல்லதாக இருக்கும்!!
தேவனின் படைப்பின் இருப்பவர் அனைவரும் அவரின் பிள்ளைகள் என்கிற அர்த்தத்தில் தான் அதை எழுதியிருக்கிறேனே தவிர, கிறிஸ்துவின் உடன் சுதந்திரவாலிகளாக இருக்கும் பிள்ளைகள் என்கிற அர்த்தத்தில் இல்லை. கிறிஸ்துவின் உடன் சுதந்திரவாலிகள் என்பது கிறிஸ்துவிற்கு பின் உண்டான ஒரு தகுதி, அதற்காக தேவனின் படைப்பான இந்த பூமியில் இருப்போர் அவரின் பிள்ளைகளாக இல்லாமல் என்ன பிசாசின் பிள்ளைகளா!?
ஆமா, ஆமா ஊழியர்களுக்கு ஜால்ரா அடிக்கும் மக்களுக்கு பிற மதத்தில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களாக மாறும் வரை பிள்ளைகளாக தெரிய மாட்டார்கள்!! என்ன சொல்ல வருகிறோம் என்பதை விட்டு விட்டு தயவு செய்து விவாதத்தை திசை திருப்பாதீர்கள்! எங்கள் வாதம் தேவன் அனைவருக்கும் சுகம் தருகிறார் என்பது!!
அனைவரும் தேவனுடைய பிள்ளைகள்; அனைவருக்கும் இரட்ச்சிப்பு என்று உண்மையைச் சொன்னால் நம் பிழைப்பு கெட்டுவிடுமே என்று எண்ணுபவர்களுக்கு இதெல்லாம் விளங்க வாய்ப்பில்லை.
//ஆம்,ஆதாம் தேவனால் உண்டானதால் அவன் தேவனுடைய பிள்ளை; ஆனால் அவன் விழுந்துபோன இடத்திலேயே சர்வ வல்ல தேவன் மாம்சத்தில் வந்து அவனை மீட்டெடுத்துப் பரலோகம் சென்றார்;
இனி உலகம் இரண்டாகப் பிரிகிறது;
விழுந்து போனவனை எழுந்து வந்து இழந்து போனதை மீட்டெடுத்த மேன்மையுடன் விண்ணகம் எழுந்தருளியவரின் மீதான விசுவாசத்தை பெற்றோர் மட்டுமே அவருடைய பிள்ளைகள்;
இதுவே சுவிசேஷம் மற்றது வேதப்புரட்டு..//
என்ன இது பிதற்றல்(மறுபடியும்). ஆதாம் விழுந்து போனானாம்(சாத்தானால்) சர்வ வல்ல தேவன் அவனை மீட்டெடுத்து(எங்கிருந்து?) பரலோகம் சென்றாராம். அவனை மட்டும் மீட்டெடுத்தாரா? அல்லது அவன் சந்ததி முழுவதையுமா? ஆதாமுக்கு இயேசுகிறிஸ்து யாரென்றே தெரியாதே பின்னர் "விண்ணகம் எழுந்தருளியவரின்" மீதான விசுவாசம் எப்படி வரும். பழைய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசம் எங்கிருந்து வந்ததோ?
மரணம் பற்றியறியாத மா. ம கள் வேதப்புரட்டு என்று எங்களைக் கூறுவது நல்ல நகைச்சுவை.