கத்தோலிக்கர்களுக்கும், தங்களை ஆவிக்குறிய கிறிஸ்தவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
இல்லை என்பேன் நான்.
நான் ஒரு கத்தோலிக்கனாக பிறந்து, வேதத்தில் உள்ளது படி அங்கு செய்யாததால், ஃபாதர்களிடம் பல முறை கேள்விகள் கேட்டு, அவர்களிடம் ஆதாரப்பூர்வமான பதில் கிடைக்காமல், எல்லாவற்றையும் போப், பிஷப் மீது சுமத்தி, அல்லது இது எல்லாம் கத்தோலிக்க விசுவாசம் என்று சொல்லி மலுப்புவார்கள். அவர்கள் மரித்தவர்ளில் சிலரை புனிதர்கள் என்று வைத்து அவர்களிடம் பரிந்துரைக்கும்படி ஜெபங்கள் ஏறெடுக்கிறார்கள். சிலைகளை வைத்திருக்கிறார்கள் கேட்டால் அது விக்கிரகங்கள் அல்ல சுருபங்கள் (அதாவது, ஒரு குறிப்பிட்ட புனிதரின் ரூபமாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம்) மாத்திரமே என்று விளக்குவார்கள். போட்டி போட்டு பல பண்டிகைகளை கொண்டாடுவார்கள். ரோமாபுரியிலிருந்து வரும் கட்டளைகளுக்காக காத்திருப்பார்கள், அப்படியே கத்தோலிக்க விசுவாசத்திற்கு புறம்பாக பேசினால் அவர்களை சபையிலிருந்து விளக்கிவிடுவார்கள் (உம். மார்ட்டின் லூதர்). கிறிஸ்தவ விசுவாசம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை ஆனால் கத்தோலிக்க விசுவாசம் அவசியம் இருக்க வேண்டும். பல விதமான வேதத்தில் சாராத கோட்பாடுகளை கொண்டுவந்தவர்கள் கத்தோலிக்கர்கள். நரகம், திருத்துவம் போன்றவை அதில் பிரதானம். ஆலயத்திற்குள் இசை கருவிகளை அறிமுகப்படுத்தியவர்கள். இப்படி முழுவதுமாக கிறிஸ்தவத்திற்கு புறம்பான ஒரு சபை கத்தோலிக்க சபை. ஆனால் அங்கு இருக்கும் விசுவாசக்கூட்டதார் மிகவும் அன்பு நிறைந்தவர்கள், கத்தோலிக்க விசுவாசத்தில் வைராக்கியம் நிறைந்தவர்கள்!! தங்களின் ஜெப தேவைகளுக்கு குரு க்ர்க்களை நம்பியிருப்பவர்கள். குருமார்கள், விசுவாச கூட்டத்தார் என்று இரு பிரிவினையை உண்டு பன்னினவர்கள்.
இனி நம் ஆவிக்குறிய கிறிஸ்தவர்களை பார்க்கலாம். கத்தோலிக்க சபை கொண்டு வந்த அதே கோட்பாடுகளை கண்மூடி அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள். அங்கே மரித்தவர்களை பரிந்துரைக்கும்படி ஜெபிப்பார்களென்றால், இங்கு கடிதம் மூலம், தொலைபேசி மூலம், எஸ்.எம்.எஸ் மூலம், இந்டர்நெட் மூலம், இப்படியாக எல்லா டெக்நாலஜியை பயன்ப்படுத்து தங்களின் ஜெப விண்னப்பங்களை சில ஏஜண்ட்களிடம் சொல்லுவதும் அவர்கள் தரும் பதிலால் திருப்தி அடைவது. அங்கே விக்கிரகங்கள் சிலைகள் என்றால், இங்கு விக்கிரகங்கள் பாஸ்டர்மார்கள், "தேவ மனிதர்கள்" ஊழியர்கள ரெவ்ரெண்டுகள், பிஷப்புகள் போன்றோர். எல்லாவற்றுக்கும் மேல் தசமபாகம் என்கிற ஒரு விக்கிரகம் இங்கு ஆட்டி படைக்கிற விக்கிரகம்.அங்கே மரித்தவர்களை வணங்குவார்கள், இங்கு உயிருடன் இருப்பவர்களை வணங்குவார்கள். கடன் வாங்கியாவது தசமபாகம் கொடுக்கும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். குரு விசுவாசி என்கிற அதே பிரிவு தான் இங்கு பாஸ்டர் "சாதாரன விசுவாசி" என்கிற பிரிவு இருக்கிறது. ஒரே ஆவியை பெற்றிருந்தாலும் தேவன் இந்த ஊழியர்களுக்கு தான் திட்டங்களை வெளிப்படுத்துகிறார் என்று நம்பும் ஒரு குருட்டுக் கூட்டம்.கத்தோலிக்கர்களுக்கு கத்தோலிக்க விசுவாசம் இருப்பது போல், இங்கு இருக்கும் சுமார் 2000 சுமார் சபைகளுக்கு தங்களின் சபை பற்று அதிகம். தப்பி தவறிக்கூட அடுத்த சபைக்கு போக மாட்டார்கள், அல்லது அனுமதிக்கப்படமாட்டார்கள். இங்கு பண்டிகைகள் என்றால் பேரின்ப பெருவிழாக்கள், சமாதான பெருவிழாக்கள், அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், போன்றவைகள்.
இப்படி ஒரே மாதிரியான கொள்கைகள் கோட்பாடுகளை வைத்திருக்கும் இந்த இரு விதமான கூட்டத்தார் (கத்தோலிக்கர்கள், ஆவிக்குறிய சபைகள்) எப்படி மாறுப்படுகிறார்கள். ஒரு போதும் இல்லை. இந்த இரு கூட்டத்தாரும் ஒரே விசுவாசம் கொண்டவைகள் தான் !!
இருப்பதை இருப்பது என்று ஒத்துக்கொள்வது தான் ஞானம். சுமார் 2000 சபைகள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள வேண்டும். அதுவும் கருத்துக்கள், தரிசனங்கள் கோட்பாடுகள் வித்தியாசத்தினால்.
"இந்த சின்ன மாநிலத்திலேயே உங்களுக்குள்ளும் சுமார் நூறு குழுக்கள் உண்டென்று கேள்விப்படுகிறோமே..?"
நாங்கள் எந்த குழுவையோ, குழுமத்தையோ சேராதவர்கள் என்று தாங்கள் அறிந்துக்கொள்வது சிறந்தது. எங்களுக்கு தலைவர் என்றால் அது இயேசு கிறிஸ்து மாத்திரமே. மனிதர்களில் நாங்கள் யாரையும் பரிந்துரை செய்யும் அளவிற்கு தகுதி இல்லை என்றே பார்க்கிறோம். எங்களுக்கு பரிந்துரை செய்பவர் கிறிஸ்து இயேசுவே. நாங்கள் மனிதர்களின் வார்த்தைகளுக்கு அல்ல வேதத்தில் உள்ள வார்த்தைகளுக்கு கீழ்படிகிறோம்.
ஆகவே தான் கத்தோலிக்கத்தை விட்டு, பிறகு "ஆவிக்குறிய சபை" என்று மேட்டிமை பாராட்டும் சபைகளில் இருந்து வெளிவர தேவன் உதவை செய்தார்.
முதலாவது ஒரு காரியத்தை யொவன ஜனம் தள நிர்வாகி தெரிந்துக்கொள்ள வேண்டும். நாங்கள், அதாவது இந்த தளத்தை நடத்தும் நாங்கள் வேத மாணாக்கள் சபையை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை! எங்களுக்கும் அவர்களுக்கும் சபைப்பிரகாரமாக எந்த தொடர்பும் கிடையாது.
ஆனால் அவர்களை குறித்து சொல்லவேண்டும் என்றால், தாங்கள் எழுதியது போல் இந்த சின்ன மாநிலத்திலேயே அவர்கள் நிறைய குழுக்கலாக இருப்பது உண்மை, ஆனால் அது கருத்து வேறுப்பாட்டினால் அல்ல, தரிசன வேற்பாட்ட்டினால் அல்ல, மாறாக இடத்தின் அடிப்படையிலேயே அவர்கள் சபைகள் நடத்துகிறார்கள். வேறு வேறு பெயர்களில் அல்லாமல் அனைவருமே வேத மாணாக்கள் சபை என்று அந்த ஊர் பெயரை போட்டுக்கொள்வார்கள். இந்த ஆவிக்குரிய சபைகள் மாதிரி ஒரே தெருவிலேயே ஒற்றுமை இல்லாத பத்து சபைகள் அவர்களுக்கு இல்லை.
எங்கள் சிறிய ஊரிலேயே சுமார் 30 சபைகள் இருக்கிறது (கத்தோலிக்க சபை மற்றும் ப்ரொடெஸ்டன்ட் சபை உட்பட), எல்லோரும் ஒவ்வொரு தலைமைக்கு கீழ், ஒவ்வொரு தரிசனத்தை கொண்டிருப்போர், ஒவ்வொரு கோட்பாடுகளுக்காக சபை நடத்துவோர், என்று.
இப்படி பட்ட ஆவிக்குரிய சபைகளுக்கும், வேத மாணாக்களின் கூழுக்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது.
ஆனால் விவாதத்தின் தலைப்பு, "கத்தோலிக்க சபைகளும் ஆவிக்குரிய சபைகளும்" என்பது தானே, இதில் வேதமாணாக்கள் எங்கு வந்தார்கள்?
சரியானதை போதித்து விட்டு தான் பிழையை சுட்டி காண்பிக்க ஆரம்பித்தோம். சரியானதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருப்போர் வந்தார்கள், இங்கு வெட்டியான விவாதங்களுக்கு இடம் இல்லை என்றவுடன் உறுப்பினர் ஆன கைய்யோடு நிறைய பேர் நின்று போனார்கள் என்று நினைக்கிறேன். இது அவர்களை குறை கூறுவதாக இல்லை, ஆனால் அவர்களின் பிரயோஜனமான, செவிக்கி இனிமையான சத்தியம் இந்த தளத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உண்மை செவிக்கு இனிமையாக இருக்காது, கசப்பாக தான் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது.
குறை கூறுதல் என்பதும் தேவை தான். எப்படியும் குறைக்கு உட்பட்டவன் திருந்தும் நிலையிலிருந்து வெகு தூரம் சென்று விட்டான், ஆனால் அவனை பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கிறதே, அதில் ஒருவரின் கண்களாவது திறக்கட்டும் என்று தான் இந்த குறை கூறுதள். குறை இருப்பதால் குறை, நாங்கள் வீனாக ஒருவன் மேல் குற்றம் சுமத்தவில்லை, இருப்பதையே எழுதுகிறோம்.
ஆதி அப்போஸ்தல முறை கண்டித்துனர்த்தியது, அது இன்று சபைகளில் இல்லை என்பது உண்மையே, நாங்கள் ஏதோ ஒரு சிறு அளவிற்கு அதை பின் பற்ற வாஞ்சிக்கிறோம், ஆனால் உங்களை போன்றோர், கத்தோலிக்க சாம்ராஜ்யாத்திற்கு உட்பட்ட ஊழியத்தை விரும்பி செய்கிறீர்களே, அது தப்பு என்று தெரிந்தும். எதை பின்பற்ற வேண்டும், கத்தோலிக்கர்கள் கொண்டு வந்த ஊழிய முறையயா அல்லது அப்போஸ்தலர்கள் விட்டு சென்ற போதனை முறைகளையா?
மனதில் நினைத்தது வேதத்தில் இருக்கிறதே, பிறகு அதை பின்பற்ற யாரின் அனுமதி வேண்டும்? தங்களை தேவ மனிதர்கள் என்று சொல்லி வருகிறார்களே அவர்களின் துனை வேண்டுமா? அன்று மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்கத்தை விட்டு வந்ததினால் தான் ப்ரொடெஸ்டண்ட் என்கிற சபை உறுவாகி அதிலிருந்து இன்று இருக்கும் ஆவிக்குரிய சபைகள் இத்துனை முழைத்தது. அன்று குறைகூறி வந்த மார்ட்டின் லூத்தர் சரி என்றால் நாங்கள் செய்வது எங்கள் மனசாட்சிக்கு சரி என்று தான் படுகிறது. நாங்கள் முறைகளைம் சாடுகிறோம், அதை உபதேசிப்பவர்களையும் தான் சாடுகிறோம். அதற்காக அன்பு இல்லை என்று அர்த்தம் கிடையாது.
குழுக்களாக பிரியலாம், கோட்பாடுகள், விசுவாசத்தில் ஒரே நம்பிக்கை உள்ளவர்களாக, வேத மாணாக்கள் எனக்கு தெரிந்து குழுக்களாக இருப்பது அப்படி தான். தனி தரிசனம், தனி சம்பாரிப்பு, தனி உபதேசத்தின் நிமித்தம் வேத மாணாக்கள் சபை இருப்பதில்லை, ஆவிக்குரிய சபைகளை போல்.
தமிழ் ஆராய்சி நடத்தும் பல தளங்கள் இருக்கிறது, அங்கு போய் உங்களை திறமைகளை வெளிப்படுத்துங்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரியாமல் தேவையில்லாததில் மூக்கை நுழைத்து கொண்டு இருப்பது "ஊழியர்களின்" தனி சிறப்பு. அது அப்படியே தங்களிடமும் இருக்க தான் செய்கிறது என்பது உமது பதிவிலிருந்து வெளிப்படுகிறது.
//"நீங்களோ எவனோ அப்பன் பேர் தெரியாதவனுடைய கூற்றையெல்லாம் நம்பிக் கெட்டுப்போய் இங்கே பெற்ற தாயை தூஷித்துக் கொண்டிருக்கிறீர்கள்;"//
இப்படி பட்ட தங்களின் தமிழ் ஞானத்தை தாங்களே தமிழ் தொன்றாட்டுங்கள், ஆனால் அதற்கென்று தளங்கள் இருக்கிறது, அங்கு இல்லை, இந்த தளத்தில் வால் நீண்டுச்சுனா நறுக்கிவிடுவோம். இப்படி எல்லாம் எழுதிவிட்டு நாகரீகத்தை பற்றி பேச அறுகதை இல்லாதவர் நீங்கள்!!
இந்த தளத்தில் நாங்கள் யாரும் எங்கள் கருத்துகளை ஏற்க சொல்லவில்லை, ஏனென்றால் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டால், சோம்பேறிகளாக பிச்சை எடுத்து தின்ன முடியாது, ஊற் மேய முடியாது, பல வீடுகளுக்கு ஊழியம் என்கிற பெயரில் நுழைய முடியாது. ஆகவே இதை ஏற்பது கஷ்டம் தான், ஆனால் யாருக்கு தேவையோ அவர்களுக்கு போய் சேரும், ஓநாய்கள் இருந்தும்.
கூட்டம் சேர்க்க நம்ப வைத்து மோசம் போக்கும் ஆட்கள் நாங்கள் அல்ல! அது தான் தமிழ்நாடு முழுவதும் சுத்தி திரியுதே அது போல் "ஊழியர்" குட்டம். மேடையில் கை கோர்த்தாலும் முதுகில் கத்தியை வைத்திருக்கும் உங்கள் கூட்டனியை நீங்களே மெச்சிகொள்ளுங்கள்!!
ஒரே வசனத்தை பத்து விதமாக (ஆளுக்கு தகுந்தார் போல்) சொல்லுவது ஊழியர்கள் என்று ஏமாற்றி திங்கும், குடும்பம் நடத்தும் கூட்டத்துக்கு தான் தெரியும். பைபிள் தான் தெரியவில்லை என்றால், வரலாறும் தெரியாது போல்!! உங்களுக்கு எல்லாம் சொல்லுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் தான்!! இத்துனை நாள் அந்த அப்பன் இல்லாத மொழியில் தான் "Praying for your success" என்று எழுதி வருகிறீர்கள், இன்று தான் அது அப்பன் பெயர் இல்லாத மொழி என்று வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து சொன்னானா, ஏன்னா உங்கள் போல் ஊழியர் என்று சொல்லி திரியும் கூட்டத்திற்கு அது ரொம்ப சகஜமாச்சே!!
நான் மீண்டும் சொல்லுகிறேன், தமிழ் ஆர்வம் இருந்தால் அதற்கென்று தளங்கள் இருக்கிறது, அங்கு போய் தங்களின் தமிழ் ஆர்வத்தை காண்பியுங்கள், இங்கு நாங்க எழுதுவது தான் தமிழ், உங்களை யாரும் இந்த தமிழ் வாசித்து கஷ்ட்டப்பட சொல்லவில்லை. தேவையில்லாத வியாக்கியானம் எல்லாம் தங்களின் தளத்தில் எழுதிக்கொள்ளுங்கள்,
தங்களின் தளத்திலேயே அதே அப்பன் இல்லாத மொழியை தானே பயன்படுத்தி வருகிறீர்கள், அது எதற்க்கு, God Bless You.., __________________ "Taking care for every Soul through Counseling"
இதை தான் நாங்கள் மாய்மாலம் என்கிறோம்!! இன்று அதே அப்பன் பெயர் தெரியாத மொழியான ஆங்கிளத்தில் தான் வலைத்தளங்களை உலா வருகிறீர்களே!!
அவனவன் வசனத்தினாலே நியாயம் தீர்க்கப்படுவான் என்பதை இந்தாள் நிரூபித்தேவிட்டான். இந்த குளிர்ச்சிசாம், அப்பன் பேர் தெரியாத மொழியின் ஒரு வார்த்தையையும் பயன்படுத்தாமல் இருந்து காட்டட்டுமே. இவன் வாசிக்கும் "பரிசுத்த வேதாகமம்" King James Version என்ற "அப்பன் பேர் தெரியாத" மொழியிலிருந்து வந்ததுதான் என்றுகூட தெரியாமல் உளரிக்கொண்டிருக்கிறான்.
வேண்டுமானால் பாருங்கள் இந்தப் பகுதிக்கு பதிலே அளிக்காமல் தெரியாதமாதிரி ஒதுங்கிவிடுவான்.