யௌவன ஜனம் தளத்தின் மூலம் தங்கமணி என்கிற நண்பர் வேறு ஒரு தளத்திள் ஒரு கேள்வியை எழுப்பியிருப்பதை இங்கு தருகிறேன்!
சுவிசேஷர்கள் ஏன் விஷம் குடிப்பதில்லை என்று. தேவையான ஒரு கேள்வி தான். வேதத்தை நம்பாதவர்களுக்கு எப்படி இது பிரயோஜனப்படுது என்று தெரியாது, ஆனால் வேதத்தை தேவனின் வார்த்தை என்று நம்புவோருக்கு நிச்சயம் சற்று தெளிவு தேவை படும். ஒரு வேளை நண்பர் தங்கமணி இந்த தளத்தில் இந்த பதிவை படிக்க நேர்ந்தால் ஏதாவது அவருக்கும் பிரயோஜனப்படலாம்.
அவர் எழுப்பிய கேள்வி லூக் 16:18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
நண்பர் தங்கமணி தெரிந்துக்கொள்வது என்னவென்றால், முதலாவது இந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. வேதப்புத்தகத்தை நம்புவோர் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், மூலபாஷையில் இல்லாத இந்த வேதப்பகுதி (லூக். 16:9 முதல் 20 வரையான வசனங்கள்) மொழிப்பெயர்ப்புகளில் நுழைந்துவிட்டது. அப்போஸ்தலர்கள் காலத்தில் இந்த நிகழ்வுகள் நடந்தது என்னமோ உண்மை தான், ஆனால் அது ஆரம்பக்காலத்தில் மாத்திரமே. இன்று இந்த வசனத்தை பிரசங்கிப்பவர்கள் நிச்சயமாக இதை செய்ய முடியாது, ஏனென்றால் இந்த பகுதி அப்போஸ்தலர்களை பார்த்து யாரோ பிற்பாடு வேதத்தில் சேர்த்துக்கொண்டதை அப்படியெ மொழிப்பெயர்த்துவிட்டார்கள் நம் மொழிப்பெயர்ப்பாளர்கள்.
வேதத்தை பிரசங்கிப்பவர்களில் வியாபரத்திற்காக இதை செய்பவர்கள் நிச்சயமாக இதை எல்லாம் ஆராய்ந்து பேசுவதில்லை. இப்படி வேதத்தை விரும்பாதவர்கள் இதை தோண்டி கேட்டிருப்பது இது போல் பிரசங்கிப்பவர்கலை விழித்தெழச்செயவேண்டும். வேதத்தை பிரசங்கிப்பவர்கள் கண்டிப்பாக வேதத்தை ஆராய்ந்து பிரசங்கிக்க வேண்டும். இல்லாத ஒரு வசனத்தை பிரசங்கிக்க வேண்டிய அவசியமும் இல்லை, இது போன்ற கேள்விகளுக்கு ஆளாக தேவையும் இல்லை, அதற்கு விளக்கம் கொடுக்கும் அளவிற்கு வரவும் வேண்டாமே!!
சத்தியத்தை தவிர வேறு என்ன பிரசங்கம் செய்தாலும் இப்படி கேள்விகள் எழும்புவது சகஜமே!!
இந்த வரிகளுக்கும் யொவன ஜனம் தளத்தின் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை:
இது மட்டும் இல்லை, இன்னும் வேதத்தை தெரியாத அல்லது வேதத்தை எதிர்க்கிற அன்பர்கள் வேதத்தை படிக்க நேர்ந்தால், அது எப்படி இந்த கிறிஸ்தவர்கள் மெய்யான ஒரு தேவனை "திருத்துவம்" என்று பிரிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவார்கள்.
மிஷ்னரி பணித்தளங்களில் நிருபிக்கப்படுவது எல்லாம் வேதம் ஆகி விடாது. அன்றாட மனிதனின் வாழ்க்கையில் நடப்பதே தேவன் தருகிற அற்புதம் தான். மிஷ்னரிகளின் பணித்தளம் என்று வருகிற செய்திகளும் எல்லாம் உண்மை கிடையாது. ஒரு சிலர் உண்மையில் பாடுகள் பட்டிருக்கலாம், ஆனால் அது அப்போஸ்தலர்கள் காலத்தில் தான். சுமார் 300 ஆண்டுகள் பிரிடிஷ் பேரரசு இந்த நாட்டை ஆண்ட போது கூட மதமாற்றம் என்கிற ஒரு விஷயம் ஏற்படவில்லையே. அன்று நினைத்திருந்தால் கட்டாய மதம் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் தேவன் அதை அனுமதிக்கவில்லை, ஏனென்றால் அது அவரின் திட்டமும் இல்லை. மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்பது தான் வசனம்.
தேவனின் அடிப்படை திட்டத்தை கூட நினைவில் வைத்துக்கொள்ளாமல் நாங்கள் மிஷனரி ஊழியத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர்களே பாடுகளுக்கு உட்பட்டு கொள்வது முட்டால்த்தனமே அன்றி கிறித்துவம் அல்ல. சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனங்கள் மேல் இத்துனை வாஞ்சையாக இருப்பது ஆச்சரியம் தான். அப்படி தான் வேதத்திற்கு எக்ஸ்டென்ஷன் கிடைத்துக்கொண்டு, ஊழியர்கள் சொல்லுவது எல்லாம் வேத வாக்காகியிருக்கிறது. ஒரு எழுத்தையும் கூட்ட கூடாது என்பது தேவ கட்டளை. மாற். 16: 9 முதல் 20 வரையான வசனங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்று தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் நம்புகிறீர்கள் அதன் மேல் விசுவாசம் இருப்பதாக சொல்லுவது வசனத்தை மீறுவதே ஆகும்.
ஆனால் இப்படி எல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்பதும் வேதத்தில் இருக்கிறதே. வேத புறட்டர்கள் வருவார்கள், அவர் மூலமாக வசனக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்பது தின்னம். இப்படி சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனங்களை வைத்து பிரசங்கிப்பவர்கள் அதை நிருபிக்கட்டுமே, இதை தானே பிற மத நண்பர்கள் கேட்க்கிறார்கள். நாங்கள் எந்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஏனென்றால் தேவன் வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்திருக்கிறோம். அந்த அடிப்படை புரிந்துக்கொள்ளுதல் இல்லாமல், நாங்கள் அதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம், இதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது எல்லாம் வெறும் வயிற்று பிழைப்புக்கு தானே அன்றி வேறு ஒன்றும் இல்லை.
எத்துனையோ ஆண்டுகள், அகஸ்டின் ஜெபக்குமார் என்கிற ஊழியக்காரர் மிஷனரி என்று பிஹாரில் ஊழியம் செய்துக்கொண்டிருக்கிறார், என்ன மாற்றம் வந்து விட்டது பீஹாருக்கு. அந்த மாநிலம் அப்படியே தான் இருக்கிறது, மத சார்பற்ற கட்சியின் ஆட்சி போய் மத சாயம் கொண்டவர்களின் ஆட்சி தான் வந்து இருக்கிறது!!
பவுலுக்கு விஷப்பாம்பு கடித்தும் ஒன்று ஆகாததை கண்டு யாரோ ஒரு கிறிஸ்தவர், இப்படி சாவுக்கேதுவானதை எடுத்தாலும் ஒன்றும் ஆகாது என்று எழுதியதை நம்பலாமா. நண்பர் தங்கமணி இப்பொழுது தான் கேட்டிருக்கிறார், ஆனால் இந்த தளத்தில் நாங்கள் இந்த கேள்வியை எப்பவோ எழுப்பியிருக்கிறோம். கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமிருந்து பதில் தான் இல்லை.
இருக்கும் தேவ வார்த்தைகளில் ஒன்றையும் சேர்க்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறோமே தவிர வேதத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. சபைகளில் இன்று வெளிப்படுத்தன விசேஷம் எடுக்க பயம், காரணம் அர்த்தம் தெரிந்தால் தானே அதை பிரசங்கிக்க, ஆகவே வெறுமனே அதை படித்தால் போதும், அவன் பாக்கியவான் என்று போட்டிருப்பதால் அதை படியுங்கள் என்று போதிக்கும் சபைகள் உண்டு. என்னமோ போதக ஊழிய வரம் பெற்றிருக்கிறோம் என்று இப்படி சொல்ல வெடக்க படுவதில்லையா? இன்னும் சில சபைகளில் வெளி.ஐ பயங்கரமான சம்பவங்களால் அலங்கரித்து சொல்லுவார்கள்.
வசனம் சரியாக மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிரதா அல்லது வந்தது வந்தப்படியே அதற்கு தகுந்தாற்போல் பிரசங்கிக்கலாமா என்பதில் இல்லை காரியம். நான் எடுத்துக்காட்டாக கொடுத்த வசனம் தப்பாக மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறதே, அதை நீக்க சொல்லவில்லை, சரியானதை கொடுத்து குழப்பத்தை நீக்கலாமே. ஒரே புத்தகத்தின் ஒரு அதிகாரத்தில் ஒரு கருத்தும், மற்றோரு அதிகாரத்தில் வேறு கருத்தும் இருப்பது முரன்பாடு. இத்துனை நாள் ஆவிக்குறிய வியாபாரிகள் இதை கூட கவணிக்காமல் தங்கள் தொழிலில் மும்முறமாக இருந்தார்கள். சரி வேறு மொழிப்பெயர்ப்புகளிலிருந்து தெளிவு அடையளாமே. போதிக்கும் முன் சரியாக தங்களை தயாரித்துக்கொள்ளாலாமே! நான் போதிக்கும் போது யார் என்னிடம் கேள்விகள் கேட்டு விடுவார்கள் என்கிற மமதை தானே. கற்று கொள்ள தேவை இல்லை என்கிற மேட்டிமை தானே!! எல்லாம் எனக்கு தெரியும் என்கிற அகம்பாவம் தானே!!
நான் முன்னமே எழுதியது போல் நான் எந்த குழுவையோ குழுமத்தையோ சாராதவன் என்றும் ஆகவே அதற்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. சபைகளில் எல்லாம் சரியாக தான் நடக்கிறது, ஊழியரை குறை சொல்லக்கூடாது, வேத மொழிப்பெயர்ப்புகளில் எழுதியது எல்லாம் பரிசுத்த ஆவி தந்தது போன்ற சிந்தனைகள் முதிர்ச்சி பெற்றவனின் சிந்தை இல்லை மாறாக பால் குடிக்கும் பருவம்!!
என்னமோ நான் தான் வேதத்தை மொழிப்பெயர்த்து எழுதினது போல் பேசுகிறீர்களே! முதலாவது, என் தமிழை நக்கலும் நையாண்டியும் செய்ய வேண்டும் என்றால் தயவு செய்து இங்கு உங்கள் பதிவுகளை தராதீர்கள். நான் பல முறை பதிந்து இருக்கிறேன், நான் உங்களை போல் மேதாவியான தமிழ் படித்தது கிடையாது என்று. மீண்டும் மீண்டும் அதை சொல்லுவது என்னை தனிப்பட்ட முறையில் கேலி செய்வதாக நான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.
வேதத்தின் மொழிபெயர்ப்பு நிச்சயமாக மனித ஆவிக்கொண்டு தான் செய்யப்படுகிறது, இல்லாவிட்டால் இத்துனை வேறுபாடுகள் ஒவ்வொரு மொழிபெப்யர்ப்பிலும் இருக்கவே முடியாது. ஆனால் ஆண்டவரின் வருகையின் வெளிச்சம் பிராகசிக்க தொடங்கியிருக்கிறதால், இன்னும் தெளிவான இன்னும் பழமையான கையெழுத்து பிரதிகள் கிடைக்க தொடங்கியிருக்கிறது. 1964ல் கிடைத்த கும்ரன் குகை கையெழுத்து பிரதிகள் இப்பொழுது இருக்கும் பழமையான கையெழுத்து பிரதிகளாக இருக்கிறது. எத்துனை பழையதான கையெழுத்து பிரதிகள் கிடைக்கிறதோ, அந்த அளவிற்கு மூல வசனங்கலை அதில் எதிர்ப்பார்கலாம்.
சில வசனங்கள் மூல கையெழுத்து பிரதிகளில் இல்லை என்பதால் தான் "பாரிசுத்த வேதாகம" மொழிப்பெயர்ப்பாளர்கள் அதை அடைப்பு குறிக்குள் போட்டு இருக்கிறார்கள், பக்கத்து மாநிலமான கேரளாவின் மலையாள மொழிப்பெயர்ப்புகளில் பார்த்தீர்கள் என்றால் அந்த அடைப்பு குறி வசனமே இருக்காது, ஏனென்றால் அது தேவை இல்லை என்று எடுத்து விட்டார்கள். இதை தான் நாங்கள் ஆறாய்ந்து பார்க்க சொல்லுகிறோம். ஒரே பைபிள் சொசைட்டியின் வேறு வேறு மொழிகளில் இத்துனை வேற்பாடு என்று உங்களை போன்ற போதகர்கள் வேண்டும் என்றால் யோசிக்காமல் இருக்கலாம் ஆனால் எங்களை போன்று கற்றுக்கொள்வோருக்கும் வேதத்தை ஆராய்வோருக்கும் இது ரொம்பவும் முக்கியமானது.வார்த்தை அறிவு வேண்டும் என்றால் இல்லாமல் இருந்திருக்கலாம், கருத்து அறிவுக்கூடவா இல்லாமல் போயிற்று.
குறை உள்ளதை குறை உள்ளது என்று சொல்லுவது குற்றம் சாட்டுவதல்ல. மேலும் கிங் ஜேம்ஸ் போன்ற ஒரு மோசமான மொழிப்பெயர்ப்பு கிடையாது. அத்துனை தவறுகள், அவர்களின் மறு பதிவுகளில் அவர்களே அந்த தவறுகளை சுட்டி கான்பித்து திருத்தியும் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பரிசுத்த வேதாகமம் அவர்கள் முன் அட்டையில் எழுதிய பொய்யான வார்த்தைகள் "இது எபிரேயு கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது" என்கிற மொழிப்பெயர்ப்பே கிங் ஜேம்ஸில் எழுதப்பட்டதன் மொழிப்பெயர்ப்பு தான். கிங் ஜேம்ஸ் பரிசுத்த வேதாகமம் என்று பெயர் மாத்திரமே வைக்கவில்லை, மற்றபடி அந்த பழமையான கிங் ஜேம்ஸின் மொழிப்பெயர்ப்பு தான் உங்கள் கைகளில் இருக்கும் பரிசுத்த வேதாகமம். கிங் ஜேம்ஸ் பதிப்பாளர்களே அதில் உள்ள தவறுகளை திருத்தி எழுதியிருக்கும் போது, நீங்கள் மாத்திரம் ஏன் அதை ஒப்பு கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.
எடுத்துக்காட்டாக தான் 1 யோவான் 3:9 வசனத்தை நான் கொடுத்தேன். ஒருவனிடம் பாவம் இல்லை என்றால் அவன் இருளில் இருக்கிறான் என்று ஒன்றாம் அதிகாரத்தில் எழுத தூண்டிய அதே பரிசுத்த ஆவி மூன்றாம் அதிகாரத்தில் "பாவம் செய்ய மாட்டான்" என்று எழுதப்பட்டிருக்குமோ. இதை தான் நாங்கள் யோசிக்க சொல்லுகிறோம். இரு வசனங்கள் முறன்பாடாக இருந்தால் எப்படி? முழு வேதத்திலும் மனிதர்கள் பாவிகள் என்று சொன்ன பிறகு, 1 யோவான் 3:9 மட்டும் எப்படி சரியான மொழிப்பெயர்ப்பு என்பது தான் எங்கள் கேள்வி! பாரம்பரியமானதையே பற்றிக்கொண்டு தான் இருக்க வேண்டுமா?
உங்களை காட்டிலும் வேதத்தின் மேல் அதிகம் வைராக்கியம் கொண்டிருக்கிறேன் நான், ஆகவே தான் அதன் மனித மொழிப்பெயர்ப்புகளின் குறைய்களை ஆராய்ந்து பார்க்கிறேன், சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனங்களை ஆராய்கிறேன். எப்படி தங்களின் வாதங்களில் பிற மதங்களின் குறைகள் உங்களுக்கு குறைகளாக தேரிகிறதோ, அப்படியே, நான் நம் வேதாகம மொழிப்பெயர்ப்புகளின் குறைகளை ஆராய்கிறேன். இதில் தவறொன்றும் இருப்பதாக இல்லை. சேர்த்துக்கொள்லப்பட்ட வார்த்தைகள் மனித ஆவியில் எழுதப்பட்டதே! அதன் மேல் பெறுமை பாராட்ட வேஎண்டிய அவசியம் ஒன்றும் இல்லையே!
Don't tell that scripture are added by some one. If so they ask why not some body add more than something with bible. It's create totally non faith. But that scriptures are told to apostales not for other. They did that miracles. That's miracles should got end at 1 centurary. Read the passage of mark last chapter last verses confirm those miracles done by apostales for bring bible.
சேர்த்துக்கொள்ளப்பட்டதே அப்போஸ்தலர்கள் செய்த அற்புதங்களை பார்த்து தான்!! விசுவாசம் என்பது பார்வையால் அல்ல வார்த்தையால் தான்!! ஒரு காலத்தில் அற்புதங்கள் தேவையாக இருந்தது, ஆனால் அது வேதம் கைகளில் வரும் முன்!! இன்று வேதம் இல்லாத இடம் இல்லை, இப்பொழுதும் அற்புதத்தை நம்பி ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறவர்கள், அற்புதங்களை பிரசங்கிப்பவர்கள் இப்படி விஷத்தை குடிப்பார்களா என்பது தான் கேள்வி!! இப்படி செய்ய இயலாமல் போனால் தான் விசுவாச பிரச்சனை வரும் என்று தான் அந்த பகுதி சேர்த்துக்கொள்ளப்பட்ட பகுதி என்று எழுதியிருக்கிறேன் (உண்மையும் அது தானே!!),
இது மட்டும் அல்ல, இன்னும் எத்துனையோ சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனங்களினால் புதிய புதிய கோட்பாடுகள் உருவாக காரணமும், கள்ள உபதேசங்கள் தோன்ற காரணமாக அமைந்து விட்டது!!
Do you know islamic propagation center head ahmed deedat debate about poision chapter in bible. But one christians said that chapter already fulfilled. That's not belongs to now generation. So we had to give conclusion like this but we not criticise christians who are ignorance