இரண்டு விதமான மரணம், ஆவிக்குறிய மரணம், சரீரத்திற்கான மரணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மூன்று நிலைகளில் மரணம் என்பது சற்று புதிதாக இருக்கிறது. கடைசி காலம் ஆகிவிட்டதால், கள்ள தீர்க்கதரிசிகளுக்கு பஞ்சமே இல்லை, புதிது பிதிதான கருத்துக்களுடன் வருவார்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள். மனுஷக்குமாரன் மீண்டும் வரும் போது விசுவாசத்தை காண்பாறோ என்கிறது வேதம். ஆனால் நம் முயற்சியால் இரட்சிப்புக்கு முயற்சிகள் நடந்தேறிக்கொண்டு தான் இருக்கிறது. தேவன் இரட்சகராக இருக்கிறார் என்பதில் மனிதர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது போல்!! ஒரு மனிதன் தன் ஆவியில் மீண்டும் பிறப்பது தான் இரட்சிப்பு என்று இரட்சிப்புக்கு ஒரு புதிய பரிமானத்தை வெளியிட்டிருக்கிறது "இறைவன் தளம்".
ஒரு விஷயம் பெரிய புதிராகவே இருக்கிறது. இந்த ஆவியில் மறுபடியும் பிறக்கும் மனுஷன் பாவம் செய்வதில்லையா? பாவத்தில் அல்லது பாவத்திற்கு மரித்து பிறப்பது தானே மறுபடியும் பிறப்பது என்கிறார்கள் மாம்சத்தில் இருக்கும் "ஆவி ஜீவிகள்"! இவர்கள் பாவம் செய்யாத பரிசுத்தவான்களா? இல்லை நாங்களும் பாவம் செய்கிறோம் என்று இவர்கள் ஒத்துக்கொண்டால், இந்த "மறுபடியும் பிறந்த" மனிதனுக்கும் "பாவத்தில்" இருக்கும் அதாவது "மறுபடியும் பிறக்கமால்" பாவத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்!! யார் இதில் பாவம் செய்பவர்கள், யார் இதில் பாவம் செய்யாதவர்கள்!!