kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதா-குமாரன்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பிதா-குமாரன்!!


எபி. 1:5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

இயேசு கிறிஸ்து இந்த‌ பூமியில் இயேசுவாக‌ பிற‌க்கும் முன் ஆவி ரூபியாக தேவ‌னின் பிர‌தான‌ தூத‌ராக‌ இருந்த‌வ‌ர் என்ப‌த‌ற்கு இந்த‌ வ‌சன‌மும் சான்று. ஏன் இங்கு தேவ‌தூத‌ர்க‌ளுட‌ன் அவ‌ரை ஒப்பீட்டு பார்க்க‌வேண்டும்? திரியேக‌ தேவ‌ன், திரித்துவ‌ தேவ‌ன் என்கிற‌ ப‌ல‌வித‌மான‌ பொய்யான‌ கோட்பாடுக‌ளுக்கு ச‌ம்ம‌ட்டி அடியாக‌ இந்த‌ வ‌ச‌ன‌ம் உத‌வுகிற‌து. ஜெநிப்பித்தேன் என்கிற‌ மொழிப்பெய‌ர்ப்பு கிரேக்க‌ மூல‌ பாஷையான‌ "ஜினானோ" என்கிற‌ வார்த்தை. இத‌ன் அர்த்த‌ம், வாரிசு அதாவ‌து அப்பா, ம‌க‌ன் என்கிற‌ உற‌வு. ஆங்கிள‌த்தில் "ஜீன்" என்கிறோமே, அதுவும் இந்த‌ ஜினானோ என்கிற‌ கிரேக்க‌ வார்த்தையில் இருந்து வ‌ந்த‌தாகும். ஆக‌ பிதா இயேசு கிறிஸ்துவை உண்டாக்கின‌வ‌ர், ஆக‌வே தான் அவ‌ரின் த‌ற்சொருப‌மான‌வ‌ர் (Express* Image) என்று எபி 1:3 சொல்லுகிற‌து. நானே குமார‌னாக‌ இருந்து பிதாவாக‌ இருப்பேன் என்று எப்ப‌டியும் குழ‌ப்பும்ப‌டியாக‌ இந்த‌ வ‌ச‌ன‌த்தில் இல்லையே!! ஏன் தான் இந்த‌ திருத்துவ‌வாதிக‌ள் தேவ‌னை இப்ப‌டி மூன்றாக‌ ப‌ந்தாடுகிறார்க‌ளோ. ஒருவ‌ன் த‌ன் தேவ‌னையே ச‌ரியாக‌ தெரியாத‌ போது அவ‌னிட‌த்திலிருந்து என்ன‌ ச‌த்திய‌த்தை எதிர்ப்பார்க்க‌ முடியும்.

 பிசாசின் முத‌ல் த‌ந்திர‌மே, தேவ‌னை ச‌ரிவ‌ர‌ புரியாத‌வ‌ராக‌ மாற்றுவ‌து தானே. அவ‌ன் தான் ஏவாளிட‌ம் அந்த‌ குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்தினானே.

"அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது" ஆதி. 3:1

இப்ப‌டி தொட‌ங்கிய‌ பொய், இன்று தேவ‌னை மூன்றாக‌ மாற்றும் அள‌விற்கு துனிந்துவிட்டார்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ள்!!

"நான் அவ‌ருக்கு (கிறிஸ்துவிற்கு) பிதாவாக‌ இருப்பேன், அவ‌ர் (கிறிஸ்து) என‌க்கு குமார‌னாயிருப்பார்" என்ப‌தில் எந்த‌ ஒரு குழ‌ப்ப‌மும் இல்லை என்றே க‌ருதுகிறேன். இவ்வுள‌வு தெளிவான‌ ஒரு வ‌ச‌ன‌த்தை வைத்துக்கொண்டு எப்ப‌டி இவ‌ர் தான் அவ‌ர் அவ‌ர் தான் இவ‌ர் என்று வியாக்கியான‌ம் செய்கிறார்க‌ளோ இந்த‌ திருத்துவ‌வாதிக‌ள்!! துனிந்த‌வ‌ர்க‌ள் தான்!!

*Express means not only fast, but has a meaning "Exact"



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத் 16:16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்து பேதுருவிடம் இந்த கேள்வியை கேட்ட போது, அவர் மாமிசத்தில் இயேசு கிறிஸ்துவை புகழும்படியாக, "நீரே அந்த உன்னதமான தேவன்" என்று சொல்லவில்லை, மாறாக, அவர் வாயில் இருந்து வந்த வார்த்தை "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்"!! இன்றைய திருத்துவவாதிகளுக்கு தெரிந்தது அன்று பேதுருவிற்கு தெரியாமல் போய் விட்டது!! அதாவது இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று அல்லது "இயேசப்பா" போன்றதை பாவம் பேதுரு அரியாமல் போனார்!! இயேசு கிறிஸ்துவை தேவன் என்று சொல்லப்பட்ட சில வசனங்கள் உண்டு ஆனால் அதிகமான வசனங்களில் அவரை தேவ குமாரன் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது!! பிசாசுகளுக்கு தெரிந்தது கூட திருத்தவ‌வாதிகளுக்கு தெரியாமல் போய்விட்டது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது!!

மத். 8:29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

வேதம் மனிதனையும், ஏன் சாத்தானையும் கூட தான் வேதம் "தேவன்" என்று சொல்லியிருக்கிறது!!

2 கொரி. 4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

தேவன் என்கிற வார்த்தை ஒன்றை வைத்துக்கொண்டு பிதாவும் குமாரனும் (கூடவே பரிசுத்த ஆவி என்கிற தேவன் என்பது வேதத்தில் இல்லாத ஒரு பதம்) ஒன்று தான் என்பது தவறு என்று மீண்டும் பதிவு செய்கிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

You are my son, and today i begot you. What is the meaning of today here. Today means day of birth of jesus or day of resurrection of jesus. Because jesus got life from god in mother womb of mother mary. And also jesus got life from god in grave also. Which day god begot jesus

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

The day Jesus Christ consecrated himself and surrendered to the Will of God, his Father, this announcement was made!!

Consecration in the form of 'Baptism'!! Heaven opened means, the Will of God was fully understood by Jesus and he surrendered himself to the Will!!

God resurrected him from the grave so that Christ becomes the 'Life giving Spirit' to the whole human race who are destined to the grave!!

Even we are given a chance to become Sons of God who consecrate themselves and surrender to the will of God as it is rightly said in Romans 12:1.

So, the day Jesus consecrated himself was the day he was begotten!! This is my knowledge from the word of God!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவத்தை சற்று பார்ப்போம் (திரித்துவவாதிகளின் கவணத்திற்கு)

புதிய ஏற்பாட்டில் "தேவன்" என்று சொல்லப்பட்டிருக்கும் வார்த்தையை எடுத்து "திருத்துவம்" என்று போட்டு சில வசனங்களை வாசித்து பார்ப்போம், ஏனென்றால் தேவன் திருத்துவமாக இருப்பது தானே திருத்துவவாதிகளின் கோட்பாடு (வேதத்தில் இல்லாத கோட்ட்பாடு)!!

யோவான் 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

அப்படி என்றால் தேவனிடத்தில் (பிதா என்கிற தேவன், குமாரன் என்கிற தேவன், பரிசுத்த ஆவி என்கிற தேவன்(!!)) விசுவாசமாக இருந்து விட்டு, பிறகு என்னிடத்திலும் (இயேசு கிறிஸ்துவின்டத்தில்) விசுவாசமாக இருங்கள் என்கிறது வசனம்! இப்பொழுது பார்த்தோமென்றால் மூவர், நால்வராக மாறிவிட்டனரே!!

யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

இந்த வசனம் சொல்லுவது, திரித்துவ தேவன் (3 பேர்) தம்முடைய குமாரனை (இது யாரு!?) அனுப்பினர்!! அப்படி என்றால் இரண்டு குமாரர்களா!? குழப்பமாக இருக்கிறதே!!

இப்ப‌டியே தேவ‌ன் என்று வ‌ரும் வ‌ச‌ன‌த்தில் திருத்துவ‌ம் என்று போட்டு வாசித்தோமென்றால் குழ‌ப்ப‌மே மிஞ்சும்!! ஆக‌வே தான் திருத்துவ‌வாதிக‌ள் சொல்லும் ஒரு பிர‌ப‌ல‌மான‌ உண்மை, "திருத்துவ‌ம் என்ப‌து ஒரு இர‌க‌சிய‌ம்"!! ய‌ப்பா, வேத‌த்தில் ப‌வுல் ப‌ல‌ இர‌க‌சிய‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்தியிருக்கிறார், ஆனால் திரித்துவ‌ம் என்ப‌து ஒரு இர‌க‌சிய‌ம் என்றும், திரித்துவ‌ம் என்ப‌து ஒரு உண்மை என்றும் அவ‌ரால் கூட‌ வெளிப்ப‌டுத்த‌ முடியாம‌ல் போய்விட்ட‌தே!!

வேத‌த்தில் உள்ள கோட்பாடுக‌ளை விட்டு விட்டு, 3ம் நூற்றாண்டில் க‌த்தோலிக்க‌ ச‌பை மூல‌மாக‌ நுழைந்த‌ இந்த‌ திரித்துவ‌ கோட்பாட்டை இன்று காளான் போல் முழைக்கும் பெந்தெகோஸ்தே த‌னி ச‌பை வ‌ரை த‌வ‌றாம‌ல் பின்ப‌ற்றுவ‌து விய‌ப்பான‌ விஷ‌ய‌ம் தான்!! ஏன் விய‌ப்பு என்றால், வேத‌ம் சொல்லுவ‌து அப்ப‌டியே நிறைவேறுகிற‌து என்று தான், அதாவ‌து ம‌னித‌ போத‌னை ச‌பைக‌ளில் தாராள‌மாக‌ செவிக்கொடுக்க‌ப்ப‌டும் என்ப‌து தான்!!

திரித்துவ‌வாதிக‌ளை இவ‌ர்க‌ள் ந‌ம்பும் திரித்துவ‌ தேவ‌னே வ‌ழி ந‌ட‌த்த‌ட்டும்!!

ம‌ற்ற‌வ‌ர்க‌ளை, ந‌ம் க‌ர்த்த‌ரும் ச‌கோத‌ர‌ருமான‌ இயேசு கிறிஸ்துவின் பிதா, இவ‌ர்க‌ளின் ஆவியை (சிந்தையை) கொண்டு வ‌ழிந‌ட‌த்தட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பலர் சொல்லுவார்கள்,

மாம்சத்தில் மாத்திரமே இயேசு கிறிஸ்து மகனாக (குமாரனாக) இருந்தார், மற்றப்படி உயிர்த்தெழுந்தவுடன் அவர் பிதா தான்!!

யோவான் 20:17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

எவ்வுளவு தெளிவான ஒரு வசனம்!! இயேசு கிறிஸ்துவின் பிதாவும், நம் பிதாவும் ஒருவரே (அந்த பிதா இயேசு கிறிஸ்து அல்ல), நம் தேவனும், இயேசு கிறிஸ்துவின் தேவனும் ஒருவரே (அந்த தேவன் இயேசு கிறிஸ்து அல்ல‌)!! என்பதையும், அவர் பிதா இல்லை என்பதையும் இந்த வசனம் மிக தெளிவாக சொல்லியிருக்கிறதே!! அவ‌ரே பிதாவா இருந்திருந்தால், உங்க‌ள் தேவ‌னாக‌வும், உங்க‌ள் பிதாவாக‌வும் நான் ஏறிப்போகிறேன் என்று அல்ல‌வா சொல்லியிருக்க‌ வேண்டும்!! மூன்றாம் நூற்றாண்டு வ‌ரையில் திருத்துவ‌ம் என்று இல்லாம‌ல் இருந்த‌து, ஓநாய்க‌ள் வ‌ந்து இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு துர்போத‌னையை கொண்டு வ‌ந்து தேவ‌னின் ம‌கிமையை கெடுத்து வைத்து, இன்று கிறிஸ்துவ‌த்தை ஆளுகை செய்வ‌தாக‌ நினைத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள்!! குருட‌ர்க‌ளின் க‌ண்க‌ள் திற‌க்க‌ப்ப‌டும் கால‌ம் வ‌ருகிற‌து (ஏசா 35)!!

இன்னும் எத்துனை கால‌த்தை தான் இவ‌ர்க‌ள் "விசுவாசிக‌ளையும்" கிறிஸ்த‌வ‌த்தையும் ஏமாற்றுவார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

லூக். 2:13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: 14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

எல்லா ஜனத்திற்கும் ஒரு நற்செய்தியை சொல்லி விட்டு, தேவ தூதர் கூட்டம் இப்படியாக உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை செலுத்துகிறார்கள், எனென்றால் உன்னதத்தில் இருக்கும் அந்த தேவன், தன் நேச குமாரனை, வார்த்தையாக (லோகோஸ்) இருந்த கிறிஸ்துவை இந்த பூமிக்கு தன் (தேவனின்) சித்தம் நிறைவேற்றும்படி, எல்லா மனிதர்களின் இரட்சிப்பிற்காக, மாம்சத்தில் இயேசுவாக பிறக்க வைத்தார்!! தேவ தூதர்கள் இன்றைய திரித்துவம் பேசுபவர்கள் போல், தேவனே மாம்சத்தில் வந்து பிறந்தார் என்று பாடவில்லை!! மாறாக மாம்சத்தில் வந்த கிறிஸ்துவினால் அனைவருக்கும் இரட்சிப்பின் செய்தியும், அதினால் பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் என்றே சொல்லி வாழ்த்தினார்கள்!! வாழ்த்திய பிறகு தேவனை துதித்தார்கள்!!

வேதத்தில் ஒவ்வொரு வசனமும் தேவன் வேறு கிறிஸ்து வேறு என்று தெளிவாக இருக்கிறது!! புரியாத ஒரு சில வசனங்களை வைத்துக்கொண்டு, இவர் தான் அவர், அவர் தான் இவர் என்று மாயாஜால கதைகளை வைத்து தொழில் நடத்தும் கூட்டத்தார் இதை புரிந்துக்கொள்ளும் காலம் வ‌ருகிறது!!

தேவனால் மரிக்க முடியாது, அவர் சாவாமையுள்ளவர், அவர் மூன்று நாட்கள் மரித்து போய் இருக்க முடியுமா!! ஆகவே அந்த இரட்சிப்பின் பலியாக, மீட்கும் பொருளாக தேவனே அல்ல, அவரின் ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை இயேசுவாக மாம்சத்தில் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தந்தை அல்லது அப்பா என்றாலே, உருவாக்குபவர் (Life-giver), மகன் என்றால் பெற்றுக்கொள்பவர் என்பது மனிதர்களாக இருக்கும் யாவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்!! கிறிஸ்துவும் அப்ப‌டியே தான் தேவ‌னின் குமார‌ன் என்ப‌தை தெளிவாக‌ புரியும்ப‌டியாக‌ அநேக‌ முறை சொல்லியிருக்கிறார்,

யோவான் 14:28  ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

யோவான் 20:17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

யோவான் 7:17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

இப்ப‌டி எல்லாம் சொல்லிய‌ இயேசு கிறிஸ்து ஒரு இட‌த்திலாவ‌து நானும் பிதாவும் ஒன்று என்று நேர‌டியாக‌ சொல்லிய‌து உண்டா? இல்லையே!! ஏன்? ஏனென்றால் அவ‌ர் பொய் சொல்லாத‌வ‌ர், அவ‌ர் தேவ‌னின் குமார‌ன் தான் என்கிற‌ போது த‌ன்னை எப்ப‌டி பிதா என்று சொல்லுவார்!!

திரித்துவ‌ம் போதிப்போர் அதிக‌ப‌டியாக‌ ஒரு வ‌ச‌ன‌த்தை த‌ங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப்ப‌டுத்துவார்க‌ள்,

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

ஒன்றாயிருக்கிறோம் என்ப‌த‌ற்கு ஒருவ‌ராக‌ இருக்கிறோம் என்ப‌த‌ற்கு வித்தியாச‌ம் இருக்கிற‌து!! ஒன்றாக‌ இருக்கிறோம் என்றால் ஒருவ‌ராக‌ இருக்கிறோம் என்ப‌து கிடையாது, எப்ப‌டி என்றால்,

யோவான் 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

இந்த‌ இரு வ‌ச‌ன‌ங்க‌ளை வைத்து ஒன்றாக‌ இருப்ப‌து என்றால் என்ன‌வென்று பார்க்க‌லாம்!! ஒன்றாக‌ இருப்ப‌து ஒருவ‌ராக‌ இருப்ப‌து என்று விள‌க்கும் திரித்துவாதிக‌ள், அப்ப‌டி என்றால் அவ‌ர்க‌ள் ஒன்ப்றாக‌ இருக்கும்ப‌டி என்றால் அவ‌ர்க‌ள் (அப்போஸ்த‌ல‌ர்க‌ளும், அவ‌ரின் வார்த்தைக‌ளை பின் ப‌ற்றுப‌ப‌வ‌ர்க‌ளும்) ஒருவ‌ராக‌ தானே இருக்க‌ முடியும்!! அப்ப‌டியா இருக்கிறோம்?

ஒன்றாக‌ இருக்கிரோம் என்றால், சிந்தையில், த‌ன்மையில், செய‌ல்க‌ளில் ஒற்றுமையாக‌ இருப்ப‌து தான்!! ஆக‌வே தான் கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றாக‌ இருந்த‌து போல் நாமும் (சீஷ‌ர்க‌ள், கிறிஸ்த‌வ‌ர்க‌ள்) ஒன்றாக‌ இருக்க‌ அவ‌ர் ஜெபிக்கிறார், திரித்துவ‌ர்க‌ள் சொல்லுவ‌து போல் நாம் எல்லாரும் ஒரே ஆள் கிடையாது, ஒரே த‌ன்மை, ஒரே சிந்தை, ஒரே விசுவாச‌ம் உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌து தான்!!

இன்னும் ஒரு வ‌ச‌ன‌ம்:

1 கொரி 15:27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

பிதா தன் குமார‌னுக்கு ச‌க‌ல‌த்தையும் கிழ்ப்ப‌டுத்தி கொடுக்கிறார், ஆனால் ச‌க‌ல‌மும் கிறிஸ்துவிற்கு கீழ்ப்ப‌ட்டிருப‌தால், கீழ்ப்ப‌டுத்தின‌வ‌ரே (பிதாவே) கிறிஸ்துவிற்கு கீழ்ப்ப‌ட‌வில்லை என்ப‌து அனைவ‌ரும் தெரிந்த‌தே (வெளிய‌ர‌ங்க‌மாயிருக்கிற‌து, திரித்துவ‌வாதிக‌ளை த‌விர‌)!! ச‌க‌ல‌த்தையும் கிறிஸ்துவிற்கு கீழ்ப்ப‌டுத்தினார், ஆனால் கிறிஸ்துவோ, பிதாவிற்கு கீழ்ப்ப‌ட்டிருப்பார், என்கிற‌து வ‌ச‌ன‌ம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

லூக்கா 22:69 இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.

இது இயேசு கிறிஸ்துவே சொன்னது தான்!! இது முதல் அவர் சர்வவல்லமையுள்ள தேவனாக அல்ல மாறாக சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பர் என்று தன்னை குறித்து தான் சொல்லுகிறார்!!

கிறிஸ்துவே வந்து சொன்னாலும் இந்த திரித்துவவாதிகள், இல்லை இல்லை ஆண்டவரே, நீர் தான் சர்வவல்லமையுள்ள தேவனாக இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசப்பிரமானம் எல்லாம் எழுதிவைத்திருக்கிறோம், இப்படி திடீரென்று சொன்னால் எப்படி!! என்று கேட்பார்கள்!!

ரோமர் 8:34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

ந‌ம‌க்காக‌ அவ‌ரே அவ‌ரிட‌ம் வேண்டுத‌ல் செய்கிறார் என்றால் அது அப‌த்த‌மாக‌ இருக்கும், அவ‌ர் பிதாவிட‌த்தில் வேண்டுத‌ல் செய்கிறார் என்றால் அவ‌ர் பிதாவாக‌ இருக்க‌ வாய்ப்பே இல்லை!! வேண்டுத‌ல் செய்கிற‌வ‌ரும், வேண்டுத‌ல் செய்ய‌ப்ப‌டுகிற‌வ‌ரும் ச‌ம‌மாக‌ இருக்க‌ முடியுமா!! அவ‌ர் ந‌ம‌க்காக‌ வேண்டுத‌ல் மாத்திர‌ம் அல்ல‌ ந‌ம‌க்காக‌ ப‌ரிந்து பேசுகிற‌வ‌ராக‌ இருக்கிறார்!! யார் இந்த‌ ந‌ம்க்காக‌, அது தான் ச‌பை (பெந்தகோஸ்தே ச‌பை, க‌த்தோலிக்க‌ ச‌பை, அந்த‌ ச‌பை இந்த‌ ச‌பை கிடையாது) கிறிஸ்துவின் ச‌ரீரமான‌ ச‌பை!! அவ‌ர் வேண்டுத‌ல் மாத்திர‌ம் அல்ல‌ பிதாவிட‌த்தில் ப‌ரிந்தும் பேசுகிறார்!!

I யோவான் 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

திரித்துவ‌ கோட்பாடு உள்ள‌வ‌ர்க‌ளே, அது எப்ப‌டி, அவ‌ரே அவ‌ரிட‌ம் வேண்டுத‌லும் ப‌ரிந்து பேசுத‌லும் செய்வாரா!! இன்னும் எத்துனை கால‌ம் தான் பார‌ம்ப‌ரிய‌மான‌ திரித்துவ‌த்தை பிடித்துக்கோன்டு இருக்க‌ போகிறீர்க‌ள்!! உல‌க‌த்தாரை வ‌ஞ்சித்துக்கொண்டு இருப்பீர்க‌ள்!!

எபேசியர் 1:21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,

கொலோசெயர் 3:1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

கிறிஸ்துவை த‌ம்முடைய‌ வ‌ல‌து பாரிச‌த்தில் ஒருவ‌ர் உட்காரும்ப‌டி செய்தார் என்றால் அவ‌ர் யார்? அவ‌ரும் கிறிஸ்துவும் ஒன்றான‌வ‌ர்க‌ளா?

எபிரெயர் 1:13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

நான் ஏதோ, கிறிஸ்துவை பிர‌தான‌ தூத‌னான‌வ‌ர் என்று சொல்லி தேவ‌ தூஷ‌ன‌ம் செய்கிறேன் என்று குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌டுகிறேனே, வ‌ச‌ன‌ம் என்ன‌ சொல்லுகிற‌து, "தூத‌ர்க‌ளில் யாருக்காவ‌து எப்போதாகிலும் அவ‌ர் சொன்ன‌துண்டா"? என்று ஏன் தூத‌ர்க‌ளை இந்த‌ இட‌த்தில் சொல்ல‌ வேண்டும், என்னுடைய‌ வ‌ல‌து பாரிச‌த்தில் உட்காரும் என்று யாரிட‌மாவ‌து கேட்ட‌து உண்டா? என்று மாத்திர‌மே சொல்லியிருக்க‌லாமே!! இப்ப‌டி வேத‌த்தில் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளை சேர்த்து கோர்த்து, ச‌ப‌ந்த‌ப்ப‌டுத்தி பார்த்தோமென்றால் எல்லாவ‌ற்றுக்கும் விடை உண்டு, "திரித்துவ‌ம்" என்கிற‌ பாபிலோனிய‌ இர‌க‌சிய‌த்தை த‌விர‌!! ஏனென்றால் வேத‌த்தில் "திரித்துவ‌ம்" கிடைய‌வே கிடையாது, அந்த‌ வார்த்தையும் கிடையாது, அந்த‌ சாய‌லும் கிடையாது, அந்த‌ த‌ன்மையும் கிடையாது, அந்த‌ வாடையும் கிடையாது!!

I பேதுரு 3:22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவுக்கு கிழ்ப்ப‌ட்ட‌வை , தேவ‌தூத‌ர்க‌ளும் அதிகார‌ங்க‌ளும் வ‌ல்ல‌மைக‌ளும் தானே அன்றி ச‌ர்வ‌வ‌ல்ல‌மையுள்ள‌ தேவ‌ன் அல்ல‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யோவான் 5:37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.

இங்கு "நானே பிதா" என்று கூறுவதற்குப் பதிலாக கிறிஸ்து எதற்காக இப்படி "பொய்" சொல்லவேண்டும். என்னைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான் என்று சொன்னதை கையில் எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பிதா என்று கூறுபவர்கள் இந்த வசனத்திற்கு என்ன பதில் சொல்வார்கள்?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1 கொரி 11:3. ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

நீங்கள் என்பது, திரித்துவம் பேசுபவர்களே, நீங்கள் இதை அவசியம் அறிய வேண்டியது, என்னவென்றால், கிறிஸ்து சர்வவல்லமையுள்ள தேவன் அல்ல, கிறிஸ்துவிற்கு தேவனே தலையாயிருக்கிறார்!! திரித்துவம் பேசுபவர்களுக்கு கிறிஸ்து தான் சர்வவல்லமை உள்ள தேவன் என்றால் வசனத்தில் உள்ள கிறிஸ்துவின் தலையாயிருக்கிற தேவன் யாராம்??!!

1 கொரி 3:23. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

கிறிஸ்து தான் பிதாவாகிய தேவன் என்றால் வசனத்தின் படி கிறிஸ்து தேவனுடையவர் என்பதை "கிறிஸ்து தான் பிதா" என்று திரித்துவம் பேசுபவர்கள் சொல்லுவார்கள் என்றால், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பதை "நீங்கள் கிறிஸ்து" என்று சொல்லாமா!!?? பிறகென்ன, நீங்கள் கிறிஸ்து என்று சொல்லிவிட்டால் "பிதாவாகிய தேவனும்' நாமே என்று சொன்னாலும் சொல்லுவார்கள்!! இதை விட தேவ தூஷனம் வேறு என்ன வேண்டும்!! இப்பவும் திரித்துவம் சரியானதா என்று யோசியுங்கள்!!

கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று கிறிஸ்துவம் என்கிற மார்கத்திற்குள் இருக்கும் அன்பர்களே, உங்களுக்கு தெரியுமா, கிறிஸ்துவிற்கு தேவன் இருக்கிறார், நமக்கு இருப்பதை போல், கிறிஸ்துவிற்கு பிதா இருக்கிறார், நமக்கு பிதாவாக இருப்பவரே!!

யோவான் 20:17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்

ரோமர் 15:5. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,

2 கொரி 1:3. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரி. 11:31. என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.

எபே 1:3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

கொலோ 1:5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.


இத்துனை வசனங்கள் இயேசு கிறிஸ்துவிற்கு ஒரு பிதா இருக்கிறார் என்றும், நான் எப்படி அவரை பிதாவாகிய தேவன் என்கிறோமே, அப்படியே கிறிஸ்துவிற்கும் அவர் பிதாவாகிய தேவன் என்று கூறும் சில வசனங்கள் (இன்னும் நிறைய இருக்கிறது) மாத்திரமே எடுத்து எழுதியிருக்கிறேன். திரித்துவம் பேசுவோருக்கு ஒரே ஜெபம் தான் இருக்கு, அதுவும் சொந்த சரக்காக இல்லாமல், வேதத்திலிருந்து தான் தருகிறேன்,

எபே 1:17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

திரித்துவம் பேசி வேத அறியாமையிலிருக்கும் "கிறிஸ்தவர்கள்" உங்களுக்கு தான் இந்த ஜெபம், வேதத்திலிருந்து தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (அவரை) நீங்கள் (திரித்துவம் பேசுபவர்களே) அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்!! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் பிதாவே!! ஆமென்!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

கடவுளையும் இயேசுவையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
மக்கள் திருதுவதைப் பற்றி முன்னதாகவே உருவாக்கி வைத்துள்ள எண்ணம் எதுவும் இல்லாமல், பைப்லை முதலில் இருந்து முடிவுவரை வாசித்தால், திருத்துவவாதிகள் சொந்தமாய் அத்தகைய கருத்தை அடைவார்களா ?
இல்லவே இல்லை.
கடவுள் ஒருவரே சர்வவல்லவர், சிருஸ்டிகர், வேறு எவரிலும் இருந்து தனித்தவர் மேலும் இயேசு, மனிதனாவதட்கு
முன்னான தம்முடைய வாழ்கையிலும், தனித்தவறும் வேறு எவரிலும் இருந்து தெளிவாக வேருபட்டவரும், சிருச்டிக்கப்படவரும் , கடவுளுக்கு கிழ்ப்படவருமானவர் எனவும், பாரபட்சமில்லாத வாசகர்களுக்கு மிக தெளிவாக விளங்கும். இவற்றுக்கு மூலகாரணமே தவறான புரிதலே .... மற்றும் இயேசு கடவுளால் சிருஷ்டிக்கப் பட்டதால், காலத்திலும், வல்லமைஇலும் அறிவிலும் இரண்டாந்தர நிலையிலே இருக்கிறார். கடவுளின் காணக் கூடாத சிருஷ்டிகளின் தொடக்கமாக தம்மை கடவுள் சிறுச்டிததால், மனிதனாவதட்கு முன்னாள் தாம் வாழ்த்தார் என இயேசுவே சொல்லியும், அதற்கான நண்பகதனயான திர்கதரிசன வசனங்கள் தாராளமாக கொடுக்கப் பட்டும் புரியாத அசுத்த ஆவிகளின் வழிநடத்தலில்  கொண்டு பிரசங்கிக்கும் போதகர்களை என்வென்று சொல்வது.


-- Edited by Theneer Pookal on Thursday 20th of January 2011 08:39:54 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 17:5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

John 17: 5. And now, Father, glorify me in your presence with the glory I had with you before the world began.

இந்த அதிகாரம் முழுவதும் கிறிஸ்து இயேசு தன் பிதாவினிடத்தில் பேசுவதை பார்க்க முடிகிறது!!

இங்கே குறிப்பிட்ட இந்த வசனத்தில் கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் தன் பிதாவாகிய தேவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட மகிமையுடன் இருந்திருக்கிறார்!! "உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த" என்கிற பதில் நிச்சயம் ஒரு மனிதனிடத்தில் இருந்து மற்றோருவருக்கு என்பதை சொல்லும் பதமாக இருக்கிறது!! ஒருவரிடத்திலிருந்து அந்த மகிமையை பெற்றுக்கொள்கிறார் என்றால் இருவரும் சமமாக இருக்க வாய்ப்பே இல்லை!! ஒருவர் மகிமையை தருகிறார், மற்றொருவர் பெற்றவராக இருந்தார் என்பதை கிறிஸ்து இயேசு இங்கே சொல்லுகிறார்!!

அடுத்து கிறிஸ்து தேவனிடத்தில் இந்த வசனத்தில் கேட்பது, அவருக்கு இருந்த முந்தைய மகிமையையே!! ஆனால் தேவனின் சித்தத்தை நிறைவேற்றிய குமாரனுக்கு, தேவன் கொடுத்த இடம், தேவனை போல் உள்ள சாகாமை, எல்லாவற்றுக்கும் மேலான ஒரு இடத்தை கொடுத்தார்,

பிலி 2:8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

ஒருவ‌ர் உய‌ர்த்துகிறார், ம‌ற்றுமொருவ‌ர் உய‌ர்த்த‌ப்ப‌டுகிறார், எப்ப‌டி இருவ‌ரும் ஒரே நிலை உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியும்!?

திரித்துவ‌ம் பேசுப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு கேள்வி, ஒரே நிலையில் இருப்ப‌வ‌ர்க‌ள், அல்ல‌து இவ‌ரே தான் அவ‌ர், அவ‌ரே தான் இவ‌ர் என்றால், ஏன் ஒருவ‌ர் முந்திய‌ ம‌கிமையை யாரிட‌மோ கேட்க‌வேண்டும், அல்ல‌து இருவ‌ரும் ஒருவ‌ரே தான் என்றால் ஏன் ஒருவ‌ர் உய‌ர்த்த‌னும் ம‌ற்றொருவ‌ர் உய‌ர்த்த‌ப்ப‌ட‌னும்!??

வார்த்தை தேவ‌னிட‌த்தில் இருந்த‌து என்றாலே, அங்கே இருவ‌ர் இருக்கிறார்க‌ள் என்ப‌து உண்மையா இல்லையா!??

யோவான் 17ம் அதிகாரத்தை வாசித்தும் ஒருவர் திரித்துவம் பேசுகிறார் என்றால், அவர் வேதத்தை ஏதோ வாசிக்க  வேண்டும் என்பதற்காக தான் வாசிக்கிறார், மற்றபடி பாரம்பரியத்தையே பின்பற்றுபவர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1 யோவான் 4:15. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

இயேசுவானவர் என்றால் இயேசுவாக வந்த கிறிஸ்து என்பதே!! அதாவது இயேசு தேவனுடைய குமாரனென்று யார் அறிக்கை பண்ணுகிறானோ, அவனில் தேவன் நிலைத்திருக்கிறாராம்!!

தேவன் இயேசுவாக வரவில்லை, மாறாக பிதாவாகிய தேவனே தனது குமாரனாகிய கிறிஸ்துவை இயேசுவாக இந்த பூமிக்கு அனுப்பினார்!!

தேவன் தன் நிலையிலிருந்து ஒரு போதும் கீழே வர முடியாது, அவர் சேரக்கூடாத ஒளியில் வாசமாக இருப்பவர், பரலோக சிங்காசனத்தில் வீற்றிருப்பவர், ஆதி அந்தம் இல்லாதவர், சாகாமை இல்லாதவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம் கிடையாது!! அவரின் சர்வவல்லமைத்தன்மையை புரிந்துக்கொள்ள பாவத்தில் ஊறிப்போன மனித புத்தியால் புரிந்துக்கொள்ள முடியாது!!

ஆகவே தான் அநேகர் (அநேகர் என்றால் ஏறகுறைய 99% கிறிஸ்தவர்கள் எனப்படுவோர்) தேவனின் தன்மையை புரிந்துக்கொள்ளாமல், அவர் தான் இயேசுவாக வந்தவர், அவரே தான் மூன்று நாட்கள் மரித்திருந்தார், என்று இன்னும் பல விதங்களில் தேவனின் தன்மையிலிருந்து அவரை மிகவும் தாழ்த்தி பல கோட்பாடுகளை கொண்டு வந்திருக்கிறார்கள்!!

ஆனால் வசனம் சொல்லுகிறது, இயேசுவானவரை தேவன் என்று அல்ல, மாறாக தேவனின் குமாரன் என்றே அறிக்கை செய்ய வேண்டும் என்று!! இனி வசனம் முக்கியமா, அல்லது என் பூட்டன் காலத்திலிருந்தே நாங்கள் இயேசு தான் தேவன் என்று விசுவாசித்து வருகிறோம் என்கிற உணர்வு முக்கியமா!!

கிறிஸ்தவர்களே, சிந்தியுங்கள்!! இன்னும் பாருங்க‌ள்,

1 யோவான் 4:9. தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

தேவ‌ன் ந‌ம் மேல் வைத்திருக்கும் அன்பின் போருட்டே, அவ‌ர் அல்ல, மாறாக‌ அவ‌ரின் குமார‌னையே இந்த‌ உலக‌த்திற்கு அனுப்பினார் என்று வ‌ச‌ன‌ம் தெளிவாக‌ இருக்கிற‌து!! வ‌சன‌த்தின் ப‌டியான‌ விசுவாச‌ம் அவ‌சிய‌மா, அல்ல‌து பார‌ம்ப‌ரிய‌மா!! பார‌ம்ப‌ரிய‌ம் தோன்றுவ‌து பொய்யான‌ விசுவாச‌த்தினால் மாத்திர‌மே!! பொய்யின் பிதா யார் தெரியுமா? சாத்தான்!! எப்ப‌டி? அவ‌னே உல‌த்தின் முத‌ல் பொய்யை ஏவாளிட‌ம் சொன்னான்,

ஆதி 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

இதுவே உல‌கின் முத‌ல் பொய்!! ஆக‌வே தான் கிறிஸ்து சாத்தானை குறித்து சொல்லும் போது,

யோவான் 8:44............அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

அவ‌ன் என்ன‌ த‌ன் சொந்த‌த்தில் எடுத்து பேசினான் தெரியுமா!!

தேவ‌ன் சொன்ன‌து, ".......... அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." (ஆதி. 2:17), ஆனால் சாத்தான் த‌ன் சொந்த‌த்தில் சொன்னது, "நீங்க‌ள் சாக‌வே சாவ‌தில்லை" என்று!!

யோவான் இன்னும் எழுதும் போது,

1 யோவான் 4:3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

மாம்ச‌த்தில் வ‌ந்த‌வ‌ர் கிறிஸ்து என்று அறிக்கை செய்ப‌வன் தேவ‌னின் ஆவியை உடைய‌வனாக‌ இருக்கிறான், ம‌ற்ற‌ப‌டி வேறு விதமாக அறிக்கை செய்பவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியில் இருக்கிற‌வ‌ர்க‌ளாகிறார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard