நரகத்திலிருந்து ஒரு கடிதம். அவியாத அக்கினியில் எரியாத ஒரு காகிதம், பேனாவும் கொடுப்பார்கள் போல்!! ஐயோ, எங்கே தான் போகுதோ இந்த கிறித்தவம். புதிது புதிதாக யோசிக்க தனீயாக ரூம் போடுவார்கள் போல் இந்த வீடியோ தயாரிக்கிறவர்கள். இந்த காமேடி வீடியோவைத் தந்த திரு அருள் எம் ராஜ் அவர்கள் அந்த தளத்திற்கு ஏற்ற ஒரு வீடியோவை தந்து நரக பிரியர்களின் மனகுளிர்சிக்கு காரணமாகிவிட்டார் என்றால் மிகையாகாது!!
சரி வீடியோ என்ன தான் சொல்லுகிறது,
இரு நண்பர்கள், ஒன்றாக கால்பந்து விளையாடுவார்களாம், ஒன்றாக பார்ட்டிக்கு போவார்களாம், ஒன்றாக படிப்பார்களாம், அதில் ஒருவர் கிறிஸ்துவுடன் நெருங்கி பழகுபவர், மற்றவர் கிறிஸ்துவை அறியாதவர் (ஆனால் இருவரும் பார்ட்டிக்கு ஒன்றாக தான் போவார்கள்)!! வழக்கம்போல் கிறிஸ்துவை அறியாதவரே மரிக்கிறார், நியாயதீர்ப்பின் போது திறக்கப்படும் "ஜீவ புத்தகம்" இவர் மரித்தவுடன் இவருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவியாத அக்கினிக்கு தூதர்களால் இழுத்துச்செல்லப்படுகிறார். அங்கே அவரால் எல்லாம் பார்க்க முடிகிறதாம், கேட்கமுடிகிறதாம், உனரமுடிகிறதாம் (பரலோகத்தில் இந்த உனர்ச்சிகள் இல்லைபோல், அது எல்லாம் பரலோகம் நரகம் விஸிட் அடித்தவகளை கேட்டால் தான் தெரியும்), ஏன் கடிதமும் எழுதமுடிகிறதாம். அதில், என்னோடு சேர்ந்து சுத்தி திரிந்தாயே, தண்ணி அடிச்சாயே, விளையாடினாயே, ஏன் கிறிஸ்துவை எனக்கு சொல்லவில்லை என்பது தான் அந்த கடிதத்தின் சுருக்கம். அதாவது கிறிஸ்துவை தெரிந்துக்கொள்ளாதவர்கள் அனைவரும் போகும் இடம் "அவியாத அக்கினி" தான் என்பது தான் அந்த வீடியோவின் கரு. அப்படியென்றால்,
1. பழைய ஏற்பாட்டில் உள்ளவர்கள் அனைவருமே நிச்சயமாக அங்கே தான் இருப்பார்கள். 2. குழந்தைகள் முதல் புத்திசுவாதீனம் இல்லதவர்கள், என்று இன்னும் ஒரு பெரிய கூட்டம்.
ஆனால், கிறிஸ்துவை தெரிந்தவர்கள் பரலோகத்தில் இருப்பார்கள், அதில் கிறிஸ்துவை அரிந்து ஜெயிலில் இருக்கும் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் போல். இந்த நரக போதகர்களுக்கு, கிறிஸ்துவை ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு உண்மையான காரணத்தை சொல்ல முடியுமா!
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
இப்படி ஒரு வசனத்தையும் கொடுத்துவிட்டு, கிறிஸ்துவை அறியாதவர்கள் அனைவரும் நரகத்திற்கு தான் போவார்கள் என்பது அர்த்தமற்ற வெறி பிடித்தவர்களின், தேவனை கேவல படுத்துவோரின் கேவலமான புத்தியை தான் வெளிப்படுத்துகிறது. கடைசிநாளில் அவனை எழுப்புவேன் என்று சொல்லிவிட்டு, மரித்தவுடன் ஒருவனை அவியாத அக்கினியில் போட்டுவிடுவது அவரின் வார்த்தைகளை அவரே மீறுவதாக இல்லையா. நல்ல புத்தி உள்ளவர்கள் யோசிக்கட்டுமே!!