kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்!!


தீத்து 1:9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
10. அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
11. அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்

இன்று அநேகர், அன்பாக எடுத்து சொல்லுங்க பிரதர், ஏன் இப்படி கோபம் உங்கள் தளத்தில் தெரிகிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்த வசனம் தான் என்னால் தர முடியும். திருவ‌ச‌ன‌ம் சொல்லாத‌தை சொல்லுகிற‌வ‌ர்க‌ள், க‌ன‌வுக‌ள் காட்சிக‌ள் போன்ற‌ மாயையினால் ப‌ல‌ வித‌மான‌ கேட்டின் உப‌தேச‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்துகிற‌வ‌ர்க‌ல், தேவ‌ன் த‌ருகிற‌ வெளிப்பாடு என்று த‌ங்க‌ளின் ம‌ன‌தில் எழும்பும் இச்சைக‌ளை சொல்லுவோர் தான் தேவ‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு எதிர்பேசுகிற‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளை க‌ண்ட‌ன‌ம் பண்ண‌ ப‌வுல் தீமோத்தியிட‌ம் சொல்லுகிறார், உண்மையான‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு சாய‌ம் பூசி இவ‌ர்க‌ள் (எதிர்பேசுகிற‌வ‌ர்க‌ள்) அத‌ற்கு வேறு அர்த்த‌ம் கொடுத்து வ‌ருகிறார்க‌ள். இந்த‌ எதிர் பேசுகிற‌வ‌ர்க‌ளில் அநேக‌ர், வ‌ச‌ன‌த்தின்ப‌டி விருத்த‌சேத‌முள்ள‌வ‌ர்க‌ள் என்று இருக்கிற‌து. ப‌வுல் இதை எழுதும் போது யார் இந்த‌ கூட்ட‌த்தார், வேறு யாரும் இல்லை, ப‌ழைய‌ ஏற்பாட்டை பின்ப‌ற்றிய‌ யூத‌ர்க‌ள் அவ‌ர்க‌ள், இன்று யாரென்றால், ப‌ழைய‌ ஏற்பாட்டை நாம் பின் ப‌ற்ற‌வேண்டும் என்று போதிப்ப‌வ‌ர்க‌ள் தான் அந்த‌ எதிர்பேசுகிற‌வ‌ர்க‌ள். இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் வாயை அடைக்க‌ இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுகிற‌து, ப‌ய‌ன்ப‌டும். இந்த‌ கூட்ட‌த்தார் த‌ங்க‌ளுக்கு இழிவான‌ ஆதாய‌த்தை உண்டுப்ப‌ன்ன‌ த‌காத‌வைக‌ளை உப‌தேசித்து வ‌ருவ‌தை இன்றும் க‌ண்கூடாக‌ பார்க்க‌ முடிகிற‌து.

1.  த‌ச‌ம‌பாக‌ம் கோட்பாட்டில் ச‌ரித்திர‌ம் ப‌டைத்து வ‌ரும் ஆல‌ன் பால் போன்ற‌வ‌ர்க‌ள்
2.  ப‌ரிசுத்து ஆவியின் விற்ப‌னையில் இற‌ங்கி இருக்கும் எசேக்கிய‌ ஃபரான்ஸிச் போன்ற‌வ‌ர்க‌ள்
3.  க‌ட்டிட‌ம் க‌ட்டியே ஊழிய‌ங்க‌ளை செய்து வ‌ரும் குடும்ப‌ ஊழிய‌ர்க‌ளான‌ பால் தின‌க‌ர‌ன் குடும்ப‌த்தார்
4. அமைதியான‌ முறையில் பிர‌ச‌ங்கித்து கூடார‌ம் க‌ட்டி வ‌ரும் மோஹ‌ன் சி லாச‌ர‌ச் போன்ற‌வ‌ர்க‌ள்
5. நாங்க‌ள் ப‌டுத்தாலும், உட்கார்ந்தாலும் ந‌ட‌ந்தாலும், கூட்ட‌த்தில் பேசினாலும் இயேசு எங்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் நிற்க்கிறார், ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ர் அசைவாடிக்கொண்டு இருக்கிறார் என்று பித‌ற்றும் ஏஞ்ச‌ல் டீவி இர‌ட்ட‌ய‌ர்க‌ளான‌ சாது சுந்த‌ர் செல்வ‌ராஜ், வின்சென்ட் செல்வ‌குமார் போன்றோர்.
6.  சுக‌ம் த‌ருகிறோம் (Divine Healing Centre, Coimbatore) என்று சொந்த‌ வைத்திய‌த்திற்காக‌ சிங்க‌ப்பூர் ம‌ற்றும், ஹோமியொப‌தி வைத்திய‌ம் எடுத்துக்கொண்டு இருக்கும் ஜ‌வ‌ஹ‌ர் சாமுவேல் போன்ற‌வ‌ர்க‌ள்
7.  வ‌ருட‌ம் தோறும் வேலூர் அல்ல‌து கோவையில் ந‌ட‌க்கும் கூச்ச‌ல் ஐவ‌ர் கூட்ட‌னி கூட்ட‌ங்க‌ள்

அன்பான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, மேலே குறிப்பீட்ட‌ இவ‌ர்க‌ளை எல்லாம் ஊழிய‌க்கார‌ர்க‌ள் என்று சொன்னால் ப‌வுல் பேதுருவை என்ன‌வென்று சொல்லுவ‌து, இளிச்ச‌வாய‌ர்க‌ளா!! ஏமாந்த‌வ‌ர்க‌ளா!! பிழைக்க‌தெரியாத‌வ‌ர்க‌ளா!!. மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஊழிய‌ர்க‌ள்(!!??), இது வெறும் எடுத்துக்காட்டு தான், இவ‌ர்க‌ள் பெரிய‌ அள‌வில் துனிகரமாக யாரும் கேட்கமாட்டார்கள் என்று செய்கிறார்க‌ள், இவ‌ர்க‌ளை உதார‌ன‌மாக‌ அல்ல‌து முன்மாதிரியாக‌ (இயேசு கிறிஸ்துவை அல்ல‌) வைத்துக்கொண்டு சிரிய‌ அள‌வில் வ‌ல‌ர்ந்து வ‌ருகிறார்க‌ள். மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இந்த‌ க‌ள்ள‌ தீர்க்க‌ட‌ரிசிக‌ளின் கூட்ட‌ம் ஒரே மேடையில் ஒரே போத‌னையை (வேத‌ம் ஒன்று தானே) த‌ர‌ முடியுமா? முடிய‌வே முடியாது. ஏனென்றால் அவ‌ன் அவ‌ன் வையிற்று பிழைப்பிற்கு அவ‌ன் அவ‌ன் த‌ந்திர‌ங்க‌ளை வைத்து தான் போதிக்கிறான். இது போன்ற‌ க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள், ஏமாற்றுக்கார‌ர்க‌ள், பொய்ய‌ர்க‌ளின் கூட்ட‌த்தை வெளிப்ப‌டுத்த‌ இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் ப‌ய‌ன் ப‌டும். இது த‌வ‌று என்று சுட்டி காண்பிப்ப‌வ‌ர்க‌ள் ஒன்று அவ‌ர்க‌ளுகு துனை போவோர், அல்ல‌து அவ‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் (!!) தான் என்கிற‌ ம‌த‌ ஒற்றுமையின் அடிப்ப‌டையில் அவ‌ர்க‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கிற‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்!, இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌மும் எச்ச‌ரிக்கையாக‌ தான் இருக்க‌ வேண்டும்.

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் போத‌னைக‌ளை பெரும்பாளுமானோர் கேட்டிருப்பீர்க‌ள், சொந்த‌ க‌தைக‌ள், அனுப‌வ‌ங்க‌ள், நான் என‌க்கு, எங்க‌ளுக்கு, எங்க‌ள் ஊழிய‌ம் மூல‌ம் சுக‌மான‌தாக‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள், என‌க்கு த‌ந்த‌ வெளிப்பாடு என்று த‌ற்பெருமை பாராட்டும் ஈன‌ ஜென்ம‌ங்க‌ள் இந்த‌ கூட்ட‌ம், கேட்டின் உப‌தேச‌த்தின் மூல‌ம் கூட்ட‌ம் சேர்ப்ப‌வ‌ர்க‌ள்.

உண்மையான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளால் "சாதார‌ன‌ விசுவாசிக‌ள்" என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆவார்க‌ள்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"கிறிஸ்து இயேசுவவுக்குள் தேவபக்தியாய் நட்க்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்". 2தீமோ3:12

"இந்த சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவ வசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை."

"அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் , அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்..."2தீமோ2:9:,12

"..... உலகம் உங்களைப் பகைக்கிறது". "... அவர்கள் என்னைத் துன்பபடுத்தினதுண்டானால் உங்களையும் துன்பப்படுத்துவார்கள்" யோவான்15:19,20.

'உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு' யோவான்16:33

"அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்" மத்24:9

என்றுதான் உண்மை ஊழியர்களுக்கு "வாக்குத்தத்தம்" பண்ணப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஓநாய்கள் "உன்னை தேவன் உயர்த்துவார்", "வாலாக்காமல் தலையாக்குவார்",  "ஆசீர்வதிப்பார்", "செழிப்பாக இருப்பாய்",  "பதவி உயர்வு தருவார்" என்று பொய்யாய்ப் பேசி ஜனங்களை மோசம்போக்கி தங்கள் சுகவாழ்வுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த அறிவுகெட்ட ஜனமும் வசனங்களை ஆராயாமல் இந்த நாய்களுக்கு பணமும் பொருளும் கொடுத்து அதை ஒரு ஊழியம் என்றுவேறு எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

விழித்தெழு! ஊழியனை விரட்டியடி!! பணம் கேட்கும் எந்த நாயும் ஊழியனில்லை என அறிந்துகொள்!!!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

II தீமோத்தேயு 4:2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

பவுல் தீமோத்தியுவிடம் "திருவசனத்தை" மாத்திரமே பிரசங்கம் பண்ண சொல்லுகிறார், அவனின் சொந்த அனுபவங்களையோ, சொந்த சரக்கையோ சொல்லவில்லை. பவுல் போன்ற அப்போஸ்தலனிடம் பயிற்சி பெற்ற தீமோத்தியுவிற்கு கொடுக்கப்படாத வெளிப்பாடுகள் இன்று பாவத்தில் பெறுகி கிடக்கும் இன்றைய ஊழியர்களுக்கு வருவது ஆச்சரியமான விஷயம் தான். தீமோத்தியுவிற்கு நிச்சயம் கனவுகள் காட்சிகள் வந்திருக்கலாம், ஆனால் அது எல்லாம் சொல்லப்படவில்லை, எழுதப்படவில்லை, ஏனென்றால் அது எல்லாம் தேவை இல்லை. வேதம் முடிந்த பிறகு அநேகர் தங்களின் கணவுகளால் காட்சிகளால் பெரும் திரளான கூட்டத்தை தங்களுக்கு சேர்த்துக்கொண்டு "சபைகள்" உறுவாக்கியிருக்கிறார்கள். ஒரு சபையிலிருந்து இன்னோரு சபைக்கு ஆள் கடத்தல், திருட்டு ஊழியம் தான் செய்திருக்கிறார்கள்!! எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் என்றவுடன் அமைதியாக பேச சொல்லவில்லை மாறாக குணத்தில் சாந்தகுணம் உள்ளவனாக இருக்க சொல்லி, வசனத்தை உபதேசமாக சொல்லும் போது, கண்டனம் பண்ணி, கடிந்துக்கொண்டு புத்தியில் உறைக்கும்படியாக தான் சொல்ல சொல்லியிருக்கிறார். இந்த தளம் அதையே செய்து வருகிறது. இப்பவுல் சொல்லுகிறேன், மனிதர்களை அல்ல, அவர்களின் குருட்டு உபதேசங்களையும், வெறித்தனமான வேதத்திற்கு புறம்பான வெளிப்பாடுகளையும், போதனைகளையும், தான் நாங்கள் கண்டனம் செய்கிறோம். ஊழியம் செய்கிறோம் பேர்வழி என்று ஐசுவரியத்தை நாடுகிறவர்களின் ஊழியத்தை நிச்சயமாக கண்டனம் பண்ணி எழுதுகிறோம்.

ஏனென்றால் இந்த குருட்டாட்ட வெளிப்பாட்டுக்காரர்கள் வேதத்தில் உள்ள உபதேசங்களை பொறுத்துக்கொள்ளமனதில்லாருப்பார்கள், ஏனென்றால் எங்களுக்கு வெளிப்பாடுகள் கிடைக்கும் போது, நான் ஏன் வேதத்தில் இருந்து ஏற்று கொள்வது, வேதத்தில் மாத்திரம் தான் தேவன் பேசியிருக்கிறாரா, என்னிடத்திலும் தான் பேச முடியும், போன்ற விதண்டாவாதங்களினால் வசனங்களை தாங்கிக்கொள்ள மாட்டார்கள், இப்படிப்பட்டவர்கள், தங்கள் வெளிப்பாடுகளை நிறுபிக்க தங்களுக்கு வசதியான "தேவ மனுஷர்களை" (கிறித்துவத்தை கெடுத்த ஓநாய்கள் இவர்கள்) தங்களுக்கு சாதகமாக சேர்த்துக்கொள்வார்கள், "செவித்த்னவுள்ளவர்களாகி" என்ராள், காது குடையும் போது ஏற்படும் ஒரு சுகம் இருக்கிறதே, அப்படி சுகமாக தந்திரமாக இந்த "தேவ மனுஷர்கள்" பேசுவார்களாம், ஏனென்றாள் இவர்கள் சத்தியத்தை பேசாமல், இவர்கள் சேர்க்கும் கூட்டத்தார் என்ன விரும்புகிறார்களோ, அந்த இச்சையையே உபதேசமாக சொல்லுவார்கள். "உன்னை உயர்த்துவதற்காகவே தேவன் உன்னை இந்த கூட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறார், உனக்கு பதவி உயர்வு தருவதே தேவனுக்கு சித்தமாக இருக்கிறது" போன்ற இச்சையான வார்த்தைகளால் இவர்கள் கூட்டங்களை கவர்வார்கள், ஏன் இந்த பதவி உயர்வு எல்லாம் அவர்கள் வேலைக்கு போனால் அவர்களுக்கு கிடைக்காதா, சோம்பேறிகள்!! க‌ட்டுக‌தைக‌ளும், பாட்டிக்க‌தைகளும், சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளும், ப‌ர‌லோக‌ ந‌ர‌க‌ சென்று பார்த்து வ‌ருத‌ளும், ச‌ர்வ‌ சாதார‌ன‌மாக‌ இத்துனை பேரை ம‌ர‌ண‌த்திலிருந்து எழுப்பினேன் என்று புழுகும் க‌தைக‌ளும், இதையே கேட்டு இன்றைய‌ "சாதார‌ன‌ விசுவாசிக‌ள்" வாய் பிழ‌ந்து போயிருக்கிறார்க‌ள், ச‌த்திய‌த்தை மாத்திர‌ம் இது போன்று செவிகொடுத்து கேட்டார்க‌ள் என்றால், எத்துனை ந‌ல‌மாக‌ இருக்கும்.

எல்லாவ‌ற்ற்குக்கும் மேலாக‌ தீங்க‌னுப‌விப்ப‌து தான் ஒரு சுவிசேஷ‌கனுக்கு  (இன்றைய‌ தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ள்) அழ‌கு. ஆனால் இன்றைய‌ தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ளை பார்த்தால் அப்ப‌டி ஒன்றும் தெரிய‌வில்லை. ச‌ரி சொந்த‌மாக‌ உழைத்து, என் உழைப்பின் தானே நான் பென்ஸில் போகிறேன் உண‌க்கு என்ன‌ என்று கேட்க‌ ஒரு ஊழிய‌க்கார‌னுக்கும் திரானி இல்லை, பிற‌கு என்ன‌ இந்த‌ வ‌ச‌திக‌ள் வான‌த்திலிருந்தா வ‌ந்த‌து. இல்லை, த‌ச‌ம‌பாக‌ம் வேட்டை, குறி சொல்லுத‌ல் (அதை தான் தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் என்று ஏமாற்றி வ‌ருகிறார்க‌ளே) பொன்ற‌ வேத‌த்துக்கு புற‌ம‌பான‌ ச‌ம்பாரிப்பால் வ‌ந்த‌து, ஆக‌வே கேள்வியும் கேட்க‌ முடியாது. வெக்க‌ங்கெட்ட‌ த‌ன‌மாக‌ இவ‌ர்க‌ளும், இவ‌ர்க‌ளின் வாரிசுக‌ளும் ஊரார் ப‌ன‌த்தில் வ‌ள‌ர்வ‌தில் ச‌ற்றும் வெட்க்க‌ ப‌டுவ‌தில்லையே!! சுவிசேஷ‌த்தின் நிமித்த‌ம், தீங்க‌னுப‌விப்ப‌து என்றால் இந்த‌ ஓநாய்க‌ளுக்கு தேரியாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard