அந்த குறிப்பிட்ட தளம் கோவைபெரெயன்ஸ் தளம் தான் என்பதை பகிரங்கமாக எழுதியிருக்கலாமே!! ஒரு கொள்ளைக்காரனை கொள்ளைக்காரன் என்று விமர்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஊழியக்காரன் என்று நீங்கள் வேன்டுமென்றால் மெச்சி கொள்ளுங்கள். ஏன் பிற மதஸ்தர்களுக்கு இவர்களை குறித்து என்ன சொல்லுவது என்கிற குழப்பமா? ஊழியத்திற்கு பணம் கேட்கலாம் என்றால், என்ன ஊழியம், விமானத்தில் நாடு நாடாக பறந்து போவதற்கும், குடும்பத்துடன் சுக போகமாக பென்ஸ் காரில் அலையவும், கிறிஸ்துவின் பெயரை சொல்லி கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி, பணம் பறிப்பதும், பரிசுத்த ஆவிக்கு ஏஜென்ஸி எடுத்துக்கொண்டு செயல்ப்படுபவர்கள் எல்லாம் ஊழியர்கள், இவர்கள் வாழும் வாழ்க்கைக்கு பிச்சை போடுவது தான் ஊழியக்காரனுக்கு பணம் கொடுப்பதா!? ஆம் என்பதை ஆம் என்றும் இல்லை என்பதை இல்லை என்று சொல்ல வேண்டும், அது தான் உண்மையும் சத்தியமுமாக இருக்க முடியும். பெரிய மேடை போட்டு கூட்டம் சேர்த்து விடுவது ஊழியம் இல்லை, அது திருட்டு, ஏமாற்று வேலை, கள்ளத்தனம். இந்த கள்ளக்கூட்டத்தை வெளிப்படுத்த எனக்கு இந்த அழைப்பு இருக்கிறது, எனக்கு இந்த அழைப்பு இல்லை என்று எல்லாம் அதையும் தேவன் பெயரில் போட வேண்டியதில்லையே, தேவன் நமக்கு தமது வேதத்தை தந்திருக்கிறார், அதிலிருந்து ஓநாய்களை பகுத்தறிந்து அவைகள் ஓநாய்கள் என்று சொல்லுவதில் தவறொன்றும் இல்லை.
நாங்கள் விமர்சித்த எந்த ஒரு ஊழியக்காரனாவது ஊழியன் (வேலைக்காரன்) என்று சொல்லும்படியாக இருக்கிறானா? ஐசுவரியத்தில் கொலுத்திருக்கும் இவர்கள் ஏன் சோமாலியா போன்ற நாட்டிற்காக அற்புதம் செய்வதில்லை (அற்புதம் கிடைக்கும்படியாக ஜெபிப்பதில்லை), அப்படியே ஜெபித்திருந்தாலும், ஏன் பதில் இல்லை! ஏனென்றால் அந்த நாட்டிற்கு எல்லாம் போனால் இவர்கள் உயிருக்கே உத்திரவாதம் இருக்காது, இவர்கள் தங்கும்படியான வசதிகள் அங்கே இருக்காது, அது தான் காரணம். பணம் பறிக்கும் இந்த ஐசுவரியவான்கள் ஏன் தன்னை ஊழியக்காரன் என்று சொல்ல வேண்டும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.'என் பாதத்தில் விழுந்து என்னை வனங்கினால், இவை அனைத்தையும் உனக்கு தருகிறேன்" என்று இயேசு கிரிஸ்துவிடம் இராஜியங்களையும், சம்பத்தையும் காண்பித்து சொன்னான் பிசாசு. மனுஷகுமாரனுக்கு தலை சாய்க்க கூட இடம் இல்லை, ஓசி கல்லறை, இவைகளுக்கு தான் சொந்தக்காரராக இருந்தார் இயேசு கிறிஸ்து. என் இராஜியம் இந்த உலகத்தை சார்ந்தது இல்லை என்றார். பவுல் பேதுரு போன்ற அப்போஸ்தலர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டு விட்டு ஊழியத்திற்கு ஓடினார்கள்.
ஆனால் இன்று நாங்கள் விமர்சிக்கும் இந்த கள்ள கூட்டம் ஒருவனாவது இந்த தகுதியில் இருக்கிறானா!! ஆனால் தன்னையே இயேசு கிறிஸ்துவிற்கு மேலாக, அப்போஸ்தலர்களுக்கு மேலாக நிலைநாட்ட விரும்புகிறது இந்த கூட்டம் எந்த விதத்தில் தங்களை ஊழியர்கள் என்று நிலைநிறுத்த பார்க்கிறார்கல்? யாரை ஏமாற்றுகிறார்கள்? சர்வ வல்லமை உள்ள தேவனை தானே? அவர் படைப்பாகிய மனிதர்களை தானே ஏமாற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு காரணத்திற்காக இவர்களுக்கு பரிந்து பேசுபவர்களும் அதே நோக்கத்தில் இருப்பவர்களாக தான் இருக்க முடியும். ஆனால் நாங்கள் நிச்சயமாக இந்த ஆட்டு தோல் போர்த்திய ஓநாய் கூட்டத்தை வெளிப்படுத்தி காண்பிப்போம். அனைவரும் தெரிந்துக்கொள்ளட்டுமே இவர்களின் (அட்)ஊழியத்தை!!
கொவைபெரெயன்ஸ் தளத்தில் இப்பட்டி பட்ட கள்ள தீர்க்கதரிசிகளின் கூட்டத்தை வெளிப்படுத்த முழு சுதந்திரம் உண்டு!! நாங்கள் ஓநாய்களுக்கு பரிந்து பேசுவதில்லை. பிற மார்க்கத்தாரும், மத்தாரும் இவர்களை குறித்து தெரிந்துக்கொள்ளட்டுமே!!
சத்தியத்தை இப்பொழுது தான் கேட்க்கிறார் போல் ஆகவே தான் யொவன ஜனம் தளத்தின் நிர்வாகிக்கு நாம் எழுதுவது மாறுபாடாக தெரிகிறது. அதே பாரம்பரியமான ஆவிக்குரிய சபைகளை சார்ந்து இருந்து / இருப்பதால் ஒரு வேளை நாம் பதிவது மாறுபாடானதாக இருக்கும் போல். ஒரு வசனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் தேவன் தருகிறார் என்று போதிப்பவர்களுக்கு நம் தளம் மாறுபாடாக தான் தெரியும். தங்களை அப்போஸ்தலர்கள் என்றும், தேவ மனுஷர்கள் என்றும் மேட்டிமை பாராட்டும் "ஊழியர்களுக்கு" நம் தளம் மாறுபாடானதை போதிப்பதாக தான் தெரியும்.
குறைகள் குறை என்று நாங்கள் சுட்டி காண்பிக்கிறோம். சாத்தானின் போதனைகளால் மக்களை வஞ்சிப்பவர்களை என்ன இடுப்பில் தூக்கி வைத்தா கொஞ்ச சொல்லுகிறீர்கள். எங்களுக்கு எந்த தனிப்பட்ட ஊழியன் மேல் அவன் வைத்திருக்கும் பணத்தின் மேல், அவன் வைத்திருக்கும் வசதிகளின் மேல், அவன் வைத்திருக்கும் ஆடைகளின் மேல் எந்த போறமையும் இல்லை, ஆனால் ஜனங்களை தேவனின் பெயரை சொல்லி மோசம் போக்குவோரை பிசாசின் போதனை தருவோரை அவர்களின் கள்ள போதனைகளை அன்பு செய்ய சொல்லுகிறீர்களா! பவுல் அப்படி போதித்தவர்களை சாத்தானின் கைக்கு ஒப்பு கொடுத்ததினால் எந்த சுபாவ அன்பை இழந்து போனார்? தப்பை தப்பு என்று சொல்லுவதால் அன்பு இல்லை என்று ஆகிவிடாது!
வெகு ஜன மக்களை சத்தியத்தால் கவர்ந்தால் சரி என்று சொல்லலாம், ஆனால் ஆகாய கதைகள், பரலோக நரக விஸிட்கள், பாட்டி கதைகள், செவிக்கு சொகுசாக இருக்கும் ஆசீர்வாதங்கலை சொல்லி கவர்வது தன் இடத்தை பாதுகாத்து கொள்வதாகும். நாங்கள் ஊழியர்கள் நீங்கள் சாதாரன விசுவாசிகள், தேவன் நமக்கு ஒரே ஆவியை தந்திருந்தாலும் நாங்கள் மாத்திரமே "விசேஷ அபிஷேகம்" பெற்றவர்கள், என்பவர்களை தலைக்கு மேல் தூக்கி வைக்க சொல்லுகிறீர்களா?
எத்துனை மேட்டிமை பாருங்கள், ஒரு ஊழியனின் முயற்சியால் தான் இவர்கள் "சத்தியத்திற்கு" வருகிறார்களாம். "பிதா ஒருவனை சேர்த்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவின்டத்தில் வர முடியாது" என்கிறது வசனம். பாட்டி கதைகளையும், செவிக்கு தினவான வார்த்தைகளால் இவர்கள் இலட்ச்சக்கணக்கானோரை கூட்டம் சேர்க்க முடியும், ஆனால் அந்த திறமை பாவம் இயேசு கிரிஸ்துவிற்கு இல்லாமல் போய் விட்டது. அவர் சமாரியர்கள் மேல், புறஜாதிகள் மேல் எத்துனை மனதுருக்கமும் அன்பும் கொண்டிருந்தாரோ, அதே அளவிற்கு மாறாக அவர் அன்றைய மத போதகர்களை "பிசாசுக்கு பொறந்தவர்கள்" என்று தான் திட்டினார், அதினால் என்ன அவரின் சுபாவ அன்பு குறைந்து விட்டதா! பாவம் 12 பேரை அப்போஸ்தலர்கலாகவும், சுமார் 500 பேரை சீஷர்களாக சேர்க்க முடிந்தது. வெட்டி கூட்டம் சேப்பதற்கு சத்தியத்தில் நிலைக்கும் ஒரு சிலர் போதும். இந்த ஊழியர்கள் என்கிற போர்வையில் இருந்துக்கொண்டு தயவு செய்து வெகுஜனத்தை கூட்டம் கூட்ட பாட்டி கதைகளும், செவிக்கு இனிமையாக தெரியும் வார்த்தையை சொல்லுவதால் ஏதோ சுபாவ அன்பில் இவர்கள் பெருத்தவர்கள் என்று நினைக்க வேண்டாம். மிகவும் அருகில் இருந்து இந்த பெரிய "தேவ மனுஷர்களை" பார்க்க நேர்ந்தது. இவர்களின் சுபாவ அன்பை இங்கு எழுதினால் சத்தியத்தை சிந்திப்போர் உமிழ்ந்து விட்டு போவார்கள். ரவுடி கும்பளை வைத்து ஊழியம் பன்னுவது இவர்களின் சுபாவ அன்பின் உச்சம்.
நாங்கள் குறை கூறுவதால், சுபாவ அன்பு இல்லாதவர்களாம், இவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தையின் அன்பை நாங்களும் பார்க்க தான் செய்கிறோம், வாசகர்கள் ஏற்கனவே அறிவார்கள்.
// அந்த குறிப்பிட்ட தளம் கோவைபெரெயன்ஸ் தளம் தான் என்பதை பகிரங்கமாக எழுதியிருக்கலாமே!! // இந்த வரிகளுக்காகவே தளத்தின் தொடுப்பைக் கொடுத்தேன்;அதற்கும் உங்கள் பார்ட்னர் (ஆத்தும பிசின்) குறைசொல்லுகிறார்;கொஞ்சம் பொறுமையாக இருந்தால் மரியாதையாகப் பேசலாம்;இல்லை ஏசலாம்..!