எல்லா மனுஷராலும் புகழப்படுகிற பொய்யான ஊழியர்களைக் குறித்து வேதாகம் கூறுவதைப் படிப்போம்.
லூக்கா 6:26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
இவ்வசனம் இயேசு நேரடியாகச் சொன்ன ஒரு வசனமாகும். உண்மையில், மெய்யான தீர்க்கதரிசிகளுக்கு ஓர் எச்சரிப்பாகத்தான் இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார்.
அதாவது, ஒரு தீர்க்கதரிசியை எல்லாரும் புகழ்ச்சியாக பேசத்தொடங்கிவிட்டால், அவர் மெய்யான தீர்க்கதரிசி எனும் நிலையிலிருந்து, கள்ளத்தீர்க்கதரிசி எனும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவர் எச்சரிப்படைவதற்காகவே இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார்.
எனவே, மெய்யான ஒரு தீர்க்கதரிசி, தன்னைக் குறித்து எல்லாரும் புகழ்ச்சியாகக் கூறினால், அப்புகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு தூரப்போய்விடவேண்டும், அல்லது தனது தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும்.
இப்படிச் செய்யாமல், மற்றவர்களின் புகழ்ச்சியை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் கள்ளத்தீர்க்கதரிசி எனும் நிலையை எட்டிவிட்டார், அல்லது எட்டிக் கொண்டிருக்கிறார் என அர்த்தமாகும்.
லூக்கா 6:26-ல் இயேசு கூறுவது, தீர்க்கதரிசிகளுக்கு ஓர் எச்சரிப்பாக இருப்பதோடு, ஜனங்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளை கண்டுகொள்வதற்கான ஓர் அடையாளமாகவும் உள்ளது.
தேவஊழியர் எனச் சொல்லிக்கொள்ளும் ஒருவரை, எல்லா மனுஷரும் புகழ்ச்சியாய் பேசினால், அவ்வூழியர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.
இந்நாட்களில், தமிழகத்தின் ஒரு பிரபல தேவஊழியரான சகோ.பால் தினகரனை “இந்நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி” என யாரோ புகழ்ந்ததாக, ஓர் இணையதள செய்தி கூறுகிறது. இவ்விதமாக அனைத்து தரப்பு மக்களும் அவரைப் புகழ்ச்சியாய் பேசுவதை நம்மில் பலரும் அறிவோம். அப்படிப்பட்ட அவர், லூக்கா 6:26-ல் இயேசு கூறுவதன் அடிப்படையில், ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது என்பதை ஜனங்கள் அறிந்து எச்சரிக்கையாயிருப்பார்களாக.
நன்றி நித்தியஜீவன் தளம்.
அன்பு எழுதியதுபோல இன்று 'பிரபலமாக' ஊழியம் செய்துகொண்டிருக்கும் அனைவருமே இந்த பிரிவில் வந்துவிடுவர். ஆக ஒன்றுவிடாமல் அனைவருமே கள்ளத்தீர்க்கதரிசிகளே.
கள்ளத்தீர்க்கதரிசி என்றால் வேதத்தைப் புரட்டுபவன் என்று அர்த்தம். இவ்வகையில் அக்ஸ்டின் ஜெபக்குமார் முதல் அனைத்து 'பிரபலங்களும்' இதில் அடக்கம். எச்சரிக்கை!!
'வாய்ப்புள்ளது' என்று பூசிமெழுகி எழுதியுள்ளார். நான் எழுதுகிறேன் இந்த (ஓ)நாய்கள் எல்லாமே கள்ளத்தீர்ககதரிசிகள் தான்.
-- Edited by soulsolution on Saturday 14th of August 2010 07:40:08 AM
-- Edited by soulsolution on Saturday 14th of August 2010 07:40:40 AM