விமர்சனம் எழும்புது என்றால் அங்கே ஏதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம்!! சாபங்கள் விட்டு மனதின் நிலையை காண்பிப்பதை காட்டிலும் நேரடியாக விமர்சிப்பது மேல். "விரியன் பாம்பு குட்டிகளே" "வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்" "உங்கள் தகப்பனாகிய பிசாசு" 'அந்த நாய்களுக்கு எச்சரிக்கை" போன்ற வார்த்தைகள் பேசப்பட்டதும் வேதம் பதிவு செய்திருக்கிறது. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்னத்தை கான்பி எனறு சொன்ன இயேசு கிறிஸ்து தான் "ஏன் என்னை அடித்தாய்" என்று கேட்க்கிறார், அப்படி என்றால் அவர் போதித்ததற்கு விரோதமாக அவரே செயல்ப்படுகிறார் என்பதா அர்த்தம்.
விமர்சனங்களுக்கு பதில் இல்லாவிட்டால், இந்த வசனங்கள்,
நம்மை மன்னிக்கசொல்லி கொடுத்த தேவன் யாரையும் மன்னியாமல் "நரகத்தில்" என்றென்றும் போட்டு நித்தியத்திற்கு வாட்டி எடுப்பார் போன்றவற்றை தேவ தூஷனம் என்று விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை!
சகோ சில்சாம் அவர்களே, கிறிஸ்தவர்களுக்கு தேன் வார்த்தையும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு தேள் வார்த்தையும் தருவது மாத்திரம் "அவசர குடுக்கை"த் தனம் இல்லையோ!! தேவனை அறியாதவர்கள் கூட காலம் வரும் போது அறிந்துக்கொள்வார்கள் ஆனால் தேவன் என்னிடத்தில் பேசி எனக்கு வேதத்தில் இல்லாத வெளிப்பாடுகளை தருகிறார் என்பது எ(ன்னை)ங்களை பொருத்த வரையில் தேவதூஷனமே!! பேசுகிற தேவன் வேதத்தில் இருப்பதை இவர்களுக்கு விளக்காமல் இல்லாததை வெளிப்படுத்துகிறார் என்றால் யார் அந்த தேவன் என்பது தான் பெரிய கேள்வி குறி! யாரை ஏமாற்றுகிறார்கள் இவர்களை போன்றவர்கள்! அவர்களின் தளத்தில் பதிவு செய்திருப்பது போன்று நாங்கள் எங்கள் தளத்தில் ஒரு போதும் வேறு மதத்தினரை தாக்கி எழுதியது கிடையாது, அதற்கு அவசியமும் கிடையாது.எங்கள் விமர்சனங்களே தேவன் என்னுடன் பேசி வெளிப்பாடுகளை தருகிறார் போன்ற தேவதூஷனங்களை குறித்து தான்!!
ஆண்டவரின் பாதம் என்று வேதத்தில் சொல்லியிருப்பது இந்த பூமியை தான். இந்த பூமி தான் அவரது பாதப்படி, இந்த பூமி தான் கற்றுக்கொள்ளும் ஒரு இடம் என்பது "தேவனின் பாதம்" என்று பதிவு செய்கிறேன். புரியாதவர்கள், கண்களுக்கு கானப்படாத தேவனின் "பாதங்களை" தேடி கொண்டிருக்கட்டும்!! அவர்கள் பரிசுத்தவான்கள், தேவன் அவர்களுக்கு வேதத்தில் இல்லாத விஷயங்களை எல்லாம் காண்பித்து வருகிறார் ஆனால் "நானே தீமையையும் உண்டுப்பனினேன்" போன்றவற்றை மாத்திரம் மரைத்துவிட்டார் போல். எந்த தேவனோ!!
ஏஏஏ...யப்பா? மரணத்தைப் பற்றி விவாதிக்கச்சொன்னால் அதில் ஈடுபாடு இல்லையாம், தீமையைப் பற்றி எழுதி யுகக்கணக்காயிற்று இன்னும் ஒரு வசனத்திற்குக்கூட விளக்கமளிக்க வக்கில்லை.
இதில் நான் போதகன், ஊழியன், அழைப்பு பெற்றவன், சபையாகிய (ஆமா சாமி போடும்) ஆட்டுமந்தையை மேய்க்கும் மேய்ப்பன், 'தேவ' செய்தியை வாராவாரம் கொடுப்பவன், தசமபாகத்தை வாங்கி ஜன்ங்களின் ஆசாரியன் என்றெல்லாம் தங்களை அழைத்துக்கொள்ளும் வெக்கங்கெட்ட கூட்டத்துக்கு ரோசம் வேறு வந்துவிட்டது. நாம் இங்கு தனிப்பட்ட எந்த நபரையும் சொல்லவில்லை. ஒட்டு மொத்த கிறிஸ்தவ ஊழியங்களைத்தான் சொல்கிறோம். எங்கள் அர்மகெதான் உபதேச வேறுபாடுகளைப்பற்றியே....
எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாத ஜென்மங்கள்; நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றாவது கேட்கலாமே? ஏன் அந்தத் தாழ்மை இல்லை?
மேற்கண்ட வசனம் உங்கள் வேதத்திலும்தானே இருக்கிறது; இதற்கு என்ன வியாக்கியானம் செய்யப்போகிறீர்கள்? உண்மையான ஊழியனாக இருந்தால் உபவாசம்போட்டு ஜெபித்தோ, "வெளிப்பாடுகளைப்" பெற்றுக்கொண்டோ (நீங்கள்தான் நேரடியாக உங்கள் தேவனிடம் பேசுவீர்களே, பரிசுத்தாவியுடன் அளவளாவுவீர்களே) மேற்கண்ட வசனம் பொய் என்று நிரூபியுங்கள் நாங்கள் இந்தத் தளத்தை இழுத்து மூடிவிடுகிறோம்....
அப்படி இல்லாவிட்டால் உங்கள் முழுநேர அட்டூழியங்களை விட்டு விட்டு நியாயமான முறையில், அடுத்தவர் பணத்தில் வாழாமல் வேலை செய்தோ, தொழில் செய்தோ பிழைக்க முற்படுவீர்களா?
-- Edited by soulsolution on Tuesday 3rd of August 2010 07:46:29 AM
தாங்கள் எத்தனை பலவீனமானவர்கள் (வசனத்தில்) என்று தனித்தளம் தொடங்கி நிரூபித்த ஒவ்வொரு "தள நிர்வாகி"க்கும் கோவை பெரெயன்ஸ் குழு நன்றி தெரிவிக்கின்றது. உங்களுடைய அதிமேதாவித்தனத்தினால்தான் எங்கள் தளத்துக்கு வரும் சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
உங்களது இந்த மஹோன்னத ஊழியம் தொடரட்டும். ஜனங்கள் சத்தியத்தை அறியட்டும்!!
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 பேர் தளத்துக்கு வருகை தருகிறார்கள்.
நன்றி! அன்பு, சில்சாம் மற்றும் சுந்தர் மூவருக்கும்.....
வசனத்திற்கு விளக்கம்தராமல் டாபிக்கை மாற்றி தளத்தைவிட்டே கோபித்துக்கொண்டு ஓடுவதுபோன்ற 'சீன்' காட்டினால் வாசகர்களுக்குப் புரியாதென்று எண்ண வேண்டாம். யாரும் உங்களைப் போன்ற அறிவாளிகளை வருந்தி தளத்துக்கு அழைக்கவில்லை. போய் உங்கள் பித்தலாட்ட 'ஊழியத்தை' தொடருங்கள். முடிவு வரை மாய்மாலத்தில் இருந்து மற்றவர்களையும் உங்கள் பரிசுத்த வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.
வசனத்துக்கு விள்க்கமளிக்க வக்கில்லை வாய் மட்டும் காதளவு நீளுகிறது. கோபம் கொப்பளிக்கிறது. சத்திய வசனம் இப்படித்தான் ஊடுருவிக் கிழிக்கும். பிசாசின் பிள்ளைகள், பேய்த்தனத்துக்கு அடுத்தவைக்ளின் மேல்தான் வாஞ்சை கொள்வார்க்ள்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....
இனித் தவறியும் கூட இத்தளத்துக்கு வரவேண்டாம். நீ பிசாசின் பிள்ளை இல்லை என்று நிரூபிக்க வேண்டுமென்றால் வசனத்துக்கு வசனத்தின் மூலம் பதில் பதி. அதை மட்டும் விட்டுவிட்டு என்ன ஒரு ஆக்டிங். வசனத்தை மதிக்காத எவனுக்கும் நாங்கள் மதிப்பு கொடுப்பதில்லை. வீண்பேச்சு வேண்டாம்.
போய் உங்கள் சுரண்டித்தின்னும் வேலையைத் தொடருங்கள். Solution என்ற வார்த்தைக்கு "தீர்வு" என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதைக்கூட அறியாத முட்டாள் போதகனிடம் மாட்டிக்கொண்ட ஆடுகளை நினைத்துத்தான் கவலையாக உள்ளது.
திருடர்களை பார்த்து நாய் குரைப்பதை பார்த்திருக்கிறே, அல்லது வீட்டு எஜமானனுக்கு தெரியாமல் அத்துமீறி வருபவர்களை பார்த்து நாய் குரைப்பதை பார்த்திருக்கிறேன், உங்கள் ஊர் நாய்கள் ஊழியர்களை (மலைகள்) பார்த்து குரைப்பது வித்தியாசமாக இருக்கிறது. பார்த்து, கடிச்சு வைக்க போகுது. மரணத்தை குறித்து வசனத்துடன் ஆறாய்வதை விட்டு விட்டு பாட்டி கதைகளை சொல்லி திசைதிருப்புவது வேதனை தான். மரணத்தை குறித்து யெகோவா சாட்சிகள் தெரிந்து வைத்திருப்பதை கூட இந்த கிறிஸ்தவ டுபாக்குர் ஊழியர்களுக்கு தெரியாதது உச்சக்கட்ட அறியாமை. மாற்று மார்க்கத்தார் கூட மரித்த பின்பு எல்லோரும் சந்தோஷமாக வாழும் ஒரு பூமி வரும் என்று சொல்லுகிறார்கள், ஆனால் நம்மவர்களால் தான் அதை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. அவர்கள் சொல்லும் அந்த பூமி தான் ஏசா 35ம் அதிகாரத்தில் இருக்கிறதே. இந்த ஊழியர்கள் ஒரு போதும் புரிந்துக்கொள்ளம்மாட்டார்கள் போல்!!
அடுத்த தளத்தில் அடித்துக்கொண்டு, இந்த தளத்தை அசிங்கமாக விமர்சிப்பவர்கள் தேவனுடைய அன்பை குறித்து பேச தகுதி இல்லாதவர்கள். அங்கே அடித்துக்கொண்டு இங்கே ஒன்று சேர்ந்து சத்தமிடுவதால் பிரயோஜனம் இல்லை. அப்படி தான் ஒன்று பட்ட கருத்துடையவர்களாக இருந்தால் ஏன் தான் இத்துனை சபைகள் தோன்றியிருக்கும். ஒருத்தர் கருத்துக்கு இன்னோருவர் ஒத்து போவததே வேதத்தை குறித்து தெளிவில்லாமல், ஆளாளுக்கு கனவுகள் தரிசனங்கள் என்று ரீல் விடுவதால் தான். இந்த ரீல் சமாச்சாரம் எல்லாம் ஒய்ந்து போகும், சத்தியத்தின் வெளிச்சம் பரவிக்கொண்டு இருக்கிறது. உழையான சேற்றிலிருந்து (பல்வேறு சபை போதனைகள்) வெளியேறும் கூட்டம் பெறுக்கிக்கொண்டு தான் போகிறது. தாகம் இருப்பவனுக்கு தான் தண்ணீர் கிடைக்கும். நான் ஏற்கனவே நிறம்பி தழும்பிக்கொண்டிருக்கிறேன் என்று இருப்பவனுக்கு ஊற்றப்படும் தண்ணீரும் வெளியில் தான் கொட்டும், அது தான் இன்று சபைகளில் நடந்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் கிறிஸ்தவத்திற்கு வெளியில் இருக்கும் மக்களைஅறியாமையில் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லுவதில்லை, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவ்வுளவு தான்! உண்மையான அறியாமையில் இருப்பவர்கல், கோதுமைக்கூட களைகளாக இருப்பவர்கள், ஆட்டு தோள் போர்த்திய ஓநாய்களாக இருப்பவர்கள், தன் மந்தையையே பீறி போடும் (அ)சிங்கங்களாக இருப்பவர்கள் என்னிடத்தில் தேவன் (நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் தான்) பேசுகிறார் (என்ன மதிப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள்) என்று சொல்லுபவர்கள் தான்!!