இந்த சத்திய வசனம் எத்துனை சக்திவாய்ந்ததென்று அறியாத அறிவிலிகள் சொல்லும் ஒருசில காரியங்கள்.
இந்த வசனம் பொய்.
தேவனால் பாவிகளை இரட்சிக்க முடியவே முடியாது, ஏனென்றால் அவனுடைய இரட்சிப்பு அவனவன் கையில்தான் உண்டு. தேவன் இந்த விஷயத்தில் ஒரு கையாலாகாதவர்.
அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்? என்ற சீஷர்களின் கேள்விக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னது: "மனுஷரால் (அன்பு, சுந்தர் உள்ளிட்ட உலகளாவிய ஊழியக்காரர்கள்) இது கூடாதுதான்; தேவனால் எல்லாம் கூடும்".
இந்தப்பண்பாளர்கள் இயேசுகிறிஸ்துவைவிட ஞானவான்கள்; வேத விற்பன்னர்கள்.
"அது வந்து பிரதர் தேவனால் கூ.ஊ.ஊஊ..டு....ம் பிரதர் ஆனால் கூடாது"
இரட்சிப்பு என்றால் என்ன, மரணம் என்றால் என்ன, மரித்த பின்பு என்ன போன்ற பல கேள்விகளுகு கிறிஸ்துவம் மற்ற மார்கங்களை காட்டிலும் சற்றே உயர்வான நோக்கம் வைத்திருக்கிறது. ஆனால் இது கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை, சகல லோகத்திற்கும் பொருந்தும் என்பது இதில் இருக்கும் ஊழியர்களுக்கு தெரியாது, ஏனென்றால் இரட்சிப்பின் சுவிசேஷம் அவர்கள் பார்வைக்கு மறைவாக இருக்கும் படியாக இப்பிரபஞ்சத்தின் தேவன் அவர்களின் கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். ஆகவே தான் இன்னும் பழைய ஏற்பாட்டு கிரியகைகள் (செலெக்டிவாக சிலது மாத்திரம்) இன்னும் மனிதர்களின் கிரியைகளின் மேல் இத்துனை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஊழியர்களான கிறிஸ்தவர்கள்!! மனுஷரால் கூடாது ஆனால் தேவன் எல்லாம் கூடும் என்பது இவர்கள் பார்வைக்கு மறைவானது.
மாற் 10:26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.
27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
இந்த வேத பகுதியை முழுமையாக வாசிக்காமல், இயேசு கிறிஸ்து ஏன் இப்படி ஒரு பதிலை தருகிறார் என்கிற கேள்வியை கூட வாசிக்காமல், அதுவும் மனுஷரால் இது கூடாததுதான் என்று இயேசு கிறிஸ்து சொன்ன பிறகும் அவர் சொன்னார் தான் ஆனால் அப்படி இல்லை என்று வாதிடுவதற்கு பெயர் விதண்டாவாதாம். நாம் கிரியை தானே போதிக்கிறோம், இது என்ன புதுசா ஒரு வசனம் என்று வசனத்தையே திசை திருப்பு முயற்சி நடந்திருக்கிறது. இந்த வசனத்திற்கு ஒப்பீட்டாக ஆதி. 6:3ஐ எழுதியிருக்கிறார். அங்கு எந்த விதத்திலும் இரட்சிப்பை குறித்து பேசப்படவில்லை என்பதை பார்க்க வேண்டாமா?
நநெறியான வாழ்கைக்கும் மதத்திற்கும் சம்பந்தமே கிடையாது. இது எல்லா மதத்திலும், ஏன் மதமே இல்லை என்கிற மனிதர்களிடமும் இருக்கிறது. சொல்லப்போனால் ஊழியர் என்கிற போர்வையில் மோசடி செய்வோரைக்காட்டிலும் நல்ல கிரியைகள் செய்வோர் நிறைய ஜனங்கள் இருக்கிறார்கள்.
இந்த வசனப்பகுதியில், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்கிறது தான் முக்கியமான காரியம், அதற்காக இயேசு தீர்க்கமான பதிலை தந்திருக்கிறார். இயேசு சொன்ன பதிலை ஏற்றுக்கொள்வது தானே அவரின் வார்த்தைக்கு கீழ்படிவதாக அர்த்தம்.
இல்லை இல்லை, அவர் சொல்லியிருக்கிறார், ஆனால்.......என்று சொல்லுவதே அவரின் வார்த்தைக்கு எந்த அளவிற்கு கீழ்படிகிறோம் என்பதை தான் கான்பிக்கிறது.