மற்ற சபைகள் சொல்லும் அதே ரசத்தை ஜாடி மாற்றி ஊற்றி தந்திருக்கிறார். மொத்தத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவை எல்லாம் ஒன்று தான் என்கிறது தான் இவரின் இந்த பவர் பாயின்ட் ஷோவின் முடிவு. அதே திருத்துவத்தை கொஞ்சம் மாற்றி ஏதோ ரொம்ப புத்திசாலித்தனமாக சொல்லுவதாம் நினைத்து சொதப்பியிருக்கிறார், லொகொஸ் என்பதற்கு நேரடியான அர்த்தம் வார்த்தை தான், ஆனால் பயன்படும் இடம், ஒரு மிக பெரிய அரசனின் வார்த்தைகளை எடுத்து சொல்லுபவர் தான் லோகோஸ். அதாவது தேவனின் திட்டங்களை செய்தது,. சொன்னது கிறிஸ்துவாக இருந்த லோகோஸ் தான். தேவன் ஆவியாக இருக்கிறார் என்கிறது வேதம். ஆனால் இந்த தொடுப்பில் போய் பார்த்தோமென்றால் தேவனின் ஆவிக்குறிய சரீரம் தான் லோகோஸாம். அப்படி என்றால் தேவனுக்கு எத்தகை சரீரம் என்று விளக்குவீர்களா. அவர் என்ன மாயவித்தைக்காரரா, மாறுப்பட்ட சரீரங்களில் வருவதற்கு.
கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். Col. 1: 15 He is the image of the invisible God, the firstborn over all creation.
Firstborn (முந்தின பேறுமானவர்), அதாவது பெற்று எடுக்கப்பட்டவர், அதாவது படைக்கப்பட்டவர். மற்ற சிருஷ்ட்டிகள் படைக்கப்படும் முன்பு படைக்கப்பட்டவர் கிறிஸ்து என்கிறது வேதம். அதன் பின்பு தான் அவர் தேவனோடு இருந்தார், அவர் தேவனாக (A powerful being, not necessarily the Supreme or the Father God) இருந்தார்.
எந்த ஒரு விஷயத்தையும் எல்லா வசனங்களையும் கொண்டு விளக்க முயற்சிக்கனும்.
அபத்தமான இன்னும் ஒரு கோட்பாடாக, இயேசு கிறிஸ்துவின் மூன்றாம் வருகை என்று இதில் இருக்கிறது.
வேதத்தில் இல்லாத விளக்கமாக, இயேசு கிறிஸ்து சரிரத்தில் மரித்தார், அவரின் ஆத்துமா பாதாளம் சென்று அங்கு உள்ள ஆவிகளிடம் பிரசங்கம் (அந்த ஆவிகள் யார் என்று கூட தெரிய முற்படாதவர்கள் ஏன் தான் இந்த வசனத்தை உபயோகிக்கிறார்களோ) செய்தாராம். இன்னும் எத்துனையோ.