தீமோதீ அவர்களுக்கு தளத்திற்கு வரவேற்கிறோம். மிக நல்ல நியாயமான கேள்விகள். மனிதர்கள் இந்தக்கேள்விகளுக்கு வித்தியாசமான பதில்கள் தரக்கூடும். ஆனால் வேதம் இந்தக்கேள்விகளுக்குத் தரும் தெளிவான, குழப்பமே இல்லாத பதில் ஒன்றே ஒன்றுதான். "மரணம்" என்ற நிலைதான் அது. எல்லாருக்கும் மரணமே சம்பவிக்கின்றது. மரணத்தைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் இத்தளத்திலேயே வசன ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
இம்மூவருக்கும் மரணம் நிச்சயம். மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு. பிரசங்கியின் புத்தகம் 3ம் அதிகாரம் கடைசி வசனங்களில் தெளிவாக உள்ளது. "எல்லாம் மண்ணுக்கே திரும்புகிறது" என்பதே அது. மிருகங்களைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல என்றே வேதம் விளம்புகிறது.
ஆனால் இயேசுகிறிஸ்து "வழி"யாக இருப்பதால் அவர் மீண்டும் 'உயிர்த்தெழுதலுக்கு' மனுக்குலத்தைத் தகுதியாக்கிவிட்டார். அவரன்றி இரட்சிப்பு (மரணத்திலிருந்து) இல்லை.
"பெயரைக்கூட சொல்லவிரும்பாத உங்கள் வாக்கை யார் நம்புவார்கள்..
யாருக்கும் நரகம் இல்லையெனில் ஏன் தேவன் உயிரைத் தரவேண்டும்?? நேரடியாக உயிர்த்தெழுதலே செய்யலாமே..
பாவிகள் மரணத்திற்கு பின்பு எங்கே போவார்கள்? என்று நினைக்கிறீர்கள்.."
பெயரைக்கூட சொல்லவிரும்பாத என் வாக்கு முக்கியம் இல்லை தான், என் வாக்கை யாரும் நம்ப வேண்டாம், ஆனால் வேதத்தை நம்புவீர்கல் அல்லவா! நரகத்தில் தள்ள தான் தேவன் உயிரை தந்திருக்கிறார் என்பது எத்தகையான புரிந்துக்கொள்ளுதல் என்று தெரியவில்லை. நரகத்தில் தள்ள தான் தேவன் தன் ஜீவனை கொடுத்தார் என்பதற்கு எந்த வசன ஆதாரத்தையும் தரவில்லையே!!
நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாதால் இப்பொழுது பாவி இல்லை என்று நம்புகிறவரா. அப்படி என்றால் இந்த நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு மரணமே இல்லைதானே, ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது வேதம். பாவத்தின் சம்பளம் "நரகமோ" நித்திய அக்கினியோ" கிடையாது.வேதத்தை மாத்திரமே நம்புங்கள். எங்களை நம்பவேண்டாம் சரி ஆனால் தேவன் எங்களிடம் தினமும் பேசி பல வெளிப்பாடுகளை தந்துக்கொண்டிருக்கிறார் என்பவர்களை சுத்தமாக நம்பவேண்டாம். வேதத்தில் உள்ள வார்த்தைகளை மாத்திரமே சத்தியம். மனிதர்கள் வெளிப்பாடு என்று சொல்லுவது எல்லாம் வேதத்தை புறட்டும் கூட்டத்தை சேர்ந்தவர்களாவார்கள்!
சகோ சில்சாம் அவர்களின் தளத்தில் நான் உறுப்பினராக சேரவில்லை, ஆகவே தான் அனானிமஸ் என்று பதிவை தந்திருக்கிறேன் ஆனால் கூடவே தொடுப்பை தந்திருக்கிறேனே. இந்த தளத்தை தொடர்ந்து பார்வையிட்டு, விவாதங்களில் கலந்துக்கொள்ளுங்கள். நன்றி.
தாங்கள் என் கேள்வியை நன்கு புரிந்து கொள்ளவில்லை என எண்ணுகிறேன்..
1.நான் குறிப்பிடும் நபர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
அவர்களில் முதலாம் வகையினர் வேதம் தெரியாவிடினும் தாங்கள் அறிந்த வரை மனிதாபிமான முறையில் பல நற்செயல்கள் புரிந்தவர்கள்... தங்கள் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணித்த சுய நலமில்லா தலைவர்கள், சமூக சேவகர்கள், நேர்மையையும் தாழ்மையையும் கடைபிடித்த வியாபாரிகள்-தொழிலதிபர்கள்,....
இரண்டாம் வகையினர், மற்ற சராசரி மனிதர்கள் தங்களுக்கு பாதிப்பில்லாதவரை பிறருக்கு உதவுபவர்கள்/ நன்மை செய்பவர், ....
இவர்களின் மரணத்திற்கு பிந்தைய நிலை என்ன என்பதே கேள்வி....
//
இம்மூவருக்கும் மரணம் நிச்சயம். மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு. பிரசங்கியின் புத்தகம் 3ம் அதிகாரம் கடைசி வசனங்களில் தெளிவாக உள்ளது. "எல்லாம் மண்ணுக்கே திரும்புகிறது" என்பதே அது. மிருகங்களைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல என்றே வேதம் விளம்புகிறது.//
தாங்கள் குறிப்பிட்டுள்ளது 19ம் வசனத்தின் பின்பகுதி; முன்பகுதியையும் அடுத்த வசனத்தையும் பார்த்தால் அது குறிப்பிடும் கருத்து: "மிருகங்கள் இவ்வுலகில் வாழ்ந்து இறப்பது போல மனிதனும் இவ்வுலக வாழ்வில் சரீரமரணத்தை சந்திப்பான்" என்பதே.
ஆனால் நான் குறிப்பிடும் கேள்வி 20ம் வசனத்தை சார்ந்தது:
எனவே சரீரங்களே மண்ணுக்குத்திரும்புகின்றன.. ஆவி உயர ஏறுகிறது என்று இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது..
சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்,....
பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
எனவே அவர்களது மரணத்திற்கு பிந்தைய நிலை என்ன...
அவர்களது செய்கைக்கு பலன் இல்லையா.... தங்கள் வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணித்தவர்களுக்கும் (அதற்கான பலனை இப்புவியில் அனுபவித்திராதவர்களுக்கும்), சுய நலத்தோடும், பேய்களின் ஐக்கியத்தோடும், தேவனை எதிர்த்தவர்களுக்கும் வேறுபாடு இல்லையா???
அவர் நீதியுள்ள நியாயாதிபதி என்றுதானே வேதம் முழுவதும் வாசிக்கிறோம்??
சகோ இளங்கோ அவர்களே... //........... நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாதால் இப்பொழுது பாவி இல்லை என்று நம்புகிறவரா. .................. .................// தங்களின் கேள்விகளுக்கு இப்பதிவில் பதில் தரவிரும்பவில்லை.. இந்த கேள்வி பதில் பதிவில் என் கேள்விக்கு விடை காணவே விழைகிறேன்.. தங்களின் வரிகளைக் குறித்து நிச்சயமாக இன்னொரு பதிவில் கருத்துரைக்கிறேன்...
சகோ திமோதி அவர்கள் கேட்டது, "21. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?' என்று பிரசங்கி 3ம் அதிகாரத்திலிருந்து கேட்டிருக்கிறீர்கள்.
இதன் அர்த்தம் நீங்கள் எப்படி புரிந்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த இடத்தில் பிரசங்கி சொல்ல வருவது என்னவென்றால், "மிருகத்தின் ஆவி கீழேயும், மனுஷனுடைய ஆவி மேலேயும் தான் போகிறது என்று எந்த ஒரு மனுஷனுக்கு எட்டாத அறிவு" இன்னும் தெளிவாக என்றால், மனிதனின் ஆவி மேலே தான் போகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது, இது மனிதனுக்கு தெரியாது. புரியுதா சகோதரரே. ஆக மனிதனின் ஆவி மேலே தான் போகிறது என்று மனிதனுக்கு உண்டான ஆவி (ஜீவ சுவாசம், உயிர் வாழ உதவும் மூச்சு) உயர்ந்தது என்றும், மிருகத்துக்குண்டான அதே ஆவி தாழ்ந்தது என்றும் சபைகள் தான் பிரித்திருக்கிறதே தவிர, வேதம் இல்லை. பிரச்சனையே மொழிப்பெயர்ப்பினால் வருவது தான். இந்த தமிழ் மொழிப்பெயர்ப்பு (பரிசுத்த வேதாகமம் என்பது ஒரு அறைகுறை மொழிப்பெயர்ப்பே, இது கிங் ஜேம்ஸ் பைபிலின் தழுவல் தானே அன்றி அதில் அச்சிட்டிருப்பது போல், மூல பாஷையிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது கிடையாது) தவிர வேறே மொழிப்பெயர்ப்பில் இதே வசனத்தை பார்ப்போமே,
New American Standard Bible:
20All go to the same place. All came from the dust and all return to the dust.
21Who knows that the breath of man ascends upward and the breath of the beast descends downward to the earth? (யாருக்கு தெரியும், மனிதனின் ஆவி மேலே தான் போகிறதா அல்லது மிருகத்தின் ஆவி கீழே தான் போகிறதா என்று) ஓர் அளவிற்கு இந்த மொழிப்பெயர்ப்பு சரியாக இருக்கும் என்று என்னுகிறேன்!!
Ecclesiastes 3:20,21(New International Version)
20 All go to the same place; all come from dust, and to dust all return. 21 Who knows if the spirit of man rises upward and if the spirit of the animal [a] goes down into the earth?"
Ecclesiastes 3:20,21 (The Message)
19-22 Humans and animals come to the same end—humans die, animals die. We all breathe the same air. So there's really no advantage in being human. None. Everything's smoke. We all end up in the same place—we all came from dust, we all end up as dust. Nobody knows for sure that the human spirit rises to heaven or that the animal spirit sinks into the earth. இதை விட தெளிவாக விளக்கமாக எந்த மொழிப்பெயர்ப்பும் தராது என்றே நினைக்கிறேன்.
ஆக, வேதத்தை ஒரே மொழிப்பெயர்ப்பில் மாத்திரமே வைத்துக்கொண்டு, அது ஒன்றே எனக்கு போதும் என்று பிடிவாதம் பிடித்தோமென்றால், நமக்கு அநேக விஷயங்கள் விளங்காமல் போயி, தப்பான மொழிப்பெப்யர்ப்பினால குழப்பம் தான் மிஞ்சும். இந்த வசனத்தில் பிரசங்கி மிக தெளிவாக சொல்லுவது, விளக்குவது என்னவென்றால், எந்த மனிதனுக்கும் செத்த பிறகு அவன் ஆவி மேலே தான் போகிறது என்பதை அறிய முடியாது. வேன்டுமென்றால் மனிதன் மிருகங்களை விட உயர்வானவன் என்பதால் அவன் ஆவி மேலே போகிறது என்று யூகத்தின் அடிப்படையில் தான் பதில் தர முடியும். ஆனால் யூகங்கள் வேதத்தை வைத்து பார்க்கும் போது தவறாகி விடும். மேலும் மரணம் என்ன வென்றும், மரித்த பிறகு என்ன வென்றும், இயேசு கிறிஸ்துவை ஏற்காத மனிதர்கள் நிலை என்னவென்றும். தொடர்ந்து எழுதுகிறோம்.
மேலும், கிரியைகள் எதற்கும் உதவாது என்று அறிந்திருங்கள். கிரியைகளினால் அல்ல, தேவனின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மேலும் கிறிஸ்துவை ஏற்காத மக்களின் நிலை என்னவென்று கேட்டீர்கள். சபைகளில் இந்த கேள்விக்கு பதில் தேடினீர்கள் என்றால் கிடைக்கும் பதில், அவர்கள் அனைவரும் நரகத்திற்கு போவார்கள் என்பதே. ஆனால் வேதம் தரும் பதில்,
I தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
இந்த வசனம் வெறும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை. "எல்லா மனுஷர்" என்றால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். "எல்லாரையும் மீட்கும்" பொருளாக தம்மை (இயேசு கிறிஸ்து) ஒப்புக்கொடுத்தார் என்கிறது இந்த வசனம். ஆக கிறிஸ்து மரித்தது உயிர்த்ததினால் எல்லாருக்கும் மீட்பு (மரணத்திலிருந்து தான்) என்பது ஒரு நிபந்தனையற்ற (unconditional) வாக்குறுதி வசனம்! இந்த வசனத்தை கிறிஸ்தவர்கள் பொதுவாக தப்பாக தான் அர்த்தம் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனை. அதாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தி விட்டார், அவர் அனைவருக்காகவும் மீட்கும் பொருளாக தன்னை கொடுத்து விட்டார், ஆனாலும் நம் கிரியைகள் தான் நம்மை மீட்கும் என்பது அபத்தமான ஒரு புரிந்துக்கொள்ளுதல்.
அப்படியே, ஆதாமுக்கு எல்லோரும் (ஆதாமினால் தான் மரணம் வந்தது என்று விசுவாசித்தாலும் சரி, விசுவசியாமல் போனாலும் சரி, அனைவருக்கும் மரணம் உண்டு என்பது நிச்சயம்) மரிப்பது போல், கிறிஸ்துவிற்குள் எல்லோரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களும், விசுவசியாமல் மரித்தவர்களு) உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1 கொரி 15:22) என்பது வேதம் நமக்கு தரும் நிச்சயம்.இதுவும் ஒரு நிபந்தனையற்ற வாக்குறுதியே!!
அப்படியே,
I யோவான் 2 2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
ஏதோ நாம் கிறிஸ்துவை அறிந்ததினால் அல்ல, மாறாக அவர் தான் தன் இரத்தம் சிந்தி அனைவருக்கும் மீட்பை பெற்று தருகிறார். வேற் எந்த விதத்திலும் நமக்கு மீட்பு இல்லை. கிறிஸ்து அனைவருக்கும் பலியானார், ஆகவே அனைவரும் அதன் இலவச பயனை அடைந்தே தீர்வார்கள். நமக்குள் இருக்கும் சில வேத புரட்டர்கள் இதை வேன்டுமென்றால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் வசனம் இதை தான் சொல்லுகிறது. இன்னும் தங்களுக்கு தெளிவு வேண்டுமென்றால் தயங்காமல் கேட்கவும்.
இரட்சிப்பு, கிறிஸ்தவ ஜீவியம், என்றவுடன் ஏன் பரலோகம் மாத்திரம் தான் அவர்களுக்கு இருக்க போகும் இருப்பிடம் என்று நினைக்கிறீர்கள். கிறிஸ்துவின் பலியினால் கிடைக்கும் கிருபை, நித்தியஜீவன். அந்த நித்தியஜீவனை அனுபவிப்பது உயிர்த்தெழுதல் நடந்தேறிய பிறகு.
ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பது போல் கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள் என்பதே வேதம் நமக்கு மாத்திரம் இல்லை உலகத்தில் வந்திருக்கும் ஒவ்வொரு மனுஷனுக்கும் தரும் நம்பிக்கை. பரலோகம் செல்ல ஒரு சிறிய மந்தை மாத்திரமே தகுதியாகும். அவர்கள் யார் என்று நமக்கு தெரியாது. வேதத்தில் அந்த தகுதியை அடைய எப்படி வாழ வேண்டும் என்று இருக்கிறது. ஆனாலும் அந்த தகுதியை அடைய கிறிஸ்துவே நம்மை நடத்துவார், நமது கிரியைகள் அல்ல.
உயிர்த்தெழுதல் என்றவுடன் தயவு செய்து பரலோகம் செல்ல தான் உயிர்த்தெழுவார்கள் என்று என்னாதீர்கள். ஏசா. 35ம் அதிகாரத்தை கண்டிப்பாக தியானியுங்கள். எசா 11:9ல், " சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.". இந்த தீர்க்கதரிசனம் இப்போது நடப்பது இல்லை, இது நடப்பது அனைவரின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு தான். இந்த வசனத்தை 1 தீமோ 2: 4,5,6 வசனங்களுடன் ஒப்பீட்டு பாருங்கள்.
மீண்டும் சொல்லுகிறேன், வேதம் சொல்லுவது அனைவரின் இரட்சிப்பை குறித்து மாத்திரமே, சபைகள் பிரசங்கிப்பது, பரலோகத்தை மாத்திரமே!! 1 கொரி 15ல் வாசித்து பாருங்கள், "வானத்துக்குறிய மேனிகள்" என்றும் "பூமிக்குறிய மேனிகள் " என்றும் இருக்கிறாது. கிறிஸ்துவோடு சேர்ந்து சபை ஆளுகை செய்யும் என்று பிரசங்கிக்கிறார்கள், ஆனால் யாரை ஆளுகை செய்வார்கள் என்று கேட்டால் பதில் இல்லை! ஏன்? ஏனென்றால் அனைவரும் பரலோகம் செல்வோம் என்கிற குறுட்டு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் நம் கிறிஸ்தவர்கள்.
லூக். 2:10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
என்று தூதர்கள் இடையற்களுக்கு மாத்திரமே சொன்ன இந்த செய்தி எப்படி "எல்லா ஜனத்துக்கும்" "மிகுந்த சந்தோஷம்" உண்டாக்கும் செய்தியாக இருக்க முடியும். இந்த இடத்தில் தேவ தூதர்கள், இதோ இந்த பாலகனை பின் பற்றும் மக்களுக்கு மாத்திரம் மிகுந்த சந்தோஷமும் பரலோகம் செல்லும் பாக்கியம் கிடைக்கும் என்கிற நற்செய்தியை உங்கலுக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லியிருந்தால், இன்று கிறிஸ்தவர்கள் நம்பி போதிக்கிற கோட்பாடுகள் சரி என்று இருக்கும். ஆனால் கிறிஸ்துவின் செய்தி "எல்லா ஜனத்திற்குமே ஒரு நற்செய்தி" என்கிறது வேதம். தேவனின் வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது சகோதரரே. நமக்கு தெரியும், கடந்த 2000 வருடங்களில் இந்த மகத்துவமான செய்தியை கேட்காமால்/ நம்பாமல்/ கேட்க சந்தர்ப்பமே இல்லாமல் எத்துனையோ கோடிகள் மரித்து இருக்கிறார்கள் (இதில் குழந்தைகள், Mentally retarded போன்றோர்களும் அடக்கம்). உங்கள் பார்வையில் இவர்கள் என்ன ஆவார்கள்? இவர்கள் இப்படி இருந்தது இவர்கள் தவறா?
இல்லை சகோதரரே, வசனம் சொல்லுகிறது போல், இந்த நற்செய்தி இவர்களுக்கும், கிறிஸ்துவை நம்பாதவர்களுக்கும் தான். ஏனேன்றால் இயேசு கிறிஸ்து எல்லா ஜனங்களுக்கும் தான் தன்னை மீட்கும் பொருளாக (Ransom) கொடுத்திருக்கிறார் (1 தீமோ 2:5,6), கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை. ஆனால் இன்று சபைகளோ இந்த கருத்தை போதிப்பதில்லை, ஏனென்றால் பரிசுத்தவான்கள் என்கிற நிலையில் அவர்கள் தங்களையே வைத்து பார்பத்தினால் தான்!! கிறிஸ்துவின் இந்த நற்செய்தியை தான் நாங்கள் இந்த தளத்தின் மூலமாக சொல்லி வருகிறோம்.
அது எப்படி, நான் இத்துனை கஷ்ட்டப்பட்டு கிறிஸ்துவை பின் பற்றுகிறேனே, ஆனால் அவனோ, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லையே, அவனுக்கு எப்படி "இரட்சிப்பு" கிடைக்கும் என்று தன்னையே நீதிமான்களாக கருத்தி இந்த தளத்தில் அநேகர் வாதிட்டிருக்கிறார்கள்! இன்னும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தேவனின் அன்பு கிறிஸ்தவர்கள் மீது மாத்திரம் இல்லை, அவர் மனுபுத்திரர் யாவர் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறவர். அவரின் அன்பின் ஆழம், அகளம், நீலம், உயரம் அறிந்து கொண்டால் நம்மால் இப்படி சுயநலமாக யோசிக்கவே முடியாது.
மரணத்தைப் பற்றிய தெளிவு அடையாதவரை மற்ற காரியங்களை புரிந்துகொள்வது மிகக்கடினம் சகோதரரே. முதலில் அதில் தெளிவடையுங்கள். மனிதன் நித்திய நித்தியமாக பூமியிலேயே வாழ வேண்டும் என்றுதான் அவனை பூமியில் இருக்கும்படியான உடலமைப்பைத் தந்திருக்கிறார். ஆக மனிதன் உயிர்வாழ இந்த சரீரம் அவசியம் இன்னொருவிதமாகச் சொன்னால் மாமிச சரீரமாக இருந்தால்தான் மனிதன். தேவன் மனிதனை மனிதனாகத்தான் படைத்திருக்கிறார். ஒரு உருவமற்ற ஆவியாக இல்லை. சரீரத்தில் உயிரோடு இருந்தால்தான் மனிதன், 'உயிர்' பிரிந்துவிட்டால் அவன் இல்லை. அவன் எங்குமே இல்லை. மீண்டும் உயிர்த்தெழுந்தால்தான் அவனுக்கு உணர்வுவரும். எல்லாருக்கும் மரணம் நிச்சயம். அவன் பாவியாக இருந்தாலும் சரி, பரிசுத்தவானாக இருந்தாலும் சரி. "ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது" இதில் புது சிருஷ்டிகளான 'சபை' மாத்திரம் பிதாவாகிய தேவனால் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவின் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டு இப்பூமியிலேயே "புது சிருஷ்டிகளாக" மாற்றப்பட்டு பரலோகவாசிகளாக ஆகப்போகும் மஹா சிலாக்கியம் அடைகிறார்கள். இவர்கள் இந்த சரீரத்தில் மரித்து, பரலோகவாசிகளுக்குரிய 'வானத்துக்குரிய சரீரத்துடன்' உயிர்த்தெழுவார்கள்.
நம்முடைய தளத்தில் மரணம், ஆத்துமா, பற்றி அனேக பதிவுகள் உண்டு. பொறுமையாக அவைகளைப் படித்து வேதத்துடன் ஆராயவும். பொதுவாக 'அநேகர்' பின்பற்றும் உபதேசங்கள் சத்தியங்கள் அல்ல. ஏனென்றால் 'அநேகர்' தான் வஞ்சிக்கப்படுவார்கள் என்று வேதம் சொல்கிறது. ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்.
விளக்குங்களேன்.? என்றுதான் கேட்டேன்.. குழப்புங்களேன் என கேட்கவில்லையே... ஒவ்வொரு பதிவிலும் தெளிவில்லாத பதிலையே தந்திருக்கிறீர்கள்..
மரணத்திற்கு பின் என்ன நிகழ்கிறது? என்று கேட்டால்.. எல்லாருக்கும் மரணமே சம்பவிக்கின்றது என்கிறீர்கள்...
மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு. பிரசங்கியின் புத்தகம் 3ம் அதிகாரம் கடைசி வசனங்களில் தெளிவாக உள்ளது. என்கிறார் ஒருவர். இன்னொருவரோ...
பிரசங்கி மிக தெளிவாக சொல்லுவது, விளக்குவது என்னவென்றால், எந்த மனிதனுக்கும் செத்த பிறகு அவன் ஆவி மேலே தான் போகிறது என்பதை அறிய முடியாது. வேன்டுமென்றால் மனிதன் மிருகங்களை விட உயர்வானவன் என்பதால் அவன் ஆவி மேலே போகிறது என்று யூகத்தின் அடிப்படையில் தான் பதில் தர முடியும். ஆனால் யூகங்கள் வேதத்தை வைத்து பார்க்கும் போது தவறாகி விடும்.
என அங்கு உறுதியாக எதுவும் அறிய இயலாது என்கிறார்...
மேலும் மரணம் என்ன வென்றும், மரித்த பிறகு என்ன வென்றும், இயேசு கிறிஸ்துவை ஏற்காத மனிதர்கள் நிலை என்னவென்றும். தொடர்ந்து எழுதுகிறோம்.
என்று கூறினார், ஆனால் எழுதவில்லை, மாறாக "எல்லோர்க்கும் மீட்பு" எனும் புதிய கருத்தைக் கூறினார்.. மேலும், அது எவ்வகையான மீட்பு என்றும் கூறவில்லை; ஏனெனில் இந்த மீட்பு பரலோக பாக்கியத்திற்கு போதுமானது இல்லைஎன்றும் கூறுகிறார்.. "எல்லோர்க்கும் மீட்பு" எனும் கருத்தானது என் கேள்விக்கு சம்பந்தமானது எனக் கருதினால் அந்த மீட்பின் தன்மை குறித்து கொஞ்சம் விளக்குங்கள்..
பரலோகம் செல்ல ஒரு சிறிய மந்தை மாத்திரமே தகுதியாகும். அவர்கள் யார் என்று நமக்கு தெரியாது. வேதத்தில் அந்த தகுதியை அடைய எப்படி வாழ வேண்டும் என்று இருக்கிறது. ஆனாலும் அந்த தகுதியை அடைய கிறிஸ்துவே நம்மை நடத்துவார், நமது கிரியைகள் அல்ல.
'உயிர்' பிரிந்துவிட்டால் அவன் இல்லை. அவன் எங்குமே இல்லை. மீண்டும் உயிர்த்தெழுந்தால்தான் அவனுக்கு உணர்வுவரும். எல்லாருக்கும் மரணம் நிச்சயம். அவன் பாவியாக இருந்தாலும் சரி, பரிசுத்தவானாக இருந்தாலும் சரி. ..... இதில் புது சிருஷ்டிகளான 'சபை' மாத்திரம் பிதாவாகிய தேவனால் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவின் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டு இப்பூமியிலேயே "புது சிருஷ்டிகளாக" மாற்றப்பட்டு பரலோகவாசிகளாக ஆகப்போகும் மஹா சிலாக்கியம் அடைகிறார்கள். இவர்கள் இந்த சரீரத்தில் மரித்து, பரலோகவாசிகளுக்குரிய 'வானத்துக்குரிய சரீரத்துடன்' உயிர்த்தெழுவார்கள்.
இருக்கட்டும்.. என்னுடைய கேள்விAfter death - to Godless persons என்பதே. கவனிக்க: நான் தங்களிடம் தற்போது (தங்கள் பதிலிலுள்ள தெளிவின்மையை எடுத்துரைத்து) விளக்கம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. என்னுடைய நிலையை பற்றி அல்ல.
1. எல்லாருக்கும் மரணமே சம்பவிக்கின்றது. 2. அ) கிறிஸ்து மரித்தது உயிர்த்ததினால் எல்லாருக்கும் மீட்பு (மரணத்திலிருந்து தான்) என்பது ஒரு நிபந்தனையற்ற (unconditional) வாக்குறுதி வசனம் - ஆ) எல்லோரும் (....) மரிப்பது போல், கிறிஸ்துவிற்குள் எல்லோரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களும், விசுவசியாமல் மரித்தவர்களு) உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அ) பரலோகம் செல்ல ஒரு சிறிய மந்தை மாத்திரமே தகுதியாகும். அவர்கள் யார் என்று நமக்கு தெரியாது. வேதத்தில் அந்த தகுதியை அடைய எப்படி வாழ வேண்டும் என்று இருக்கிறது. ஆனாலும் அந்த தகுதியை அடைய கிறிஸ்துவே நம்மை நடத்துவார், நமது கிரியைகள் அல்ல. ஆ) இதில் புது சிருஷ்டிகளான 'சபை' மாத்திரம் பிதாவாகிய தேவனால் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவின் கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டு இப்பூமியிலேயே "புது சிருஷ்டிகளாக" மாற்றப்பட்டு பரலோகவாசிகளாக ஆகப்போகும் மஹா சிலாக்கியம் அடைகிறார்கள். இவர்கள் இந்த சரீரத்தில் மரித்து, பரலோகவாசிகளுக்குரிய 'வானத்துக்குரிய சரீரத்துடன்' உயிர்த்தெழுவார்கள்.
இப்போது.. என் கேள்விக்கு வாருங்கள்.. பரலோக பாக்கியமில்லாது உயிர்த்தெழுந்தவர்களின் நிலை என்னவாகும்..
தாங்கள் தியானிக்க சொன்ன ஏசாயா 35
"இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்"
என்று சொல்கிறது.. தேவன் நீதியுள்ள நியாதிபதி என வேதம் முழுவதும் வாசிக்கிறோம். நான் குறிப்பிட்ட வகையினருக்கு வித்தியாசமான தீர்ப்பு உண்டா?
மல்கியா 3:18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.
கிரியைகள் மட்டும் பரலோகம் கொண்டு செல்லாது - நல்லது, உண்மை.
ஆனால் கிரியைகளுக்கு பலன் உண்டு என்று
II நாளாகமம் 15:7 நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான். நீதிமொழிகள் 12:14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். நீதிமொழிகள் 24:12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? பிரசங்கி 9:7 நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். பிரசங்கி 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். ஏசாயா 3:10 உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். ஏசாயா 29:15 தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ! ஏசாயா 32:17 நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். எரேமியா 21:14 நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்;..... எரேமியா 25:14 அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குதக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார். எரேமியா 32:19 யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. ஓசியா 4:9 ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். ஓசியா 12:2 ..... அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
வேதம் முழுவதும் வாசிக்கிறோம்..
எனவே, உயிர்த்தெழுந்த பரலோக பாக்கியமற்றவர்களில் நான் குறிப்பிட்ட இருவகையானவர்களுக்கு என்ன நடக்கும்?.. தேவன் எப்படி நீதியை சரிகட்டுகிறார்??..
புரிந்துக்கொள்ள மாட்டேன் என்று ஏற்கனவே ஒரு கோட்பாட்டை வைத்து கொண்டு கேள்விகளை எழுப்பினால் எப்படி பதில் தந்தாலும் அது திருப்தியை அளிக்காது. முதலில் தாங்கள் கற்று அறிந்த விஷயங்களை ஒரு பக்கமாக வைய்யுங்கள், பிறகு பதிலை வாசியுங்கள். அதன் பின் இரண்டையும் வேதத்தை வைத்து சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்வி, தேவனை அறியாதவர்கள் மரித்த பின்பு என்ன ஆவார்கள் அல்லது அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தானே!!
தங்களின் இந்த கேள்விக்கான நேரடியான பதில், அவர்களும் இதே பூமியில் தேவனை அறிகிற அறிவை பெற்றுக்கொள்ள உயிர்த்தெழுவார்கள். இதை மாத்திரம் சொன்னால் உங்களுக்கு போதுமா!!. ஏசா 35 அதிகாரத்தை வாசிக்க சொன்னால் முதல் வரியை மாத்திரம் வாசித்து விட்டு தங்களின் விளக்கத்தை சொல்லியிருக்கிறீர்கள். நான் தங்களை முழு அதிகாரத்தையும் வாசியுங்கள் என்று சொன்னேன்.
மாற்கு 6:11 எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்.
லூக்கா 10:12 அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்த வாசனங்களில் தேவனற்ற அல்லது தேவ பையம் இல்லாத சோதோம் தேசத்தாரை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதாவது நியாயத்தீர்ப்பின் நாட்களில் இவர்களுக்கு நேரிடுவது இலகுவாக இருக்குமாம்!
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
ஆக இந்த நியாயத்தீர்ப்புக்கு அனைவரும் எழுந்து ஆகவேன்டியது தேவ சட்டம். தேவனற்றவர்களானாலும் சரி, தேவனை அறிவோம் என்று நடிக்கிறவர்கலானாலும் சரி, அனவரும் எழுந்து ஆக வேண்டும்.
யோவான்5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
இந்த வசனங்களும் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் என்பதையே சொல்லுகிறது (தேவனற்றவர்கள் உட்பட) அனைவரும் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியும் என்று என்னுகிறேன்.
//இப்போது.. என் கேள்விக்கு வாருங்கள்.. பரலோக பாக்கியமில்லாது உயிர்த்தெழுந்தவர்களின் நிலை என்னவாகும்..//
பரலோக பாக்கியமில்லாது உயிர்த்தெழுந்தவர்கள் சீர்படுத்தப்பட்ட இந்த பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். தேவனை அறியும்படியான நியாயத்தீர்ப்பின் நாட்களில் அவர்கள் தேவனை அறிந்துக்கொள்வார்கள். அதை தான் ஏசா 9:11 மற்றும் ஏசா 35ம் அதிகாராத்தில் வாசிக்க சொன்னேன். "கர்த்தரால் மீட்க்கப்பட்ட அனைவரும் சீயோனிற்குள்: அக்களிப்போடு வருவார்கள்" என்று ஏசா 35ம் அதிகாரத்தில் கடைசி வசனம் சொல்லுகிறது.
இரட்சிப்பு என்றால் மரணத்திலிருந்து மீட்கப்படுவது அல்லது உயிர்த்தெழச்செய்வது என்று சொன்னால், நாங்கள் குழப்புகிறோம் என்று சொல்லுகிறீர்கள். இன்று எழுதிய பதிவு உங்களுக்கு ஏதாவுது உதவுகிறதா என்று வசனத்துடன் பாருங்கள்.
இங்கு பதிவுகளை தருபவர்கள் அனைவருமே ஏதாவது வேளையில் இருந்துக்கொண்டு தான் பதிவுகளை தருகிறார்கள். இந்த தளத்தில் யாரும் சோம்பேறிகளான முழு நேர ஊழியார்க்லள்(!!) என்று இல்லை. எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தான் பதிவுகளை தருகிறோம். நேரம் கிடைப்பதும் எடுத்துக்கொள்வதும் நம்ம் கையில் தான் இருக்கிறது. தாகம் இருந்தால் தான் தண்னீரை தேடுவோம். அது அதிகாலமாக இருந்தாலும் சரி நடு ராத்திரியாக இருந்தாலும் சரி. தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் வந்து பதிவுகளை தாருங்கள். குடம் முழுவதும் தண்ணீர் இருந்தால், ஊற்றப்படும் தண்ணீர் வெளியே தான் சிந்தும் என்று பதிவு செய்கிறேன். தாங்கள் பல போதகர்களிடமோ அல்லது சுயமாகவோ கற்று அறிந்த விஷயங்களை சற்றே ஓரம் கட்டி வைத்து இந்த பதிவுகளை வசனத்துடன் வாசியுங்கள். இதில் எங்கள் சொந்த சரக்கு (தேவன் என்னிடம் வந்து பேசினார் போன்றவைகள்) இருக்காது. தொடர்ந்து வாசியுங்கள் பதிவுகளை தாருங்கள்!!
நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி மரணத்துக்குப் பின் என்னாகும் என்பதற்கு பதிலாக உயிர்த்தெழுதலுக்குப் பின் இவர்கள் நிலை என்ன என்று கேட்டிருந்தீர்களானால் இவ்வளவு விளக்கங்களைத் தரவேண்டிய அவசியமிருந்திருக்காது.
உயிர்தெழுந்த பின் அவர்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (யாரும் விதிவிலக்கல்ல). நீதியைக்கற்றுக்கொண்டு நித்திய ஜீவனை (பூமியிலேயே) சுதந்தரிப்பார்கள். கிறிஸ்து ஏற்படுத்திய ஒப்புரவாக்குதல் பூரணமாகும். புதிய பூமிதான் பரதீசு. மனிதன் பூமியில் வாழும் வண்ணம்தான் படைக்கப்பட்டுள்ளான். தேவன் மனிதனை மனிதனாகத்தான் படைத்திருக்கிறார். ஆவிரூபிகளாக மறுரூபமாகும் தகுதி அவரது சபையாகிய சிறுமந்தைக்கே உண்டு. அதுவும் அவரே தகுதிபடுத்துகிறார். பழைய ஏற்பாடு முழுவதும் அவர் யாருக்கும் பரலோக வாக்குத்தத்தம் தரவில்லை என்பதை அறிக. புத்திர சுவீகாரம் சிறுமந்தைக்கு மாத்திரம் (மணவாட்டி சபை) உண்டு. பொறுமையாக வேதத்தை ஆராயுங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
மரித்தவுடன், பரிசுத்தமாக வாழ்ந்தவர்கள் (சுய நீதியை கொண்டிருப்பவர்கள்!!) பரலோகத்திற்கும், பாவம் செய்தவர்கள் (யார் தான் பாவம் செய்யாதவர்கள் என்று தெரியவில்லை) நரகத்திற்கும் போவார்கள். சில நவீன போதகர்கள் நியாயத்தீர்ப்பு முடிந்த பிறகு தானே பரலோகம் என்று ஓர் அளவிற்கு (!!) புரிந்துக்கொண்டு, தங்களை போன்ற பரிசுத்தவான்கள், தேவ மனிதர்கள் (!!) மரித்தவுடன் பரதீசிற்கும், பாவிகள் மரித்தவுடன் பாதாளத்திற்கும் (கவனிக்கவும் எபிரேய ஷியோல் மற்றும் கிரேக்க ஹேடஸ்) செல்வார்களாம். நியாயத்தீர்ப்பு நாளின் போது அந்த பரதீசிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் கூட்டி சேர்க்கப்படுவார்கள் (யார், என்ன வருவார்கள் என்று தெரியவில்லை) 24 மணி நேரத்திற்குள் அவசரவசரமாக அவர் அவர் செய்த பாவம் ஒரு பெரிய வீடியோ திரையில் ஓடுமாம், அதை அனைவரும் பார்ப்பார்களாம், அதன் பின் மீண்டும் பாதாளத்திலிருந்து வந்தவர்கள் நரகத்திற்கும் (கவனிக்கவும் இதுவும் எபிரேய ஷியோல் மற்றும் கிரேக்க ஹேடஸ்), பரதீசிலிருந்து வந்தவர்கள் பரலோகத்திர்கும் செல்வார்களாம்!! மரணத்திற்கு பின் என்ன என்கிற தலைப்பில் இது தான் இன்றைய சபைகளில் போதிக்கப்படுகிறது !! மைய்யப்பொருள் இது தான் அவர் அவர் பேச்சு திறனுக்கு தகுந்தற்போல் கொஞ்சம் சேர்த்து (அதாவது நான் பரலோகம் மற்றும் நரகம் இந்த சரீரத்தில் இருக்கும் போதே சென்று வந்திருக்கிறேன், அல்லது எனக்கு தேவன் காண்பித்தார் போன்ற ரீல் மண்னர்களின் அலங்கரிப்புடன் சற்று சுவாரசியமான கதை நேரமாக இருக்கும்) மக்களை வஞ்சிப்போரும் இருக்கிறார்கள்!!
தன்னை பரிசுத்தவான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனும், உலகத்திலேயே பெரிய பாவம் செய்தவனாக மற்றவர்கள் நினைப்பவனும் மரித்தவுடன் ஒரே மண்ணிற்குள் தான் செல்கிறார்ள். அவ்வுளவு தான்!! கிறிஸ்து இயேசு வரும் போது, அவரின் சத்தம் கேட்டு அவரிடத்திலிருந்து ஜீவனை பெற்றுக்கொண்டவர்களாக அவரின் பார்வையில் உத்தமர்களாக இருந்த ஒரு சிறு மந்தையை அவரின் சாயலாகவும், மற்ற அனைவரையும் (தீமோத்தி அவர்களே தங்களின் பார்வையில் தேவனற்றவர்கள், பாவிகள் போன்றவர்கள்) இதே பூமியில் என்றென்றும் வாழும் படியாக உயிர்தெழுவார்கள் (எசே. 37ம் அதிகாரம், தானி. 12:2,3; யோவான் 5:28,29). பூமியில் உயிர்த்தெழும் இவர்கள் நடக்கும் நியாயத்தீர்ப்பின் நாட்களில் மெய்யான தேவனையும், அவரின் சத்தியங்களையும் அறிந்துக்கொள்வார்கள். அதன் பின் தேவன் பூமியை எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ, இதே பூமியில் தேவனை அறிந்த மனிதன் என்றென்றும் நித்தியத்திற்கும் வாழ்வான். இது தான் தங்களின் கேள்விக்கு மிகவும் ப்ரீஃபான பதில். மற்றப்படி வேதத்திற்கு புறம்பாக நிறைய கதைகள் இருக்கிறது!! சரி நியாயத்தீர்ப்பு என்ன என்று தெரியவேண்டும் என்றாலும் கேட்கலாம், ஆனால் மரணம் என்னவென்று புரிந்துக்கொண்டாலே கேள்விகளுக்கு வேதத்திலிருந்து பதில் கிடைத்துவிடும்.