தேவன் யார்!? இந்த பிரபஞ்சத்தின் மிகவும் பெரிய ஜீவி, எல்லா வகையிலும் மிகவும் வல்லமையானவர் அவரின் நாமம் இரகசியமானது,ஆகவே அநேகர் அதை பயன்படுத்துவது கிடையாது! அவருக்கு பல காரணப்பெயர்கள் உண்டு, சர்வவல்லமை உள்ள தேவன், அநாதி தேவன், நித்திய தேவன்! பல மொழிகளில் அவரின் நாமம், யெகோவா தேவன் என்றும், யாவேஹ் தேவன் என்றும் இருக்கிறது!! இந்த பிரபஞ்சத்தின் வெளிச்சமாக இருக்கிறார், எல்லா ஞானமும் அவருடையதே! இவரே மிகவும் பெரிய நியாயாதிபதி!! அவரே ஜீவனை தருகிறார், மரணத்தையும் கட்டுபடுத்துகிறார், அவரின் வல்லமையால் அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார்! அவர் விரும்புவதை அவர் செய்கிறார்!! அவர் ஒரு தனி ஆள்த்தத்துவம், அவர் ஒருவரே அந்த மிக பெரிய தேவன் அவர் ஒருவரே சாவாமை உள்ளவர், மரணம் அவரை கட்டுப்படுத்த முடியாது, அவர் மரிக்க முடியாது அவர் இந்த பூமிக்கு வராமல் அவரின் வார்த்தையான அவரின் ஒரே பேறான குமாரனையே அனுப்பினார் அவர் நம் நினைவுகளை மாத்திரம் அல்ல நம் இருதயங்களையும் அறிந்திருக்கிறார் எல்லா ஆத்துமாக்களும் அவருடையது, எல்லாம் அவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்த பூமி தேவனின் பாதப்படியாகும் (ஒரு விதமான ஆராய்ச்சிக்கூடம்!!) எல்லாவற்றுக்கும் மேல், தேவன் மிகவும் நல்லவர் தேவன் ஆவியான ஜீவியாக இருக்கிறார் மனிதனுக்கு கொடுத்த எல்லா தன்மைகளும் தேவனிடத்தில் இருக்கிறது தேவன் நீதியாக, அன்பாக, ஞானமாக, வல்லமையாக, ஆள்த்தத்துவமாக இருக்கிறார் தேவனின் ஒய்வு நாள் என்றால் அவரின் படைப்புகளின் நிறுத்தம், அவ்வுளவே, இப்பொழுது தேவனின் அந்த ஒய்வு நாள் நீடிக்கிறது. அவர் பொய்யர் இல்லை, ஏமாற்றுபவர் அல்ல, அவர் நேர்மையானவர்!! இந்த பிரபஞ்சத்தின் மிக பெரிய படைப்பாளியாக இருக்கிறவர் அவர், பூமி உருவாகும் முன்னமே நம் அனைவரின் மீட்ப்பையும் அவர் தீர்மானித்திருக்கிறவர் கிறிஸ்து மீட்கும் பொருளாக இருக்கிறபடியாள், தேவன் அனைவரின் பாவங்களையும் மண்ணித்து அனைவரையும் மரணத்திலிருந்து எழுப்புவார் இருந்தாலும் இந்த தேவனி அறியாதவர்கள் தான் அநேகர் !!