அர்மகெதான் என்று வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தம் ஏதோ வரும் காலத்தில் நடக்கப்போகும் ஒரு நிகழ்வு என்று போதிக்கப்பட்டு வருகிறது. அர்மகெதான் யுத்தம் இப்போது நடந்துவருகிறது என்று வேதத்தை ஆராயும் அனைவரும் அறிந்து கொள்வார்கள். இந்த யுத்தத்தில் முக்கிய பங்கு வகிப்பது 'மீடியா' என்று சொல்லப்படும் தகவல் தொடர்பு ஊடகங்களே. முன்பெப்போதும் இல்லாத வகையில் உண்மை 'வெளிச்சத்துக்கு' கொண்டுவரப்படுகிறது. 5ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் 5000 கோடி வாங்கினாலும் மாட்டிக்கொள்கிறார்கள். உலகத்தின் ஒரு கோடியில் நடக்கும் நிகழ்வுகள் வீட்டின் வரவேற்பறைக்குள் வந்துவிடுகிறது. சமூக பாதுகாப்பு, நுகர்வோர் உரிமைகள், மனித உரிமைகள், தகவல் தொடர்பு உரிமை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இருட்டுக்குள் நடக்கும் எல்லா விஷயங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றது. போலி சாமியார்கள் சிக்கிக்கொள்கிறார்கள். போலிக்கிறிஸ்தவமும் அடையாளம் காணப்பட்டு சீரழிவது நாம் அறிந்ததே. இதை அறியாமல், இந்த யுத்தம் இனி எப்போதோ வரும்? அந்தி கிறிஸ்து இனிமேல்தான் 'வருவான்', ஆமோஸ் புத்தகத்தில் சொல்லப்பட்ட 'வசனம் கிடைக்காத பஞ்சம்' இனிமேல்தான் வரும் என்றெல்லாம் நம்பவைக்கப்பட்டு இந்த கிறிஸ்தவம் மோசம் போய்க்கொண்டிருக்கிறது. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு 1862 ல் வெளிவந்தது என்ற தகவலைத் தெரிவித்தார்கள். ஆக 1862 வருடங்களாக தமிழில் வேதாகமே இல்லை. எனவே அதற்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் வேதத்தை கற்றிருக்க வாய்ப்பே இல்லை. பாவம் அவர்கள் எல்லாரும் நரகத்தில் வெந்து கொண்டிருக்கிறார்கள்....
பல நூற்றாண்டுகள் கத்தோலிக்க சாம்ராஜ்யத்தில் வேதத்தை மறைத்து, ஒழித்து, ஏன் எரித்தும் கூட போட்டிருக்கிறார்களே! அது எல்லாம் இன்று பரலோகம் நரகம் விசிட் அடிக்கும் பிரசங்கியார்கள் அறிய வாய்ப்பு இல்லை. மாய்மாலம் செய்து கொண்டு பொல்லாத ஆவிகளை பெற்ற இவர்கள் இவர்களின் தரிசனங்களையே நம்பி இருக்கிறார்கள், அதையே அறைத்த மாவை போல் அறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!! தாங்கள் சொல்லியிருக்கும் அர்மகதேன், அந்திக்கிறிஸ்து போன்ற விஷயங்கள் இவர்களுக்கு ஏற்க மிகவும் கடினமாக இருக்கும். மொபைல் ஃபோனில் முழு வேதத்தையும் பல விதமான மொழிபெயர்ப்பில் வைத்திருக்கும் இந்த காலத்தில் இனிமேல் தான் வேதம் கிடைக்காத காலம் வரும் என்று பிரசங்கிக்கும் இன்றைய நவீன சுக போக போதகர்கள் இப்படி தான் பிரசங்கிப்பார்ள்!!
சத்தியத்தின் தாக்கம் தாங்காமல் முழுநேர ஊழியர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலர் இந்தத் தளத்திலிருந்து தோற்றுப்போய் ஓடிபோவதும் "அர்மகெதான்" தான்.
இது போலவே சமூக, பொருளாதார ரீதிகளிலும் உண்மை வெளிக்கொணரப்பட்டு போலிகள் வெளிச்சத்துக்க்குக் கொண்டுவரப்பட்டு அடையாளம் காணப்படுகிறார்கள். இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவு மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். உண்மையை அறிய ஆவலாக இருக்கிறார்கள். இது இன்னும் வளர்ந்து பூரணமாகி கிறிஸ்துவின் வருகையை மத்தியான வெயில்போல அனைவரும் உணர்வார்கள். அறியாமை என்ற இருள் அகன்று சத்திய ஒளிவீசும். அப்போது "நான், நானே கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்" என்ற வசனத்தின்படி உயிர்த்தெழுந்தவர்கள் முழங்காலகள் யாவும் முடங்கும்; நாவுகள் யாவும் அறிக்கையிடும், பிதா யார்? குமாரனாகிய கிறிஸ்து யார்? என்று முழு மனுக்குலமும் அறிந்துகொண்டு பூமியில் நித்திய ஜீவனை வெகுமதியாகப் பெறுவார்கள்.
இதுவே வேதம் சொல்லித்தரும் பிதாவாகிய தேவனால் உண்டான நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டான "புதிய ஏற்பாடு" (New Arrangement).
-- Edited by soulsolution on Tuesday 14th of September 2010 01:15:59 PM