ஜாமக்காரன் காமெடியன் புஷ்பராஜுக்கும் ஏராளமான விசிறிகள், ரசிகர்கள் உண்டு. இவர் என்னதான் தீர்வு கொடுக்கிறார் என்று ஒருவருக்கும் விளங்காது. ஒன்றுமே சொல்லாமல் "அடிச்சு கேப்பாஙக, அப்பவும் சொல்லிராதீங்க" வகை ஊழியம் செய்கிறார்.
பெந்தெகொஸ்த் பாஸ்டர்கள், ஊழியர்களை வசைபாடுவது இவரது முழுநேரத்தொழில், இவரது 'சொந்த' சபையான ஐயும் சரியில்லை என்கிறார். பிஷப்புக்காக ஜெபிக்கவேண்டுமாம். இவரது குழப்பத்தைப் பாருங்களேன்.
ஜாமக்காரன்: பிஷப் அவர்களைக்குறித்து நாம் இப்படி அறிவிப்பது வெறுப்பினாலோ, பகையினாலோ அல்ல. பிஷப் அவர்கள் கைது செய்யப்பட்டது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியல்ல. CSI சபையின் தலைவன், நாடறியும் அவமானத்திற்குள்ளானதுதான் கர்த்தருக்கும், நமக்கும் மனவேதனையை கொடுக்கிறது.
பிஷப் அவர்களுக்கு தன்னை தற்பரிசோதனை செய்யவும், தன்னை சரிப்படுத்திக்கொள்ளவும், குறிப்பாக மனம் திரும்பவும் இது அவருக்கு தேவன் அனுமதித்த நல்ல சந்தர்ப்பம் ஆகும். இப்போது கூறும் இந்த ஆலோசனையை அவர் கவுரவப் பிரச்சனையாக கருதி அலட்சியப்படுத்தினால் பிஷப் அவர்களின் இருதயம் மீண்டும் முன்பைவிட கடினமாகிவிடும். வழக்கு இவருக்கு சாதகமாகி விடுதலை செய்யப்பட்டால் அவர் ஆத்துமா கர்த்தரைவிட்டு மிகதூரம் விலகிவிடும். அதன்பின் மீண்டும் பிஷப் தன் பதவியில் அமர்ந்தால் முன்பைவிட அவர் செயல்பாடுகள் மோசமாகி மீண்டும் பெரிய குற்றங்கள் புரியும் கடினமான நிலைக்கு தள்ளப்படுவார். பழிவாங்கும் சிந்தை மேலோங்கும் தவறுக்குமேல் தவறு செய்ய உந்தப்படுவார். அவர் ஆவிக்குரிய நிலை மிக மோசமாகிவிடும். துணிகர பாவம் செய்ய தெய்வபயம் அவர் இருதயத்திலிருந்து தானே நீங்கிப்போகும்.
ஆகவே பிஷப் அவர்கள் இப்போது செய்யவேண்டியது. கடைசிநேரத்தில் யார் எல்லாம் அப்ரூவராக மாறினார்கள் என்று அறிந்து, அவர்களின் செயலில் உண்மை உள்ளதா என்பதை பிஷப் அவர்கள் அறியவேண்டும். உண்மையான குற்றச்சாட்டுகளை கூச்சப்படாமல் சம்மதித்து பிஷப் அவர்கள் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். பணம் திருப்பி செலுத்த வேண்டியது உண்மைதான் என்றால் அதை திருப்பி செலுத்த தயங்கக்கூடாது. பிஷப் தன் பதவியை ஏற்றெடுக்கும்போது Chitfund கடனை அடைக்க முடியாத நிலையில் இருந்ததை நினைவு கூர்ந்து திருமண்டல பணப்பிரச்சனையை சரிப்படுத்திவிட்டால் அப்போதைய மனநிம்மதியையும், சமாதானத்தையும் பிஷப் அவர்கள் திரும்பப்பெறுவார். பாவத்தை மறைக்கிறவனுக்குதான் வாழ்வு இல்லை. ஆனால் அதை அறிக்கைசெய்து விட்டுவிட்டவனுக்கு தேவனுடைய கிருபைதானே அவன்மேல் வரும், அவன் குடும்பத்திலும் வந்துவிடும். நீதி 28:13.
தாவீது தன் தவறை உணர்ந்தபின் கர்த்தரின் கிருபை அவன்மேல் இறங்கி அவன் நிலையை கர்த்தர் எத்தனையாய் உயர்த்தினார். அவன் இழந்ததையெல்லாம் திரும்ப பெற்றுக்கொண்டான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் பிஷப்.துரை அவர்கள் பட்ட அவமானத்துக்கு ஈடாக வெற்றியையும், உயர்வையும், கௌரவத்தையும் தருவார். எந்த இடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே இடத்தில் கனப்படுத்தப்படுவார். மேலும் பிஷப். துரை அவர்களை சுற்றியுள்ள துதிபாடிகளையெல்லாம் இனம்கண்டு அவர்களை அகற்றி சரியான ஆலோசனை கொடுக்கும், ஜெபிக்கும் உண்மையான நண்பர்களை கண்டுபிடித்து அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
நானும் ஒரு ஊழியக்காரன் சேர்ந்தவன் என்ற நிலையில், நானும் பிஷப்.துரை அவர்களின் கீழ் இயங்கும் கோயமுத்தூர் திருமண்டலத்தில் நான் பிறந்து வளர்ந்து திருமண்டலத்துக்காக பாரப்படுபவன், உண்மையாக ஜெபிப்பவன் என்ற நிலையில் இந்த ஆலோசனைகளை உரிமையோடு எழுதுகிறேன். பிஷப்.துரை அவர்களுக்கு என்னை ஆரம்ப முதலே பிடிக்காது என்பதை அறிவேன். ஆனாலும் என் சொந்த திருச்சபையின் தலைமை பொறுப்பிலுள்ளவர் என்ற நிலையில் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருக்காக பாரத்துடன் ஜெபிப்பவன், ஜெபித்துக்கொண்டிருப்பவன் என்பதை என் கர்த்தருக்கு முன்பாக பாரத்துடன் அறிக்கையிட்டு இதை எழுதுகிறேன்.
கோவை திருமண்டல ஜாமக்காரன் வாசகர்களும் பிஷப்.துரை அவர்களுக்காக ஜெபியுங்கள்.