இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களை அப்பன், மகன், பேரன் என்று தலைமுறை தலைமுறையாகத் திருடுகிறார்கள், பிச்சை எடுக்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான 'தேவ தரிசனத்துடன்' தொடங்கிய காருண்யமான கல்லுர்ரி ஒரு பெரும்புள்ளியிடம் கைமாறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாக்கிரதை ம்ஹாபாபிலோனின் வேசித்தனத்தில் இதுவும் ஒன்று.
இது போன்ற திருட்டுக்களுக்கெல்லாம் நம் அரசங்காம் வரி விளக்கு அளித்து வருவது இன்ஞும் கொடுமை. வரி அதிகாரிகளின் கண்கள் திறக்கப்பட நாம் ஜெபிக்கலாமே!!
மத் 25:34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
இந்த திருட்டு கும்பல் இந்த வகையிலும் வராதே! இவர்கள் கொடுக்கும் வஸ்திரங்கள் பிறனிடத்தில் பிச்சை எடுத்தது தானே. அடுத்தவனிடம் பிச்சை எடுத்து, அதை தன் பெனரில் (Banner) விற்றுக்கொண்டு இருக்கிறார்களே! பரலோக தேவன் இவை அனைத்தையும் கண்டு நகைத்துக்கொண்டு இருப்பார். அவரின் நாமத்தை துஷித்து கோடிகளில் சம்பாதிக்கும் இவர்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அந்த பயம் இந்த திருட்டு கும்பலுக்கு சற்றுமே கிடையாதே.
தாங்கள் கொடுத்திருக்கும் லிஸ்ட் (List) ஒரு எடுத்துக்காட்டு தான், இன்னும் பல விதமான திருடர்கள் பலவிதமாக தங்களுக்கும் தங்களின் வாரிசுகளுக்காகவும் நூதன முறைகளில் கொள்ளை அடித்து வருவதை கண்களை மூடியிருக்கும் விசுவாசிகள்(!!) அறிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்களே!!
ஊழியர்கள் (!) எப்படியும் இருக்கலாம் அவர்களை குறை சொல்லக்கூடாதாம் ஏனென்றால் அவர்கள் அபிஷேகம்(!!) பெற்றவர்களாம். எல்லா திருட்டுத்தனமும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் எந்த அபிஷேகத்தில் இருக்கிறார்கள் என்பதை வேதம் வாசிப்பவர்களும், உண்மையான ஆவியில் இருப்பவர்களும் அறிந்துக்கொள்வார்கள்!
-- Edited by bereans on Wednesday 23rd of June 2010 07:43:55 AM