சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் தற்போது சென்னை அப்போல்லோ ஆஸ்பத்தரியில் சுகவீனமாக இருப்பதாக செய்தி. அனைவரும் இவரையும் ஒரு 'அப்போஸ்தலர்' என்று அழைப்பதுண்டு. மிக மிக வைராக்கியமாக "தேவசெய்தி' கொடுக்கும் இவரும் மகா பாபிலோன் சபையின் பிரதான ஊழியர். இவருக்கும் நமது கேள்விகளை அனுப்பினோம் பதில்தான் இல்லை. இவருக்கென்று ஒரு விசுவாசக்கூட்டம் உண்டு. அவர்கள் இவரது ரசிகர்களாவார்கள். பீஹாரை மாற்றப்போன இவர் பீஹாரில் என்னத்தை மாற்றினார் என்றால் ஒன்றும் இல்லை. ஒருசில சோஷியல் ஒர்க்தான் செய்தாரேயன்றி வேரொன்றும் இல்லை.
போஸ்டர்கள் அடித்து ஜெபிக்கிறார்கள். இதோ ஒரு சில
மாதிரிகள்.
Protection of God's Children while travelling.
மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும்.
Pray for People to avoid alcohol while travelling.
அதாவது பயண நேரத்தின்போது ஜனங்கள் 'குடி'யைத் தவிர்க்க வேண்டி ஜெபிக்கவேண்டுமாம். (மற்ற நேரங்களில் குடிக்கலாமோ?)
பீஹாரில் சீதோஷ்ண நிலை 5டிகிரி முதல் 45 டிகிரியாக உள்ளதாம் தேவன் அதை மாற்ற வேண்டுமாம். (அதாவது வருடமுழுவதும் 22டிகிரி ஏர்க்கண்டிஷன் போல ஆக்க வேண்டுமாம்)
வட இந்தியா முழுவதுமே ஏறத்தாழ இந்த அள்வு வெப்பநிலைதான் காலா காலத்துக்கும் இருந்துவருகிறது. ஜெபிப்பதற்கு ஒரு விவஸ்தைகூடவா இருக்காது. தேவனை ஒரு கேலிப்பொருளாகப் பார்கிறார்ளோ?
Disaster relief resources வேண்டுமாம். அழிவே வேண்டாம் என்று ஜெபிக்கலாமே!