இது ஒரு தனிப்பட்ட மனிதனை விமர்சிக்கவோ, அல்லது தளத்தை விமர்சிப்பதாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் (அப்படியே எடுத்துக்கொண்டாலும் அதற்கு நான் பொறுப்பாலி அல்ல, ஏனென்றால், தளங்கள் பொது விமர்சனங்களுக்கு உட்பட்டவை தான்!!)
புத்தர் பெற்ற ஞானம் என்கிறதான ஒரு தலைப்பின் நண்பரின் விவாத மேடையில் வாசிக்க நேர்ந்தது. விசித்திரமான ஒரு கருத்தை தந்திருக்கிறார், இது சந்தேகமா அல்லது தெளிவுடன் எழுதியிருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது,
"அண்டங்களை படைத்த அநாதி தேவனின் அனைத்து செய்கைகளும் இந்த ஒரே புத்தகத்துக்குள் அடக்கமா?"
இந்த புத்தகத்திற்கு வெளியே போய் பெற்ற ஞானத்தினால் தான் உங்களுக்கு (சகோ சுந்தர் அவர்களுக்கு) பல்வேறு தரிசனங்கள் வருகிறதோ. வேதத்தையே முழுமையாக நம்பாமல் இருப்பவரிடம் தேவன் வெளிப்படுத்தினார் என்றும் தேவன் பேசினார் என்பதும் மாயையே!!
மேலும் ஒருவர் வேதத்தை அறிந்ததினால் பரிசுத்தவான் ஆகிறார் என்கிறபடியான நிலை ஒன்றும் இல்லை. பழைய ஏற்பாட்டில் தங்களின் கிரியைகளினால் (அதுவும் விசுவாசத்திற்கு ஏற்ற கிரியைகளினால்) தேவனால் பரிசுத்தவான்கள் எனப்பட்டார்கள். இப்பொழுதோ கிரியைகளினால் அல்ல விசுவாசத்தினாலே ஒருவன் தேவனின் பார்வையில் அந்த தகுதியை பெறுகிறான். அந்தபடி புத்தர் பரிசுத்தவானா இல்லையா என்பது கிறிஸ்துவத்திற்கு எத்துனை பிரயோஜனம் கொண்டது என்பது தெரியவில்லை. சரி அது அந்த தளத்தின் விவாதம்! நான் தலையிடுவது சரியல்ல! ஆனால் ஒரு கிறிஸ்தவ தளம் என்று சொல்லி விட்டு, வேதத்தின் மேல் இப்படி பட்டதான ஒரு நம்பிக்கை வைத்திருக்கும் இந்த நணபருக்கு எத்துனை காட்சிகள் தரிசனங்கள் வார்த்தைகள் வெளிப்பாடுகள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது!!