kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவத்தின் சம்பளம் மரணம்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
பாவத்தின் சம்பளம் மரணம்.


பாவத்தின் சம்பளம் மரணம்
நித்திய வேதனை இல்லை

"பாவத்தின் சம்பளம் மரணம்."

"ஒரே மனுஷனாலே பாவமும் 
பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது." ரோம். 6:23; 5:12

பழமைப் பற்று உள்ளவர்களின் படிப்பினையின்படி, பாவத்தின் சம்பளம் நித்திய வேதனை என்பதை, மேலே உள்ள வசனம் அழுத்தமாக எதிர்க்கிறது. வேத வசனம் எவ்வுளவு நியாயமானதாகவும், பொதுவான கருத்து எவ்வுளவு அசட்டுதனமானதாகவும், நியாயமான விளக்கம் தரமுடியாததாயும், வேதத்தில் இல்லாத ஒன்றுமாக, தேவனின் குணத்தையும் திட்டத்தையும் கடுமையாக எதிர்ப்பதாகவும் இந்த உலகம் எடுத்துரைக்கிறது.

நித்திய வேதனை கோட்பாடு புறவினத்தாரிலிருந்து தோன்றி, பேரளவிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களை புறவினத்தாரின் தத்துவங்களில் இணைத்துக் கொண்ட போது இரண்டாவது நூற்றண்டில் மெதுவாக கிறிஸ்தவத்திற்குள் நுழைந்து விட்டது. இந்நாட்களில் எளிதில் நம்பும் தன்மையுள்ள இந்தக் கொள்கை நமக்கு நம் கர்த்தரிடத்திலிருந்தோ அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகளிடமிருந்தோ கிடைக்காமால், மாறாக சத்தியத்திற்கும், நியாயத்திற்கும் கீழ்படியாமல் விட்டுகொடுக்கும் தன்மையுள்ள ஆவிக்கு இடம் கொடுத்து, பரிசுத்தமற்ற ஆதிக்கம், பதவியும் பணத்துக்கும் எண்ணிக்கைகளுக்கும் முயன்ற கிறிஸ்தவர்களால் கொண்டு வரப்பட்டு, இதற்காக அவமானமான கிறிஸ்தவ கொள்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாவத்தின் சம்பளம் நித்திய வேதனை என்பது பூர்வகாலத்தில் நம் முற்பிதாக்களுக்கு தெரியத ஒன்றாக இருந்தது; யூத யுகத்தின் தீர்க்கதரிசிகள் இதை அறிந்ததில்லை; நம் கர்த்தரும் அப்போஸ்தலர்களும் இதை அறியாமல் இருந்தார்கள்; ஆனால் பேரளவிலுள்ள கிறிஸ்தவர்கள் பின் வாங்கி போன பிறகு இதையே பிரதான கோட்பாடு என்று கொடுத்தார்கள் - இந்த சாட்டையினால் சுலபமாக நம்புவோர்களை, அறியாமையிலிருப்பவர்களை, மூடநம்பிக்கை கொண்டிருப்போர்களை, கொடுங்கோலர்கள் அடிமைத்தனமாக நடத்தி சென்றார்கள். 

யாரெல்லாம் இந்த அதிகாரத்தை எதிர்த்தார்களோ அல்லது எட்டி உதைத்தார்களோ அவர்களுக்கு விரோதமாக இந்த நித்திய வேதனை கட்டளையிடப்பட்டு, அவர்களுக்கு முழு அதிகாரம் இருந்த மட்டும் கிலேசமூட்டும் இந்த அனுபவத்தை இந்த யுகம் மட்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்; மேலும் உத்தரிப்பு ஸ்தலத்தின் வேதனைகளை குறித்தும் போதித்து, அந்த அதிகாரத்தை எதிர்த்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரோதமாகவும் கட்டளையிட்டார்கள். தன்னை தானே உயர்த்திக் கொண்ட சக-மனிதர்களுக்கு மூடத்தனமான பயத்தின் கட்டுகளிலிருந்த மனிதர்கள், தேவனின் திட்டத்தை அறியாமல் இருந்தார்கள், மேலும் நித்திய துன்பத்தை கண்டு பயந்து போயிருந்த பெரும்பாலான மக்கள் கூட்டம், நியாயத்தை யோசிக்க மறந்தவர்களானார்கள்; இப்பொழுதும் இந்த நூற்றாண்டிலும் தேவனின் வெளிச்சம் கூடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் மனிதர்கள் தங்களை வேதத்தில் உள்ள மதத்துடன் ஒத்து பார்க்க அஞ்சுகிறார்கள். 

வேதம் என்ன சொல்லுகிறது?

புறவினத்தாரிடமிருந்து வந்த இந்த சபை பாரம்பரியத்திற்கு விரோதமாக தேவ ஆவியினால் ஏவப்பட்டு வேதத்தை எழுதியவர்களின் வார்த்தைகளை நாம் கேட்டு, எது அறிவுள்ளதும் தேவத்தன்மையுள்ள கருத்தாக இருக்கிறது என்றும், எது நியாயம் இல்லாத பிசாசுத்தன்மையுள்ளதாக இருக்கிறது என்று வேதத்திலிருந்து நியாயமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அறிய முயலலாம். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் நித்திய வேதனை என்கிற வார்த்தையை எங்குமே சொல்லவில்லை, மாறாக அழிவே பாவியின் முடிவு என்று அடிக்கடி கூறி, தேவனின் எதிரிகள் அழிந்துபோவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் அறிக்கை செய்கிறார்கள். மோசேயிடம் கொடுக்கபட்ட சட்டம் கூட அந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு மரணத்தை தவிர வேறு ஒரு தண்டனையை குறிப்பிடவில்லை. ஆதாமை ஏதேனில் வைத்து தேவன் கொடுத்த முதல் எச்சரிப்பிலும் ஒரு கடுகு அளவிற்கு நித்திய வேதனையை குறித்து சொல்லாமல், மாறாக ஆதாம் தேவன் கொடுத்த கட்டளையை மீறினால் மரணத்தை மாத்திரமே தண்டனையாக வைத்திருந்தார் - "அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்" (ஆதி 2:17).

நிச்சயமாகவே கீழ்படியாமைக்கும் மீறுதலுக்கும் தண்டனை நித்திய வேதனனயுள்ள சித்திரவதை என்றிருந்தால், ஆதாமுக்கும், முற்பிதாக்களுக்கும், யூதர்களுக்கும் விரோதமாக மன்னிக்கமுடியாத ஒரு தவறு நடந்துவிட்டது என்று தான் என்ன வேண்டும், ஏனென்றால் அவர்களிடம் மரணமே தண்டனை என்று தவறுதலாக தெரியபடுத்த பட்டிருந்தது என்று ஆகும். பல பிரிவினர்களின் பிரமாணங்கள் வெட்கம் இல்லாமல், பெரும்பாலானவர்கள் அந்த நித்திய வேதனையில் தான் இருப்பார்கள் என்று பொய்யாக கற்று தருவது போல் இருந்தால், ஆதாமுக்கும், முற்பிதாக்களுக்கும், யூதர்களுக்கும் நீதிக்காக முறையிட சுலபமாகிவிடும். நிச்சயமாகவே விசுவாசத்தைக் குறித்து அறியாமல் மரித்த கோடிக்கணக்கான புறவினத்தார்களும், அநீதியாக தங்களை தண்டனைக்குட்படுத்தின வல்லமையை சபிக்க காரணமாகிவிடும் -முதலாவது அவர்கள் அறியாமலையே அவர்களை ஒர் நியாயத்தீர்ப்பில் நிறுத்தி அநியாயமான ஒரு தண்டனையை கொடுத்ததற்காகவும்; இரண்டாவததாக இது போல் உள்ள ஒரு தண்டனையிலிருந்து அவர்களை அறியாமையில் வைத்து ஒரு வகுப்பாரிடம் மாத்திரம் பாவத்தின் சம்பளம் மரணம் அல்லது நித்திய அழிவு என்று ஏமாற்றியதால். மரணம், அழிவு, நித்திய அழிவை நித்திய வேதனை என்கிற யூகம் அப்போஸ்தல காலத்திலிருந்த வார்த்தைகளை திரித்து பேசும் சில மதசாஸ்திரிகளின் முயற்சியினால் வந்தது என்று ஒத்து கொள்ள வேண்டும். 

அடுத்தது நாம் புதிய ஏற்பாட்டு எழுத்துக்களை பார்ப்போம்: பவுல் சொல்லுகிறார், "தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே" (அப். 20:26), ஆனால் அவர் நித்திய வேதனையை குறித்து ஒரு வார்த்தையும் எழுதவில்லையே. அவர் மாத்திரமல்லாமல் பேதுருவோ, யாக்கோபோ, யூதாவோ, யோவானோ இதை குறித்து எழுதவில்லையே; சந்தர்ப்பவாதிகள் யோவானுக்கு வெளிப்படுத்தினதை தவறாக புறிந்துக்கொண்டு யோவான் எழுதியுள்ளார் என்று வாதிடுகிறார்கள். ஏனென்றால் இந்த வாதத்தை எழுப்புபவர்கள், வெளிப்படுத்தின புத்தகத்தை ஒரு முத்திரையிட்ட புத்தகமாகப் பார்க்கிறார்கள், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது, அதில் கொடுக்கப்பட்ட அடையாள எழுத்துக்களையும் சம்பவங்களையும் அர்த்தம் சொல்லும் அதிகாரம் எடுத்துக் கொள்ள கூடாது, ஏனென்றால் அவர்கள் சொல்லுவது வேதத்திற்கு முரணானதாகவெ இருக்கிறது, யோவானின் நிருபத்தையும் சேர்த்து.

இப்படியாக அப்போஸ்தலர்கள் நித்திய வேதனையை குறித்து ஒன்றுமே சொல்லாமல் இருப்பதால், சத்தியத்தைத் தேடும் ஒவ்வொரு கிறிஸ்தவனும், பாவத்தின் தண்டனையை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று மாத்திரமே பார்க்கவேண்டும், இருண்ட காலத்தில் விசுவாசதுரோகம் செய்த சபைகள் "தேவனின் முழு ஆலோசனைகளையும்" நமக்கு சொல்லிதரவில்லை என்று அதை கற்று கொடுத்த அப்போஸ்தர்களின் எழுத்துக்களையே நாம் பார்க்க வேண்டும்.

பவுல் இதை குறித்து விவரிக்கும் போது: "பாவத்தின் சம்பளம் மரணம்" ரோம். 6:23; "அவர்கள் (கீழ்படியாதவர்கள்) கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனனயை அடைவார்கள்" 2 தெச 1:10; "அவர்களுடைய முடிவு அழிவு" பிலி. 3:19. 

யோவான் சொல்லுகிறார்: "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்"; "பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாசஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்"; "சகோதரனிடத்தில் அன்பு கூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்"; "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்". 1 யோவான் 2:17; 3:8,14,15; 5:12. 

பேதுரு சொல்லுகிறார்: கீழ்படியாதவர்கள் "ஜனத்திலிராதாபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்" அப். 3:23; கள்ளப் போதர்களை குறித்து தங்களுக்குத் "தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்" 2 பேது. 2:1; "தேவன், ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிறார்" 2 பேது. 3:9.

யாக்கோபு சொல்லுகிறார்: "பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்"; "அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்" யாக். 1:15; 4:12.

இந்த விஷயத்தைக் குறித்து படிக்காத எவரும், பாவத்தின் தண்டனையை வேதத்தில் தீர்மானத்தின்படி, மிகவும் மிதமாக எடுத்துக் கொள்ள கூடும். புரிந்து கொண்டால், இது மிதமாகவோ, கொடுமையாகவோ தோன்றாமல், தகுதியான ஒரு பரிசென்றே எண்ணக் கூடும். அப்போஸ்தலர் சொல்லுவது போல், தேவனின் கிருபையோ நித்திய ஜீவன். இந்த பரிசோ கிருபையோ ஆதாமுக்கும் அவன் மூலமாக வந்த சந்ததிகளுக்கும் ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் கிடைக்கும் என்றார், அது என்னவென்றால், நாம் செய்வது எதிலும் தேவனை மகிமை படுத்தவும், அவருக்கு எதிராக கலகமோ பாவமோ செய்யாது அவரை மதித்து இருப்பதினால். தேவன் படைத்ததால், அந்த படைப்பு ஜீவனோடு இருக்கும் தகுதியை இழந்து போனால் படைப்பை அழிக்கும் அதிகாரமும் வல்லமையும் அவரிடத்தில் வைத்திருக்கிறார். மனிதன் பாவம் செய்ததினால், தேவன் அவனுக்கு வைத்திருந்த நித்திய ஜீவனை எடுத்து அவனை அழிவிற்கு (மரணத்திற்கு) உட்படுத்தினார்: மரணம் வருவதற்கு முன்பாக வியாதிகள், வேதனைகள், வயதாகுதல் போன்றவற்றை கடந்தாக வேண்டும்.

தேவன் கிறிஸ்துவைக் கொண்டு மீட்ப்பின் திட்டம் வைக்காமல் இருந்திருந்த்ால், ஆதாம் குடும்பத்தின் மீது வந்த இந்த தண்டனை நித்திய தண்டனையாக இருந்திருக்கும், மாறாக அவரின் இரக்கத்தினால் மரணத்திலிருந்து மீட்கப்படுகிறோம்; ஆனாலும் மீண்டும் தனித்தனியாக இதே சட்டத்தின் கீழ் வைக்கப்படுவார்கள், அது மாறாத சட்டம் -"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோம். 6:23).

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்பொழுதாவது "நித்திய துன்புறும் வேதனை" என்று போதித்திருக்கிறாரா? அல்லது, ஒரு போதாவது தான் நித்திய துன்புறும் வேதனையிலிருந்து மனிதனை இரட்சிக்க இந்த உலகத்திற்கு வந்தேன் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லை, இல்லவே இல்லை! இப்படியான ஒரு வேதனை இருந்து அதை குறித்து அவர் சொல்லாமல் போயிருந்தால், அது நீதியாக இருந்திருக்காதே, சத்தியம் முழுமையாக இல்லாமல் போயிருக்குமே! ஆனால் மரணத்திலிருந்து, அழிவிலிருந்து மீட்கவே வந்ததாக தான் அவர் சொல்லியிருக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணமாக இருந்த படியே உயிர்தெழுதலின் நம்பிக்கையில்லாமலும் ஒரு எதிர்கால வாழ்வைக் குறித்தும் அறியாமலேயே எல்லோரும் அழிந்து கொண்டிருந்தார்கள், கிறிஸ்து வந்து மரணத்திலிருந்து மீட்கும் பொருளாக மாறினது மட்டும், ஆதாமிற்கு வாக்கு செய்யப்பட்ட அந்த பூரண ஜீவனை பார்க்காமலே. இரட்ச்சகர் என்பதற்கு அர்த்தமே, மரணத்திலிருந்து இரட்சிப்பதே, நித்திய வேதனையிலிருந்து இரட்சிப்பது அல்ல. இரட்சகர் என்கிற கிரேக்க பதத்தின் அர்த்தம் ஜீவனை-கொடுப்பவர் ஆகும். 

அவரின் முதல் வருகையை குறித்து நம் கர்த்தர் என்ன சொன்னார்? நாம் அறிவோமாக. அவர் வருகையைக் குறித்து சொல்லும் போது, சிறைப்பட்டவர்களை விடுவிக்க என்றார். சிறைப்பட்டவர்கள் என்று எதை சொல்லுகிறார், பாவத்தில் கட்டப்பட்டு, அதின் சம்பளம் வாங்கிக் கொண்டு மரித்து பாதாளத்திற்குள் (கல்லறை) அடங்கிக் கொண்டிருப்பவர்களைத் தான் அவர் குறிப்பிடுகிறார். அது மரணத்திலுள்ளவனை அடைத்துவத்திருக்கும் பாதாளத்தை (கல்லறை) காட்டிலும் வேறு எந்த சிறையாக இருக்க முடியும்! இதை குறித்து தீர்க்கதரிசி முன்னுரைத்தும் இருக்கிறார் (ஏசா. 61:1; லூக். 4:18). உண்மையான சிறை என்றால் அவர் காலத்திலே சிறையில் இருந்த யோவான் ஸ்நானகன் விடுவிக்கபடவில்லையே! அவர் வருகையைக் குறித்து சொன்னது, "மனிதர்களுக்கு ஜீவன் உண்டாகும்படியும்"; "அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனை கொடுக்கவும்; அவரை நம்புவோர் "அழிந்து போகாமால், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்"; என்றும், "ஜீவனுக்கு போகும் வழி இடுக்கமாகவும், அழிவுக்கு (கேட்டுக்கு) போகும் வழி விசாலமாக இருக்கிறது" என்று போதிக்கவே வந்தார். யோவா. 10:10; மத். 20:28; யோவா. 3:15; மத். 7:13.

பதில் கொடுக்கமுடியாத வாக்குவாதம்

இயேசு கிறிஸ்து தன் மரணத்தால் மனித ஜாதிக்கு மீட்பைக் கொடுத்தார் என்று பொதுவாக எல்லா கிறிஸ்தவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்; மேலும் மனிதன் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலை பெற அவனது பாவத்தின் தண்டனையை அவரே பொறுத்துக் கொண்டார். "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." (ஏசா. 53:4,5). இதை ஒப்புகொண்டால், "நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை" அவர் சுமந்தார் என்றால், நம் மேல் வந்த பாவத்தின் தண்டனை என்னவென்று எதிர் கேள்வியில்லாமல் முடிவு செய்ய முடியும். நம் தண்டனைக்காக அவர் நித்த்ிய வேதனையா பட்டார்? அப்படியாக இருந்திருந்தால், நித்திய வேதனையே நம் தண்டனை என்றும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இதை யாரும் ஒப்புக் கொள்ளுவதில்லை, ஏனென்றால் வேதம் நமக்கு சொல்லுவது, நம் கர்த்தர் இப்பொழுது மகிமையில் இருக்கிறார் என்றும் அவர் நித்திய வேதனையில் இல்லை என்றும், இதுவே "பாவத்தின் சம்பளம் மரணம்" என்கிற மறுக்கமுடியாத சாட்சியாகி விடுகிறது. நம் பாவத்தை போக்க நம் கர்த்தர் என்ன செய்தார்? நமக்கு மீட்கும் பொருளாக அவர் என்ன கொடுத்தார்? வேதம் நமக்கு பதில் கொடுக்கிறது. அதில் மீண்டும் மீண்டும் வெளிப்படையாக சொல்லப்பட்டது என்னவென்றால், "கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார்" 1 கொரி. 15:3; நமக்கு ஜீவன் உண்டாகும்படி அவர் தம் ஜீவனை மீட்கும் பொருளாக கொடுத்தார் மத். 20:28, 1தீமோ. 2:6, ஓசியா 13:14,; அவர் தம் விலையேறபெற்ற இரத்தத்தினால் நம்மை கிரயத்திற்கு வாங்கினார் 1கொரி. 6:20, 1 பேது. 1:18,19; தன் மாம்சத்தைக் கொடுத்து உலகிற்கு ஜீவன் ஏற்படும் படியாகவே தேவ குமாரன் மாமசத்தில் வெளிப்பட்டார் 1 யோவா. 3:8, யோவா. 6:51; மனிதனால் மரணம் வந்தபடியே, மனிதனால் ("இயேசு கிறிஸ்து என்கிற மனிதன்") உயிர்தெழுதலும் வந்தது 1கொரி. 15:21, 1 தீமோ. 2:5,6.

இதற்கு மேலும் வேதத்தின் கோட்பாடாகிய, "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை எதிர்த்து கேள்விகள் உண்டா? இதற்குமேலும், புறவினத்தாரின் கொள்கைகளின் படியான நித்திய வேதனை என்கிற வேதத்திற்கு விரோதமான நியாயமில்லாத கேள்விகள் உண்டா? நாம் பதில் கொடுப்பது, இல்லை!

தேவனை மதிக்காத, பரிசுத்தவான்களை குழப்பும், பரிகாசம் செய்யும், முற்றிலுமான தேவதூஷனம் திரும்பி அதை கொடுத்த பிசாசிடமே செல்லட்டும்.




-- Edited by soulsolution on Friday 20th of August 2010 11:03:38 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எதிர்ப்புகளை சுருக்கமாக காண்போம்

குறைவான இடம் இருப்பதால், நாம் சுருக்கமாகவே நம் கர்த்தரின் சில உவமைகளையும், கருகலான வார்த்தைகளையும் பார்க்கலாம், இதைக் கொண்டே நித்திய வேதனை போன்ற ஒரு தத்துவத்தை உருவாக்கி அதை அநேகர் நம்பும் படி செய்த கோட்பாடுகளையும் பார்க்கலாம். பொதுவாக தகர்க்கமுடியாதவைகள் என்று நம்பப்படும் முக்கியமன இரண்டை நாம் பார்ப்போம் - முதலாவது செம்மறியாடுகள், வெள்ளாடுகள் கொண்ட உவமை (மத். 25:31-46), மற்றும் ஐசுவரியவான், லாசரு பற்றிய உவமை (லூக். 16:19-31). ஒழுங்கான விளக்கத்தை பார்த்தால், அவர்கள் சொல்லுவது போல் ஒன்றுமே இதிலிருந்து நமக்கு கிடைக்காது.

செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளின் உவமை இயேசுவின் 1000 ஆண்டு ஆட்சியில் (மிலெனியம்) நடக்கும் சோதனைகளுக்கு பிறகு உள்ளதைக் குறித்து சொல்ல பட்டிருக்கிறது - "அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் மகிமையுள்ள சிங்காசனத்தில்ன் மேல் வீற்றிருப்பார்". இந்த காலத்தின் அறுவடை அப்போது இருக்கும் மக்களின் தன்மையைப் பொருத்து இருக்கும், இதற்காகவே 1000 வருடங்கள். 41, 46 வசனங்களே நமக்கு தேவையான வசனங்கள், இதிலே நீதியற்றவர்களை (வெள்ளாடுகள்) குறித்து பேசப்பட்டிருக்கிறது.

வச, 41, "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்படிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்". இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எப்படி "வெள்ளாடுகள்" என்று அடையாளமாக சொல்ல பட்டிருக்கிறதோ, அப்படியே தான் "நித்திய அக்கினி". எப்படி தன்னிச்சைகளின் படி நடக்கிறவர்களையும், அநீதியுள்ளவர்களையும், வெள்ளாடுகள் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அப்படியே அழிவையே நித்திய அக்கினி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அக்கினி எப்பவுமே அழிக்கும் தன்மை உள்ளதே தவிர பாதுகாக்கும் தன்மையுள்ளது அல்ல. தீ அணைக்கபடாமல் இருந்தால் அதில் விழும் வெள்ளாடு முற்றிலுமாக அழிந்து விடும். ஆக அநீதிமான்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்று இந்த உவமை சொல்லுகிறது. அநீதிமான்களுக்கு உவமையாக வெள்ளாடுகள் போல் நித்திய அழிவிற்கு பதில் அக்கினி என்று உள்ளது.

வச. 46, "இவர்கள் நித்திய ஆக்கினையை அடைய போவார்கள்" என்கிறது. அநீதிமான்கள் தண்டிக்கப்படுவார்களோ அல்லது அவர்களின் தண்டனை நித்தியமானதாக இருக்கும் என்பதை குறித்து அல்ல கேள்வி; அது எப்பேற்பட்ட தண்டனை என்பதைத்தான் நாம் ஆராய்ந்துபார்க்கிறோம். வேதத்தில் எந்த இடத்தில் வாசித்தாலும் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்றே உள்ளது; இந்த உவமையும் இதையே கற்றுத்தருகிறது. தவறான அபிப்பிராயம் கொண்டவர்களின் வாதமே இந்த உவமைக்கு தப்பர்த்தம் கொடுக்கிறது. இதில் வரும் தண்டனை என்கிற கிரேக்க பதம் இதற்கான அர்த்தத்தையும் கொடுக்கிறது. மூல பாஷையில் கோலாஸின் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மாறாக ஆக்கினை என்ப்பதற்கு கிரேக்கத்தில் பாஸினோஸ் என்கிற வார்த்தை பயன் படுகிறது. கோலாஸின் என்கிற வார்த்தை கொலாஸோ என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்த வார்த்தை. அதற்கு அர்த்தம். 1. மரத்திலிருந்து கிளைகளை வெட்டி விடுவது போல் வெட்டி விடுவது. 2. தடுப்பது அல்லது அடக்குவது. இதில் முதலாவது அர்த்தம் மிகப்பொருத்தமாக இருக்கும் எப்படியென்றால், ஜீவன் கிடைப்பது பரிசாக இருப்பது போல், ஜீவனிலிருந்து வெட்டி விடப்படுவது தான் தண்டனையாகும்.

ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமை - லூக். 16:19 - 31

இந்த பகுதி உவமையாக சொல்லப்படிருந்தாலும் பெரும்பாலோர் இதை அப்படியே எழுத்தின்படியே எடுத்துக் கொள்ளுகிறார்கள். இதை அப்படியே எழுத்தின்படி எடுத்துக் கொண்டோமானால் பல அபத்தங்களை நாம் பார்க்கலாம்; உதாரணமாக, ஐசுவரியவான் நரகத்திற்கு போன காரணம் அவன் மிகவும் ஐசுவரியம் கொண்டவனாக இருந்தான் மேலும், அவன் லாசருவிற்கு மேசையிலிருந்து விழுந்ததை மாத்திரம் கொடுத்தான். அவனது பாவமோ துஷ்டத்தனமோ சொல்லப்படவில்லை. மேலும் லாசரு ஆசீர்வதிக்கப்பட்டது, அவன் நல்லவனாக இருந்தான் என்றோ, அல்லது தேவன் மேல் விசுவாசம் கொண்டவனாக இருந்தான் என்று அல்லாமல், அவன் ஏழையாகவும், வியாதியஸ்தனாகவும் இருந்ததினால் தான். ஆக எழுத்தின்படி இதை புரிந்துக் கொண்டோமென்றால், நாம் பரலோகம் செல்ல பிச்சைகாரர்களாகவும், உடம்பில் சீழ் வடிந்துகொண்டு இருப்பவராகவும் இருக்க வேண்டும்; மாறாக இப்பொழுது வசதியாகவும் நல்ல உடைகளை உடுத்துபவர்களாகவும் இருந்தால் நாம் நித்திய ஆக்கினைக்குள் தான் போவோம் என்பதாகும். மேலும் பரலோகம் என்பதை இங்கு ஆபிரகாமின் மடி என்று உள்ளது, எனவே மடி உண்மையென்றால், உலகில் உள்ள எல்லா எழைகளும் வியாதியஸ்தரகள் தங்கும் படி அவ்வுளவு பெரிதான மடி தேவையாக இருக்கும். நாம் ஏன் அபத்தங்களை பார்க்க வேண்டும்? இதை உவமையாக எடுப்போமென்றால் சுலபமாக அர்த்தம் புரிந்து கொள்ளலாம். உவமையில் சொல்லப்பட்ட வார்த்தை அதே அர்த்தம் கொண்டதாக இருக்காது, எடுத்துக்காடாக, நம் கர்த்தர் சொன்னபடியே, கோதுமை மற்றும் களைகள் பற்றிய உவமையில், கோதுமை இராஜ்ஜியத்தின் பிள்ளைகளும், களை என்பது பிசாசின் பிள்ளைகள் என்று அவரே அர்த்தம் தருகிறார். இவர்களையே வேறு ஒரு உவமையில் செம்மறியாடுகளாகவும், வெள்ளாடுகளாகவும் சொல்லுகிறார். அப்படியே இந்த உவமையிலும் ஐசுவரியவான் ஒரு ஜாதி மக்களையும், லாசரு இன்னோரு ஜாதி மக்களுக்கு அடையாளமாக சொல்லுகிறார், அதன் மூலமாக அந்த அந்த ஜாதி மக்களுக்கு சொல்லப்படுவதே இந்த உவமையாகும்.

ஐசுவரியவான் யூத மக்களைக் குறிக்கும் படியாக இருந்தான், இந்த உவமை சொல்லப்படும் காலத்தில் அவர்கள் தேவனின் எல்லா கிருபைகளும் பெற்று "சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்". பவுல் சொல்லுகிற படி யூதர்கள் விசேஷித்த மக்களாக இருந்தார்கள் எனென்றால், அவர்களிடமே நியாயப்பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்படிருந்தது. இராத்தம்பரம் என்பது யூதர்களுக்கு ஆபிரகாம், தாவீிது போன்றவர்களால் வந்த செல்வமாகும். அப்படியே அவர்கள் செலுத்திய பலிகள் பிரத்தியேகமாக அவர்களை ஒரு பரிசுத்த ஜாதியாக வைத்திருந்தது, அதையே ஐசுவரியவானின் விலையேறப்பெற்ற வஸ்திரம் என்று உள்ளது (வெளி. 19:8 - மெல்லிய வஸ்திரம்).

லாசரு, யூத யுகம் முடியும் மட்டும் தேவனுக்கு பயந்திருந்த மற்ற ஜாதியாரை குறிப்பதாக இருக்கிறது. எப்படி வஸ்திரம் இஸ்ரவேலின் நீதியை குறிக்கிறதோ அப்படியே பருக்கள், மற்றவர்களின் அநீதியைக்குறிக்கும் ஏனென்றால் இஸ்ரவேலரைப் போல அவர்களிடம் பலிகள் இல்லை. அவர்கள் மாதிரிகளாக சுத்திகரிக்கப்படவும் இல்லை, ஆகையால் ராஜ்ஜியத்தின் வாக்குத்ததங்களில் அவர்களுக்கு பங்கு இல்லாமல் இருந்தது. அவர்கள் இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குதத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியருமாக இருந்தார்கள் (எபே. 2:11-13). அவர்கள் எப்படியாக இஸ்ரவேலின் நிரம்பிய மேஜையிலிருந்து, துணிக்கைகள் கிடைக்கும் படியாக, நாய்களின் கூட்டத்திற்கு ஒப்பானவர்களாக இருந்தார்கள் என்று கானானிய ஸ்திரியிடம் நம் கர்த்தர் பேசியிதிலிருந்து கண்டறியலாம். (மத். 15:22-28).

ஆனால் இந்த இரண்டு வகுப்பாருக்கும் ஒரு மாற்றம் வந்தது. அந்த ஐசுவரியவான் (யூத ஜாதி) மரித்தான், அதாவது, ஒரு தேசம் என்று இல்லாமல் போனார்கள், தேவனின் கிருபைகள் கொண்ட தேசம் என்பது மாறி, அவர்களிடமிருந்து தேவனின் இராஜ்ஜியம் நீக்கப்பட்டு, மற்றவர்களிடம் (புறம்பேயிருப்பவர்களிடம்) கொடுக்கப்பட்டது (மத். 21:43).

அந்த ஐசுவரியவான் ஜாதி எல்லா கிருபைகளும் இழந்து கஷ்டத்திலும் துன்பத்திலும் நின்றது. அப்பொழுது முதல் இதுவரை யூத மக்கள் அவர்களின் சட்டங்களின் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் "ஆக்கினை"க் குள்ளாக இருக்கிறார்கள்,. "லாசரு" வகுப்பார்களும் மரித்து, அதாவது முன்பு விலக்கப்பட்ட நிலையிலிருந்து மாறி, தேவனின் கிருபைகளுக்கு பாத்திரவான்களானார்கள் (அப். 10:28-35). கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட இந்த வகுப்பார், அதன்படி, ஆபிரகாமின் மடியில் - அதாவது வாக்குதத்தத்தின் படி ஆபிரகாமின் உண்மை சந்ததியானர்கள். வாசிக்கவும் கலா. 3:16, 29; ரோம் 11:7-9, 12-25. 

நேர்மையும், சத்தியமும் ஜெயம்க்கொள்ளட்டும்

இப்படியாக வேதம் நித்திய துன்புறும் வேதனைக்கு சற்றும் ஒத்துபோகவில்லை என்று பார்த்தோம். இப்படியான ஒரு கோட்பாடு வர பல சபைகளின் பிரமாணங்களும், அறிக்கைகளும், பாடல் புஸ்தகங்களும், மத ஆராய்ச்சி நூல்கள் மாத்திரமே காரணம்; இப்பொழுதோ பெருகிக்கொண்டிருக்கும் சத்தியத்தின் வெளிச்சதினால்; அதன் விளைவாக இருண்ட காலங்களில் ஏற்பட்ட இப்படியான பயங்கரமான கோட்ப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைத்து வருகிறதை பார்க்கலாம். ஆனால், சில கிறிஸ்தவர்கள், இதை ஒப்புக் கொள்ளாமல் இன்னும் இருளிலே இருக்கும் அந்த விக்கிரகங்கள் போன்ற கோட்பாடுகளுக்கு ஆராதனை செய்து அவைகளையே வணங்கிக்கொண்டு அதையே பிரசங்கித்தும் வருகிறார்கள். இதற்காக வாதாடும் படி அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ய நேரமும், பணமும் விரயமாக்கிகொண்டிருக்கிறார்கள், ஆனால் மனதளவில் அவர்களின் இருதயங்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை, தனிமையில் அவர்கள் இந்த கோட்பாடுகளை மறுக்கவும் செய்கிறார்கள்.

இதன் விளைவு, உலகம், இப்படியான உண்மை இருதயம் உள்ள கிறிஸ்தவர்களையும் வேதத்தையும் ஒதுக்குகிறது; மாறாக வேஷதாரிகளும், பாதி-நாத்தீகர்களும் பொதுவான கிறிஸ்தவர்கள் என்று உயர்த்தபடுகிறார்கள். பொதுவான கிறிஸ்தவர்கள் இந்த கோட்பாடுகளை பிடித்துக் கொண்டு, வேதத்தின் படிப்பினைகளை தவறு என்று சொல்லுமளவிற்கு துணிந்துமிருக்கிறார்கள். இதன் விளைவு அதிகபடியாக முதலில் நம்பிக்கைத்துரோகமும், பிறகு அராஜகமும் குழப்பமுமாகும். இதற்கு முழு பொறுப்பும் பிரசங்க மேடைகளிலிருந்து பிரசங்கிக்கும் வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களே ஆவார்கள். இப்படிப்பட்டவர்கள் சத்தியத்தை விட்டுகொடுப்பவர்களாகவும், தேவனின் குணாதிசயங்களை குறைப்பவர்களாகவும், மடத்தனமானதை செய்து தங்களையே ஏமாற்றிக் கொள்பவர்களாகவும், பூமிக்குரிய வசதிகளையோ, சுகத்தையோ, நிம்மதியையோ தேடிக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். 

வெளிப்படையான கிறிஸ்தவர்கள் உண்மையாகவே தங்களை தேவன் பக்கம் திருப்பினால், விரைவிலே அவர்கள் அறிந்துகொள்ளும் விஷயம் என்ன வென்றால், "அவர்கள் தேவனுக்கு பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" என்று (ஏசா. 29:13). இப்படி சிந்தித்தால், "தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும்" விளங்கும் (ரோம். 3:4), இப்படி ஏற்றுக்கொண்டால், விரைவிலே குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சபை பிரமாணங்களும் தகர்த்து எறியப்படும். அப்பொழுது இதற்குமுன்பு இல்லாததுபோல் வேதம் தியானிக்கப்பட்டு, "பாவத்தின் சம்பளம் மரணம் (நித்திய அழிவு)" என்று சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மன்னிப்பு பெறும் மற்றும் பெறாத பாவங்கள்.

விரும்பி செய்யும் பாவத்தின் தண்டனையை குறித்து நாம் இனி பார்க்கலாம். ஆதாமும் அவன் பின் சந்ததியாருக்கும் கிடைத்த தண்டனை இவ்வகையைச் சேர்ந்தது; பிறகு இயேசு கிறிஸ்து அந்த தண்டனைக்கு செலுத்திய மீட்ப்பின் பொருளினாலேயே அந்த பாவத்திற்கும் பிறகு செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க பெற்றது.

மன்னிப்பு பெறும் பாவம் என்றால், ஆதாம் செய்த பாவத்தின் நிமித்தம் பெலவீனத்தால் நாம் செய்யும் பாவம் ஆகும், இதற்காகவே கிறிஸ்து மீட்பின் பொருள் செலுத்திவிட்டார். அவை விரும்பிச் செய்வது அல்ல, மாறாக அறியாமையில் செய்வது, அல்லது மாம்சத்தின் பலவீனத்தில் செய்கிறது ஆகும். கிறிஸ்துவின் பலியின் நிமித்தம் நாம் மன்னிப்பு கேட்கும் போது அவை நமக்கு மன்னிக்கப்படும் என்று தேவன் வாக்கு செய்திருக்கிறார்.

மன்னிப்பு பெறாத பாவங்கள் என்றால், விரும்பியே செய்வதாகும். எப்படி விரும்பியே செய்த முதல் பாவத்திற்கு மரணம் தண்டனையாக இருந்ததோ, அப்படியெ தேவனை பற்றி எல்லா அறிவையும் பெற்று விரும்பி செய்யும் பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. இதை இரண்டாம் மரணம் என்று வேதம் கூறுகிறது. முதல் தடவை செய்த பாவத்திற்கு கிறிஸ்து பலியானார், ஆனால் அப்பொழுது இந்த பாவத்திலிருந்து தப்பிக்கும் படி ஒன்றுமே இருக்காதே.

(விரும்பிச் செய்யும் பாவம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் இருக்காது என்று நாம் நம்புகிறோம். அப்படியே இருந்தாலும் தண்டனை இவ்வுலகத்தில் செய்யும் பாவங்களை சார்ந்ததல்ல. ஒருவரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல)



-- Edited by soulsolution on Friday 20th of August 2010 11:06:17 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோ.தீமோதீ அவர்களுக்கு இந்த பதிவு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன். தொடரட்டும் உங்களது வேத ஆராய்ச்சி....

வாழ்த்துகள்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பாவத்தின் சம்பளம் மரணம்(மட்டுமே) என்ற மிக சாதாரணமான குழப்பமே இல்லாத கூற்றை புரியவைக்க எத்தனை பிரயாசப்பட வேண்டியுள்ளது. இந்தப்பதிவுக்கும் மாற்றுதள திருவாளர்களிடமிருந்து ஒரு ரியாக்ஷனையும் காணோம். 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மரணம், மரணத்திற்கு பின், ம‌ரித்தவுடன், அதற்கு பின்பு நியாயத்தீர்ப்பீர்ப்பின் போது மீண்டும் நரகத்திலிருந்து, பரலோகத்திலிருந்து, பரதீசிலிரிந்து, பாதாளத்திலிருந்து என்று அனைவரும் வருவார்கள் என்று விதவிதமாகவும் கலர் கலராகவும் கற்பனைகள், தரிசனங்கள், காட்சிகள் என்று பல கோட்பாடுகளை வைத்திருப்பவர்களுக்கு இந்த சத்தியத்தை ரசிக்கவும் தெரியாது, புரியவும் புரியாது, அதை தெரிந்துக்கொள்ளும் அக்கறையும் கிடையாது என்பது மாத்திரம் நிச்சயம். அதினாலே என்ன, யாருக்கு தேவையோ, அவர்களுக்கு இது நிச்சயமாக போகும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard