தங்களை ஊழியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பலர், "இயேசு என்னிடம் இதைச் சொன்னார், அதைச் சொன்னார்" என்று புருடா விடுவது நாம் அறிந்ததே. நமது கேள்வியெல்லாம் இப்படி இவர்களுடன் 'நேரடியாக' பேசும் இவர்கள் இயேசு ஏன் வேத சம்பந்தமான கேள்விகளுக்கு இவர்களுக்கு விடை அளிப்பதில்லை? வேலை நேரத்தில் ஊழியம் செய்யக்கூடாதென்றெல்லாம் 'சொல்லுகிறாராம்' ஆனால் சாமுவேல் என்னவானார் என்று சொல்லிக்கொடுப்பதில்லை. வினோதமாக உள்ளது!
//மரணத்தை பற்றிய முழுதெளிவு இன்றுவரை யாருக்குமே கிடையாது. ஒருவர் மரித்து பிழைத்து வந்து சொன்னால்தான் உண்டு. அதையும் யாரும் நம்ப போவது இல்லை. ஏனெனில் அனைத்தும் அறிந்த ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக மரித்த ஐஸ்வர்யாவான் பாதாளத்தில் வேதனை அனுபவித்தான் என்று சொல்லி யிருந்தும், அதையே நீங்கள் முற்றிலும் நிராகரித்து அது உண்மையல்ல என்று வாதிடும்போது இயேசுவை விட உங்களுக்கு மரணத்தை பற்றி அதிகம் தெரியுமா?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
பாதாளம் என்ற வார்த்தைபற்றிய உண்மைகளை முழுமையாக அறிந்தால்தான் மட்டுமே மரணம் பற்றிய மறைபொருளை அறியமுடியும்! //
மரணத்தைப் பற்றிய தெளிவு யாருக்குமே இல்லையாம்.இவருக்கு இல்லையெனறால் யாருக்குமே இல்லை என்று அர்த்தமல்ல. மரித்து எழுந்த இயேசுதான் இவரிடம் அடிக்கடி வந்து பேசுகிறாரே அவர்கூட சொல்லிக்கொடுப்பதில்லையா?
ஐசுவரியவான் - லாசரு என்பது ஒரு உவமை என்றுகூட தெரியாமல் வியாக்கியானம் செய்கிறார்கள்
இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்களோ?
-- Edited by soulsolution on Saturday 22nd of May 2010 08:56:42 AM