மரித்த நம் நண்பர்கள், நம் பெற்றோர்கள், நம் அயலகத்தார், பரிசுத்தவான்கள், பரிசுத்தமில்லாதவர்கள், கற்றோர், கல்லாதோர் எங்கே?
இதற்கு ஒரு சரியான பதில் கிடைத்தால் நாம் நம் எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். சரியான ஒரு பதில் நமக்கு பலத்தையும், உறுதியையும், தைரியத்தையும் கொடுத்து நம்மை ஆவியில் பலப்படுத்தும்!
"சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள், அவன் மரணமடைந்து அடக்கம்ப்ண்ணப்பட்டான், அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே.. .." (அப். 2:29, 34)
இந்த விஷயத்தை குறித்து பேச ஒரு மனிதனுக்கு விருப்பம் இல்லையென்றால் அவன் தன்னை தானே ஒரு முட்டாள் - புரிந்து கொள்ளுதல் இல்லாதவன் என்கிறதை அறிக்கை செய்கிறவனாக இருக்கிறான். இப்போது இந்த உலகத்தில் உள்ள காரியங்களான இந்த உலகத்தின் வாழ்வு, உணவு, இருப்பிடம், செல்வாக்கு, அரசியல் ஆகியவை பற்றி அறிந்து கொள்வது எவ்வுளவு முக்கியமாக இருக்கிறது இதைக் காட்டிலும் நாம் மற்றும் நம் பெற்றோர்கள், நண்பர்களின் எதிர்காலத்தை பற்றிப் படிப்பது இன்னும் அதிக பிரயோஜனமானதாக இருக்கும்.
நிச்சயமாகவே, மனிதனின் பிறப்பு இறப்பு சுமார் ஆறாயிரம் ஆண்டுகள் முன்பு தொடங்கியவுடன் இந்த எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியும் தொடங்கியிருக்கும். இநேரம் வரைக்கும் இந்த கேள்வி ஒரு கந்தையை போல் ஆகிவிட்டது. இந்த முழு உலகமும் இந்த கேள்விக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்து வேறு எந்த ஒரு புது பதிலையோ விளக்கத்தையோ எதிர்பார்க்க கூடாதபடி இருக்க வேண்டும். இந்தக் கேள்வியின் விரிவான பதில் கிடைத்தும் வெகு சிலரே இதை ஏற்றுக் கொள்ளும் தன்மையில் இருக்கிறார்கள்.
ஒரு நாத்திகனிடத்தில் இருந்து இதற்கு என்ன பதில்
நாம் வேதத்தின் படி இதற்கு பதில் சொல்லும் முன்பு, இந்த உலகத்தில் ஞானவான்கள், மற்றும் தற்போது இந்த கேள்விக்கான பதில் என்று சொல்லபடுவதையும் நியாயமாக ஆராய்ந்து பார்ப்போம். அவர்களின் பதிலில் எந்த ஒரு உடன்பாடு நம்க்கு இல்லாமல் போனாலும் அவர்களை அவமானபடுத்துவதோ மட்டம் தட்டும் நோக்கமோ நமக்கு இல்லை. ஆகையால் அவர்களின் பதிலை விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாக சொல்லுகிறோம். எல்லா மனிதர்களுக்கும் பேசவும், எடுத்துரைக்கவும் சுதந்திரம் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கிறபடியே எங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும் அவர்களின் பதிலையும் சேர்த்தே கொடுக்கிறோம்.
எல்லா சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ள நம் நாத்திக நண்பர்களிடம் இதைக் குறித்து முதலாவது கேட்போம், எல்லாவற்றிலும் சுதந்திரம் உடைய நண்பர்களே, மரித்தோர் எங்கே என்று சொல்ல முடியுமா? "அவர்களின் பதில், எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரு எதிர்காலத்தை விசுவாசிக்கிறோம், ஆனால் அதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. ஆதாரம் இல்லதபடி ஒரு மிருகம் மரிப்பது போன்றே ஒரு மனிதனும் மரிக்கிறான் என்று முடிக்கிறோம்."
நம் நாத்திக நண்பர்களின் இந்த பணிவான பதிலுக்கு நன்றி சொல்லுகிறோம், ஆனால் அவர்களின் பதில் ஞானார்த்தமாகவோ, இதயத்திற்கு ஏற்றதாகவோ இல்லை. எங்கள் இதயங்களோ ஒரு எதிர் காலத்தைக் குறித்து எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் மிருகத்தை பார்க்கிலும் அதிக வல்லமையோடு தேவன் மனிதனை படைத்திருக்கிறார். மேலும் இந்த உலகத்தில் நோய்களினால், பாடுகளினால், சோதனைகளினால் சிந்தப்படும் கண்ணீர் நமக்கு வரப்போகும் எதிர்காலத்திற்கு ஒரு பாடமாக இருக்கிறது. இன்னும் வேறு ஒரு நல்ல பதிலைத் தேடிப் பார்ப்போமே!
புறஜாதி மக்களிடத்தில் இருந்து இதற்கு என்ன பதில்
நான்கில் மூன்று பகுதி புறஜாதி மக்களால் நிறைந்திருப்பதால் அவர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டவர்களாய் அவர்களின் பதிலையும் நாம் பார்ப்பது அவசியமாக இருக்கிறது. அவர்களிடம், மரித்தவர்கள் எங்கே? என்று கேட்டால், அதற்கு அவர்கள் இரண்டு விதமான பதில்களைத் தருகிறார்கள்:
(1) மறுஜென்மம் என்பது இதில் பிரதானமானது. அவர்கள் சொல்லும் பதில், நாங்கள் சிந்திப்பது எப்படிவென்றால், ஒரு மனிதன் செத்தாலும், அவன் உண்மையில் சாவதில்லை, மாறாக தன் ரூபத்தை மாற்றம் அடைய வைக்கிறான். அவனது எதிர்காலம் இந்த வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்து இதைக் காட்டிலும் மேலானதாகவோ கீழானதாகவோ ஒரு வாழ்க்கை கிடைக்கப் பெறுவான். எங்கள் நம்பிக்கையின்படி, நாங்கள் இதற்கு முந்தய ஜென்மங்களில் இருந்த போது, ஒரு பூனையாகவோ, நாயாகவோ, யானையாகவோ, எலிகளாகவோ இருந்திருப்போம், அப்படியே இந்த வாழ்வு பிரயோஜனமாக வாழ்ந்தோமென்றால் அடுத்த ஜென்மத்தில் இதை காட்டிலும் உய்ர்வாக அதிக திறமைகளுடனோ, அல்லது ஒரு இலக்கியவாதியாகவோ பிறக்கலாம். என்றும், மாறாக இந்த வாழ்வில் மிகவும் மோசமாக வாழ்ந்தோமென்றால், அடுத்த ஜென்மத்தில் இதை காட்டிலும் ஒரு கீழான மிருகமாகவோ அல்லது புழுவாகவோ பிறக்ககூடும். ஆகவே தான் நாங்கள் பிற மிருகங்கள், மற்றும் புழுக்களை பற்றி இவ்வுளவு கவனமாக இருந்து நாங்கள் மாம்சம் கூட புசிக்காமல் இருக்கிறோம். நாங்கள் இவைகளை கொடுமை படுத்தினால் அடுத்து மரித்த பின்பு நாங்களும் இப்படியே பிறந்து துன்பப்படுத்தப்படுவோம். என்று பயத்துடன் கூறுவார்கள்.
(2) இன்னும் ஒரு புறஜாதி மக்கள் மரணத்திற்கு பின்பு ஒரு ஆவிக்குரிய ஜீவியத்தை விசுவசித்து, சந்தோஷமான இடமும், என்றும் தீமை செய்தோர் எரிந்துக்கொண்டு இருக்கும் இடமான நரகத்தையும் விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக சொல்லப் படுவது என்ன வென்றால், நாம் மரித்தவுடன், நம் ஆத்மா ஒன்று சந்தோஷமாக இருக்கும் இடத்திற்கோ, அல்லது என்றும் எரிந்துகொண்டு இருக்கும் நரகத்திற்கோ சென்று விடுகிறது என்றே, அங்கேயும் ஒவ்வொரு விதமாக தண்டிக்கபடுகிறோம் என்றும் சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் கேட்கிறோம், "உங்களுக்கு இப்படியான ஒரு பதில் எப்படி தெரிந்தது என்று?"அவர்கள் பதில், "இந்த கருத்துக்கள் எங்களுடன் ரொம்ப அதிக காலங்களாக இருக்கிறது. இவை எங்கிருந்து வருகிறது என்று அறியோம். ஆனால் எங்கள் அறிவாளிகள் இந்த சத்தியங்களை தெரியபடுத்தினபடியே நாங்களும் அப்படியே அதை ஏற்றுக்கொண்டோம்."
புறஜாதிகளின் பதில் நம் மூளைக்கும், இருதயத்திற்கும் ஏற்றதாக இல்லாதபடியால், நாம் இன்னும் சிலரிடம் ஆராய்வோம். வெறும் கேள்வி ஞானத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்போம். நாம் இன்னும் தெய்வீக வெளிப்பாடுகளை பார்ப்போம்; தேவனிடத்திலிருந்து வரும் செய்திகளை பார்ப்போம் - அவரே நம்மைப் படைத்தவர்.
கத்தோலிக்கர்களிடத்தில் இருந்து இதற்கு என்ன பதில்
புறஜாதியாரிடத்திலிருந்து நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும் கூட்டங்களிடத்தில் கேட்போம். "கிறிஸ்தவர்களே, மரித்தவர்கள் எங்கே?" என்று அவர்களிடம் கேட்டோம். அவர்களின் பதில், நாங்கள் எங்கள் கருத்துகளில் முரண்பாடு உள்ளவர்களாக இருக்கிறோம். மூன்றில் இரண்டு பகுதி நாங்கள் கத்தோலிக்கர் கருத்துள்ளவர்களாகவும், மீதம் ஒரு பகுதி ப்ரொடஸ்டன்ட் பிரிவுகளின் கருத்துள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்". நாம் முதல் கூட்டமாக எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் கத்தோலிக்கரிடத்தில் (ரோமன் மற்றும் கிரேக்க) அவர்களின் கருத்தை கேட்ப்போம்.
"கத்தோலிக்க நண்பர்களே, உங்களின் ஆழமான படிப்பும், உங்கள் உன்னதமான் அறிவாளிகளும் உங்களில் வேதாகமம் கற்றவர்களும் இந்த கேள்வியைக் குறித்து என்ன வெளிபாடு தருகிறீர்கள்? மரித்தவர்கள் எங்கே என்கிற இந்த கேள்வியை நாங்கள் உங்களிடத்தில் எந்த தவறான உணர்வு கொள்ளாமல் கேட்கிறோம்." என்று கேட்டோம். நம் கத்தோலிக்க நண்பர்கள், எங்கள் சபையின் படிப்பினையின் படி உங்களின் இந்த கேள்விக்கான பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. நாங்கள் தெய்வீக வெளிப்பாட்டின் படியே இதற்கான பதில் வைத்திருக்கிறோம். எங்கள் முடிவும் படிப்பிணையின் படி, ஒருவன் மரித்தால், நாங்கள் சொல்லும் இந்த மூன்றில் ஒரு இடத்திற்கு போவான். முதலாவது, நாங்கள் புனிதர்கள் என்று சொல்லுபவர்கள், உடனடியாக பரலோகத்தில் தேவனிடத்தில் சென்றுவிடுவார்கள். இவர்களை குறித்தே தன் சிலுவையைச் சுமந்துக்கொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குக் சீஷனாயிருக்கமாட்டான் (லூக். 14:27) சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களே தெரிந்துக்கொள்ளப்பட்ட சிறுமந்தை (லூக். 12:32). இவர்களை குறித்தே இவர்கள் ஜீவனுக்கு போகும் குறுகலான வழியில் நடந்தவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். (மத். 7:14). இந்த கூட்டத்தில் எங்கள் குருக்களோ, கண்காணிகளோ, கர்தினால்களோ போப்பாண்டவரோ இருப்பதில்லை; ஏனென்றால் இவர்கள் மரித்தவுடன் இவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி ஏறெடுக்கபடுகிறது. பரலோகத்தில் இருக்கும் ஒருவருக்கும் திருப்பலி தேவையில்லையே! ஏனென்றால் அங்கே எல்லா ஆன்மாக்க்ளுக்கும் இளைப்பாறுதலிருக்குமே! அவர்கள் நித்திய நரகத்திலிருந்தாலும் நாங்கள் திருப்பலி செலுத்துவதில்லையே. அதுவும் வீண் தானே! ஆனால் நரகத்திற்கு எல்லாரும் போவதில்லை, கத்தோலிக்க கோட்பாடுகளை நன்றாக கற்று அதை விரும்பியே எதிர்ப்பவர்களூம், மீறி நடப்பவர்களும் மாத்திரமே நித்திய நரகத்திற்கு தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அது தான் அவர்களின் கதி. என்றார்கள்.
அநேக கோடி மக்கள் உத்தரிப்பு ஸ்தலத்திலே
"எங்கள் படிப்பினையின் படி, பொதுவாக மரித்தவர்கள், - பாவங்களை சுத்திகரிக்கும் ஸ்தலம், வேதனை நிறைந்த இடம், தவமிருக்கும் இடம், கவலைப் படுமிடம் ஆனால் பரலோகம் செல்லும் நம்பிக்கை உள்ள இடம் என்கிறபடியான உத்தரிப்பு ஸ்தலம் என்கிற இடத்திற்கு செல்லுவார்கள். இந்த ஸ்தலத்தில் தங்கும் காலம் பல நூறாண்டுகளாகவோ, ஆயிரமாண்டுகளாகவோ, அவன் அவன் செய்த பாவ்ங்களைப் பொறுத்ததாகும். இதைக் குறித்து தெரிந்துக் கொள்ளவேண்டுமென்றால் எங்கள் உண்மையான கத்தோலிக்க கவியான தாந்தே எழுதியதை வாசித்துப் பாருங்கள். இவர் ஒரு குருமடத்திலேதான் இறந்தார். இவர் எழுதிய இன்ஃபர்னோ என்கிற ஒரு கவிதை உத்தரிப்பு நிலையில் உள்ள வேதனைகளை சித்தரிக்கும். அதிலிருந்து நாம் உத்தரிப்பு ஸ்தலத்தை பற்றி புரிந்துக் கொள்ளலாம். டோரே என்கிற ஒரு சித்திர ஓவியன், இந்த கவிதையை அழகாகவும் தத்ரூபமாகவும் வரைந்திருக்கிறான். இவரும் ஒரு கத்தோலிக்கர். இந்த சித்திரங்களில் உத்தரிப்பு ஸ்தலத்தை குறித்து உண்மையாக இருக்கும் போல் வரையப்பட்டிருக்கிறது - தப்பிக்கப் பார்க்கும் சிலரை பிசாசுகள் துரத்தி, அவர்களை கொதிக்கும் தண்ணீருக்குள் தள்ளி விடுகிறது, சிலர் மேல் அந்த பிசாசுகள் எரியும் தீயை தூக்கப்ி போடுவது, சிலரை தலைகீழாக்கி தீயில் இடுவது, சிலரை நேராக வைத்து தீயிலிடுவது. சிலரை சர்ப்பங்கள் கடிப்பது, சிலரை உறைய வைப்பது. நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கொடுப்பது என்னவென்றல் நீங்கள் தாந்தே எழுதிய "இன்ஃபர்னோ" என்கிற புஸ்த்தகத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள், நீங்கள் கேட்கும் கேள்வி மரித்தவர்கள் எங்கே", என்பதற்கு பதில், அநேகர் "உத்தரிக்கும் ஸ்தலத்திலே" இருக்கிறார்கள் என்று உங்களுக்கு அதிலிருந்து (கவிதையிலிருந்து) கிடைக்கும். கோடிக்கணக்கான புறஜாதி மக்களும் அங்கு தான் இருக்கிறார்கள், ஏனென்றால் அறியாமை இரட்சிக்காது, அவர்கள் பரலோகம் செல்லத் தகுதியில்லாதவர்கள். கோடிக்கணக்கான ப்ரொடெஸ்டன்ட்கள் அங்கு தான் இருக்கிறார்கள். அவர்கள் கத்தோலிக்க சபையை தவிர்த்து பரலோகத்தில் நுழைய முடியாது, அவர்கள் நித்திய நரகத்திலும் செல்ல மாட்டார்கள், எனென்றால் கத்தோலிக் சபையிலிருந்து அவர்கள் பிரிந்து சென்றது அவர்களில் வளர்ந்த சில விசுவாசத்தினால்தான். அநேக கத்தோலிக்கர்களும் இந்த இடத்தில்தான் பரலோகம் செல்லும் மட்டும் இருப்பார்கள். ஏனென்றால், சபையின் நல்ல படிப்பிணைகள், புனித நீர், பாவசங்கீர்த்தனம், திருப்பலி, மந்திரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், நல்லடக்கம் இவை யாவும் அவர்களை புனிதர்களாக்க முடியவில்லை. ஆகையால் உத்தரிப்பு ஸ்தலத்திலே தங்களை சுத்திகரித்து பரலோகம் அடையும் படி தங்களை தயாரித்துக் கொள்வார்கள். மேற் சொன்ன காரணங்களினால், கத்தோலிக்கர்கள் மட்டும் உத்தரிப்பு ஸ்தலத்திலிருந்து ப்ரொடஸ்டன்ட்கள், மற்றும் புறஜாதி மக்களை காட்டிலும் சீக்கிரம் பரலோகம் சென்று விடுவார்கள்.
கத்தோலிக்க நண்பர்களுக்கு நாம் நன்றி சொல்லுவோம். நாம் அவர்களிடம் உத்தரிப்பு ஸ்தலம் எங்கே இருக்கிறது என்றும், இதின் படிப்பினை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டு அவர்களை புண்படுத்தவேண்டாம், அவர்களை புண்படுத்துவதும் நம் நோக்கம் இல்லை. அவர்களின் எல்லா படிப்புகளையும், படிப்பினைகளையும், அனுபவங்களையும் ஞானத்தைவைத்து அவர்கள் தந்த பதிலுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லுவோம். ஆனால் வேதனை தரும் விஷயம் என்ன் வென்றால் இவர்களின் எந்த கூற்றும் வேதத்தின் பிரகாரமாக இல்லாதது தான். நம் இருதயங்கள் ஏற்கனவே ஆதாமின் பாவத்தினால் நம் மனித ஜாதி படும் கஷ்டத்தை ஒரு பெருமூச்சு விடும் சந்ததி என்கிற பிரகாரமாக இருக்கிறது. இதில் மரித்த பின்பு மீண்டும் ஒரு நித்திய வேதனையை அனுபவிக்கும்படி சொல்லிக் கொடுக்கும் இந்த புறஜாதியாரின் படிப்பினையும், கத்தோலிக்கர்களின் உத்தரிப்பு ஸ்தலம் என்கிற வேதத்திற்கு புறம்பான கருத்துக்களும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இன்னும் சிலரிடம் நாம் கேட்ப்போம்.
ப்ரொட்டஸ்டன்ட் மக்களிடம் இதற்கான பதில்
நம்மில் பலர் இந்த மக்களின் விசாலமான இருதயம், ஞானம், அவர்களின் படிப்பு ஆகியவற்றைக் குறித்து சற்று பெருமை பாராட்டியது உண்டுதான். ஆகையால், ஒருவேளை அவர்கள் நம் கேள்விக்கு சற்று ஞானமான பதில் தருவார்கள் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் நமக்கு கிடைத்த பதில் தான் என்ன? நாங்கள் சற்றும் எதிர்பாராத பதில் தான்.
நாங்கள் கத்தோலிக்கர்களை விட்டு பிரிந்து வந்தவர்கள். அவர்களை போல் உத்தரிப்பு ஸ்தலத்தை வேத ஆதாரம் இல்லாததால் எங்கள் முற்பிதாக்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போயிற்று. மீதமானது "பரலோகம்" மற்றும் "நரகம்". தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் (தீத். 1:1) அதுவும் இயேசு சொன்ன "சிறு மந்தை" மாத்திரமே பரலோகம் செல்லும், மற்றவர்கள் எல்லோரும் "நித்திய நரகத்தில்" இருப்பார்கள்.
கத்தோலிக்கர்களும், ப்ரொட்டஸ்டன்ட்களும் இருவரும் அந்த "இருண்ட காலத்தில்" வெளி வந்த தப்பிதங்களிலே வளர்ந்தவர்கள். இந்தக் கடைசி காலத்திலே இது போல் உள்ள தப்பிதங்களில் இருந்து தேவன் நம்மை காத்து வருவதற்காக தேவனை நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம்.
இவர்களின் முற்பிதாக்களால் கொண்டுவரப் பட்ட மற்றும் இருண்ட காலங்களில் வெளிவந்த விசுவாச பிரமாணங்களினால் ஏற்பட்ட தத்துவங்களையே இவர்கள் பின்பற்றிவருகிறார்கள். சிறு மந்தையை தவிர எல்லோரும் நித்திய நரகத்தில் இருப்பார்கள் என்பது வேதத்தின் படி ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆக, நாத்திகர்கள், புறஜாதிமக்கள், கிறிஸ்தவர்கள் (கத்தோலிக்கர்கள் முதல் இன்று உள்ள 200 க்கும் அதிகமான பிரிவுகள்) அனைவருமே வேத வசனத்தின் படி இந்தக் கேள்வியை குறித்து தெளிவு படுத்த முடியவில்லை.
"பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது." ஏசா. 55:9
வேதாகமம் சொல்லுவது என்ன?
எல்லா பிரிவின் தத்துவங்களும் சொல்லுவது என்னவென்றால், மரணம் என்பது மரணம் இல்லை - மரிப்பது என்பது வேறு ஒரு ரூபத்தில் மாறுவது தான். ஏதேனில் தேவன் நம் முதல் பெற்றோர்களுக்கு சொன்னது,".. .. நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்.."(ஆதி. 2:17) என்று. ஆனால் சாத்தானோ "நீங்கள் சாகவே சாவதில்லை" (ஆதி. 3:4) என்று கர்ஜித்தான். பாருங்கள் புறஜாதிகளில் தொடங்கி கிறிஸ்தவர்கள் வரை அனைவருமே தேவன் சொன்னதைத் தள்ளிவிட்டு சாத்தான் சொன்ன இந்தக் கருத்துக்கு ஒத்துப் பேசுகிறார்கள். சாத்தான் சொன்ன மாதிரியே அவரகள் சொல்லுவதும் இருக்கிறது இல்லையா, "எல்லோரும் வேறு இடத்தில் இருக்கிறார்கள்" "வேறு ரூபத்தில் இருக்கிறார்கள்"என்று. இது தான் பிரியமானவர்களே நாம் இந்நாள் வரை பின்பற்றி வந்த மிகவும் பெரிய தவறு. நாம் தவறான ஒரு ஆசிரியனை பின் பற்றினோம், அவனைக் குறித்து நம் இரட்ச்சகராகிய இயேசு நமக்கு சொன்னது, ".. .. அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.. .." (யோவான் 8:44)
இந்த போதனை நீண்ட காலமாக புறஜாதி மக்களிடத்தில் இருந்து வந்தது, இதுவே "இருண்ட காலங்களில்" கிறிஸ்துவ சபைகளில் ஏற்றுக்கொள்ள பட்ட போதனையாக மாற்றி, அநேகரை இருளிலே வைத்துவிட்டது. தேவன் சொன்ன "நீ சாகவே சாவாய்" (ஆதி. 2:17) என்கிற வாக்கை நம் முற்சபைகள் நம்பியிருந்தது என்றால் ஏன் மரித்தவர்களுக்கு ஜெபம், அவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்கு திருப்பலிகள், அவர்கள் உத்தரிப்பு ஸ்தலத்தில் இருந்து கொண்டு வேதனைப் பட்டு கொண்டிருப்பார்கள் என்கிற பயமுறுத்தல் எல்லாம். ஏன்? வேதம் தெளிவாக உள்ளது, "மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்" என்கிறார் பிரசங்கி 9:5ல். பாடுகளின் புத்தகம் யோபு என்று சொல்லுகிறவர்களுக்கும் மரித்தவர்களை குறித்து யோபு சொல்லுவது, அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான் (யோபு, 14:21). வேதம் தான் நமக்கு தெளிவாக மரித்தவர்களின் நிலையும் அவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறதை சொல்லி தருகிறது. "நீ போகிற பாதாளத்திலே (sheol) செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே" (பிரசங்கி. 9:10). அங்கு அவர்கள் தங்களின் உயிர்த்தெழும் நாள் வரையில் நித்திரையில் இருப்பார்கள். நல்லவர்களும், தீயோரும் இந்த நிலைக்கு வந்தே ஆக வேண்டும். இதைத்தான் அப். பவுல் எழுதுகையில், இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள் (1 தெச. 4:14) என்றும், கிறிஸ்துவிற்குள் நித்திரையடைந்தவர்கள் (1 கொர்ி. 15:18) கெட்டிருப்பார்களே என்று எழுதுகிறார். உயிர்த்தெழுதல் இல்லையென்றால் அவர்கள் கெட்டிருப்பார்களா, அல்லது அவர்கள் பரலோகத்திலும், நரகத்திலும், உத்தரிப்பு ஸ்தலத்தில் தான் கெட்டிருப்பார்களா? யாருமே இதை சொல்லுவதில்லையே! அவர்கள் ஏற்கனவே அவர்களை வைத்திருக்கும் கல்லறைகளிலே கெட்டிருப்பார்கள். முழுமையாக கெட்டிருப்பார்கள், தேவனால் திட்டம் செய்த உயிர்த்தெழுதல் மட்டும். அது தான் தேவன் சொன்னது, "தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமல் நித்தியஜேவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான். 3:16).
சுருக்கமாக, வேதம் கற்றுத்தருவது என்னவென்றால், மனிதன் எல்லா மிருக ஜாதிகளுக்கும் மேலாக படைக்கப்பட்டான் - தேவனின் ரூபத்தின்படியும், அவரின் சாயலாகவும் படைக்கப்பட்டான். பூரண ஜீவன் அவனுக்குள் நிலைத்து அதினாலே அவன் கீழ்ப்படிந்து வாழும்படி படைக்கப்பட்டான். ஆனால் சோதனை வேளையில் அவன் விழுந்து போய் மரண சட்டத்திற்குக் கீழ் வந்தான். "நீ இதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்" (ஆதி. 2:17). அன்று முதல் சாவை நோக்கி நடந்த ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்து மரித்தான், அவனது இந்த செயல் அவனது சந்ததி முழுவதையும் பெலவீனர்களாக ஆக்கி மரண சட்டதிற்கு உட்படுத்தியது. அவன் அதே நாளிலே செத்தான், 24 மணி நேரம் கொண்ட நாள் அல்ல, பேதுரு சொல்லுவது போல் ஆயிரம் வருடங்களில், "பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்" (2 பேது. 3:8). கடந்து வந்த இந்த ஆதாம் தொடங்கி இந்த 6 நாட்கள்ளாக (6000 வருடங்கள்) மனிதன் எல்லா நம்பிக்கையும் இழந்து போய் மரணத்தில் போய் கொண்டிருக்கிறான். தேவன் மாத்திரம் நமக்கு துணையாக இல்லாமல் போனால் எதிர்காலத்தைப் பற்றி அவனால் ஒன்றும் சிந்திக்க இயலாமல் போயிற்று. இதற்கான வாக்கு தேவன் ஆதி. 3:15ல் ஸ்திரியின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும் படியாக கொடுத்தார். பின்பு ஆபிரகாமிடம் தேவன் பேசும் போது, உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்கு கொடுத்தார் (ஆதி. 28:14).
இந்த வாக்கு நிறைவேற 4000 ஆண்டுகள் (4 நாட்கள்) சென்ற பின்பு தேவன் தன் ஒரே பேறான மகனாகிய இயேசு கிறிஸ்துவை, ஆதாமினால் மரண தண்டனையில் இருந்த மனித ஜாதியின் மீட்புக்காக அனுப்பி வைத்தார். "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேது. 3:18). கல்வாரியில் செய்யப் பட்ட இந்த தியாகமான பலியினால் ஒரு மீட்பின் திட்டம் நிறைவேறியது. ஆனபடியே, "நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுதல்" (அப். 24:15) உண்டாயிற்று. ஒரு மரண தண்டனையிலிருந்து விடுதலை, எதிரியின் சிறையிலிருந்து விடுதலை உண்டாயிற்று.
பாவத்திற்கு தண்டனை நித்திய ஆக்கினை என்று தவறான ஒரு போதனையை நம் மத போதகர்கள் உண்டுபண்ணி விட்டார்கள். வேதம் தெளிவாக சொல்லுவது என்னவென்றால், பாவத்தின் சம்பளம் மரணம் (ரோம். 6:23) - நித்திய ஆக்கினை கிடையாது. ஆதியாகமம் எங்கும் தேடி பார்த்தாலும் தேவனிடத்திலிருந்து பாவத்திற்கு வந்த தண்டனை மரணமே தவிர உலகம் சொல்லுவதுபோல் நித்திய ஆக்கினை கிடையாது. அதையே தேவன் மீண்டும், நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீ பூமிக்குத் திரும்புவாய் (ஆதி. 3:19) என்று சொன்னார். அவர் ஒரு போதும் நித்திய ஆக்கினை, பிசாசின் கூட்டங்கள், வேதனைகள் தரும் இடம் என்று சொன்னதில்லை. பின்பு எப்படி நம் முற்பிதாக்கள் இருண்ட காலத்தில் நித்திய ஆக்கினை போல் உள்ள ஒரு தப்பிதமான படிப்பினை. பவுல் சொல்லுகிறபடி, "பிசாசின் உபதேசங்களை" (1 தீமோ. 4:1) "பிசாசிடம்" இருந்து கற்றுக் கொண்டார்கள்? பாருங்கள், எந்த ஒரு தீர்க்கதரிசனமும் பாவத்திற்கு தண்டனை மரணம் என்கிறதை தவிர வேறு ஒன்றும் சொல்லுவதில்லையே! புதிய ஏற்பாடும் இதையே வலியுறுத்துகிறது. புதிய ஏற்பாட்டில் பாதிக்கு பாதி பவுல் எழுதியுள்ளார், அவர் சொல்லுவதை கேளுங்கள், "எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்" (அப். 20:17), ஒரு போதும் நித்திய ஆக்கினை பற்றி சொல்லுவதில்லை. இதற்கு மாறாக பாவத்தையும் அதின் தண்டனையையும் குறித்து பேசும் போது, "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்துபோலவும், எல்லா மனுஷரும் பாவம்ஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும், இதுவுமாயிற்று" என்று பாவத்திற்கு தண்டனை மரணமே என்று சொல்லுகிறார். யாராவது பாவத்திற்கு இதற்க்கு மேலும் தண்டனை உண்டு என்று சொன்னால் வசன ஆதாரத்துடன் அவர்களிடம் காண்பியுங்கள். ஆதாம் பாவத்தினால் இழந்தவைகள் - ஏதேன் தோட்டம், நித்திய ஜீவன், தெய்வீக உறவாடல் ஆகியவை, மாறாக அவனுக்கு கிடைத்தது - வியாதி, வேதனை, துக்கம், மரணம். இது மட்டுமில்லாமல், கோடான கோடி வாரிசுகளுக்கும் இது உண்டாயிற்று. ஆசீர்வாதங்களுக்கு பதில், பெலவீனங்கள், சரீர பூர்வமான வேதனைகள் ஆகியவற்றையே சம்பாதிக்க முடிந்தது. அப். பவுல், "தவித்து, பிரசவவேதனைப் படும் சிருஷ்ட்டி" (ரோம். 8:22) என்று மிகச் சரியாகவே சொல்லுகிறார்.
தேவனின் தண்டனை நியாயமானதே
யாரும் தேவனின் இந்த மரண தண்டனையை அதிகபடியாகவும் அநீதியுள்ளதும், கொடுமையானதும் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் விரும்பியிருந்தால் ஆதாமின் பாவத்திற்காக அவனை நித்தியத்திற்கும் அழித்திருக்கமுடியும். மனித ஜாதியையும் அப்படியே செய்திருக்கலாம். நாம் அதை விரும்பியிருப்போமா? நிச்சயமாக இல்லை. வேதனைகளுக்கும், பாடுகளுக்கும் மத்தியிலே வாழ்க்கை இனிமையாகவே இருக்கிறது. மேலும் தெய்வீக ஏற்பாட்டின் படியே தற்காலிகமான இந்த சோதனைகளும், பரீட்சைகளும், இவை நம்மை நல்ல ஒரு சீடனாக உருவாக்கவே, ஆதாம் எடுத்த முடிவைப் பார்க்கிலும் ஞானமான ஒரு முடிவு நாம் எடுக்கும்படியாகவே இது எல்லாம், தனிப்பட்ட நியாயத்தீர்ப்பு நடக்கும் போது நாம் உறுதியாக இருக்கவே இது எல்லாம். தேவனின் கிருபையும் அன்பும் இல்லாமல் இருந்திருந்தால், நாத்திகர்கள் சொல்லுவது போல் நாமும் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கையற்றவரகளாகவே இருந்திருப்போம்.
சிந்தித்துப் பாருங்கள், இயேசு நம் மீட்புக்காக ஏன் மரிக்கவேண்டும், இதனால் நாம் மரண தண்டனையைப் பற்றி இன்னும் ஒரு விஷயத்தை கவனிப்போம். நாம் நித்திய ஆக்கினைக்கு தீர்ப்பிடப்பட்டிருந்தால், நம் மீட்பருக்கும் அதே விலைக்கிரயம் செலுத்த வேண்டியிருந்திருக்குமே! அவரும் அந்த ஆக்கினைக்குள்ளாக வேதனைப் பட்டிருந்திருக்க வேண்டியிருக்குமே! மாறாக நித்திய ஆக்கினை தண்டனையாக இல்லாதபடியால், இயேசு அந்த விலைக்கிரயம் செலுத்தவில்லை. மரணமே தண்டனை, ஆகவே தான், "கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார்". "என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்த்தார்.." (எபி 2:9). யாரொருவர் ஆதாமின் தண்டனைக்குண்டான விலைக்கிரயம் செலுத்துவார்களோ, அவரே தெய்வீக நியாயத்தின் படி முழு உலகத்தின் பாவங்களுக்கும் விலைக்கிரயம் செலுத்தினவராவார் - ஏனென்றால் ஆதாமே பாவத்தினாலே இந்த தண்டனையை பெற்று தந்தார். நாம், அவரது சந்ததிகளான படியால் இந்த தண்டனையில் பங்கு கொள்பவர்களாக இருக்கிறோம். நம் தேவனின் ஞானத்தை சற்று வியந்து பாருங்கள். வேதம் சொல்லுகிறபடி, ஒரு மனிதனின் கீழ்படியாமையினால் முழு உலகமும் மரண சட்டத்தின் கீழ் வந்தது, அப்படியே ஒரு மனிதனின் (கிறிஸ்துவின்) கீழ்படிதலினாலே எல்லோருக்கும் ஜீவன் உண்டானது. நாம் மரண சாஸசனத்திலிருந்து விடுவிக்கப்படோம் - நாம் அறிந்து கொள்ளாமலே.
"அப்போது நமக்கு பொறுப்பு கிடையாதா? நாம் செய்த பாவங்களுக்கு நமக்கு தண்டனை கிடையாதா? என்று சிலர் கேட்கக்கூடும். நம் பதில், "நீதியான தண்டனை" (எபி. 2:2) எல்லோருக்கும் உண்டு. ஆனால் நம் நித்தியம் நாமே முடிவு செய்யலாம், தேவனின் இலவச கிருபையை ஏற்றுக்கொள்வதினாலோ அல்லது மறுப்பதினாலோ. "எஜமானனின் சித்தம் அறிந்தும் அவரூடைய சித்தம் செய்யாத ஊழியக்காரன் அவன் திருந்தும் படி அநேக அடிகள் அடிக்கப் படுவான்" (லூக். 12:47,48). அதாவது இப்பொழுது மனிதன் எவ்வுளவு தேவனுக்கு விரோதமாக இருக்கிறானோ (அவரை அறிந்ததிருந்தும்) அவ்வளவாக உயிர்தெழுதலில் அதிகமாக ஆதாம் முலம் இழந்தவைகளை திரும்ப பெற பிரயாசிக்க வேண்டியிருக்கும்.
மரித்தவர்கள் உயிர்த்து வருவார்கள்
1000 வருட அரசாட்சியில் செய்யவிருக்கும் சீர் படுத்தும் காரியங்களின் ஒரு நிழல்தான் இயேசுவின் முதல் வருகையில் நடந்தது. அவர் மூலமாக கிடைக்கப் போகும், சரீர சுகங்கள், குருடர்களின் பார்வை, செவிடர்களின் காதுகள் கேட்கச் செய்தது எல்லாம் வரும் காரியங்களுக்கு நிழலாகவே இருக்கிறது. மிகவும் முக்கியமான ஒரு அற்புதம் இயேசுவின் நண்பனான லாசருவை மரணத்திலிருந்து எழுப்பியது தான். இயேசு லாசருவின் சுகவீனம் அறிந்தும் நீண்ட நாட்கள் அவனை சந்திக்கப் போகவில்லை. முன்னமே, மார்த்தாளும், மரியாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி இருந்தார்கள், ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் (யோவான் 11:3). இயேசு ஒரு வார்த்தை சொன்னால் போதும், லாசரு சுகம் பெறுவான் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர் நேசிக்கிறவரை நிச்சயம் சுகப்படுத்துவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இது எல்லாவற்றையும் அறிந்த இயேசு லாசரு சாகும் மட்டும் காத்திருந்தார். பின்பு இயேசு தன் சீஷர்களிடம், "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்" (யோவான் 11:11) என்று சொன்னர். பின்பு அவரின் சீஷர்கள் புரிந்துக் கொள்ளும்படி, "லாசரு மரித்துப் போனான், உங்கள் நிமித்தமே நான் அங்கு அப்போது இல்லாததற்கு சந்தோஷப்படுகிறேன்" (யோவான் 11:14,15) என்று சொன்னார்.
இயேசு, லாசருவை மரிக்க அனுமதித்தார், ஏனென்றால் அநேகர் அறிந்து கொள்ளும் படி அவர் ஒரு அற்புதம் செய்யும்படி அப்படி செய்தார். பின்பு தன் சீடர்களுடன் மூன்று நாள் பயணமாக பெத்தானியா சென்றார் இயேசு. லாசருவின் சகோதரிகள் மேசியா அவர்களின் உதவிக்கு வராததினால் நிச்சயமாகவே வருத்தத்துடன் இருந்தார்கள். அவர்கள் இயேசு எப்படியும் சுகப்படுத்துவார் என்று நம்பிக்கை இருந்தது. ஆகையால்தான் மார்த்தாள், "ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்" என்றாள். இயேசு சொன்னார், "உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்" என்றார். அதற்கு மார்த்தாள், "உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்" என்றாள் (யோவான் 11:21, 23, 24). கவனியுங்கள், நம் இரட்ச்சகர் இப்படி எதுவும் சொல்லவில்லை, "உன் சகோதரன் மரிக்கவில்லை, உன் சகோதரன் முன்பு போலவே உயிருடன் வேறு ரூபத்தில் இருக்கிறான், அல்லது அவன் பரலோகத்திலோ, உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிறான்". இப்படி எதுவும் சொல்லவில்லை!! உத்தரிப்பு ஸ்தலம் அது வரையில் கண்டுபிடிக்கபடவில்லை, அதைக்குறித்து இயேசுவிற்கு ஒன்றுமே தெரியாது! பரலோகத்தில் இருப்பதை குறித்து, "மனுஷகுமாரனை அல்லாமல் ஒருவன் பரலோகத்திற்கு ஏறிச்செல்லவில்லை"(யோவான் 3:13) என்று இயேசு சாட்சியாக சொல்லியிருக்கிறார். இது மார்த்தாளுக்கும் தெரியும். "இருண்ட காலத்தின்" பேய்களின் உபதேசம் அப்பொழுது சத்தியத்திற்குள் நுழையாமல் இருந்தது. அவள் வேதத்தில் உள்ளபடியேதான் லாசருவின் உயிர்தெழுதலை நம்பியிருந்தாள். கர்த்தரின் நாளில், (ஏழாவது நாளில் - 7000வது ஆண்டில்) அவன் உயிர்த்தெழுவான் என்று நம்பியிருந்தாள். "நம் மீட்பர், "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 11:25) என்று சொல்லியிருக்கிறார். இயேசுவிற்கு யாருக்கு வேண்டுமென்றாலும் ஜீவனை கொடுக்க வல்லமை இருந்தது. மார்த்தாள், "ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே" (யோவான் 11:39) என்றாள். ஆனால் இயேசுவோ கல்லறை அருகே சென்று, "லாசருவே, வெளியே வா" என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார், அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான் (யோவான் 11:43, 44). நன்றாக கவனியுங்கள், உயிரோடிருந்தவன் அல்ல மரித்தவனே வெளியே வந்தான். மேலும் அவன் கல்லறையிலிருந்தே வந்தான், பரலோகத்திலிருந்தோ, உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்தோ வரவில்லை.
பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்
லாசருவுக்கு செய்ததது போல் இயேசு ஆதாமின் சந்ததிக்கு செய்ய இருப்பதையே இது காண்பிக்கிறது. இந்த வசனத்தை கவனியுங்கள், "இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.. .. .. .. அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்"(யோவான் 5:28-29). இது நம்மை ஆச்சரியப்படச் செய்கிறதா? ஆம் என்றால், நாம் தேடும் காரணம் தொலைவில் இல்லை. அது ஏனென்றால், நாம் வேதத்தில்லுள்ள படிப்பிணைகளை விட்டு தூரம் போய்விட்டு - "பிசாசுகளின் உபதேசங்களில்" (1 தீமோ 4:1) முழுவதுமாக மூழ்கி விட்டோம். எவ்வளவு என்றால், அந்த பழைய பாம்பாகிய சாத்தானின் உபதேசமான "நீங்கள் சாகவே சாவதில்லை" (ஆதி 3:4) என்பதை முற்றுமாய் ஏற்றுக் கொண்டு தேவன் சொன்ன "நீ சாகவே சாவாய்" (ஆதி 2:17) என்பதையும், "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோம் 6:23) என்பதை முற்றிலுமாக மறந்து விட்டோம்.
யோவான் 5:29ன் படி மரித்தவர்களிலிருந்து இரண்டு வகுப்பார் வெளியே வருவார்கள். முதலாவது, இந்த உலகத்திலே அவர்களின் சோதனைகளை முடித்து வெற்றி பெற்றவர்கள் (நல்லோர்), மற்றும் அடுத்தது, தேவனின் தெய்வீக ஏற்பாட்டில் தங்களைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்ய போகும் மீதமானோர் (தீயோர்). நல்லோர்கள் பூர்ண நித்திய ஜீவன் பெறும் படி எழும்புவார்கள், தீயோர், நியாயதீர்ப்பு பெறும் படி எழும்புவார்காள். வெளியே வருவது ஒன்று, உயிர்த்தெழுதல் என்பது மற்றொன்று. பவுல் சொல்லுவது, "அவன் அவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்" (1 கொரி. 15:23). இப்படி வெளியே வந்த பிறகு அவர்கள் உயரே, உயரே எழுந்து தந்தை ஆதாமின் அந்த பூர்ண நிலையை அடையும் படியும், வியாதிகள், வேதனைகள் மற்றும் பாடுகளிலிருந்து விடுதலை பெறும் படியான தகுதியடைவார்கள். இதையே பேதுரு சொல்லும் போது, "உலக தோற்றம் முதல் தீர்க்கதரிசிகளெலாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறி தீரும் காலம் வரும்" (சீர்படுத்தும் காலம் - சரியான மொழிபெயர்ப்பு) (அப். 3:21) என்கிறார்.
இது பொதுவானது அல்ல
இந்த ஒரு சலுகை பொதுவானதோ, அனைவருக்கும் திணிக்கப்படும் விஷயம் என்றும் இல்லை. தன் சொந்த ஊரிலிலுள்ள ஜெப ஆலயத்தில் இயேசு ஏசாயா புத்தகத்திலிருந்து தான் செய்ய போகும் வேலையைக் குறித்தே சொன்னார் (லூக் 4:18). அதில் ஒன்று தான் சிறுமைப்பட்டவர்களுக்கு விடுதலை. நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இது உண்மையான சிறை கிடையாது. அப்படியிருந்திருந்தால் யோவான் ஸ்னானகனை அவர் விடுவித்திருப்பாரே. இயேசு திறக்கப் போகும் சிறை என்பது, பிசாசு கோடிக்கணக்கானவர்களை அடைத்து வைத்திருக்கும் "கல்லறை". தன்னுடைய இரண்டாம் வருகையில் இயேசுவே இந்த விடுதலை காரியத்தை செய்வார், இதற்காகவே ஒரு முன்னுதாரணமாக அவர் லாசருவின் கல்லறைக்கு முன்பாக இருந்து அவனை வெளியே வரும்படி கூப்பிட்டார், "லாசருவே வெளியே வா", (யோவா 11:43) அப்படியே பிரேதகுழிகள் அவரின் சத்தத்திற்கு செவி கொடுத்து அனைவரும் வெளியே வருவார்கள் (யோவான் 5:28,29).
மரித்தவர்கள் எங்கே?
பிரியமானவர்களே, உங்களுக்கு முன்பாக நாத்தீகர்கள் தொடங்கி, மதபோதகர்கள், அறிவாளிகளின் பதில்களை வைத்தோம், ஆனால் எதுவுமே வேதத்தின் படி இல்லையே! நமக்கு திருப்தி தருவதுமாக இல்லை! ஆனால் இப்போழுதோ நீங்கள் தேவனின் வசனத்தின் மூலமாக மரித்தவர்கள் எங்கே என்பதைப் பார்த்தீர்கள். மரித்தவர்கள் உண்மையாகவே மரித்துப் போனவர்களே, இனி தேவனின் தெய்வீக ஏற்பாட்டின் படி எழ இருப்பவர்கள். இதற்காகவே இயேசு கல்வாரியில் தம் இரத்தம் சிந்தி இந்த மீட்பின் காரியத்தைச் செய்து முடித்தார். ஒரு வேளை உங்கள் போதனைகளின் படி சிலர் புனிதமாக வாழ்ந்தவர்களோ, உங்கள் பெற்றோர்களோ, கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ பரலோகத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு நேர் மாறாக எத்தனை கோடி பேர் உங்கள் எதிரிகள், அயலகத்தார், நித்திய வேதனையில் இருப்பார்கள். ஆனால் இப்போது அறிந்துகொண்ட சத்தியத்தின் படி நீங்களோ உங்களை சார்ந்தவர்களோ எவ்வுளவு பெரிய விடுதலை உணர்வு கொண்டிருப்பீர்கள், "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்றார் நம் மீட்பர் (யோவான். 8:32). மரித்தவர்கள், மரித்தவர்கள் தான். அவர்கள் வேறு ரூபத்திலோ, கல்லறையை தவிர வேறிடத்திலோ சுகமாகவோ, வேதனையிலோ வாழ்வது கிடையாது. இயேசுவின் அந்த மீட்பின் சுவையை அனுபவிக்கும் படி ஒரு ஆழ்ந்த நித்திரையில் தன் வரிசைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களே மரித்தவர்கள்.
உங்கள் சரீரங்களை பலியாக ஒப்புகொடுங்கள்
ஒரு சிறிய முடிவுரை. ஒரு விஷயத்தை நாங்கள் சொல்லாமல் முடித்துவிட்டால் சரியாக இருக்காது. வேதத்தின் படியே நாங்கள் சொல்லக் கடமைப் பட்டது என்னவென்றால், இந்த உலகத்தின் ஆசீர்வாதமான அந்த நாளுக்காக, உயிர்த்தெழுதலுக்காக ஏன் 2000 வருடங்களுக்கு மேலாக தேவன் எடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் சொல்லப் போவது உண்மையான கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அது இதுவே:
தேவன் உயிர்த்தெழுதலுக்கு முன்பு தன் சபையை தெரிந்துகொள்வதை செய்துகொண்டிருக்கிறார். இந்த சபை தான் "கிறிஸ்துவின் சரீரம்" (1 கொரி. 12:17) என்று சொல்லப்படுவது, இதுவே இயேசுவை தலையாய் கொண்டிருக்கும் சபை (எபே. 5:23). இந்த சபையே, "மணவாட்டி - ஆட்டுகுட்டியானவரின் மனைவி" (வெளி. 21:9) என்றும் உள்ளது. பெந்தகோஸ்தே நாள் முதல், பிதாவாகிய தேவன் விசுவாசிகளை இயேசுவின் பக்கம் கொண்டுவருகிறார். விசுவாசத்தினால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள், இயேசுவின் சீஷர்களாக அழைக்கப்பட்டு, அவரது பாதச் சுவடுகளை பின்பற்றும் படியும், இயேசுவைப் போல் தன் ஜீவனை தேவனுக்காக விடும் படியாகவும், தங்கள் இருதயங்களில் பரிசுத்தாவியின் கனிகளை வளர்த்துக் கொள்ளும் படியாகவும், தன் ஒரே பேரான மகனின் சாயலில் வளரும் படியாக அழைக்கப்பட்டவர்களே இந்த சபை.
இந்தக் கூட்டத்திற்கு 1000 வருடத்தின் உயிர்த்தெழுதலோ, சீர்படுத்தலோ கிடையாது. மாறாக இவர்களின் அழைப்பு பரம அழைப்பு (எபி. 3:1). அவர்களின் தேர்வுக்கு பின்பு ஆவியின் முத்திரையிடப்பட்ட அவர்கள், கிறிஸ்துவில் வளரும்படி அவர்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் படியும் பாடுகளின் மத்தியில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளும்படியும் பயிற்சிக்குபட்டு, புதிய சிருஷ்டியாக மாறுகிறார்கள். இவர்களே "சிறு மந்தை"யான கூட்டம் (லூக் 12:32), இங்கொன்றும், அங்கொன்றுமாக சேர்க்கப்பட்ட "புனிதர்கள்". இவர்கள் எந்த ஒரு கிறிஸ்தவ பிரிவை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள், ஏனென்றால், "கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்" (2 தீமோ. 2:19). "பொதுவான விசுவாசத்தின்படி" (English Bible - "Elect") (தீத். 1:1) உள்ள எண்ணிக்கை பூரணமானவுடன், தற்போது உள்ள உலகம் முடிவுக்கு வரும். நம் இரட்சகர் இரண்டாம் முறையாக முழு மகிமையுடனும் வல்லமையுடனும் வருவார். உயிர்த்தெழுதலில் அவரின் சபை முதல் வரிசையில் இருக்கும், பூமிக்குரிய மேனியிலிருந்து பரலோகத்திற்குரிய மேனியை அடையும், "ஒரு நொடிப் பொழுதில்" இந்த மாற்றம் நிகழும், ஏனென்றால் "மாம்சமும், இரத்தமும் பரலோகத்தை சுதந்தரிக்காதே" (1 கொரி. 15:50-52).
இதற்கு பின்பு வருவதே, ப்ரத்யட்சமான 1000 வருட ஆட்சி, சாத்தான் கட்டபடுவது, அவனின் சேனையின் அழிப்பு, அதரிசனமான தேவ இராஜ்யம், பூமியில் உள்ளவர்களை பூரணப்படுத்தும் சகல வேலைகளும் முடுக்கிவிடப்படுதல் ஆகும்.
உங்களில் ஏற்கனவே, இயேசுவினால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களாக இருப்பீர்களானால், உங்கள் தலைகளை உயர்த்தி இந்த உன்னதமான பரம அழைப்பின் நிமித்தம் இன்னும் அதிகமாக அதைக் கிட்டிச் சேரும் படி உங்களை இன்னும் அதிகமாக உட்படுத்துங்கள். இன்னும் பலர் செவி உள்ளவர்கள் இந்த பரம அழைப்பை கேட்டீர்களானால், "கிறிஸ்துவின் அன்பை உங்களுக்குள் நெருக்கி ஏவி" விட்டு (2 கொரி. 5:14) அவரின் சீடராகி விட்டு,"நம்மை சுற்றி நெருங்கி நிற்க்கிற பாவத்தை தள்ளிவிட்டு, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." (எபி. 12:1).
-- Edited by soulsolution on Tuesday 18th of May 2010 10:48:56 PM
The dead are really dead!! They will be in paradise which is yet to come, when Christ comes and ressurection takes place!! Till them, the dead are dead and the know not what's happening, they don;t have any thoughts, any work!!
பரதீசு என்கிற ஒரு இடம் இனி வரப்போகும் நிகழ்வு!! பரதீசு என்கிற பாரசீக சொல்லிற்கு தோட்டம், பூங்கா என்கிற அர்த்தம் வரும்! இதில் வாழும் படியாகவே மனிதன் படைக்கப்பட்டிருந்தான், ஆனால் பாவத்தினால் மரணத்தை சம்பாதித்தவன் அந்த தோட்டத்தை இழந்து போனான்!! ஆனாலும் தேவனின் இராஜியம் வருகிறது அப்பொழுது இந்த பூமி ஏசா 35ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டபடி பரதீசாக தான் மாறப்போகிறது!!
மரித்தவர்கள் இப்பொழுது பரதீசில் இருக்கிறார்கள் என்றால், அது பல தவறான கோட்பாடுகளை உருவாக்கிவிடும்!! மரித்தவர்களுக்கு பூமியில் இருக்கும் பாடுகள் இல்லாததினாலே யோபு அதை சமாதானம் உள்ள இடம் என்கிறானே தவிர, உண்மையில் மரித்த பின்பு அவன் நிலை என்னவென்று அவனுக்கு தெரியாது!! பூமியின் ராஜாக்களாக இருந்து பலவற்றை கட்டி எழுப்பியர்வகள் மரண நித்திரையில் இருப்பது போல் என்று சொல்லுகிறான்!! மற்றப்படி இந்த வசனங்களில் மரித்தவர்கள் பரதீசில் இருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே!!
பிரசங்கி 9:10. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
மரித்தவர்கள் பாதாளத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லுவது சரி!! ஆனால் பாதாளம் என்றால் இன்றைய கிறிஸ்தவர்கள் போதிக்கிறப்படி அக்கினி எரிகிற ஒரு இடமாக இல்லாமல், கல்லறை என்கிற ஒரு இடத்தை தான் வேதம் பாதாளம் என்கிறது!!
If the dead know nothing how will they know Peace!! But just think of a Paradise which all are going to get during the reign of Christ in the Kingdom which is still due and for which our Master and Saviour Christ Jesus taught us to pray to our Father,
Abba Father, thy kingdom come!! Thy will be done (on this earth) as in heaven!!