kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?


தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?


தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார் என்பதை எப்படி நிச்சயப்படுத்த முடியும்? நாம் நம்புகிற காரியங்களை அறிக்கை செய்து ஜெபிப்பது மட்டும் போதாது. ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போருக்குச் சென்றிருக்கும் தங்களது மகன்களை தேவன் பாதுகாக்கும்படி ஜெபித்தாலும் அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்ட செய்தியே வருகிறது. தேசத்தின் சாமாதானத்துக்காக அறிக்கை செய்து ஜெபித்தாலும் தேசமோ தீவிரவாதம், யுத்தம் போன்றவற்றில் சிக்கித்தவிக்கிறது.
ஆனால் இன்னொருபுறம் ஆயிரக்கணக்கானோர் தேவன் தங்கள் ஜெபத்தைக்கேட்டு தங்கள் மகன்களுக்கு பாதுகாப்பு அளித்ததை சாட்சியாக சொல்ல ஆவலாக இருக்கிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் கேட்டுக்கொண்டபடி தேவன் எப்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் தங்களுக்கு வேறு சிறப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்தார் என்பர். இதுபோன்ற அனுபவங்களை மட்டும் வைத்து நாம் பார்த்தோமானால் தேவன் ஏதோ ஒருசிலரது ஜெபங்களைக் கேட்கிறார் என்றும் அதேவேளை மற்றவர்களது ஜெபங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்றும் எண்ணத்தோன்றும். ஆனால் வேதம் தேவனைப்பற்றி அவ்வாறு கூறுவது இல்லை. தேவன் மனித எண்ணங்களை மதிக்கிறவர் அல்ல என்றே கூறுகிறது. ஆகவே ஒருசிலரது ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதும் மற்றவர்களுக்கு அவ்வாறு இல்லாதிருப்பதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அக்காரணத்தை அறிந்துகொண்டோமானால் அப்படி ஜெபத்திற்கு பதில் கிடைக்காத அனேகரது விசுவாசம் விருத்தியடைய உதவும்.


ஜெபம் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். வேண்டுதல் என்பது எல்லா மதத்தினராலும் பின்பற்றப்படுகிற ஒரு காரியமாக காணப்படுகிறது. பிரார்த்திக்க வேண்டும் என்ற உந்துதல் என்பதே நாம் நம்மைக்காட்டிலும் ஒரு மேலான சக்தியைச் சார்ந்திருப்பதையும், நம்மைத்தவிர வேறு ஒரு மூலத்திலிருந்து(SOURCE) நமக்கு உதவி தேவைப்படுவதை நாம் உணர்வதையும் காண்பிப்பதாகும்.
சந்தேகத்திற்கிடமின்றி சிருஷ்டிகள் தன்னுடைய சர்வவல்லமையை உணரும் வண்ணம் ஜெபத்தின் மூலம், உண்மையான வாஞ்ஜையுடன் தன்னைத் தொடர்புகொள்வது தேவனுக்குப் பிரியமே. ஜெபிக்கவேண்டும் என்ற தூண்டுதல் என்பது அடிப்படையில் மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்ட காரணத்தால் வந்ததே ஆகும். மனிதன் பாவத்திலும், மரணத்திலும் விழுந்துபோனதன் விளைவாக அவன் ஆளுமையில் தெய்வீகத்தன்மை மறைந்து போனாலும் மீதமிருக்கும் கொஞ்சநஞ்சம்தான் இந்த ஜெப வாஞ்சை. கோடிக்கணக்கான ஜனங்கள் வாழ்வில் ஒருபோதும் ஜெபிப்பதேயில்லை என்றாலும் ஜெபிக்கவேண்டும் என தூண்டப்படுவதும் அப்படி ஜெபிக்காதபட்சம் ஒருவகை குற்றவுணர்வடைவதும் உண்மையே.

ஆம் தேவனுடைய சிருஷ்டிகளில் உள்ள இந்த ஜெப உணர்வு அவரை பிரியப்படுத்தவே செய்கிறது. ஆனால் ஏன் சிலரது ஜெபத்தைக் கேட்கிறார் மற்றவர்களது ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வேதபாரகர், பரிசேயர்களது ஜெபங்களை கவனிப்பதன் மூலம் இந்தக் கேள்விக்கு பதில் தருகிறார். அவர்கள் மனிதர்கள் பார்க்கும் வண்ணம் ஜெபம்செய்து அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபங்களை தேவன் கேட்பார் என்று எண்ணியதை இயேசு இங்கு விவரிக்கிறார்.

இதன்மூலம் ஜெபிக்கும்போது சரியான அல்லது சரியில்லாத மனப்பாங்கு(Attitude), சரியான அல்லது தவறான முறைகள்(Methods) இருப்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. தங்கள் 'ஜெபசக்கரத்தை'ச் சுழற்றும் முயற்சி வேண்டுமானால் பிற மதத்தினருக்கு சரியாகத்தோன்றலாம் ஆனால் 'முறை' தகுந்ததல்லவே!

ஜெபத்தின் நோக்கம்

ஏன் சில ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை என்று புரிந்துகொள்வதற்கு ஜெபத்திற்கு ஒரு தெய்வீக நோக்கம் உண்டு என்பதை அறிந்துகொள்வது இன்றியமையாதது. தேவன் இந்த பூமியில் தன்னுடைய திட்டங்களை எப்படி செயல்படுத்தவேண்டும் என்பதை அறிவதற்காக ஜெபத்தை வடிவமைக்கவில்லை. தேவன் நம்முடைய ஜெபங்களைச் சார்ந்து தன்னுடைய திட்டங்களை செயல்படுத்துவதும் இல்லை. தான் என்ன செய்யவேண்டும் என்று நாம் சொல்வதற்கு அவர் நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதில்லை.
வேதத்தில் அனேக வகையான ஜெபங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மிக அதிகமான ஜெபங்கள் நன்றி செலுத்துவதையே மையமாகக்கொண்டுள்ளன. தன் படைப்புகள் தன்னையே தங்கள் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றுக்காரணர் என்று அறிந்து தங்கள் இருதயங்களையும், குரல்களையும் உயர்த்தி தனக்கு நன்றி செலுத்தும் செயல் தேவனை சந்தேகத்திற்கிடமின்றி மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
அதுபோல தேவனுடைய ஞானம், நீதி, அன்பு மற்றும் அவரது வல்லமை போன்ற மகிமையான அவருடைய ஆளுமையைப் புகழ்ந்து செய்யப்படும் ஜெபங்களும் அனேகம். தேவனை மகிமைப்படுத்துவது மட்டுமே ஜெபத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். தேவனுடைய இரக்கத்துக்கான ஜெபங்களும் உண்டு. ஜெபத்தின்மூலம் பாவங்களுக்கு தெய்வீக மன்னிப்பு தேட வேதம் எல்லா கிறிஸ்துவர்களையும் தூண்டுகிறது. 'தைரியமாக கிருபாசனத்தண்டையில் சேரக்கடவோம் என்று அப்போஸ்தலனாகிய பவுலும் இரக்கங்களையும் கிருபையையும் ஏற்ற வேளையில் பெற வலியுறுத்துகிறார்.(எபி 4: 16)
அதுமட்டுமன்றி ஆண்டவரிடமிருந்து குறிப்பிட்ட ஆசீர்வாதங்கள் மற்றும் அனுகூலங்கள் வேண்டியும் ஜெபங்கள் உள்ளன. இவ்வகை ஜெபங்களுக்கே நாம் அதிக 'முக்கியத்துவம்' கொடுக்கிறோம். சிலர் செல்வச்செழிப்பு வேண்டி ஜெபிக்கின்றனர். சிலர் பிரயாணத்தின்போது பாதுகாப்பு வேண்டி ஜெபிக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் சமாதானத்துக்காக ஜெபிக்கின்றனர். இரண்டு ஒன்றுக்கொன்று விரோதமான தேசங்களுடைய ஜனங்களும் அவரவர்களுடைய இராணுவங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஜெபிப்பது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றே. அனைவருமே உண்மையான ஜெபங்களைத்தான் தேவனிடத்தில் ஏறெடுக்கிறார்கள் என்று கொண்டாலும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எது முக்கியமான காரியமாக இருக்கிறதோ அதற்காகவே ஜெபிக்கிறார்கள். எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைத்தாக வேண்டும் என்ற நம்பிக்கையை வேதம் நியாயப்படுத்துகிறதா?

ஒருவேளை தனது மகனது பாதுகாப்பிற்காக ஜெபிக்கும் தாயின் ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கக்கூடும். அல்லது தேசத்தின் சமாதானத்திற்கான ஜெபங்களுக்கும் பதில் கிடைக்கலாம். அவ்வாறு பதில் கிடைத்தால் அந்த சமயத்தில் அவ்வாறு நடப்பது தேவனுடைய சித்தத்துக்கு இசைவாக இருப்பதாகவே அர்த்தம். தேவன் இந்த மனுக்குலத்தைக்குறித்த கரிசனையோடு ஒரு மாறாத திட்டத்தை (Fixed Plan) வைத்துள்ளார். அந்தத் திட்டம் மனிதனுடைய ஆசை விருப்பங்களை திருப்திபடுத்த உண்டாக்கப்படவுமில்லை எவ்வளவு பெரிய ஜெபங்களும் அந்தத் திட்டங்களை மாற்றவும் முடியாது.

"ஜெபம் காரியங்களை மாற்றும்" என்று கூறப்படுவதுண்டு. ஆனால் தேவனுடைய திட்டங்களை அது ஒருபோதும் மாற்றுவதில்லை. தேவன் இந்த உலகத்தை நமக்கேற்ற நல்ல நிலைமைக்கு கொண்டுவர தான் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ள நம்மையோ, தேசங்களையோ அல்லது ஐக்கிய நாடுகளின் சபையையோ கூட பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஜனங்களுடைய ஜெபங்களுக்கேற்ப தன்னுடைய கருத்துக்களையோ திட்டங்களையோ மாற்றிக்கொள்ளும் ஒரு கடவுளிடம் நாம் எப்படி நம்பிக்கை கொண்டிருப்போம்.


உமது சித்தம் செய்யப்படுவதாக

தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய ஜெபங்களில் அவர்களுடைய எல்லா அனுபவங்களிலும் தேவனுடைய சித்தம் செய்யப்படவேண்டும் என்ற வாஞ்ஜை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மனதிலும் இருதயத்திலும் கொண்டிருக்கவேண்டும். இதற்கு ஒரு அருமையான உதாரணத்தை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பார்க்கலாம். கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் கைதாகி மரிக்கப் போவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது (சீஷர்களிடம்)"என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கம் கொண்டிருக்கிறது... சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து; என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது" என்றே ஜெபித்தார். (மத் 26:38,39)
இயேசுகிறிஸ்து மனிதர்களுக்காக இரட்சகராக, மீட்பராக பாடுபட்டு மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருந்தது. தெய்வீக திட்டத்தின் இந்த அதிமுக்கியமான நிகழ்வு பழைய ஏற்பாட்டின் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டிருந்தது. தனக்கு என்ன சம்பவித்தாலும் தெய்வீக சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதில்தான் இயேசுகிறிஸ்து கவனமாக இருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்படும்போது இதை அவர் குறிப்பிட்டார். தன்னுடைய எஜமானனுடைய பாதுகாப்புக்காக பட்டயத்தை உருவிய பேதுருவைப் பார்த்து; பட்டயத்தை உறையில் போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவா18:10,11)
இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவருடனே இந்தத் துன்பம், மரணம் போன்றவை அனுபவிக்க அருளப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் அவருடனேகூட "சிலுவையிலறையப்படுவதையும்", "கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" என்று இதை உறுதிசெய்கிறார்.(கலா2:20, பிலிப்1:29)
நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற அழைக்கப்பட்டபடியால் நம்முடைய எல்லா கஷ்டங்களிலிருந்தும் நம்மை விலக்குவது என்பது தேவனுடைய சித்தமல்ல என்றறிவோம். ஆகவே நம்முடைய அழிவுள்ள மாமிச சரீரத்தில் இயேசுவைப்போல் தேவனுடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்பதே நம்முடைய எண்ணமாக இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு நாம் உலகப்பிரகாரமான ஆசீர்வதங்களை அனுபவிப்பது தேவனுடைய சித்தமாக இருக்கக்கூடும்; ஆனால் நம்முடைய ஜெபங்கள் இதற்காகவே இல்லாமல் அவருடைய சித்தம் நடப்பதற்காகவென்று இருக்கவேண்டும்.
இயேசு இந்தக் காரியத்தைக்குறித்து சீஷர்களிடம் விரிவாகக் கூறுகையில் அவர்கள் தன்னிலும் தன்னுடைய வார்த்தைகள் அவர்களிலும் நிலைத்திருந்தால், அவர்கள் கேட்பது எதுவானாலும் அது அவர்களுக்கு செய்யப்படும் என்றார்.(யோவா15:7) இங்கு ஒருவேளை நாம் தேவனிடம் நாம் விரும்புகிற, நினைக்கிற எல்லா காரியங்களையும் கேட்க உறுதியளிக்கப்பட்டதாகத் தோன்றும். ஆனால் அது அப்படியல்ல.
ஆண்டவரது இந்த வசனத்தில் இதோடு ஒரு நிபந்தனை சேர்க்கப்படுவதை கவனிக்கவும்.- "நீங்கள் என்னிலும் என்னுடய வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்". கிறிஸ்துவில் நிலைத்திருப்பது என்பது அவர் தலையாயிருக்க நாம் அவரது ஒரு அவயமாக இருப்பதே. இதற்கு அவருடைய சிந்தை நம்முடைய சிந்தையாகவேண்டும், அவருடைய திட்டங்கள் நம்முடைய திட்டங்களாக வேண்டும். நம்முடைய சுய சித்தங்கள் முழுமையாக இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டிருந்தால் நமக்கு சுயமாக எந்த ஒரு சித்தமும் இருக்காது. எனவே நம்முடைய ஜெபங்கள் நாம் விரும்புவதைக் கேட்கும் விண்ணப்பங்களாக இல்லாமல் தலையாகிய கிறிஸ்துவின் சித்தத்துடன் இசைவாக இருக்கும். இவ்வாறு தேவ சித்தத்துக்கு இசைவாக ஜெபிக்கும்போது அனுகூலமான பதில்கள் கிடைப்பது நிச்சயம். இயேசு ஒரு முறை சீஷர்களிடத்தில் சொல்லிய காரியம் பிதாவினிடத்தில் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்கு தேவன் பிரியமுள்ளவராக இருக்கிறார் என்றார்.(லூக்11:13) தேவ ஆவியால் நிரப்பப்படுதல் என்பது நம்முடைய சிந்தையில் அவருடைய யோசனைகள் மேலோங்கியிருக்கவும், நம்முடைய வாழ்க்கை அதைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பதாகும். அப்பொழுது தேவன் நமக்குக் கொடுப்பதற்காக வைத்துள்ள வாக்குத்தத்தங்களைத் தவிர வேறு ஆசீர்வதங்களை நாம் கேட்க மாட்டோம். அதனால் ஒருவருடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்குமா என்ற கேள்வியே எழும்பாது.


உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக

"ஆண்டவரே எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்" என்ற சீஷர்களின் வேண்டுதலுக்கு இயேசு நாமெல்லரும் அறிந்த கர்த்தருடைய ஜெபத்தைக் கொடுத்தார். இந்த மாதிரிஜெபத்தில் எதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுருக்கமான ஜெபத்தில் முக்கியமான பகுதி தேவனை சரியான வகையில் அணுகும் முறை ஆகும் - "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்ப்டுவதாக" (லூக் 11: 12). வேதத்தில் ஆதாம் தேவனுடைய குமாரன் (தமிழில் தேவனால் உண்டானவன் என்றுள்ளது) என்று அழைக்கப்படுகிறான். (லூக் 3:23,38) ஆனால் அவன் பாவம் செய்தபோது இந்த மகன் ஸ்தானத்தை இழந்து தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளானான். ஆதாமின் பிள்ளைகளான முழு மனுக்குலமே அதேபோல தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போனதால் அவர்கள் தேவனை "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே" என்று அழைக்க முடியாது. இந்த சலுகை பாவத்திலிருந்து மனம் திரும்பி, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய சித்தத்துக்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்தவர்களுக்கே உரியதாகும். இவர்களே தேவனுடைய புத்திர சுவீகாரத்தின் ஆவியைப் பெற்றுக்கொண்டு அவருடைய பிள்ளைகளானவர்கள்.
தேவனுடைய பிள்ளைகளானதால் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதே இவர்களுடைய முக்கியமான விருப்பமாக இருக்கும். ஆகவே வார்தையிலும், செய்கையிலும் இவர்களது மனோபாவம் உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்பதாக இருக்கும். தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவது என்பது வேதத்தில் இயேசு சொன்னதைப் போலவே ஜெபத்தில் தேவனை அணுகும் முறையாகும். மேலும் இயேசு தம்முடைய நாமத்தில் மட்டுமே ஜெபங்கள் ஏறெடுக்கப்பட வேண்டும் என்று விவரிக்கிறார்.(யோவா15:16)
இதற்கு ஒரு காரணம் உண்டு. நியாயமான தண்டணைக்குட்பட்ட மனுக்குலத்தின் உறுப்பினர்களாக நாம் இருப்பதால் நமக்காக வாதாடும், பரிந்துபேசும் இயேசுவல்லாமல் நாம் தெய்வீக கிருபாசனத்தின் முன் நிற்க முடியாது. ஆனால் அவருடைய நாமத்தினாலும், சிந்தப்பட்ட ரத்தத்தினாலுண்டான தகுதியினாலும் நாம் தைரியமாக கிருபாசனத்தண்டையில் சேர்ந்து மன்னிப்பையும், பரமபிதா வாக்குத்தத்தம் செய்த மற்ற ஆசீர்வாதங்களை அடையவும் சலுகை பெற்றுள்ளோம். அவருடைய நாமத்தை சரியான விதத்தில் உயர்த்துவோமானால் இயேசுவல்லாமல் வேறெந்த வகையிலும் அவரை அணுக முயற்சிக்க மாட்டோம். 
நாம் கர்த்தருடைய ஜெபத்தின் மாதிரியை பின்பற்றுவோமானால், நம்முடைய வேண்டுதல்கள் நமக்கென்றே இல்லாமல் அவை மற்றவர்களுடைய ஆசீர்வதத்திற்கென்றே இருக்கும். இது முதல் விண்ணப்பத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத் 6:10) இந்த விண்ணப்பத்தின் பதிலானது காலாகாலமாக இதற்காக ஜனங்கள் செய்துவந்த ஜெபத்துக்கு சரியான பதிலாக இருக்கும். அந்த பதில் ஜனங்களின் நியாயமான விருப்பத்தை திருப்தி செய்யும். அது சமாதானம் மற்றும் ஆரோக்கியம் மட்டுமன்றி யாரெல்லாம் தேவ ராஜ்ஜியத்தின் நீதியுள்ள நியமங்களுக்கு கட்டுப்ப்டுகிறார்களோ அவர்களுக்கு நித்திய ஜீவனைத்தருகிறதாகவும் இருக்கும்.

மனுக்குலம் எந்த ஆசீர்வாதங்களுக்காக ஏங்கித் தவித்துக் -கொண்டிருக்கிறதோ, எதற்காக கோடாகோடி மக்கள் ஜெபிக்கிறார்களோ இவைகளெல்லாம் அவருடைய ராஜ்ஜியத்தில் கொடுக்கப்படும் என்று தேவனால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் வாக்களித்திருக்கிறார். இவ்வாக்குறுதிகளில் மரித்தோரின் உயிர்த்தெழுதல் உட்பட ஜனங்களுக்கு நிச்சயமாக கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களின் அனேக காரியங்களை காணமுடியும். இல்லை, தேவன் ஜனங்களின் துன்பங்களை அறியாமலோ அல்லது அவர்களுடைய அபயக்குரலுக்கு செவியடைத்துக்கொள்ளவோ இல்லை; மாறாக ஏற்றவேளையில் அவருடைய பதில் வரும்போது அது அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திராத வண்ணம் இருக்கும்.

இப்போது மீண்டும் அந்த போருக்குச்சென்ற தன்னுடைய மகனுடைய பாதுகாப்புக்காக ஜெபித்த தாயின் நிலையை எடுத்துக்கொள்வோம். அவள் அவனை மிகவும் நேசிப்பதால் அவன் பாதுகாப்பாக வீடு திரும்புவதைத்தவிர வேறெதுவும் அப்பொழுது அவளுக்கு முக்கியம் அல்ல. ஆனால் அவன் வராததால் அவளுடைய முதல் எண்ணம் தேவன் இதைப்பற்றியெல்லாம் அக்கரையில்லாதவர், இரக்கமற்றவர் என இருந்திருக்கலாம். தேவன் அவள் இதுவரை நினைத்தே பார்த்திராத ஒரு நித்தியமான 'வீடுதிரும்புதலை' வைத்திருக்கிறார் என்பதை அவள் விசுவாசித்திருப்பாளானால் அவளது எண்ணம் எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும்! 
அவளுடைய மகன் மரித்து நித்திரையடைந்தால் இந்தக் கஷ்டங்களுக்கும் துன்பத்துக்கும் தப்பியிருக்கலாம் என்று ஒரு தாய் அறியாமலிருக்கலாம். மேலும் தாய், மகன் இரண்டுபேருமே ஒரு மரித்துக்கொண்டிருக்கும் சந்ததியின் உறுப்பினர்களே; நித்தியத்தின் நீளத்தை ஒப்பிடும்போது யுத்தத்தில் மரிப்பதற்கும் சிலவருடங்கள் கழிந்து வயதாகி மரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்பது மிகச்சொற்பமே. இந்த ஒரு நிலையிலிருந்தே நாம் ஜெபத்தைப்பற்றியும் தேவன் நம் விண்ணப்பங்களுக்கு பதில் தரும் முறையையும் நோக்கவேண்டும்.
நாம் தேவனை நோக்கி ஜெபிக்கிறோம் என்ற உண்மையே நாம் அவருடைய ஞானம், வல்லமை மற்றும் அன்பானது நம்மைக்காட்டிலும் மகா பெரியது என்பதை நம்புவதன் அத்தாட்சியாகும். என்றாலும் நாம் அனேக நேரங்களில் இதை மறந்துவிட்டு, நம்முடைய சொந்த குறைவுள்ள தன்மையால் நாம் நினைக்கிற வகையில் தேவன் பதிலளித்து நம் ஜெபத்தை கனப்படுத்தவில்லை என்று நினைத்துக்கொள்கிறோம். இந்த தண்டணைக்குட்பட்ட ஆயுசுக்காலம் மிகக்குறுகியது. நமக்கு உணர்வாற்றல் இருக்கக்கூடிய இந்தக் குறுகிய நேரத்துக்குள் காரியங்கள் சம்பவிக்கிறதா இல்லையா என்று நாம் நியாயம்தீர்க்கிறோம். ஆனால் இந்த வகையில் நாம் தேவனுடைய கிரியைகளை நியாயம்தீர்க்கக்கூடாது.
வேதம் தேவன் நித்தியத்திலிருந்து நித்தியம்வரை இருக்கிறார் என்று கூறுகிறது.(சங் 41:13, 190:2) நம்முடைய வேண்டுதலின்படியாகவே இருந்தால்கூட நம்முடைய குறுகிய வாழ்நாட்களுக்குள் அவருடைய திட்டத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியை செய்து முடிக்கவேண்டும் என்ற அவசியம் தேவனுக்கு இல்லை. நாம் அவருடைய சித்தத்தின்படியே இன்று சில சிறப்பான ஆசீர்வதங்களுக்காக ஜெபித்தாலும் நாளைக்கோ அல்லது மறுநாளோ பதில் கிடைக்கவில்லையென்றாலும் அவரில் நம்முடைய விசுவாசம் குறையாது ஆனால் பதில் கிடைத்தால் களிகூறுவோம். நல்லது, தேவனுக்கும் நாளைகள் உண்டு. அவருடைய நாட்கள் மணிநேரங்களிள் அளக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவை யுகங்கள், மற்றும் அவருடைய நாளை யுகமானது கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு ராஜ்ஜியமாகும், அதில் உலகம் நியாயப்படி வாஞ்ஜித்த, கோடிக்கனக்காணவர்கள் வேண்டிக்கொண்ட எல்லா ஆசீர்வாதங்களும் அளவில்லாமல் மனிதர்கள்மீது ஊற்றப்படும். அதை உணர்ந்துகொண்டு ஜனங்கள் இதோ இவரே நம்முடைய தேவன்: இவருக்காகக் காத்திருந்தோம்...இவருடைய இரட்சிப்பினால் மகிழ்ந்து களிகூறுவோம்(ஏசா 25:9) என்பார்கள். 



-- Edited by soulsolution on Sunday 15th of August 2010 05:56:37 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"பரலோகத்தில் செய்யப்படுவது போல"


தேவன் தன்னுடைய சித்தத்துக்கு இசைவாக இல்லாத எந்த ஒரு ஜெபத்திற்கும் பதிலளிக்கமாட்டார் என்று ஏற்கனவே கற்றுக்கொண்டோம். எல்லா ஜெபங்களிலும் முதன்மையான ஜெபமாகிய கர்த்தருடய ஜெபத்தில் இந்த கோட்பாடு தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. அது தேவன் பூமியின் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்கிறது, அவர்கள் ஏங்கும் ஏதோ ஒருசில நல்ல காரியங்களை அல்ல மாறாக அவருடைய சித்தத்துக்கு இசைவான காரியங்களே. "உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்ன ஒரு அருமையான விதத்தில் அவருடைய சித்தத்துக்கு இசைவான காரியங்களைப் பற்றி நமக்கு கொடுத்துள்ளார்! தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறது; அதே போன்று பூமியிலேயும் செய்யப்படுவதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. பரலோகத்தில் தேவனுடைய சித்தம் செய்யப்படும் எல்லா வழிகளும் நமக்குத் தெரியாவிட்டாலும் தற்போது பூமியில் காணப்படும் தீமைகள் பரலோகம் என்று நாம் கூறும் அந்த ஆவிக்குரிய மண்டலத்தின் ஜீவிகளைப் பாதிக்காது என்று நிச்சயித்துக் கொள்ளலாம். 

பரலோகத்தில் யுத்தம் இல்லை. போர் என்ற ஒரு தீமை தெய்வீக சித்தத்துக்கு இசைவானது இல்லை. அப்படியானால், நாம் சமாதானத்திற்காக ஜெபிக்கவேண்டுமா? நிச்சயமாக! சமாதானத்துக்காக ஜெபிக்காமல் நாம் தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என ஜெபிக்கமுடியாதே. ஆனால் நம்முடைய சமாதானத்துக்கான ஜெபங்கள் சமாதானத்தைக் கொண்டுவரும் தேவனுடைய திட்டமான அவருடைய ராஜ்ஜியத்தின் திட்டத்தோடு ஒத்திருக்கவேண்டும். இயேசுவே அந்த அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பார். "கர்த்தத்துவம் (government) அவர் தோளின் மேல் இருக்கும்... அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும் அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை" என்று ஏசாயா எழுதுகிறார்.- ஏசா 9: 6, 7. போரில்லா உலகத்துக்காக ஏங்கும் மனுக்குலத்தின் ஏக்கத்தை தேவன் பச்சாதாபத்தோடு நோக்குகிறார் என்பதில் எள்ளளவும் சந்த்தேகமில்லை. தவிர்க்கமுடியாத போர்ச்சூழலில் உலகநாடுகள் அழுத்தத்தின் உச்சத்திலிருக்கும்போது, இரு பிரிவினருக்குள் இருக்கும் ஜனங்கள் சமாதானத்துக்காக கட்டாயமாக ஜெபிக்க உணர்கின்றனர். போருக்கான பயமுறுத்தலை உண்டாக்கும் வேறுபாடுகள் ஒருவேளை தீர்க்கப்படலாம் அல்லது அது நடக்காமலேயே போகலாம், ஆனால் ஒரு நிரந்தரமான உலகசமாதானம் வரப்போகிறது என்று நாம் அறிவோம். இது ஏதோ தேசங்கள்கூடி சமாதானத்துக்கான ஒரு சூட்சுமத்தைக் கண்டுபிடிக்கப்போவதால் அல்ல மாறாக "உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக" என்ற ஜெபத்தின் பதிலான சமாதானப்பிரபு பூமியின் ஆட்சியைப் பெற்றுக்கொள்ளப்போவதாலேயே. 
கிறிஸ்துவின் அரசாங்கம் வேதத்தில் கர்த்தருடைய பர்வதம் என்று குறிப்பிடப்பட்டு மீகா 4:1-4ல் ஆனாலும் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதனிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்க்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாக மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமலும் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று என்று வாசிக்கிறோம்.

என்ன ஒரு அற்புதமான ஆயுத ஒழிப்புத்திட்டம்! அது தேவனுடைய திட்டமாகும் மேலும் நாம் சமாதானத்துக்காக, தேசங்கள் ஆயுதங்களை ஒழிக்க ஜெபிக்கும்போது தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு, அவருடைய சித்தத்துக்கு இசைவானதாக அவருடைய ராஜ்ஜியத்தின் வாயிலாக பதில் கொடுப்பார் என்ற நிச்சயத்தோடு செய்வோமாக. அவர் யுத்தத்தை ஓயப்பண்ணுகிறார் என்று தீர்க்கதரிசனமாகக்

"இனி மரணமில்லை"

பரலோகத்தில் சாவு என்பதே இல்லை. தேவன் அழிக்கப்போவதாக வாக்களித்துள்ள இந்த நோயும் மரணமும் நம்முடைய முதல் பெற்றோர்களின் பாவத்தினால் வந்த விளைவே. அப்படியானால் நமக்கு அருமையானவர்கள் கடுமையான நோய்வாய்ப்பட்டு துன்புறும் போது அவர்களுடைய ஜீவனை காக்கும்படிக்கு அவர்களுடைய ஆரோக்கியத்துக்காக ஜெபிப்பது சரியா? ஆம், ஆனால் அது ஆண்டவருடைய சித்தத்தின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும் மேலும் இந்த ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியில் எல்லோருக்கும் கிடைக்கும்வரை ஒரு வேளை நாம் ஜெபிக்கிறவர்களுக்கு ஆரோக்கியமும், ஜீவனும் கிடைப்பது அவர் சித்தமில்லாமலும் இருக்கலாம் என்ற அறிவோடும் இருக்கவேண்டும்.
எல்லா வியாதிகளும் அப்பொழுது சுகமாக்கப்படும் என்று நாம் அறிவோம். "வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் (அந்நாளில்) சொல்வதில்லை" (ஏசா.33:24) கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் ஒருசில ஆசீர்வாதங்களை விளக்கும்போது அப்.பவுல் எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்கு கீழாக்கிப் போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது. பரிகரிக்கப்படும் கடைசிச் சத்துரு மரணம்.(1கொரி.15:25,26) என்று கூறுகிறார். அப்.யோவான் தேவராஜ்ஜியம் பூமியில் ஸ்தாபிக்கப்படுவதை தரிசனத்தில் கண்டபோது, இனி மரணமில்லை என்று பகுத்தறிகிறார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை - வெளி.21:4
ஆகவே நாம் ஆரோக்கியத்துக்காகவும் ஜீவனுக்காகவும் ஜெபிக்கும்போது கிறிஸ்துவின் ஆயிரவருட அரசில் நமக்கும் நமக்கு அருமையானவர்களுக்கும் மாத்திரமல்ல தாழ்மையாகவும் கீழ்ப்படிதலோடும் தேடுகிற எல்லா மனிதர்களுக்குமே இந்த ஆசீர்வாதங்களை தேவன் வைத்திருக்கிறார் என்ற அர்த்தத்தை பற்றிக்கொள்ள வேண்டும். உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரகோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும்போது நாம் அவ்வாறு செய்கிறோம்.


"சத்துருவின் தேசத்திலிருந்து"

தேவனுடைய வழிகள், மற்றும் அவரது சிருஷ்டிப்புகளின் தேவைகளைப் பூர்த்திசெய்தல் போன்றவை மனித ஞானத்தில் தோன்றுபவைகளைக் காட்டிலும் எப்போதுமே மேலானதாக இருக்கிறது. நாம் ஆரோக்கியத்துக்காக, பாதுகாப்புக்காக, சமாதானத்துக்காக ஜெபிக்கிறோம் ஆனால் நமக்கருமையான மரித்துப்போனவர்கள் மீண்டும் நமக்கு வேண்டும் என்று ஜெபிப்பதற்கு யாராவது, எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஒருவருமில்லை! ஆனால் தேவன் அவரது திட்டத்தில் நாம் ஜெபிப்பதற்கும் மேலாக சென்றிருக்கிறார். மரித்தவர்களை மறுபடியும் திரும்பக் கொண்டுவருவதாக வாக்களித்திருக்கிறார்!
எத்தனை தாய்மார்கள் தங்களுடைய அருமையான பிள்ளைகளின் இழப்பால் இதயம் உடைந்துள்ளனர். இப்படி ஒருத்தி எரேமியா தீர்க்கதரிசியிடம் அனுப்பப்படுகிறாள். அவள் பெயர் ராகேல். எரேமியா ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது: ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்றும் நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள், உன் கிரியைகளுக்கு பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள் என்றும் எழுதுகிறார்.(எரே31:15,16)
மரணம் மனிதனின் மிகப்பெரிய எதிரியானாலும் சத்துருவான மரண தேசத்திலிருக்கும் அனைவரையும் மீட்டு மீண்டும் வாழ்வளிப்பது தேவனுடைய திட்டமாகும். உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக என்ற நமது விண்ணப்பத்தில் கிறிஸ்துவின் ஆயிரவருட அரசில் பிரேதக்குழியில் மரண நிலையில் இருக்கும் அனைவரும் மனுஷகுமாரனின் சத்தம் கேட்டு புறப்பட்டு வருவார்கள் - யோவான் 5: 28,29 என்பதும் அடங்கும். மனிதனை மீண்டும் ஜீவனுக்கு கொண்டுவருவதை அப் பேதுரு நிறைவேறித்தீருதல் என்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைத் தொடர்ந்து உலகத்தோற்றமுதல் தம்முடைய பரிசுத்தத் தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித்தீரும் காலங்கள் என்றும் விளக்குகிறார் (அப்.3:19-21)

திராட்சைச்செடி மற்றும் அத்திமரத்தின் கீழ்

அனேகர் செழிப்பு வேண்டி அல்லது குறைந்தபட்சம் பொருளாதார பாதுகப்பு வேண்டி ஜெபிக்கிறார்கள். குறைந்து வரும் வாழ்நாட்களை நோக்கும்போது அனேகமாக எல்லாருக்குமே ஒரளவு பயம் அல்லது உறுதியற்றதன்மை வந்துவிடுகிறது. சம்பாதிக்க முடியாத வயதை அடையும்போது நாம் நிதியளவில் பாதுகாப்பாக இருப்போமா? தேவனில் நம்பிக்கையுள்ள, அவரை ஒரு அன்பான, கரிசனையுள்ளவராக எண்ணும் யாருமே தன்னுடைய நிதிப்பாதுகாப்புக்காக ஜெபத்தில் அவரையே சார்ந்திருப்பாரென்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
அதுபோல உலகத்தில் கோடா கோடி மக்கள் நிதிபாதுகாப்பின்றி இருக்கிறார்கள் என்றும் நாம் அறிவோம். லட்சக்கணக்கானோர் உண்மையில் சரியான உணவு, உடை, இருப்பிடம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். தேவன் இவர்கள் எல்லாரையுமே நேசிக்கிறார், இவ்வாழ்வில் நமக்கு உகந்த வகையில் நம்மை அவர் ஆசீர்வதித்திருப்பதை நாம் மெச்சிக்கொண்டாலும் ஏற்ற காலத்தில், ஏற்ற வழியில் எல்லா ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கும் அவர் அன்பாக எல்லா தேவைகளையும் சந்திக்கப்போவதில் நாம் பெருமகிழ்ச்சியடைய வேண்டும். அதைச் செய்வதாகத்தான் அவர் வாக்களித்துள்ளார்!
தேவனுடைய வாக்குத்தத்தங்களில் பொருளாதார பாதுகாப்பு என்பது ஒருவரது திராட்சத்தோட்ட்டம் மற்றும் அத்திமரத்தின் கீழ் இருத்தல் என்ற எண்ணத்தின் அடையாளமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி கூருகிறார் "எல்லா மனிதரும்" இவ்வண்ணமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள், மேலும் கர்த்தருடைய சந்தித்தல் முழுமையாக இருப்பதால் பயம் என்பதே இருக்காது எனென்றால்"பயப்படுத்துவார் இல்லாமல் இருப்பார்கள்." (மீகா.4:4).

கூறுகிறார் தாவீது. சங்.46:9



-- Edited by soulsolution on Sunday 15th of August 2010 06:04:04 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?


நல்ல கட்டுரைகளுக்கு எந்த பதிவுகளையும் காணோமே?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜெபம் என்பது நமக்கு நடந்த, நடக்கும் கரியங்களுக்கு தேவனை துதிப்பதே ஆகும். நமக்கு என்ன தேவை என்பது தேவனுக்கு தெரியும். தமது சித்தத்தின்படியே அவர் செய்கிறார். அந்த செய்தலுக்கு நன்றி கூறுவதும், அதை செய்யும் தேவனை துதிப்பதுமே சிறந்த ஜெபம். "தேவன் எங்களுடன் பேசுகிறார்" கூட்டனியின் தலைவர்கள், பெரிய ஊழியர், தேவ மனிதர்களிடம் தேவன் இலங்கையில் சமாதானம் திரும்பும் என்றும் தமிழர்கள் அங்கே போரின்றி வாழ்வார்கள் என்று கள்ள தீர்க்கதரிசினம் சொன்னவர்கள் இன்று எங்கே. அவர்களிடம் கேள்வி கேட்க யாருக்காவது தைரியம் தான் இருக்கிறதா. இந்த கள்ள தீர்க்கதரிசிகள் ஜெபம் என்கிற பெயரில் "சாதாரன விசுவாசிகள்"களை ஏமாற்றிக்கொண்டு இருப்பது தெரியவில்லையா. இன்று எப்படி பட்ட சமாதானத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் என்று உலகத்திற்கே தெரியும். இந்த கள்ள தீர்க்கதரிச்களை தேவ மனிதர்கள் என்று சொல்லுபவர்களும் அறிவார்கள்.

உலகத்தில் நடக்கும் அனைத்துமே தேவனின் அனுமதியின்றி நடப்பதில்லை. மனிதனின் ஜெபங்கள் தேவனின் திட்டத்தையோ, சித்தத்தையோ மாற்றுவதில்லை. அதற்காக தான் வேதம் சொல்லுகிறது, நீங்கள் தேவனின் சித்தத்தின்படி ஜெபியுங்கள் என்று. ஆனால் இன்று பெயர் புகழ் பனத்திற்காக ஜெபம் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிரோம் என்றும், தேவன் எங்களுடன் பேசுகிறார் என்றும் கள்ள தீர்க்கதரிசிகள் உருவாகியிருக்கிறார்கள். இன்னும் எத்துனை காலம் தான் இவர்கள் ஏமாற்றுவார்களோ. ஏன் இவர்களின் ஜெபங்கள் பஞ்சத்தில் அடிப்பட்டிருக்கும் சொமாலியா போன்ற நாட்டில் வேலை செய்யாதோ!! அங்கு போய் சொன்னால் இவர்கள் விமான செலவிற்கும், இவர்கள் வாரிசுகள் உட்கார்ந்து சாப்பிட இவர்களுக்கு பணம் கிடைக்காதே!! என்ன கொடுமை இது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 9
Date:
தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?


கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. என்னை பொறுத்த வரை இது ஒரு கிருத்துவனுக்கு ஏற்ற கட்டுரை என்ற அளவில் உண்மையாக உள்ளது.
ஜெபம் தேவனுடைய முடிவை மாற்றுவதில்லை., ஜெபிப்பவனையே மாற்றுகிறது என்று அனேக தேவ மனிதர்கள் சொல்லியுள்ளனர்.


-- Edited by SANDOSH on Thursday 19th of August 2010 07:47:35 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?


அது என்ன தேவ மனிதர்கள், தேவ செய்தி எல்லாம்! தயவு செய்து மனிதர்களை தேவனாக உயர்த்தவோ, மனிதர்களின் செய்தியை தேவனே கொடுக்கும் செய்தியாக உயர்த்த வேண்டாமே! பாவிகளில் பிரதான பாவி நான் என்கிற பவுல் தாழ்ச்சி எங்கே, இப்படி தேவ மனிதர்கள் கொடுக்கும் தேவ செய்தி என்கிற விளம்பதாரர் எங்கே? இதுவா கிறித்துவம்! இதுவா தாழ்ச்சி! ஒரு அடிப்படை சீஷனாக இருக்க தகுதி இல்லாதவர்களை ஏன் தேவ மனிதர்கள் என்று சொல்ல வேண்டும்!?

தேவ சித்தம் அறிந்து ஜெபிப்பது தான் மனிதனுக்குள் வரும் மாற்றம், ஆனால் ஒருவன் தன்னையே தேவன் என்கிற அளவிற்கு உயர்த்த என்னினால், அது ஜெபமாக இருக்க முடியாது!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எல்லா ஜெபம்க்களுக்கும் தேவன் பதிலளிக்கிறார் அவர் பாணியில். நம் ஜெபங்கள் தேவனுடைய திட்டங்களை ஒருபோதும் மாற்றுவதில்லை என்பதை உணர்ந்தோமானால் நன்றி சொல்லி மட்டுமே ஜெபிப்போம்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard