kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிந்ததும் அறியாததும்...


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: அறிந்ததும் அறியாததும்...


bereans wrote:
//
//யார் இயேசுவின் சீஷர்கள்?//

யோவான் 8:31 நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

அப்படி என்றால் கிறிஸ்துவின் உபதேசம் நன்மை செய்வது மாத்திரம் தானா!!//

இக்கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நன்மை செய்வது மட்டுந்தான் கிறிஸ்துவின் உபதேசம் என நான் சொன்னேனா?

எத்தனையோ உபதேசங்களைச் சொன்ன இயேசுதான் மத்தேயு 25:31-46-ல் தமது இறுதி நியாயத்தீர்ப்பைப் பற்றி சொல்லி, அதில் நன்மை செய்தவர்கள் நித்தியஜீவனைப் பெறுவார்கள் என்றும், நன்மை செய்யாதவர்கள் நித்திய ஆக்கினையைப் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே உங்கள் கேள்விகளை அவரிடமே கேளுங்கள்.

என்னைப் பொறுத்தவரை வேதாகமத்தின் எல்லா வசனங்களையும் ஓரளவு ஒருங்கிணைத்து ஒரு தெளிவான கருத்தை எந்தக் குழப்பமுமின்றி புரிந்துகொள்ள முடிகிறது. நீங்களும் அதை புரிந்துகொள்ள வேண்டுமெனில், 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுபவரில் ஒரு பிரிவினர் பாவமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை முதலாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.

உயிர்த்தெழுதலுக்குப் பின்னரும் பலரது பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என்பதை வசன ஆதாரத்துடன் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளேன். ஆனாலும் அதை ஏற்க மனமின்றி ஏதாவது சாக்குப்போக்கு சொல்கிறீர்கள். இறுதியாக எனது வாதத்திற்கு ஆதாரமான பல வசனங்களைத் தருகிறேன். அவற்றை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 18:33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.

மாற்கு 11:26  நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். 26 நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்.

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்;

மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

(சகோ.soulsolution அவர்களே! “யாக்கோபு 2:13-ம் வசனம் தேவனுக்கும் பொருந்துமா” எனும் உங்கள் கேள்வி, பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணமா என்பதை சற்று ஆராய்ந்து பாருங்கள்.)

எபிரெயர் 6:4-8 ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27  நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். 21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.

ஏசாயா 26:10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

(இவ்வசனத்தைக் காட்டினால், இது சாத்தானைக் குறிக்கும் வசனம் என்று சொல்லி சமாளிக்கிறீர்கள். ஆனால் ஆயிர வருஷ அரசாட்சியில்தான் சாத்தான் கட்டப்பட்டிருப்பானே! பின்னர் எப்படி நீதியுள்ள தேசத்தில் அவன் அநியாயஞ்செய்யமுடியும்?

நீதியுள்ள தேசத்தில் சாத்தானுக்கும் நீதி கற்றுக்கொடுக்கப்பட்டது என்கிறீர்களா? அதான் “சாத்தான் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று, அவனிடத்தில் தமக்கு ஒன்றுமில்லை” என இயேசு சொல்கிறாரே (யோவான் 16:11; 14:30)? பின்னர் எப்படி சாத்தானுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க முடியும்?)

1 யோவான் 5:16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

இவ்வசனத்தைச் சொன்னால், மரணத்துக்கேதுவான பாவம் செய்தவன் சாத்தான் மட்டுமே என்கிறீர்கள். இவ்வசனத்தின் முதல் வாக்கியத்தைக் கூர்ந்து படியுங்கள். மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால் .... , என அவ்வசனம் தொடங்குகிறது. இதன் அர்த்தமென்ன? ஒருவனின் சகோதரன் மரணத்திற்கேதுவான பாவமும் செய்யலாம், மரணத்திற்கேதுவல்லாத பாவமும் செய்யலாம் அப்படித்தானே? எனவே இவ்வசனம் மனிதரைக்குறித்துதானே கூறுகிறது? இந்த சாதாரண விஷயத்தைகூட உங்களால் புரிய முடியவில்லையா?

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே வேண்டுதல் செய்யவேண்டும் எனச் சொன்னால், மரணத்துக்கு ஏதுவான பாவத்தைச் செய்தவர்களும் இருப்பார்கள், அவர்களுக்காக வேண்டவேண்டாம் என்பதுதானே யோவானின் ஆலோசனையாக இருக்கும்? சிந்தித்துப் பாருங்கள் சகோதரரே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டன; அந்த அக்கினிக் கடல் 2-ம் மரணமாயுள்ளது என்பதே.//

சரி அந்த அக்கினிக் கடல் 2ம் மரணமாயுள்ளது என்றாலும் அதற்குள் தள்ளப்பட்டது மரணமும் பாதாளமும் என்று தானே வசனம் சொல்லுகிறது!!

வெளி. 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

இனி மரணமில்லை என்று சொல்லப்பட்டது தான் மரணத்தையும், பாதாளத்தையும், அதாவது கள்ளறைகளும், என்றென்றைக்கும் அழித்துப்போடுவார் என்கிறது வசனம்!!

சங்கீதப்புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் உயிர்த்தெழுதலுக்கு பின் நடப்பது என்று எடுத்துக்கொள்கிறீர்கள்!!

//1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுபவரில் ஒரு பிரிவினர் பாவமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை முதலாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.//

ஒரு பிரிவினர் பாவமுள்ளவர்களாக் இருப்பார்கள் என்பதே உங்கள் கருத்து அதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்!! மாறாக வசனம் சொல்லுவதை ஏற்றுக்கொள்வோமே,

1 கொரிந்தியர் 15:42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; 43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

மரித்தவர்கள் உயிர்தெழுவதில் நீங்கள் தான் இரு பிரிவினர் என்று சொல்லுகிறீர்கள், ஆனால் வசனம் இப்படி தானே சொல்லுகிறது!!

அறுப்புண்டு போவது, அழிந்து போவது, இல்லாமல் போவது போன்றது அனைத்தும் மாம்சத்துக்குறியது மாத்திரமே, அது தாவீதின் வாழ்க்கையில் அப்படியே நடக்கவும் செய்தது!! நீங்கள் அழிவை நாடி அப்படி பட்ட வசனங்களை தேடுகிறீர்கள், நாங்கள் ஜீவனை கொடுக்கும், வசனங்களை தேடுகிறோம்!!

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இந்த வசனத்திற்கு தான் எழுதியிருந்தேனே!! கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் உள்ளது இந்த வசனம்!! கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் எப்படி கிறிஸ்துவின் நிலை மாறியதோ, அப்படியே தான் மரித்தோரின் உயிர்த்தெழுதலும்!! தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்பது என்றென்றைக்கும் மன்னியாதிருப்பார் என்பது இல்லை சகோதரரே!!

பழைய ஏற்பாட்டு காலத்தில் மிருகப்பலி, பின்பு அது நிறுத்தப்பட்டது, அதன் பின் கிறிஸ்துவின் பலி அதினால் அனைவருக்கும் உயிர்த்தெழுதல், பாவ சரீரத்துடன் அல்ல, ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணமாக மாத்திரமே இருக்க முடியும்!! கிறிஸ்துவின் பலியால் ஜீவன் தான் உண்டாகுமே தவிர, மீண்டும் பாவத்தில் உயிர்த்தெழுவது நியமனத்தை மாற்றி எழுதுவதாகும்!! பாவத்துடன் உயிர்த்தெழ செய்வதில் என்ன பிரயோஜனம் இருக்க முடியும்??

ஏசாயா 1:18 வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

அழிவை குறித்து வசனங்கள் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை, ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் அது நிரந்தர அழிவிற்கான வசனங்கள் அல்ல!! ஏனென்றால் உயிர்த்தெழுதலில் நீதியை கற்றுக்கொண்டு இந்த பூமியே கர்த்தரை அறிகிற அறிவால் நிறம்ப போகிறதை நிச்சயமாக நாம் பார்ப்போம்!! தேவன் ஆதாமை படைத்து அப்படி தான் ஆசீர்வதித்தார்,

ஆதியாகமம் 1:28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

இவை இன்னும் நிறைவேறவில்லையே!! மாறாக பூமி சபிக்கப்பட்ட பூமியாக தானே மாறியது!! தேவன் சொன்ன அந்த ஆசீர்வாதம் நிறைவேறியே தீருமே!!

//இவ்வசனத்தைக் காட்டினால், இது சாத்தானைக் குறிக்கும் வசனம் என்று சொல்லி சமாளிக்கிறீர்கள். ஆனால் ஆயிர வருஷ அரசாட்சியில்தான் சாத்தான் கட்டப்பட்டிருப்பானே! பின்னர் எப்படி நீதியுள்ள தேசத்தில் அவன் அநியாயஞ்செய்யமுடியும்//

இதில் சமாளிப்பதற்கு ஒன்றும் இல்லையே!! நாங்கள் சொல்லுவது உங்களுக்கு உடன்படாததினால் நாங்கள் சமாளிக்கிறோம் என்று சொல்லுவது தவறு!! சாத்தான் கட்டப்பட்டிருப்பான் என்றால், சங்கிலி போட்டு, கண்ணையும், வாயையும் கட்டி இருட்டான ஒரு அறைக்குள் உட்காரவைப்பதா!! ஆவிக்குறிய ஜீவியை கட்டி வைப்பது எப்படி? சாத்தானின் தந்திரங்களும் அவனின் வல்லமைகளும் செயலற்று போக செய்வது தான் அவனை கட்டி வைப்பதே தவிர, ஏதோ அவன் கை காலை கட்டி அவனை மூலையில் உட்கார வைப்பது அல்ல!! அவன் இருப்பான், அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருப்பான்!! கிறிஸ்துவின் போதனையை கேட்டுக்கொண்டு தான் இருப்பான், ஆனாலும் அவன் நியாயம் தீர்க்கப்பட்டுவிட்டான், அவன் மாறுவதில்லை, அவன் அநீதியின் செயலில் நிலைத்திருந்து 1000 வருடங்களின் முடிவில் ஜனங்கலை மோசம் போக்க பிரயாசிப்பான்!! இது தான் நீதியின் தேசத்தில் அநியாஞ்செய்வதாகும்!! அப்ப மாத்திரம் அல்ல, அவனின் அநீதி தேவனின் தேசத்திலேயே நடந்தேறியது, தன்னை தேவனை விட உயர்வாக உயர்த்த சிந்தித்தது, இதை விட வேறு என்ன அநீதி வேண்டும்!!

//பின்னர் எப்படி சாத்தானுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க முடியும்?//

சாத்தானுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று யார் சொன்னார்கள்!!

வசனம் இப்படியும் தான் சொல்லுகிறது,

I தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

இனி உடனே எல்லா மனுஷர்களும் என்றால் முதலில் "மரணத்துக்கு ஏதுவான பாவம்" செய்வோரை தேடி அவர்களை மாத்திரம் விட்டு விட்டு ஜெபிக்க சொல்லுகிறீர்களா!! மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்தவன் சாத்தான் ஒருவனே!! இது அவனுக்கு உண்டான தீர்ப்பு:

எசேக்கியேல் 28:18 உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

வேதத்திலிருந்து எங்களுக்கு உண்டான புரிந்துக்கொள்ளுதல், தேவன் அன்பானவர், அவரின் அன்பின் ஞானம் யாரிடமும் இல்லை, அவரின் வழிகளும், ஆலோசனைகளும் வித்தியாசமானவைகள்!!

நீங்கள் எத்துனை அழிந்துபோவதாக சொல்லும் வசனம் எடுத்து சொன்னாலும், அதற்கு அதிகமாக தேவனின் அன்பை வெளிப்படுத்தும் ஜீவனுக்குண்டான வசனங்களை நான் எடுத்து தருகிறேன்!! ஆனால் அப்படி வசனம் எடுத்து சொன்னால் நீங்களும் தான் அதற்கு பதில் தராமல் அழிவிற்கான வசனங்கள் முக்கியமாக, மத். 5:7; 6:13,14; 25:31 46!! அதிலும் அக்கினி மற்றும் ஆக்கினை என்றால் என்ன என்று கேட்டேன் அதற்கும் பதில் இல்லையே சகோதரரே!!

சகோதரரே, இது தான் தேவனின் நினைவுகள், அழிவை குறித்து தான் மனிதர்கள் (கிறிஸ்தவ மண்டல மனிதர்கள்) பேசியும் போதித்தும் வருகிறார்களே, நீங்களுமா!!??

எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தீமைக்கு யார் காரணம்?

வசனம் என்ன சொல்கிறது?

பார்க்கலாம்.

"ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்." ஏசா 45:7

"உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?." புலம்பல் 3:38

"... மனுப்புத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்குநியமித்திருக்கிறார்." பிர 1:13

"... ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்குப் பண்ணுகிறதற்கு அவனுக்கு அதிகாரமில்லையோ?" ரோம 9:18‍‍ ‍‍‍‍‍முதல் 25

"... நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகாசங்காரத்தையும் வரப்பண்ணுவேன்." எரே 4:6

"... நான் அவர்கள் மேல் ... தீங்கை வரப்பண்ணுவேன்." எரே 6:19

" ... அப்பொழுது அது(பொய்யின் ஆவி), நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்(கர்த்தர்):... போய் அப்படிச் செய் என்றார்." 1இராஜா 22:22

"தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும்,அவர்க
ளுடைய இருதயத்தை மாற்றினார்." சங்105:25

"... இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்..." எரே18:11

"கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் ப்யப்படாதபடிக்கு கடினப்படுத்துவானேன்?..." ஏசா 63:17

"...இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்...." யோசு 23:16

"... கர்த்தருடைய செயல் இல்லமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?" ஆமோஸ் 3:6

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்.... இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்த்ரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் .... கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு15:2,3.?

 

நன்மை செய்யாதவர்களை பாவிகள் என்கிறீர்கள். தீமைகளை திட்டமிட்டு செய்துவிட்டு அதைச் செய்கிறவர் நானே என்று தேவன் கூறுவதாக மேற்படி வசனங்கள் சொல்கின்றன. உங்கள் வேதாகமத்திலும் அப்படியேதான் இருக்குமென்று நம்புகிறேன்.

உங்கள் கூற்றுப்படி முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் தேவனே.

ஆனால் இதெற்கெல்லாம் நீங்கள்தான் பதிலே சொல்ல மாட்டீர்களே?



-- Edited by soulsolution on Tuesday 28th of June 2011 10:43:41 PM



-- Edited by soulsolution on Tuesday 28th of June 2011 10:48:32 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//நீங்கள் அழிவை நாடி அப்படி பட்ட வசனங்களை தேடுகிறீர்கள், நாங்கள் ஜீவனை கொடுக்கும், வசனங்களை தேடுகிறோம்!!//

இது உங்கள் கருத்து. இக்கருத்தை எதிர்த்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை, அது எனக்கு அவசியமுமில்லை. ஏனெனில் இக்கருத்துக்கும் நம் விவாதத்திற்கும் சம்பந்தமில்லை. சரி, உங்கள் கருத்துப்படி நான் அழிவை நாடுகிறேன், நீங்கள் ஜீவனைக் கொடுக்க முயல்கிறீர்கள், அப்படித்தானே? ஆனால் நாம் இருவர் விரும்புவதும் நடக்கப்போவதில்லையே! வசனம் சொல்வதுதானே நடக்கப்போகிறது?

எனவே நான் காட்டுகிற அழிவைச் சொல்லும் வசனங்களின்படி ஜனங்கள் அழியவும் நேரிடும்; நீங்கள் காட்டுகிற ஜீவனைக் கொடுக்கும் வசனங்களின்படி ஜனங்கள் ஜீவனைப் பெறவும் நேரிடும். ஒருவேளை நான் காட்டின வசனங்களால் ஒருசில ஜனங்கள் உணர்வடைந்து அழிவுக்குத் தப்ப நேர்ந்தால், உங்கள் விருப்பப்படி அந்த ஜனங்களுக்கு ஜீவன் தானே கிடைக்கப்போகிறது? எனவே உங்கள் விருப்பம்தானே நிறைவேறப்போகிறது? எனவே அமைதியாக இருந்து வேடிக்கை பாருங்கள்.

ஒருவேளை நீங்கள் காட்டுகின்ற “ஜீவனைக் கொடுக்கும்” வசனங்களை மட்டுமே நம்பிவிட்டு, நான் காட்டுகிற “அழிவைச் சொல்லும்” வசனங்களைக் கண்டுகொள்ளாமல் ஒருசில ஜனங்கள் துணிகரமாக அழிவுக்கேதுவான பாவங்களைச் செய்து அழிந்துபோனால், ஜீவனைக் கொடுக்கும் உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமே! எனவே அப்படி நடக்காதபடிக்கு, நீங்கள் அமைதியாக இருந்து வேடிக்கை பாருங்கள்.

ஒருவேளை வேதாகமத்தில் “ஜீவனைக் கொடுக்கும் வசனங்கள் மட்டுமே உள்ளன, அழிவைச் சொல்லும் வசனம் எதுவுமே இல்லை” என உங்களால் நிரூபிக்க முடிந்தால் நிரூபியுங்கள். அதன்பின் நான் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கிறேன். சரிதானா சகோதரரே!

அழிவைச் சொல்லும் வசனங்கள் எதுவுமே இல்லை என உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், “நீ அப்படி விரும்புகிறாய், நான் இப்படி விரும்புகிறேன்” என்பது போன்ற தேவையற்ற கருத்துக்களைச் சொல்லாமல், நான் காட்டுகிற “அழிவைச் சொல்லும்” வசனங்களுக்கு எதிரான உருப்படியான விவாதத்தை வையுங்கள்.

இத்தளம் வசனங்களைச் சொல்லி விவாதிக்கிற தளமா? அல்லது எனது/உங்களது தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளைச் சொல்லி விவாதிக்கிற தளமா? ஒருவேளை தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளைச் சொல்லி விவாதிக்கிற தளமெனில், “கோவைபெரியன்ஸ்” எனும் பெயர் இத்தளத்திற்கு பொருத்தமற்றதாகிவிடும். ஏனெனில் வேதாகம பெரியன்ஸ், வேதவசனங்களைத் தான் ஆராய்ந்தனரேயொழிய, தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை ஆராயவில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//சங்கீதப்புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் உயிர்த்தெழுதலுக்கு பின் நடப்பது என்று எடுத்துக்கொள்கிறீர்கள்!!//

ஏன் இப்படி அபாண்டமாகச் சொல்கிறீர்கள்? “அனைத்தையுமா” சொன்னேன்? பழைய ஏற்பாட்டிலேயே பல வசனங்கள் 2-ம் மரணத்தைக் குறித்து கூறியுள்ளன எனச் சொல்லி, அதற்கு உதாரணமாக சங். 37:22-ஐத் தந்து, எனது விவாதத்தையும் வைத்தேன்.

முடிந்தால் எனது விவாதத்திற்கு எதிர் விவாதம் வைத்து, அவ்வசனம் தற்போதைய மாம்சத்தின் காலத்தில் நடக்கப் போவதைத்தான் குறிக்கிறது என நிரூபியுங்கள்.

அதை விடுத்து, “இப்படிச் சொல்கிறீர்கள், அப்படிச் சொல்கிறீர்கள்” என அபாண்டமாகச் சொல்வது, உங்கள் இயலாமையைத்தான் காட்டுகிறது. உங்கள் பார்வைக்காக சங். 37:22-ன்படியான எனது வாதத்தை மீண்டும் பதிக்கிறேன்.

//

சங்கீதம் 37:22 கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

இவ்வசனம் இம்மையில் பூமியைச் சுதந்தரிப்பதைக் குறித்தும் இம்மையில் அறுப்புண்டு மரிப்பதைக் குறித்தும் கூறுவதாக இருக்கமுடியுமா? நிச்சயம் முடியாது.

ஏனெனில் இம்மையில் யாருமே நிரந்தரமாக பூமியைச் சுதந்தரிக்கவும் முடியாது; இம்மையில் அறுப்புண்டு மரிப்பதிலிருந்து யாருமே தப்பவும் முடியாது.

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்/சபிக்கப்பட்டவர்கள் என்ற வித்தியாசமின்றி எல்லோருமே சில காலம் (மட்டும்) இப்பூமியைச் சுதந்தரிக்கவே செய்கின்றனர்; அவ்வாறே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்/சபிக்கப்பட்டவர்கள் என்ற வித்தியாசமின்றி எல்லோருமே அறுப்புண்டு மரிக்கத்தான் செய்கின்றனர்.
எனவே றுமையில் பூமியைச் சுதந்தரிப்பது மற்றும் அறுப்புண்டு போவதைப் பற்றித்தான் இவ்வசனம் கூறுகிறது. அதாவது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனைப் பெற்று பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; கர்த்தரால் சபிக்கப்பட்டவர்கள் அறுப்புண்டு போய் 2-ம் மரணத்தைச் சந்திப்பார்கள்.

சங்கீதம் 37:22-க்கு நிகராக/இணையாக ஏராளமான வசனங்கள் உள்ளன; அவற்றை நான் எடுத்துக் காட்டவும் செய்துள்ளேன். ஆனால், நீங்களோ அவையெல்லாம் இம்மையின் மரணத்தைத்தான் குறிக்கின்றன என ஒரே வரியில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறீர்கள்.

//



-- Edited by anbu57 on Wednesday 29th of June 2011 06:49:45 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நீங்கள் அழிவை நாடி அப்படி பட்ட வசனங்களை தேடுகிறீர்கள், நாங்கள் ஜீவனை கொடுக்கும், வசனங்களை தேடுகிறோம்!!//

நீங்கள் அழிவை குறித்தான வசனங்களை எடுத்து வைப்பதால் அப்படி எழுதினேன்!! மற்றபடி நீங்கள் அழிவை நாடுகிறீர்கள் என்று அல்ல, நீங்கள் அழிவிற்கான வசனங்களை தேடிக் எடுத்து ஜீவனுக்கு ஏதுவான வசனங்களை விட்டு விடுகிறீர்களே என்று சொல்ல வந்தது என் தமிழில் அச்சடித்து விட்டேன்!! மன்னிக்கனும் சகோதரரே!!

தேவன் ஏதாகிலும் ஒரு காரியத்தை தான் செய்வார், ஒன்று அழிப்பார் அல்லது காப்பார்!! அவர் எல்லா மனுஷரையும் இரட்சித்து அவர்கள் சத்தியத்தை அறிந்துக்கொள்ளும்படியாக தானே தன் நேச குமாரனை பலியாக அனுப்பினார்!! அப்படி இருக்க இந்த பூமிக்கு குறிய அழிவை, மரணத்தை கிறிஸ்து இயேசுவின் பலி நித்திரையாக மாற்றியிருப்பதை உணர மாட்டேன் என்கிறீர்களே!!

பாவத்துடனே உயிர்த்தெழுவார்கள் என்றீர்கள், ஆனால் வசனம் சொல்லவில்லை!! பாவம் இல்லாமல் தான் உயிர்த்தெழுதல் உண்டாகும் என்று 1 கொரிந்தியர் 15:42,43ம் வசனத்தை காண்பித்தேன்!!

மரணத்துக்கேதுவான பாவம் செய்வோருக்காக ஜெபிக்க வேண்டாம் என்கிற வசனத்தை காண்பித்தேன், ஆனால் அந்த பாவம் என்னவென்று அந்த அநீதியின் செயலை யார் செய்தானென்றும் வசனத்துடன் காண்பித்தேன் (எசே 28:28)!! மேலும் எல்லா மனுஷருக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று பவுல் சொல்லிய வசனத்தையும் காண்பித்தேன் (1 தீமோத்தேயு 2:1)!!

நம் வழிகளும் நம் யோசனைகளும் வேறு என்றும், நாம் நம் சிந்தையில் வெளிப்படுவதையே பார்க்கிறோம்!! நான் நல்லது செய்யும் போது எனக்கு உண்டான அதே பரிசு தான் தீமை செய்கிறவனுக்கும் கிடைக்குமா என்கிற மனித சிந்தையில் யோசிக்கும் போது ஏற்படுகிற வெளிப்பாடுகள் தான் அழிவின் சிந்தை!! ஆனால் தேவனின் பார்வையில் பட்சபாதம் இல்லை என்பதை வேதம் சொல்லுகிறது!!

மேலும், காலையில் உழைக்க வந்தவனுக்கும் அந்திவேளையில் உழைக்க வந்தவனுக்கும் அவர் ஒரே கூலியை கொடுக்கும் போது, காலையில் வந்தவன் இதை எஜமானனிடம் கேட்ட போது அவர் சொன்னது,

மத்தேயு 20:14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.

எல்லா மதங்களும் அழிவை பிரசங்கிக்கிறது, அழிவிற்கென்றே கடவுள்களையும் வைத்திருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்தவம் அழிவை அல்ல, அழிந்துக்கொண்டும், அழிந்துபோனவர்களுக்கும், அழியப்போவோர்க்கும் ஜீவனை கொடுக்கிற செய்தியை கொடுக்கிறது!!

யோவான் 3:17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

ஏசாயா 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். 9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

இப்படி அனைவரும் இரட்சிக்கபடவே தேவன் விரும்புகிறார் என்பதும் அவரின் வழிகள் நம் வழிகளை பார்க்கிலும், அவரின் நினைவுகள் நம் நினைவுகளை பார்க்கிலும் உயர்ந்திருக்கிறது!! நாமும் நம் என்னங்களை உயர்த்தலாமே!!

பாவத்தின் விளைவாக இந்த உலகத்திலேயே மனிதர்கள் படும் கஷ்ட்டங்கள், வியாதிகள் எத்துனை எத்துனையிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது!! இவை எல்லாமே பாவத்தின் விளைவுகள் தான் என்று ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்!! விபச்சாரத்தினால் உண்டான எயிட்ஸ், புகை புகையிலை பழக்கங்களினால் உண்டாகும் கான்சர், இன்னும் பல கொடிய நோய்கள் இருக்கிறதே, அதற்கு இப்பவும் கஷ்ட்டத்தை பட்டு, இதே பாவங்களின் நிமித்தம் இனி வரவிருக்கும் உலகிலும் "இரண்டாம் மரணம்" என்கிற ஒரு அழிவிற்காக உயிர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு லாஜிக்கான வசனத்தை சொல்லுங்களேன்!!

நன்மை செய்வது பரிபூரணத்தை நாடுவது போன்ற நல்ல விஷயங்களை சொல்லுகிறீர்கள், ஆனால் வசனம் சொல்லியபடி செய்தீர்களா, அல்லது இப்படி செய்யும்படி போதிக்கிறீர்களா,

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

நன்மையை செய் இல்லாவிட்டால் நித்திய அக்கினி என்றும் ஆக்கினை என்றும் வசனத்தை காண்பித்து சொல்லுகிறீர்கள், ஆனால் நன்மை நடக்காது என்று வேதம் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறது,

2 தீமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

நீங்கள் எவ்வுளவு தான், நன்மை செய்யாமற் போனால் அழிவு என்று போதித்தாலும், செய்யாதீர்கள் என்று சொல்லும் காரியங்கள் தான் நடக்க போகிறது!! இது தேவன் அனுமதிக்காமலே நடந்துவிடுமா!!?? இப்படி இருக்க, நாங்கள் போதிப்பத்து என்னவென்றால், இப்படி இருந்தாலும், இந்த ஜனங்களின் கூட்டத்திலிருந்து தான் அவர் சபைக்கென்று நியமித்த சிலரை தவிர மற்ற அனைவரையும் இதே உலகத்தில் உயிர்த்தெழசெய்து அவர்களும் சத்தியத்தை அறிகிற அறிவை பெற செய்வார் என்று!! என்ன தவறு இருக்கிறது!!

மேலும் விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் கிறிஸ்து இயேசு (எபிரேயர் 12:1)!! நாம் எத்துனை தான் அழிவையோ நன்மையோ போதித்தாலும் யாருக்கு விசுவாசத்தை அவர் கொடுக்கிறாரோ, அவர்கள் தானே விசுவாசிப்பார்கள்!! அதற்கு நாங்கள் சொல்லுவது எந்த விதத்திலும் தேவனை தூஷிப்பதாக இல்லையே!! அவர் அனைவருக்கும் ஜீவனை கொடுப்பார் என்று போதிப்பது ஒரு போதும் தூஷனம் கிடையாதே!! தேவனின் அன்பை தானே போதிக்கிறோம்!! இதில் என்ன தவறு இருக்கிறது!!

//அழிவைச் சொல்லும் வசனங்கள் எதுவுமே இல்லை என உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், “நீ அப்படி விரும்புகிறாய், நான் இப்படி விரும்புகிறேன்” என்பது போன்ற தேவையற்ற கருத்துக்களைச் சொல்லாமல், நான் காட்டுகிற “அழிவைச் சொல்லும்” வசனங்களுக்கு எதிரான உருப்படியான விவாதத்தை வையுங்கள்.//

அழிவை குறித்தான எல்லா வசனங்களுமே மரணத்தை நோக்கி தான் இருக்கிறது, ஆனால் அந்த மரணத்தை கிறிஸ்து இயேசு நித்திரையாக மாற்றி, காலம் வரும் போது அனைவருக்கும் நித்திய ஜீவனை கொடுப்பார், சிலருக்கு ஆவிக்குறிய (கிறிஸ்துவின் சாயலில்) சாவாமையின் உயிர்த்தெழுதல் உண்டாகும், மற்றவர்கள் இந்த பூமியில் உயிர்த்தெழுவார்கள் நித்திய ஜீவனை பெற நீதியையும் சத்தியத்தையும் கற்றுக்கொள்வார்கள்!! சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது!!

நாங்கள் சும்மா உட்கார்ந்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருப்பதும் ஒரு Critical Comment தானே சகோதரரே!! விவாதம் என்று வரும் போது இப்படி எல்லாம் எழுதுவது சகஜம் தானே!!

ஆனாலும் நாங்கள் சும்ம உட்கார்ந்து வேடிக்கப்பார்த்துக்கொண்டு இருந்தாலும் தேவன் கிறிஸ்துவின் மூலமாக அனைவரையும் இரட்சிக்க வல்லவராகவும், போதுமானவராகவும் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பி அதை சொல்லிக்கொண்டு இருப்போம்!!

நான் இப்படி நடந்துக்கொண்டால், நான் இதை செய்தால், நான் அப்படி பேசினால் தான் தேவனால் இரட்சிக்க முடியுமென்றால் அது சர்வ வல்லமையுள்ள தேவனை தூஷிப்பதாகும்!! இந்த பொல்லாங்கான உலகத்தில் சாத்தானுடன் இருந்து எப்படி அவர் தீமைக்குள் மனிதர்களை நடக்க அனுமதித்தாரோ அப்படியே எல்லா மனுஷர்களையும் இரட்சித்து அவர்களை நன்மைக்குள்ளும், நீதிக்குள்ளும், சத்தியத்திற்குள்ளும் நடத்துவதே தேவனின் சித்தம்!!

தீயியை தொட்டால் சுடும் என்கிற அனுபவத்தை இப்பொழுது கொடுத்துவிட்டு, நீதியின் தேசத்திலும் அதே தீயை காண்பித்து கைய்யை விடு என்றால் விட மாட்டார்கள், ஏனென்றால் தீயை தொட்டால் சுடும் என்கிற அனுபவம் வந்திருக்கும்!! பாவத்தின் சம்பளம் வியாதிகள், கஷ்ட்டங்கள் அதன் மூலம் மரணம் என்று அறிந்தவர்கக்ளுக்கு சாத்தான் விடுவிக்கப்படும் போது அந்த நீதியின் தேசத்தில் மீண்டும் பாவத்தின் சம்பள‌மான மரணத்திற்குள் செல்வார்களோ!!

எபிரெயர் 2:5 இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.

2 பேதுரு 3:13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

வெளி. 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

இனி வரும் உலகத்தை அவர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார், பொல்லாங்கு இல்லாத உலகம், நீதி வாசம் செய்யும் உலகம்!! கண்ணீர், மரணம் துக்கம் அலறுதல் வருத்தம் இல்லாத உலகம்!! முந்தினவை ஒழிந்துபோன உலகம்!!

இத்துனை வசனங்கள் கொடுத்தாலும், நாங்கள் பெறும் பெயர்,

//இத்தளம் வசனங்களைச் சொல்லி விவாதிக்கிற தளமா? அல்லது எனது/உங்களது தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளைச் சொல்லி விவாதிக்கிற தளமா? ஒருவேளை தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளைச் சொல்லி விவாதிக்கிற தளமெனில், “கோவைபெரியன்ஸ்” எனும் பெயர் இத்தளத்திற்கு பொருத்தமற்றதாகிவிடும். ஏனெனில் வேதாகம பெரியன்ஸ், வேதவசனங்களைத் தான் ஆராய்ந்தனரேயொழிய, தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை ஆராயவில்லை.//

சரி ஜீவனுக்கு உண்டான இத்துனை வசனங்களை நாங்கள் சொல்லியிருக்கிறோமே, எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதற்கு இத்துனை வசனங்களை தந்திருக்கிறோமே, தீமை தேவனால் அனுமதிக்கப்பட்டதும் என்கிறதற்கான இத்துனை வசனங்களை கொடுத்திருக்கிறோமே, அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சங்கீதம் 37:22 கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

இந்த வசனம் நிரந்தரமாக சுதந்தரித்துக்கொள்வார்கள் அல்லது அறுப்புண்டு போவார்கள் என்று தாங்கள் அர்த்தம் கொடுத்தப்படி இல்லையே!! ஏனென்றால் நீங்கள் தான்,
//ஏனெனில் இம்மையில் யாருமே நிரந்தரமாக பூமியைச் சுதந்தரிக்கவும் முடியாது; இம்மையில் அறுப்புண்டு மரிப்பதிலிருந்து யாருமே தப்பவும் முடியாது.//


//இவ்வசனம் இம்மையில் பூமியைச் சுதந்தரிப்பதைக் குறித்தும் இம்மையில் அறுப்புண்டு மரிப்பதைக் குறித்தும் கூறுவதாக இருக்கமுடியுமா? நிச்சயம் முடியாது.//

நிச்சயமாக முடியாது என்று எழுதியதை தான் உங்கள் கருத்து என்று சுட்டி காண்பித்தால் நீங்கள் கோபம் கொள்கிறீர்கள்!!  வசனம் சொல்லுவது என்னவென்றால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள் (நிரந்தரமாக என்பது தாங்கள் சேர்த்துக்கொள்வது), அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள் (இதிலும் நிரந்திரமாக என்பது தாங்கள் சேர்த்துக்கொள்வது தான்)!!

இஸ்ராயேலுக்கு விரோதமாக தலை தூக்கின அனைவரையும் தேவனே சங்கரித்தார் என்று வேதம் பல இடங்களில் சொல்லியிருக்கிறதே!! இஸ்ராயேல் ஜனங்களை மாத்திரமே தேவன் தன் சொந்த ஜனமாக தெரிந்துக்கொண்டு நடத்தினார், அவர்களை ஆசீர்வதித்தார், வாக்குத்தங்களை கொடுத்து நடத்தினார்!! இவர்களுக்கு விரோதமாக எழும்பினவர்களை அழித்தார் (அறுப்புண்டுபோனார்கள்)!! அவ்வலவே!! இதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தான், அதன் பின் இஸ்ராயேல் தேசத்தையும் கிறிஸ்து சபித்தார், அவரின் சபித்ததினால் நிரந்தரமாக பட்டு போகவில்லை, ஒரு குரிப்பிட்ட காலம் வரையில் தான், அதன் பின் இஸ்ராயேல் மீண்டும் துளிர் விட்டது (1947) இப்பொழுது வளர்ந்துக்கொண்டு இருக்கிறது!!

நிரந்தரம் என்று நீங்களே சேர்த்துக்கொண்டு ஏன் வசனங்களை வாசிக்கிறீர்கள்!!??

ரோமர் 3:1. இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? 2. அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்;

எரேமியா 1:19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இதில் சொல்லப்பட்ட இரட்சிப்பை நிரந்தர இரட்சிப்பு என்று நாங்கள் சொல்லவில்லை!!

எரேமியா 15:20 உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இப்படி அழிவையும் இரட்சிப்பையும் சொல்லும் அநேக வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கிறது சகோதரரே, ஆனால் இவை எல்லாமே நிரந்தர அழிவையோ, நிரந்தர இரட்சிப்பையோ சொல்லும் வசனங்கள் கிடையாது, இவை அனைத்தும் மாம்சத்தில் நடந்தது தான்!! அப்படியே தான் நீங்கள் சங்கீத புத்தகத்தில் காட்டிய பல வசனங்களும் ஆகும்!!

உங்கள் கருத்தை "உங்கள் கருத்து" என்று சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது!! என் கருத்தையும் நீங்கள் எழுதும் போது, "நீங்கள் சொல்லுகிறீர்கள், நீங்கள் சமாளிக்கிறீர்கள்" என்று தானே எழுதுகிறீர்கள்!! நீங்கள் எழுதுவதை உங்கள் கருத்து என்று சொல்ல கூடாதா?? உங்கள் கருத்து என்றால் உங்கள் புரிந்துக்கொள்ளுதல் என்று தானே அர்த்தம்!! இதற்கு ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள்!! இதை ஏன் என் "இயலாமைத்தனம்" என்று எழுதுகிறீர்கள்!! இது மட்டும் விவாதத்தை திசை திருப்புவதில்லையா!!??

நான் எழுதிய இரட்சிப்பின் வசனங்களுக்கு பதில் எழுதுங்களேன்!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//நீங்கள் அழிவிற்கான வசனங்களை தேடி எடுத்து ஜீவனுக்கு ஏதுவான வசனங்களை விட்டு விடுகிறீர்களே என்று சொல்ல வந்தது என் தமிழில் அச்சடித்து விட்டேன்!! மன்னிக்கனும் சகோதரரே!!//

நான் அழிவிற்கான வசனங்களை தேடி எடுத்துச் சொன்னாலும், நாடி எடுத்துச் சொன்னாலும் அவற்றிற்கு உங்கள் பதிலைத் தருவதுதான் முறையேயன்றி எனது செயலை விமர்சிப்பது முறையல்ல. நம் விவாதம் மற்றவர்களுக்கு ஒரு தெளிந்த நீரோடையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் கொடுக்கின்ற வசனம் மற்றும் அதற்கான விளக்கத்தின் மீது மட்டும் பதில் தந்தால் போதும் என நான் விரும்புகிறேன். மற்றபடி, நாம் ஒருவரையொருவர் விமர்சிப்பது விவாத ஓட்டத்தைத் தடைசெய்வதோடு, விவாதத்தின் பாதையையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கும்.

நான் உங்களை சாக்குப்போக்கு சொல்வதாகக் கூறியதுண்டுதான். ஆனால் நான் ஏன் அப்படிச் சொன்னேன்? ஒரு வசனத்தைச் சொன்னால், அதற்கு இணை வசனம் இல்லையென்கிறீர்கள், அல்லது “மன்னியாதிருப்பார்” எனும் வசனத்தைச் சொன்னால், “கிறிஸ்து சிந்திய இரத்தம் வீண் என்று சொல்கிறீர்களா?” எனக் கேள்வி கேட்கிறீர்கள். இப்படி ஏதாவது சொல்வதால்தான், நீங்கள் சாக்குப்போக்கு சொல்வதாகக் கூறினேன். அது தவறென்றால் மன்னியுங்கள்.

மிகமுக்கியமான வசனமான மத்தேயு 6:15-ஐக் காட்டினால், சற்றும் ஏற்புடையதாயிராத ஒரு விளக்கத்தைச் சொல்லியுள்ளீர்கள்.

bereans wrote:
//மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இந்த வசனத்திற்கு தான் எழுதியிருந்தேனே!! கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் உள்ளது இந்த வசனம்!! கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் எப்படி கிறிஸ்துவின் நிலை மாறியதோ, அப்படியே தான் மரித்தோரின் உயிர்த்தெழுதலும்!! தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்பது என்றென்றைக்கும் மன்னியாதிருப்பார் என்பது இல்லை சகோதரரே!!//

இப்படியொரு விளக்கத்தை நீங்கள் சொன்னால், இவ்வசனத்தை கிறிஸ்து சொல்லவேண்டியதன் அவசியம்தான் என்ன? இவ்வசனத்தின் impact தான் என்ன? கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பிறகு இவ்வசனம் invalid ஆகிவிட்டதா? இன்னும் என்னென்ன வசனங்கள் கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பின் invalid ஆகியுள்ளன?

தமது ஈடுபலிக்குப் பின் எல்லாம் மாறிவிடும் என்பதை அறியாமல் கிறிஸ்து இப்படிச் சொன்னாரா?
 
மன்னியாதிருப்பார் என்பதற்கும் என்றென்றைக்கும் மன்னியாதிருப்பார் என்பதற்கும் என்ன வித்தியாசம் சகோதரரே?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், வசனங்களை கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் (கி.ஈ.மு), கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பின் (கி.ஈ.பி) என்ற கோணத்தில் வைத்துதான் ஆராய வேண்டும் போலும்!

சரி, சில கி.ஈ.பி. வசனங்களைத் தருகிறேன்; அவற்றிற்கு என்ன சொல்கிறீர்கள் எனப் பார்ப்போம்.

2 கொரி. 5:10 சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

உங்கள் கூற்றுப்படி, நாம் சரீரத்தில் செய்த எல்லா பாவங்களும் கிறிஸ்துவின் ஈடுபலியால் மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுவோம், அப்படித்தானே? அப்படி உயிர்த்தெழுந்த நாம், மேற்கூறிய வசனத்தின்படி கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம், அப்படித்தானே? எதற்காக நிற்போம்? சரீரத்தில் செய்த நன்மைக்குரிய பலனை அடையவும் தீமைக்குரிய பலனை அடையவுமே என வசனம் சொல்கிறது!

நன்மைக்குரிய பலன் “நித்திய ஜீவன்”, எனவே அது நல்லதுதான். ஆனால் தீமைக்குரிய பலன் எது? தீமை என்பது பாவம்தானே? பாவத்தின் சம்பளம் மரணம் தானே? அதாவது தீமையின் பலன் மரணம்தானே? அவ்வாறெனில் தீமையின் பலனாகிய மரணத்தை அடையும்படிக்குத்தானே நாம் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும்? அவ்வாறெனில் நாம் செய்த தீமையெனும் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையென்றுதானே அர்த்தம்? புரியும்படியாய் விளக்குங்கள் சகோதரரே!

தொடரும் ....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

மேலும் சில கி.ஈ.பி. வசனங்கள்:

ரோமர் 2:5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

கிறிஸ்துவின் ஈடுபலியால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தவர்களிடம் ஏன் இந்த கோபாக்கினை?

ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

கிறிஸ்துவின் ஈடுபலியால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தவர்களில், நற்கிரியைகளைச் செய்த ஒரு பிரிவினருக்கு நித்திய ஜீவன்; மற்றொரு பிரிவினருக்கு உக்கிர கோபாக்கினை. ஏன் இந்த பாரபட்சம் சகோதரரே? எல்லார்மேலும் இரங்கத்தக்கதாக கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டவர் தேவன் தானே? அவரே கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போட்டுவிட்டு, பின் அந்த கீழ்ப்படியாமைகளை மன்னித்தும்விட்டு, பின் கீழ்ப்படியாமைக்காக உக்கிர கோபமும் கொள்வது ஏன்?

நற்கிரியைகளைச் செய்த ஒரு பிரிவினருக்கு “நித்திய ஜீவன்” எனில், அடுத்த பிரிவினருக்கு “நித்திய ஜீவன்” இல்லை என்றுதானே அர்த்தம்? நீங்களோ எல்லாருக்கும் “நித்திய ஜீவன்” என்கிறீர்கள். ஒன்றும் புரியவில்லை சகோதரரே! புரியும்படி சற்று விளக்குங்கள்.

நம் நீதியெல்லாம் அழுக்கான கந்தையாயிருப்பதாக ஏசாயா சொல்கிறார். ஆனால் நம் நற்கிரியைகளுக்கு நித்திய ஜீவன் பலனாகக் கொடுக்கப்படும் எனப் பவுல் சொல்கிறார். யார் சொல்வது சரி சகோதரரே! ஒன்றும் புரியவில்லை.

கலாத்தியர் 6:7  மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

இங்கு 2 பிரிவு ஜனங்களை பவுல் கூறுகிறார். 1. மாம்சத்திற்கென்று விதைப்பவன், 2. ஆவிக்கென்று விதைப்பவன். இவ்விரு பிரிவினர்களுமே கிறிஸ்துவின் ஈடுபலியால் மன்னிக்கப்பட்டு பாவமில்லாதவர்களாக உயிர்த்தெழுந்தவர்கள்தான் (உங்கள் கருத்துப்படி). ஆனால், முதல் பிரிவினருக்கு அழிவு, 2-ம் பிரிவினருக்கு நித்திய ஜீவன். அந்த நித்திய ஜீவனைப் பெறவேண்டுமெனில் நாம் நன்மை செய்திருக்க வேண்டுமாம்; நான் சொல்லவில்லை, பவுல் தான் சொல்கிறார். இதே பவுல்தான் கிரியைகள் நம்மை நீதிமானாக்குவதில்லை என்கிறார்.

எந்தக் கிரியைகள் எப்படி நம்மை நீதிமானாக்காது என்பதையும், எந்த நற்கிரியைகள் எப்படி நமக்கு நித்திய ஜீவனைத் தரும் என்பதையும் நான் நன்கறிவேன். ஆனால் நீங்கள் எல்லோருக்கும் நித்திய ஜீவன் எனச் சொல்வதுதான் எனக்கு எப்படியென புரியவில்லை. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சகோதரரே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மன்னியாதிருப்பார் என்பதற்கும் என்றென்றைக்கும் மன்னியாதிருப்பார் என்பதற்கும் என்ன வித்தியாசம் சகோதரரே?//

உங்களுக்கு தெரியாதா?

//இப்படியொரு விளக்கத்தை நீங்கள் சொன்னால், இவ்வசனத்தை கிறிஸ்து சொல்லவேண்டியதன் அவசியம்தான் என்ன? இவ்வசனத்தின் impact தான் என்ன? கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பிறகு இவ்வசனம் invalid ஆகிவிட்டதா? இன்னும் என்னென்ன வசனங்கள் கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பின் invalid ஆகியுள்ளன?//

ஏன், தேவனுக்கு தெரியாதா, கிறிஸ்துவை காலம் நிறைவேறும் போது அனுப்புவது என்று, பிறகு எதற்கு மிருகபலி எல்லாம் தேவயாக இருந்தது!!

சபை உருவானது கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின்!!
திரை கிழிந்து, தேவனுக்கும் நமக்கும் மத்தியஸ்தராக கிறிஸ்து வந்ததும் கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் தான்!!
பரிசுத்த ஆவி பொழியப்பட்டது கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் தான்!!
முக்கியமாக, எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்கிறது வெளிப்பட்டதே கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் தான்!!

அதற்காக இதற்கு முன் செலுத்தப்பட்ட பலிகள், காணிக்கைகள் எல்லாவற்றையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்!! கிறிஸ்துவிற்கு பிறகு நீங்கள் சொல்லுகிறபடி பல சட்டங்கள் ரத்தாகி போனது!! கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் கிறிஸ்து சபைக்காக பரிந்து பேசுபவராகவும், உலகத்திற்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக ஆனார்!! கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் தான் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் அவருக்கு கொடுக்கப்பட்டது!!

ஆதியாகமம் 17:12 உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;

கிறிஸ்து விருத்தசேதனம் செய்தார், அவரின் ஈடுபலிக்கு பின் இது நிற்கவில்லையா? யெகோவா தேவனின் இந்த கட்டளை நிற்கவில்லையா?

யாத்திராகமம் 12:17 புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.

நித்திய நியமாக கொடுக்கப்பட்டது கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் நின்று போனதா இல்லையா??

யாத்திராகமம் 20:6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

இந்த கட்டளையை கிறிஸ்து இரு கட்டளையாக கொடுக்கவில்லையா??

யாத்திராகமம் 29:42 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.

யாத்திராகமம் 30:8 உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.

நித்திய சர்வாங்க தகனபலி, நித்திய தூபம் இன்னும் பின்பற்றப்படுகிறதா??

//நீங்கள் சொல்வதைப் பார்த்தால், வசனங்களை கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் (கி.ஈ.மு), கிறிஸ்துவின் ஈடுபலிக்குப் பின் (கி.ஈ.பி) என்ற கோணத்தில் வைத்துதான் ஆராய வேண்டும் போலும்!//

நிச்சயமாக கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன்னும் பின்னும் நிறய விஷயங்கள் மாறியிருக்கிறது!! வேதத்தை நீங்களே ஆறாய்ந்து பாருங்கள், எவை கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன்னும் பின்னும் மாறுப்பட்டது என்று!!

//உங்கள் கூற்றுப்படி, நாம் சரீரத்தில் செய்த எல்லா பாவங்களும் கிறிஸ்துவின் ஈடுபலியால் மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுவோம், அப்படித்தானே? அப்படி உயிர்த்தெழுந்த நாம், மேற்கூறிய வசனத்தின்படி கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம், அப்படித்தானே? எதற்காக நிற்போம்? சரீரத்தில் செய்த நன்மைக்குரிய பலனை அடையவும் தீமைக்குரிய பலனை அடையவுமே என வசனம் சொல்கிறது!//

என் கூற்றல்ல இது, உங்களுக்கு வசனத்தை காண்பித்திருக்கிறேன், இதோ,

1 கொரிந்தியர் 15:42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; 43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

சரி நீங்கள் தேர்ந்தெடுத்த வசனத்தை விளக்குகிறேன்:

2 கொரி. 5:10 சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

இது தான் உயிர்த்தெழுதலில் உள்ள வித்தியாசம்!! நன்மை செய்வோர் (கிறிஸ்துவின் எல்லா கட்டளைகளையும் பின்பற்றுவோர்), கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுந்து நன்மைக்குண்டான் அபலனை அடைவார்கள்!! மற்றவர்கள் இரண்டாம் தர உயிர்த்தெழுதலான சரீரத்தில் இந்த பூமியில் உயிர்த்தெழுவார்கள் (தீமைக்கான பலனை அடைவார்கள்)!! நாம் என்று பவுல் சொல்லுகிறார் என்றால் பவுல் எப்படி பட்ட உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார் என்று நினைக்கிறீர்கள்!!

II தீமோத்தேயு 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

பவுலின் இப்படி பட்ட ஒரு நிச்சயம், நிச்சயமாகவே அவர் ஆவிக்குறிய உயிர்த்தெழுதலே பெறுவார் என்பதை நான் புரிந்துக்கொள்கிறேன்!! நன்மைக்கான பலனை பெறுகிறார்!! மற்றவர்கள், சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதல் அடைவார்கள்!! இது தான் நீங்கள் கொடுத்த வசனத்தின் விளக்கம்!!

அப்போஸ்தலர்கள் சபைக்கு போதித்ததே, அந்த உயர் தரமான உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவதற்கு தகுதியாகும்படி தானே!! மற்றவர்கள் சரீரத்துடன் உயிர்த்தெழுவார்கள் என்பது அவருக்கும் தெரியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

//கிறிஸ்துவின் ஈடுபலியால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தவர்களில், நற்கிரியைகளைச் செய்த ஒரு பிரிவினருக்கு நித்திய ஜீவன்; மற்றொரு பிரிவினருக்கு உக்கிர கோபாக்கினை. ஏன் இந்த பாரபட்சம் சகோதரரே? எல்லார்மேலும் இரங்கத்தக்கதாக கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டவர் தேவன் தானே? அவரே கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போட்டுவிட்டு, பின் அந்த கீழ்ப்படியாமைகளை மன்னித்தும்விட்டு, பின் கீழ்ப்படியாமைக்காக உக்கிர கோபமும் கொள்வது ஏன்?//

இதில் எந்த தவறும் கிடையாது!! ஏனென்றால்,

சங்கீதம் 30:5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

பாவத்தில் மரித்தவர்கள் பாவம் மன்னிக்கப்படுவதால் உயிர்த்தெழுவார்கள், ஒரு பிரிவு சபையாகவும் மற்றவர்கள் இந்த பூமியில் நீதியை கற்றுக்கொள்ளும்படியாகவும்!! தேவனின் அந்த கோபம் அவர்களை அழித்துப்போட அல்ல, மாறாக அவரின் தயவை காட்டும்படியே என்று சங்கீதக்காரன் சொல்லியிருக்கிறானே!! அவரின் கோபம் ஒரு நொடிப்பொழுது இருப்பது போல் இருந்தாலும் அவருடைய உருக்கமான இரக்கங்களால் சேர்த்துக்கொள்வார்!! ஆக்கினை என்பது அழிவிற்கு அல்ல, கற்று கொடுப்பதற்கு!! அவர் அநேகரை கீழ்ப்படியாமைக்குள் அடைத்துபோட்டு அவரே உயிர்த்தெழ செய்து மீண்டும் அழித்து போடுகிறார் என்றால், அவர் எப்படி நீதியுள்ள தேவனாக இருக்க முடியும்!! இல்லை சகோதரரே, அவர் அநேகரை கீழ்ப்படியாமையில் அடைத்து போட்டு, சிலருக்கு அந்த மேன்மையான அழைப்பை கொடுக்கிறார்!!

மகிமை, அழியாமை எல்லாம் சபைக்கு மாத்திரமே உண்டானது, அதை தான் வசனம் சொல்லுகிறது!! மற்றவர்கள் உயிர்த்தெழுந்து நீதியை கற்றுக்கொள்வார்கள்!! கோபாக்கினை என்றவுடன் மற்ற கிறிஸ்தவர்கள் சொல்லுவது போல் ஏதோ அவர் அழித்து ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்பதற்காக அல்ல!! ஆக்கினை என்பதே நீதியை கற்றுக்கொடுக்க தான்!!

ஏசாயா 26:9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

உக்கிரகோபாக்கினை என்றால் நீதியை கற்றுக்கொள்ளும் காலம்!!

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

சங்கீதம் 105:7 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

சங்கீதம் 119:43 சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

சங்கீதம் 119:62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

சங்கீதம் 119:137 கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

இந்த வசனங்களையும் தியானியுங்களேன்!!

//நற்கிரியைகளைச் செய்த ஒரு பிரிவினருக்கு “நித்திய ஜீவன்” எனில், அடுத்த பிரிவினருக்கு “நித்திய ஜீவன்” இல்லை என்றுதானே அர்த்தம்? நீங்களோ எல்லாருக்கும் “நித்திய ஜீவன்” என்கிறீர்கள். ஒன்றும் புரியவில்லை சகோதரரே! புரியும்படி சற்று விளக்குங்கள்.//

இதுவே உங்களுக்கு பதில்,

ரோமர் 2:7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

நற்கிரியைகள் செய்வோர் என்று இங்கே சொல்லப்பட்டது கிறிஸ்துவின் கட்டளைகளை எல்லாம் பின்பற்றுபவர்களாவார்கள்!! அங்கியை கொடுத்து, சாப்பாடு கொடுப்பதை மாத்திரம் நற்கிரியை என்று எடுத்துக்கொண்டோமென்றால் தேவன் இல்லை என்று சொல்லுபவன் மேலாக தெரிவான்!! ஆனால் பவுல் இங்கே நித்திய ஜீவன் என்று சொல்லுவது மகிமை, கனம், அழியாமையை தேடுவோருக்கு என்கிறார், இது, கிறிஸ்துவின் சாயலாக‌ மாறும் சபையார் நாடுவது!! கிறிஸ்துவை அறியாமலே (கிறிஸ்தவர்களையும் சேர்த்து தான்) இருப்பவர்கள் எப்படி மகிமை, கனத்தை அழியாமையை நாடுவார்கள், அவர்களுக்கு தான் அது என்னவென்றே தெரியாதே!! ஆக அழியாமை, சாகாமை என்கிற நித்திய ஜீவன் கிறிஸ்துவின் சாயலில் மாறுவது, அதை தவிர மற்ற அனைவருக்கும் நித்திய ஜீவன் இந்த பூமியில் உண்டு!!

நற்கிரியை என்பதை பவுல் சொல்லுவது முழு கிறிஸ்துவ ஜீவியத்தை, நீங்கள் நற்கிரியை என்று எதை நினைக்கிறீர்கள் என்று விளக்குங்களேன்!!??

யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

கிறிஸ்துவின் நோக்கமும் அதுவே, பிசாசு என்கிற திருடன் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு இருக்கிறான், ஆனால் அழிந்து போகும் அனைவருக்கும் ஜீவன் உண்டாக்கவும், அது பரிபூரணம் அடையும்படி தான் வந்தார், அழிக்கவில்லை!!

//நம் நீதியெல்லாம் அழுக்கான கந்தையாயிருப்பதாக ஏசாயா சொல்கிறார். ஆனால் நம் நற்கிரியைகளுக்கு நித்திய ஜீவன் பலனாகக் கொடுக்கப்படும் எனப் பவுல் சொல்கிறார். யார் சொல்வது சரி சகோதரரே! ஒன்றும் புரியவில்லை.//

நம் நீதி என்பது நாம் அனைவரும் நம் நினைப்பில் இது தான் நீதி என்று சொல்லியும் செய்துக்கொண்டிருப்பதும் தான்!! நாம் அனைவரும் நாம் செய்வதை நீதி என்று நினைக்கிறோம், ஆனால் தேவனின் பார்வையில் அந்த நீதி எல்லாம் அழுக்கான கந்தையாக இருக்கிறது!! கிறிஸ்துவின் இரத்தத்தினால் அந்த கந்தையான நீதியின் மத்தியிலும், அவரின் ஈடுபலி நம்மை பூரணப்படுத்தி நமக்கு ஜீவனை வாக்கழிக்கிறது!! அது மட்டுமில்லை என்றால் நாம் அழிந்தே இருப்போம்!!

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம்!! இதை செய்கிறோமா!! இல்லை, நிச்சயமாக இல்லை!! நமக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று விட்டு நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோமா, இல்லையே!! அப்படி என்றால் பூரண சற்குணனாயிருக்க நாம் நமக்கு உண்டானவைகளை விற்று அவரை பின்பற்றாமல் போனோமென்றால் பரலோகத்தில் நமக்கு பொக்கிஷம் உண்டாகாதா??

இது நாம் வசனத்தை புரிந்துக்கொள்வதில் தான் இருக்கிறது!! இதை அப்படியே எழுத்தின்படி எடுத்துக்கொண்டோமென்றால், யாருக்கு தான் பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாகும்!! தெரியவில்லை!!! விளக்கத்தை அடுத்த பதிவில் தருகிறேன்.........!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ரோமர்3:19. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

21. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.

22. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

25. தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,

26. கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

27. இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

28. ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

29. தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.

30. விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

இந்த நீதிமானாக்குதலில் எந்த ஒரு நற்கிரியைகளும் செய்யச்சொல்லி கண்டிஷன் போடவில்லை.

எல்லாரையும் நீதிமானாக்குகிறார் என்கிறது இவ்வசனங்கள். இது இம்மையிலா மறுமையிலா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். 

உங்கள் வாதத்தின்படி மறுமையில் செய்யப்போகும் 'பாவங்களுக்கு' இரண்டாம் மரணம் ஒரு தண்டனை என்றால், நீங்கள் இம்மையில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? இப்போதிருந்தே ஜனங்களை நற்கிரியை செய்யச்சொல்லி மறுமையில் அவர்கள் அதை மறக்காமல் அவைகளைச் செய்து அவர்களை இரண்டாம் மரணத்திலிருது இரட்சிக்க வைக்கும் மாபெரும் பணியைச் செய்துகொண்டிருக்கிறீர்களா? புரியவில்லை.

உயிர்த்தெழுந்தபின் நீதியின் தேசத்திலும் ஒரு கூட்டம் அநீதி செய்து கடைசியில் மரணதண்டனைக்கு உள்ளாகும். இது நடந்தே தீரும் என்று நீங்கள் நம்பும்பட்சம் உங்களால் அவர்களில் ஒருவரைக்கூட மாற்ற முடியாது. பின்னர் ஏன் மெனக்கெடுகிறீர்கள்? துன்மார்க்கன் அழிவது நிச்சயம் என்றால் உங்களால் ஒரு துன்மார்க்கனை உங்கள் போதகத்தின்மூலம் மாற்றி அவனை நீதிமானாக்க முடியுமா? தேவனாலேயே அவர்களை மாற்ற முடியாதபட்சம் உங்கள் பிரயாசம் என்னவென்று விளக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இம்மையிலேயே அவர்களுக்கு போதித்து நன்மை செய்யச்சொல்லிக்கொடுத்து இரண்டாம் மரணத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு என்று சான்றிதழ் கொடுப்பீர்களா?

துன்மார்க்கன் கற்றுக்கொள்ள மாட்டான், திருந்தவே மாட்டான் என்றும் அவனுக்கு கிருபைகூட தேவையேயில்லை என்பதால் அவன் அழிந்தே போய்விடுவான், அவனுக்கு வாழத்தகுதியில்லை என்று வாதாடும் நீங்கள் அவன் அழியட்டும் என்று விட்டுவிடுங்களேன்.

ஒருவனுக்கு கெட்டவன் ரோல் கொடுத்து அதைச் செவ்வனே செய்ய வைப்பதுதான் ஒரு நல்ல டைரக்டரின் வேலை. நம்மைப் படைத்த, இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜீவராசியையும் படைத்த தேவனது இயக்கத்தில்தான் சகலமும் நடக்கிறது. அவரது சித்தத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக ஏதாவது ஒன்று நடக்கும்பட்சம் அவர் தேவத்துவத்தை இழந்துவிடுகிறார். எப்படி ஒரு படம் முழுமையடைய எல்லா பாத்திரங்களும் தேவைப்படுகிறதோ அதே போலத்தான் உலகிலும். நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எதேச்சையாகவோ, தற்செயலாகவோ அல்லது தேவனுக்கு ஆச்சரியமளிக்கும் வகையிலோ நடப்பதில்லை. எல்லாம் டைரக்டருடைய வேலை. நாம் நம்முடைய பாத்திரத்தைச் செய்தே ஆகவேண்டும். நாம் மட்டுமல்ல உலகிலுள்ள அனைவருமே.... வேறு வழியே இல்லை.

துன்மார்க்கன் அழிந்துபோவதில் அத்தனை சந்தோஷமிருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள், அதேநேரம் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகிவிட்டோம்;

ஆதாம் பாவத்தை இங்கு குறிப்பிடவில்லை.

 

கிருபை, இரக்கம், காருண்யம் இதெற்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

உயிர்த்தெழுதல் இரண்டு விதமாக இருக்கும் என்பதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா??

அதாவது, முதல் தர உயிர்த்தெழுதலான ஆவிக்குறிய உயிர்த்தெழுதல், இது சபைக்கு மாத்திரமே உண்டான உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் சாயலில், சாவாமை அழியாமை மகிமைக்கான உயிர்த்தெழுதல்!!

இரண்டாவது, இந்த பூமிக்குறிய உயிர்த்தெழுதல்!! எல்லா மனுஷர்களும் உயிர்த்தெழுந்து வந்து இந்த பூமியில் நீதியை கற்றுக்கொள்ளும்படியான ஒரு உயிர்த்தெழுதல்!!

முதலில் இதில் உங்களுக்கு உடண்பாடு என்றால் தான் மற்றவை பேச முடியும்!!

மத்தேயு 6:10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

உம்முடைய ராஜ்யம் வருவதாக என்றும் பரமண்டலத்திலே தேவனின் சித்தம் செய்யப்படுவது போல் இந்த பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று கிறிஸ்து இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுக்கிறார்!!

அப்படி என்றால் இந்த பூமியில் தேவனின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்பதை நம்புகிறீர்களா!! யார் அதில் பிரஜை யார் அதில் ஆட்சியாளர்?? மாம்சத்தில் உயிர்த்தெழுந்தவர்களே அதில் பிரஜை, கிறிஸ்துவும் சபையுமே ஆட்சியாளர்கள்!! இந்த ராஜ்யத்தில் தான் பரமண்டலத்தில் செய்யப்படுவது நடக்க போகிறதாம்!! இந்த பூமியில் உயிர்த்தெழுதலுக்கும் பின் பாவத்துடன் தான் இருக்க போகிறார்கள், அல்லது பாவம் செய்துக்கொண்டே இருந்து மரிக்க (இரண்டாம் மரணம் என்கிற உங்கள் வாதம்) போகிறார்கள் என்றால், பரமண்டலத்திலே இப்படி தான் செய்யப்படுகிறதோ!!

நமக்கு உயிர்த்தெழுதல் நித்தியஜீவன் என்றவுடன் பரலோகம் ஒன்றே தெரிகிறது, அது தான் பெரும் குழப்பத்திற்கு காரணம்!! பழைய ஏற்பாட்டில் யாருக்கும் பரலோக ராஜியத்தின் அழைப்பு இல்லை, சபைக்கு மாத்திரமே அந்த அழைப்பு இருக்கிறது!! மற்றவர்கள் அனைவரும் இந்த பூமியில் உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோ.பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷன் அவர்களே!

நாம் விவாதிக்கிற இவ்விவாதம் நிச்சயமாக அநேகருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் விசுவாசிக்கிறேன். நாம் மூவருமே மாறி மாறி நம் வாதத்திற்கு ஆதாரமான ஏராளமான வசனங்களை பயன்படுத்தி விவாதிக்கிறோம். எல்லா வசனங்களிலும் நாம் ஒருமித்த சரியான கருத்தைப் புரிந்துகொண்டால் விவாதம் முடிந்துவிடும். ஆனால் இப்போதைக்கு அதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே நாம் ஏராளமான வசனங்களை அடுக்கிக்கொண்டு போவதைவிட, நம் விவாதத்திற்கு ஆதாரமான மிகமுக்கியமான வசனங்களில் நமக்கு ஒருமித்த கருத்து வருகிறதா எனப் பார்ப்போம்.

அநேக வசனங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது போலத்தான் இருக்கின்றன. அதனால்தான் சாத்தானுங்கூட வசனங்களைச் சொல்லியே இயேசுவை சோதிக்க முடிந்தது. இயேசுவும் வசனங்களைச் சொல்லியே சாத்தானின் வாயை அடைக்கவும் முடிந்தது. சாத்தான் சொன்ன வசனங்களும் மெய்தான், இயேசு சொன்ன வசனங்களும் மெய்தான். ஆனால் அவற்றை balance செய்து இரு தரப்பு வசனங்களின் கருத்தும் பொய்யாகாதபடிக்கு ஒரு balancaed கருத்தை எட்டியதால் அவர்களிடையேயான விவாதம் முற்றுப் பெற்றது. அதுபோலவே நாமுங்கூட balanced கருத்தை எட்டினால்தான் நம் விவாதம் முற்றுப்பெறும்.

வேதாகமத்தில் ஏராளமான வசனங்கள் உள்ளன. ஒரே திரியில் அவை எல்லாவற்றிற்கும் இடையேயான balancaed கருத்தை எட்டுவதென்பது சாத்தியமல்ல. உண்மையில் உங்களோடானாலும் சரி, வேறு யாராடோனாலும் சரி, வேதவசன தியானம் செய்வதென்பதை நான் மிகமிக உற்சாகத்துடன் செய்கிறேன்; நீங்களும் அப்படித்தான் என நான் அறிவேன். ஆகிலும் நேரமின்மை எனும் பிரச்சனை நம் எல்லோருக்குமே உள்ளது.எனவே கூடியவரை சற்று சுருக்கமான அளவில் வசனங்களை எடுத்துப்போட்டு நறுக்குத் தெரித்தாற்போல் விவாதித்தால் நமது விவாதம் இன்னும் சிறப்பாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

உங்களது எல்லா வசனங்களுக்கும் விளக்கமளிக்க எனக்கு ஆசைதான்; ஆனாலும் தற்போது நீங்கள் அடிக்கடி எடுத்துப்போட்டு, இவ்வசனத்தின்படி யாராவது நடக்கமுடியுமா அல்லது நடக்கிறார்களா என சவால்விட்டு கேள்வி கேட்கிற ஒரு வசனத்திற்கு இப்போது பதில் தருகிறேன். மற்றவற்றிற்கு நேரம் கிடைக்கும்போது பதில் தருகிறேன்.

இயேசு ஒரு வசனத்தைச் (கட்டளையை) சொன்னால், அதன்படி நாம் நடக்க நிச்சயம் சாத்தியம் இருக்கவேண்டும்; நமக்கு சாத்தியமற்ற ஒரு கட்டளையை தேவனோ இயேசுவோ சொன்னால் அவர்களின் கட்டளை அர்த்தமற்றதாக இருக்கும். எனவே இக்கட்டளைப்படி நீங்கள் செய்கிறீர்களா? யாரேனும் செய்கிறீர்களா எனும் கேள்வி அவசியமற்றது. தேவன்/இயேசு கட்டளையிட்டுள்ளார்; அதன்படி செய்ய நான் முழு மனதோடும், முழுபலத்தோடும் முயல்வேன் என்பதுதான் நமது எண்ணமாக இருக்க வேண்டும்.

ஏதோ நம்மில் யாராலும் முடியாது என்பதுபோல் நீங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுகிற வசனம்:

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

இக்கட்டளைப்படி நடப்பதென்பது என்ன அத்தனை கடினமா சகோதரரே? அவரது கற்பனைகள் பாரமானவைகளும் அல்ல என மற்றொரு வேதவசனமே (1 யோவான் 5:3) கூறுகிறதே!

உனக்கு உண்டானவைகள் எவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாததால்தான், இது ஏதோ யாராலும் சாத்தியமற்றது என நீங்கள் எண்ணுகிறீர்கள். உனக்கு உண்டானவைகள் எவை எனும் கேள்விக்கான பதில் அதே வசனத்தில் அடங்கியுள்ளது. அவ்வசனத்தின் பின்பகுதியில், அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் என இயேசு கூறுகிறார். பரலோகப் பொக்கிஷம் வேண்டுமெனில் உனக்கு இப்பூமியில் உண்டானவைகளான பூலோகப் பொக்கிஷங்களை விற்று தரித்திரருக்கு கொடு என்பதே இயேசுவின் கட்டளை.

மற்றபடி நாம் அனுதினமும் பயன்படுத்துகிறவைகளான நமக்கு உண்டானவைகள் அத்தனையையும் விற்றுக் கொடுக்கவேண்டுமென்பது இயேசுவின் கட்டளையல்ல. அப்படிப் பார்த்தால், அடுத்த வேளை நாம் சாப்பிடப்போகிற சாப்பாடுகூட நமக்கு உண்டானதுதான்; அதைக்கூட விற்று தரித்திரக்குக்கொடு என இயேசு கட்டளையிட்டதாகிவிடும்.

இயேசுவின் கட்டளையைக் கேட்ட அவ்வாலிபன் அதன்படி செய்யாததற்குக் காரணமென்ன? அவன் மிகுந்த ஆஸ்தி (அல்லது பொக்கிஷம்) உடையவனாகவும் அந்த ஆஸ்தியின்மீது பற்றுதல் உடையவனாகவும் இருந்ததால் அதை அவனால் செய்யமுடியவில்லை.

எனவே நாம் பொக்கிஷத்தையும் ஆஸ்தியையும் சேர்த்து வைக்கக்கூடாது என்பதே அக்கட்டளையினுள் அடங்கியுள்ள மறைவான கட்டளை. பூமியில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்காதிருங்கள் என மற்றொரு வசனத்தில் இயேசு கட்டளையிட்டதை நினைவூட்டுகிறேன் (மத்தேயு 6:19).

நமக்கு உண்டானவை என்றால் நாம் பயன்படுத்துகிற வீடு, மேஜை, நாற்காலி, படுக்கை போன்றதல்ல. எதிர்காலத்தில் (வியாதி போன்ற) எதிர்பாரா செலவினத்திற்காகவோ, அல்லது நம் பெருமைக்காகவோ ஆடம்பரத்திற்காகவோ, அல்லது நாம் பெரும் ஆஸ்தியுள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்காகவோ சேர்த்துவைக்கிற அனைத்தும் பொக்கிஷங்கள்தான்.

பொக்கிஷம் என்றால், நிலம் பொன் வெள்ளி ஆகியவை மட்டுமல்ல; நம் தேவை 2 மேஜைகள் என்றிருக்கும்போது, 100 மேஜைகளை வாங்கிப்போட்டு, நமக்கு எதிர்பாராத செலவு வரும்போது அவற்றை விற்று பயன்படுத்தலாம் என நினைத்தால் அந்த மேஜைகளும்கூட பொக்கிஷமாகி விடும்.

இயேசுவின் இக்கட்டளைப்படி நடப்பது மிகமிக சுலபம். இதற்கு நானே ஓர் உதாரணமாயுள்ளேன் என ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இது ஏதோ மிகவும் பெருமைக்குரிய மாபெரும் சாதனை அல்ல. எனக்கென சொந்தமாக ஒரு வீடு உள்ளது. வீட்டில் பயன்படுத்தும் டி.வி., போன், செல்போன், கணினி, கார், பைக், சில உடைகள் போன்ற பொருட்கள் உண்டு. அதிக பட்சம் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் உண்டு. எனக்கென எந்த ஆபரணமும் கிடையாது.

கார் எப்படி வாங்கினீர்கள்? அதற்காக பணம் சேர்த்திருப்பீர்கள் அல்லவா? என நீங்கள் கேட்கலாம். நம் தேவைக்கென ஒரு பொருளை நாம் வாங்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்கென பணம் சேர்ப்பதை பொக்கிஷம் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது மாத வருமானத்தில் திருப்பிச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் வங்கிக் கடன் வாங்கி கார் வாங்கினேன்.

(உண்மையில் கார் அவசியத் தேவை அல்ல என்றாலும், குடும்பமாக பயணம் செய்ய பயன்படுத்தக்கூடிய ஒரு வாகனம் என்பதாலும், எனது குடும்பத்தாரின் நியாயமான விருப்பத்தை பூர்த்தி செய்ய நான் கடமைப்பட்டவன் என்பதாலும் அதை வாங்கினேன்.)

இந்நிலையில் நீடித்திருப்பதில் எனக்கு எந்த சிரமமும் கிடையாது. இப்போது சொல்லுங்கள்; நான் எனக்குண்டான எதை விற்று தரித்திரருக்குக் கொடுக்கவேண்டும்? நான் ஒரு தனி ஆளாக இருந்தால் கார் மட்டுமல்லை பைக் கூட எனக்குத் தேவையல்ல, சைக்கிள் இருந்தால் போதும்; இன்னும் சொல்லப்போனால் சைக்கிள் கூட அவசியமல்ல. உண்ண உணவும் உடுக்க உடையும் மட்டும் இருந்தால், 1 தீமோ. 6:8 சொல்கிறபடி, அதுகூட எனக்கு போதுமானதுதான்.

இந்த மனநிலையில் நீங்களும் நானும் அறியாதவகையில் ஏராளமானவர்கள் உள்ளனர். எனவே மத்தேயு 19:21-ல் இயேசு கட்டளையிட்டபடி வாழ்கிற ஏராளமானோர் உண்டு.

உங்கள் பரலோகப் பிதாவைப் போல் பூரணசற்குணராயிருங்கள் என இயேசு சொல்கிறார் (மத்தேயு 5:48). நமக்கு சாத்தியமற்ற ஒன்றை இயேசு நிச்சயமாக சொல்லமாட்டார். பூரணசற்குணராயிருக்க நாம் என்ன செய்யவேண்டும்? மத்தேயு 5-ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். குறிப்பாக நிறைவு வசனங்களைப் படித்துப்பாருங்கள்.

மத்தேயு 5:43 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? 48 ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

பவுலுங்கூட பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் என்கிறார் (கொலோ. 3:14). புதிய ஏற்பாட்டில் பவுலும் அப்போஸ்தலரும் எத்தனையோ உபதேசங்களைக் கூறியுள்ளபோதிலும், நீங்கள்:

2 தீமோ. 3:1 கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

எனும் வசனங்களைச் சொல்லி, மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், இதுதான் தேவசித்தம், தேவசித்தத்திற்கு எதிராக நீங்கள் எதுவும் செய்யமுடியாது, உங்கள் போதனையால் பயனில்லை எனச் சொல்கிறீர்கள். இப்படிக் கூறும் நீங்கள் “நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” என எபிரெயர் 10:25 போன்ற பல வசனங்களைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். மேலே நீங்கள் காட்டியுள்ள வசனங்களில்கூட, இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு என பவுல் கூறுவதால், எல்லோரும் அக்கிரமக்காரராக இருக்க மாட்டார்கள் என்பது புரிகிறதல்லவா?

எனவே சகோ.சுந்தர் அடிக்கடி சொல்வதைப்போல, நாம் மேன்மையானதைத் தெரிந்துகொள்வோம். 2 தீமோ. 3:1-4-ஐச் சொல்கிற நீங்கள் அவ்வசனங்கள் கூறுகிற அக்கிரமக்காரராக இருக்க நினைக்கிறீர்களா? அல்லது அப்படிப்பட்டவர்களை விட்டு விலக நினைக்கிறீர்களா?

மத்தேயு 5:19ஐயும் நினைவூட்ட விரும்புகிறேன். இயேசுவின் கற்பனைகளின்படி நடக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி கேளாமல், மத்தேயு 5:19-ன்படி நடப்பதுதான் நம் கடமை.

இனி நாம் விவாதத்தைத் தொடர்வதற்கு முன் பின்வரும் வசனத்திற்கு வரிக்கு வரி உங்கள் விளக்கதைக் கொடுங்கள்.

கலாத்தியர் 6:7  மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.



-- Edited by anbu57 on Thursday 30th of June 2011 09:32:58 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோ அன்பு அவர்களே, 

உங்களது வசன வாஞ்சைக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் கருத்தில் உடன்பாடில்லையே தவிர உங்கள் நோக்கத்தைக் குறைகூறவில்லை. உங்கள் கூற்றுப்படியே புத்தி சொல்லுதல், அப்படிப்பட்டவர்களை விட்டு விலகுதல், பூரண சற்குணனாய் இருத்தல் போன்றவை இவற்றை வாசிப்பவருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இது எத்தனை பேருக்கு உண்மையில் போய் சேர்ந்திருக்கிறது என்பதே நம் கேள்வி. மேலும் நற்கிரியைகளைச் செய்து 'முக்தி' அடைய வேண்டும் என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. நீங்கள் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. "எல்லாரும் இன்புற்றிருக்க நினைபப்துவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்று தாயுமாவர் சொன்னதாகக் கேள்வி. ஒரு மனிதனே எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும்போது அவனைப் படைத்த தேவன் எத்துனை உன்னத நோக்கத்துடன் இருப்பார். நாங்கள் ஒன்றும் பாவம் அதிகமாய்ச் செய்து மனம்போன போக்கிலெல்லாம் வாழலாம் என்று போதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க‌!

நாங்கள் அதற்கும் ஒருபடி மேலே போய் யார் எப்படி சுபாவத்தை உடையவர்களாய் இருந்தாலும் தேவன் அவர்களை நேசிக்கிறார் என்கிறோம். அவருடைய அன்பில் பட்சபாதம் இல்லை. சரியாகச் சொன்னால் 'கெட்ட குமாரனுக்குத்தான்' அந்தத் தகப்பன் அதிக கரிசனை தருகிறார். ஏனென்றால் 'கெட' அனுமதித்தது அவர் செயலே. 

நீங்கள்தான் கெட்ட குமாரனுக்குமட்டும் பிரியாணி எனக்கு வெறும் கஞ்சி என்கிறீர்கள். தேவனுக்கு அவர் படைத்த யாவரும் அதி முக்கியமானவர்களே. இதில் மாற்றுக்கருத்து இருந்தால் தேவன் தகுதியின் அடிப்படையில் அனைவரையும் 'டீல்' பண்ணுகிறார் என்ற அர்த்தமாகிவிடும்.

உலகில் நடக்கும் சகல காரியங்களுக்கும், மனிதரின் நடக்கைகளுக்கும் முழுப்பொறுப்பு தேவனே. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. தேவனே அனைத்தையும் தன் ஆதீனத்திலிருந்து நடப்பிக்கிறார். அவருக்கு நடக்கப்போகும் யாவையும் முன்கூட்டியே அறியும் தன்மை உள்ளது. எனவே அதன்படியே நடந்தே தீரும். அவைகளை அவரே நடப்பித்தால்தான் முன்கூட்டியே அவைகளை அறிய முடியும். 

ஒரு நிகழ்வு நிகழ்வதற்கான சகலத்தையும் தானே செய்துவிட்டு அதற்கு மனிதனை காரணம்காட்டி அவனை அழிப்பது அபத்தமான காரியம்.

உனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு என்ற 'செய்யக்கூடிய' கட்டளைக்கே நாம் எவ்வளவு கண்டிஷன்கள் போட்டு நமது மேன்மையை நிரூபிக்கிறோம். என்னைப் பின்பற்றி வா என்ற கட்டளைக்கு சீஷர்கள் அப்படியே சொல்லர்த்தமாகப் பின் பற்றினார்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மிடம் வந்தோமே என்றார்கள். எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான் அதற்கு நீங்கள் தனியே விளக்கம் கொடுக்கத்தேவையில்லை.

சீடர்களுக்குக் நேரடியாக கட்டளையிட்டதை அவர்கள் அப்படியே செய்தார்கள். நாம்தான் அவர் அவர்களை நோக்கி என்று சொன்னவைகளில் ஒரு சிலவற்றை மட்டும் 'நம்மை நோக்கி' என்றும் பெரும்பாலாவனைகளை அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ என்று எடுத்துக்கொள்கிறோம். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி உபதேசித்து, சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்ற வசனத்தின்படி நாம் எத்தனை பேரை சீஷராக்கியிருக்கிறோம்? கட்டளையிட்ட யாவையும் என்றால் எல்லா கட்டளைகளையும்தான், ஒன்று கூட பாக்கியில்லாமல்...

இதற்கும் நாம் ஏகப்பட்ட சாக்கு போக்கு சொல்லி நம்மாலியன்றவற்றை மட்டும்செய்யலாம் என்று வாதம் செய்வோம். இது கடின உபதேசம் என்று ஒதுங்கியவர்களே அநேகர், அவர் காலத்திலேயே. அத்தனை உபதேசம் செய்தும் கடைசியில் மிஞ்சியவர்கள் வெறும் 120 பேர்தான். 

வேதாகமம் நமக்கு ஏதோ படிக்க நேர்ந்ததால் இதைப்பற்றி வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறோம். இதை வாசிக்காமலே, என்னவென்றே தெரியாமல் மரித்த மரிக்கும் பில்லியன் கணக்கான மக்களின் நிலை என்ன? ஒருவன் கிறிஸ்துவினிடத்தில் வருவது பிதாவின் இழுத்துக்கொள்ளுதலில்தான் இருக்கிறது. கிறிஸ்துவிடத்தில் வருவது என்பது அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதுதான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

தேவனுடைய சித்தமில்லாமல் ஒருவனும் 'தன்னிச்சையாக' நன்மையோ தீமையோ செய்ய முடியாது. அப்படி செய்யும் பட்சம் அவன் தேவனை விட சக்திவாய்ந்தவனாகிறான். இது மாபெரும் அபத்தம் மட்டுமல்ல தேவதூஷணம்.

நாங்கள் குழந்தை என்னுடையதில்லை அவளிடமே உயிரோடு இருக்கட்டும் என்று அதற்கான வசனங்களைத் தேடுகிறோம், நீங்கள் இல்லை குழந்தையைப் பாதி பாதியாக்கி கொடுங்கள் என்கிறீர்கள். தேவன் நியாயம் செய்வார்....

தானே மெனக்கெட்டு ஒரு காரணத்திற்காக ஒரு மாபெரும் சிருஷ்டியை படைத்துவிட்டு அது 'சரிவர' வேலை செய்யாததைக் காரணம் காட்டி அதை அழித்தால் தவறு சிருஷ்டியுடையது அல்ல. படைத்தவருடையது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:

//சகோ அன்பு அவர்களே,

உயிர்த்தெழுதல் இரண்டு விதமாக இருக்கும் என்பதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா??

அதாவது, முதல் தர உயிர்த்தெழுதலான ஆவிக்குறிய உயிர்த்தெழுதல், இது சபைக்கு மாத்திரமே உண்டான உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் சாயலில், சாவாமை அழியாமை மகிமைக்கான உயிர்த்தெழுதல்!!

இரண்டாவது, இந்த பூமிக்குறிய உயிர்த்தெழுதல்!! எல்லா மனுஷர்களும் உயிர்த்தெழுந்து வந்து இந்த பூமியில் நீதியை கற்றுக்கொள்ளும்படியான ஒரு உயிர்த்தெழுதல்!!

முதலில் இதில் உங்களுக்கு உடண்பாடு என்றால் தான் மற்றவை பேச முடியும்!!//

இவற்றில் எனக்கு நிச்சயமாக உடன்பாடு உண்டு சகோதரரே!

//அப்படி என்றால் இந்த பூமியில் தேவனின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்பதை நம்புகிறீர்களா!!//

ஆம்.

//மாம்சத்தில் உயிர்த்தெழுந்தவர்களே அதில் பிரஜை, கிறிஸ்துவும் சபையுமே ஆட்சியாளர்கள்!! இந்த ராஜ்யத்தில் தான் பரமண்டலத்தில் செய்யப்படுவது நடக்க போகிறதாம்!!//

இக்கூற்றில் முதல் பாதியை ஏற்கிறேன். பின் பாதியை ஏற்க மறுக்கிறேன். இந்த ராஜ்யத்தில்தான் (அதாவது கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தில்தான்) பரமண்டலத்தில் செய்யப்படுவது நடக்கப்போகிறதென எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இந்த ராஜ்யத்தில்தான் 100 வயது பாவி சபிக்கப்படுவான் என்றும், துன்மார்க்கன் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக் கொள்ளான் என்றும் ஏசாயா 65:20 மற்றும் ஏசாயா 26:10 வசனங்கள் கூறுகின்றன. பரமண்டலத்தில் நடப்பதுதான் இங்கும் நடக்கிறதென்றால், 100 வயது பாவி எப்படி இங்கு இருக்கமுடியும்? அவன் எப்படி சபிக்கப்படமுடியும்? துன்மார்க்கன் எப்படி நீதியைக் கற்றுக்கொள்ளாமல் போனான்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான்; அதற்கு நீங்கள் தனியே விளக்கம் கொடுக்கத்தேவையில்லை.//

சரி, நான் விளக்கம் கொடுக்கவில்லை. நீங்களாவது விளக்கம் கொடுங்களேன்.

எல்லாவற்றையும் என்றால், உடுத்தியிருக்கும் உடையையுமா? உண்ணவிருக்கும் உணவையுமா? குடியிருக்கும் வீட்டையுமா?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//நாங்கள் அதற்கும் ஒருபடி மேலே போய் யார் எப்படி சுபாவத்தை உடையவர்களாய் இருந்தாலும் தேவன் அவர்களை நேசிக்கிறார் என்கிறோம்.//

நீங்கள் மட்டுமல்ல, நானும் இதையேதான் சொல்கிறேன். ஆனால் நீதிபதி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன், தான் நேசிக்கிற மகன் கொலைக் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுகையில், இவனை நான் நேசிக்கிறேன், எனவே இவனுக்கு என்னால் தண்டனை கொடுக்க முடியாது எனக் கூறமுடியுமா?

தான் எவ்வளவாய் நேசிக்கிற மகனாக இருந்தாலும், நீதிபதி ஸ்தானத்தில் இருக்கிற தகப்பன், நீதியின்படி தனது மகனுக்கு தண்டனை தரத்தானே செய்வார்? அப்படித்தான் தேவனும், அவர் எல்லா மனிதரையும் நேசிப்பவராக இருந்தாலும், நீதியின்படியான செயல்களையும் செய்துதான் ஆகவேண்டும். எனவே தாம் நேசிக்கிற மனிதருக்கு தமது நீதியின்படி தண்டனை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

சோல்சொல்யூஷன்:

//எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான்; அதற்கு நீங்கள் தனியே விளக்கம் கொடுக்கத்தேவையில்லை.//

சரி, நான் விளக்கம் கொடுக்கவில்லை. நீங்களாவது விளக்கம் கொடுங்களேன்.

எல்லாவற்றையும் என்றால், உடுத்தியிருக்கும் உடையையுமா? உண்ணவிருக்கும் உணவையுமா? குடியிருக்கும் வீட்டையுமா?



 மத்தேயு 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

மாற்கு 10:29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,

லூக்கா 18:29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்டவன் எவனும்,

 

இதை இயேசு எழுத்தின்படியேதான் சொல்லியிருக்கிறார். 

மேலும்,

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

 

6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.

9. உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,

10. வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

இவையெல்லாம் எழுத்தின்படியேதான் சீடர்கள் செய்திருப்பார்கள். நாம் என்ன வாதிடுவோம் இது சீடர்களுக்கு அந்த காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட கட்டளை, நமகெப்படி பொருந்தும், நம்மால் எப்படி மரித்தோரை எழுப்பமுடியும் என்று சப்பை கட்டு கட்டுவோம்.

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

 

4:19. என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

20. உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.

21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.

22. உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.

அவருக்குப் பின் செல்வது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை. எழுத்தின்படி பின்பற்றினார்கள்... நாம் அப்படியா? எத்தனை *போடுகிறோம். டாபிக்கையே மாற்றுகிறோம்....

விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு பின்பு என்னைப்பின்பற்றிவா என்றார் என்பது இங்கு அப்படியே எழுத்தின்படிதான் அவர் அர்த்தம் கொண்டிருக்கக்கூடும். அதனால்தான் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே என்று பேதுரு சொல்லத்தொடங்குகிறான்.

நாம்தான் நாம் சொந்த வீடு, கார் தேவையான அனைத்து வசதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், அதில் தவறேதுமில்லை. 'பின்பு என்னைப் பின்பற்றிவா' என்று கிறிஸ்து கூறினால் அது 'எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான்' இதற்கு சுயநீதியைச் சார்ந்து வேறு அர்த்தம் கற்பிக்க முயலுவது அறிவுடைமையல்ல. 

கிறிஸ்து யாருக்கு என்ன சொன்னார்? அவர் 'நீங்கள்' என்று குறிப்பிடுவதெல்லாம் யாரைக்குறித்து, இது வேதத்தை வாசிக்கும் எல்லாருக்குமே பொருந்துமா? போன்ற கேள்விகள் மிக மிக அத்தியாவசியமாகிறது. அதை நமக்கு என்று எடுத்துக்கொண்டால் அதன்படி 'நடக்க முழுமனதோடு முயல்வேன்' என்று எண்ணாமல் அதன்படி நடக்கவேண்டும். வீட்டை விற்க முயல்வேன் என்று சொல்லிக்கொண்டு கடைசிவரைஅதிலேயே இருக்கலாம். முயற்சி அதுவன்று!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

சோல்சொல்யூஷன்:

//நாங்கள் அதற்கும் ஒருபடி மேலே போய் யார் எப்படி சுபாவத்தை உடையவர்களாய் இருந்தாலும் தேவன் அவர்களை நேசிக்கிறார் என்கிறோம்.//

நீங்கள் மட்டுமல்ல, நானும் இதையேதான் சொல்கிறேன். ஆனால் நீதிபதி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன், தான் நேசிக்கிற மகன் கொலைக் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுகையில், இவனை நான் நேசிக்கிறேன், எனவே இவனுக்கு என்னால் தண்டனை கொடுக்க முடியாது எனக் கூறமுடியுமா?

தான் எவ்வளவாய் நேசிக்கிற மகனாக இருந்தாலும், நீதிபதி ஸ்தானத்தில் இருக்கிற தகப்பன், நீதியின்படி தனது மகனுக்கு தண்டனை தரத்தானே செய்வார்? அப்படித்தான் தேவனும், அவர் எல்லா மனிதரையும் நேசிப்பவராக இருந்தாலும், நீதியின்படியான செயல்களையும் செய்துதான் ஆகவேண்டும். எனவே தாம் நேசிக்கிற மனிதருக்கு தமது நீதியின்படி தண்டனை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.


 ஆனால் இந்த நீதிபதிதான் எதிரியான ஒருவனை நியமித்து தன் மகனையே கொலை செய்யத்தூண்டிவிட்டிருக்கிறாரே. ஆக அவரே அதற்கு வழியும் தேடி மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.

அதற்காகத்தான் ஒரு மகனது(ஆதாம் சந்ததி) பாவத்துக்கு 'ஈடுபலி'யாக இன்னொரு குமாரனை தண்டனைக்குள்ளாக்கி அந்த மகனை 'நிரபராதி'யாக்கி விடுவிக்கிறார். அன்பும் ஜெயிக்கிறது, நீதியும் நிலைநாட்டப்படுகிறது....

பாவமில்லாத அவரை ஏன் பாவமாக்கவேண்டும். நேரடியாக தண்டனை கொடுத்திருக்கலாமே?

கிறிஸ்துவின் கிரயம், ஈடுபலி இவற்றைக் கொச்சைப்படுத்தவேண்டாம். பாவிகளுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்றால் கிறிஸ்துவின் இரத்தம் விருதா...

இதையே இப்படியும் விளக்கலாம். 100 பேரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு குறிப்பிட்ட நபர் எங்களுக்கு வேண்டும் என்று கோரும் பட்சம் அந்த ஒரு மனிதன் மூலமாய் 100 பேர் 'இரட்சிக்க'ப்படுவதில்லையா, அதுபோலத்தான். ஒரு நபரை 'பலி' கொடுத்து முழு மனுக்குலத்தையும் மீட்கும் திட்டம்தான் தேவனுடையது... அதனால்தான் அவர் மீட்பர், இரட்சகர். முழுமையாக ஒரு ஆள் பாக்கியில்லாமல் மீட்டால்தான் அந்தப் பெயருக்கு அவர் தகுதியாவார். இல்லாவிட்டால் அந்த நபரைப் பொருத்தவரை அவர் 'மீட்பர்' அல்லவே. உலக ரட்சகர் உலகத்தை முழுவதும் இரட்சித்தால்தான் உலக இரட்சகராக முடியும்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard