kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிந்ததும் அறியாததும்...


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: அறிந்ததும் அறியாததும்...


soulsolution wrote:
//3.கீழ்கண்ட வசனங்களையும் கவனிக்கவும்

ரோமர்5:15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

தேவனே மனிதனுடைய எல்லா நடக்கைகளுக்கும் பொறுப்பாளி என்பது அவருக்குத் தெரிந்ததால்தான் அவர் அந்தப் பொறுப்பை ஏற்று எல்லாரையும் நீதிமான்களாக்குகிறார்.//

மனிதனுடைய எல்லா நடக்கைகளுக்கும் தேவனே பொறுப்பாளி என்பதற்காக அல்ல சகோதரரே! மனிதனுடைய பல நடக்கைகளுக்கு ஆதாமின் பாவமே காரணமாயிருப்பதால்தான், அவற்றிற்கான பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.

soulsolution wrote:
//ஏதோ அடுத்தவரின் தப்பிதங்களை மன்னித்து, இரக்கம் செய்து, ஹாஸ்பிடல் விஸிட், ஜெயில் விஸிட் எல்லாம் செய்து அவரிடம் குட் கான்டாக்ட் சர்ட்டிபிகேட் வாங்கினால் நித்தியஜீவன், அப்படிச் செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை என்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?//

இக்கேள்வியை இயேசுவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஏனெனில், இயேசுதான் அவற்றைச் செய்தவர்களுக்கு நித்திய ஜீவன் என்றும், செய்யாதவர்களுக்கு நித்திய ஆக்கினை என்றும் கூறியுள்ளார்.

ஆகிலும் ஏற்கனவே பதித்த எனது பதிவுகளில் இதற்கான காரணத்தை ஓரளவு எழுதியுள்ளேன்; அவற்றைப் படித்துப் பாருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மனிதனுடைய பல நடக்கைகளுக்கு ஆதாமின் பாவமே காரணமாயிருப்பதால்தான், அவற்றிற்கான பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.//

மனிதனுடைய பல அல்ல எல்லா பாவங்களுக்கும் ஆதாமின் பாவமே காரணமாயிருக்கிறது!! "பல" என்று எப்படி வேறு பிரிக்கிறீர்கள்!!??

அப்படி என்றால், ஆதாமின் பாவத்தை அனுமதித்தவர் தேவன் தானே!! இல்லாவிட்டால், ஏன் ஆதாமின் பாவம் காரணாமாக இருக்கிறது என்று அவற்றுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//மனிதனுடைய பல அல்ல எல்லா பாவங்களுக்கும் ஆதாமின் பாவமே காரணமாயிருக்கிறது!! "பல" என்று எப்படி வேறு பிரிக்கிறீர்கள்!!??//

இக்கேள்வி சம்பந்தமாக ஏற்கனவே கூறியுள்ளேன்.

நாம் செய்கிற பாவங்கள் 2 வகைப்படும்.

1. ஆதாமின் பாவத்தால் வந்த ஜென்ம பாவசுபாவத்தால் செய்கிற பாவங்கள்.

2. நாம் சுயமாக செய்கிற பாவங்கள். நாம் சுயமாகவும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கு ஆதாரமாகத்தான், சுயமாக பாவம் செய்த ஆதாமை உதாரணமாகக் கூறியிருந்தேன்.

நாம் சுயமாகச் செய்கிற பாவத்துக்கு ஓர் உதாரணமாகத்தான் “நன்மை செய்யாதிருத்தல்” எனும் பாவத்தைக் கூறியிருந்தேன்.

bereans wrote:
//ஆதாமின் பாவத்தை அனுமதித்தவர் தேவன் தானே!! இல்லாவிட்டால், ஏன் ஆதாமின் பாவம் காரணாமாக இருக்கிறது என்று அவற்றுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்!!??//

ஆதாமின் பாவத்திற்கும் அதன் விளைவாக வந்த மரணத்திற்கும் நாம் காரணமல்ல, அல்லது பொறுப்பல்ல. ஆனாலும் நாம் அனைவரும் மரணத்தைச் சந்திக்க வேண்டியதுள்ளது. இந்த மரணத்திலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமெனில் (அதாவது உயிர்த்தெழ வேண்டுமெனில்), ஆதாமின் பாவம் மன்னிக்கப்படவேண்டும், அதன் மூலம் நம்மிடமுள்ள ஜென்ம பாவசுபாவம் நீக்கப்பட வேண்டும். ஆதாமின் பாவத்துக்கும் அதன் விளைவான மரணத்துக்கும் நாம் பொறுப்பல்ல என்பதால், அந்த மரணத்திலிருந்து நம்மை விடுவிக்கும் பொறுப்பை தேவன் எடுத்துகொண்டார்.

ஒரு காரியம் நிகழ்வதை தேவன் தடுக்க நினைத்தால் அவரால் அதை தடுக்கமுடியும் என்பது 100-க்கு 100 உண்மை. அதன்படி, ஆதாம் பாவம் செய்வதையும் தடுக்கவேண்டும் என தேவன் நினைத்தால் நிச்சயமாக அதை அவர் செய்திருக்க முடியும். ஆனால் அதில் ஆதாமின் பங்கு இருக்காதே!

ஒரு தகப்பன் தன் மகனிடம் ஒரு கட்டளையைக் கொடுத்து, மகன் அக்கட்டளைப்படி நடவாவிடில் அதற்கு ஒரு தண்டனையைச் சொல்லி, அக்கட்டளைப்படி நடந்தால் அவனுக்கு ஒரு பரிசைக் கொடுப்பதாக தீர்மானித்தால், அத்தகப்பன் என்ன செய்யவேண்டும்? மகன் தன் கட்டளைப்படி நடக்கவோ நடவாதிருக்கவோ அவனுக்கு உரிமை கொடுக்கவேண்டும். மாறாக, மகன் தன் கட்டளைப்படி நடக்க ஏதுவாக ஒரு தனி அறையில் சில காலம் அடைத்துவைத்துவிட்டு, “ஆ, என் மகன் என் கட்டளைப்படி நடந்துவிட்டான், எனவே அவனுக்குப் பரிசு கொடுப்பேன்” எனச் சொல்வதில் என்ன விசேஷம் இருக்கிறது?

அதுபோலத்தான் தேவகட்டளைப்படி நடப்பதில் ஆதாமுக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், ஆதாமுக்கு எந்த பலனையும் கொடுப்பதில் விசேஷம் இருக்காது. எனவேதான் தேவகட்டளைப்படி நடப்பதையும் கட்டளையை மீறுவதையும் ஆதாம் சுயமாகத் தீர்மானித்துக் கொள்ளும்படி, ஆதாமுக்கு சுயாதீனத்தைக் கொடுத்தார். அந்த சுயாதீனத்தின்படி கனியைப் புசிக்கவோ, புசியாதிருக்கவோ ஆதாமுக்கு அனுமதி கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில், ஆதாமின் பாவத்தை தேவன் அனுமதித்தார் எனச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இதினிமித்தம் ஆதாமின் பாவத்துக்கு தேவன்தான் பொறுப்பு எனக் கூறமுடியாது.

ஆதாமைப் படைத்தவர் தேவனே என்பதால், ஆதாமின் மீறுதலால் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் வந்த மரணத்திற்கு தேவன் மறைமுகமாக பொறுப்பாகிறார். எனவேதான் அந்த மரணத்திலிருந்து மனிதனை மீட்கும் பொறுப்பை தேவன் ஏற்றுக்கொண்டார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆதாமைப் படைத்தவர் தேவனே என்பதால், ஆதாமின் மீறுதலால் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் வந்த மரணத்திற்கு தேவன் மறைமுகமாக பொறுப்பாகிறார். எனவேதான் அந்த மரணத்திலிருந்து மனிதனை மீட்கும் பொறுப்பை தேவன் ஏற்றுக்கொண்டார்.//

ஆதாமைமட்டுமல்ல எல்லாரையும் படைத்தவர் தேவன். எல்லாருடைய பாவங்களுக்கும் அவர்தான் பொறுப்பு. ஆதாமுக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என எப்படி எடுத்துக்கொள்வது?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//
//மனிதன் செய்கிற அனைத்துக்கும் தேவனே பொறுப்பு என்கிறீர்கள்//

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

ரோமர் 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

இந்த இரு வசனங்களும் வாசித்து என்ன சொல்லுகிறது என்று எழுதுங்கள்!!//

நீங்கள் காட்டியுள்ள 2 வசனங்களில், “மனிதன் செய்கிற அனைத்துக்கும் தேவனே பொறுப்பு” எனும் கருத்து அடங்கியுள்ளதாகக் கருதுகிறீர்கள் அப்படித்தானே?

அவ்வாறெனில், இவ்வுலகில் நடப்பது அனைத்தையும் just வேடிக்கை பார்த்துக்கொண்டு நீங்கள் “சும்மா” இருக்க வேண்டியதுதானே?

மேலே உள்ள 2 வசனங்களும், “மனிதன் செய்கிற அனைத்துக்கும் தேவனே பொறுப்பு” என்ற கருத்தை திட்டமாகக் கூறுவதாக நீங்கள் கருதினால், நான் என்ன சொன்னாலும் அதை நீங்கள் ஏற்கவா போகிறீர்கள்? என்றாலும் என்னாலியன்றதைச் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு சில கேள்விகள்:

“எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போட்டார்” எனும் சொற்றொடருக்கு அர்த்தமாக, யாரும் தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதபடி (அதாவது எல்லோரும் தமது கட்டளைகளை மீறும்படி) தேவன் எல்லாரையும் தமது கட்டுப்பட்டுக்குள் வைத்திருப்பதாகக் கருதுகிறீர்கள். எல்லோரும் இக்கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தான் எல்லோருக்கும் இரக்கம் கிடைக்கும், அப்படித்தானே? அதாவது எல்லோரும் தேவகட்டளைகளை மீறினால்தான் அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும், அப்படித்தானே?

அவ்வாறெனில் நீங்களும் நானும் செய்யவேண்டியதென்ன? நம்மால் முடிந்த அளவு அதிகபட்சமாக தேவகட்டளைகளை மீறிக்கொண்டேயிருக்க வேண்டும், அப்படித்தானே? அப்போதுதான் தேவன் நம்மீது அதிகபட்சமாக இரங்குவார், அப்படித்தானே?

மற்றுமொரு கேள்வி.

தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டாரெனில், பவுல் ஏன் இப்படிச் சொல்கிறார்?

ரோமர் 5:20 ... பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. 6:1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.

இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. “தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டது” எந்தக் காலத்தில்? முற்காலத்திலா, அல்லது தற்காலத்திலுமா?

இக்கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//ஆதாமைமட்டுமல்ல எல்லாரையும் படைத்தவர் தேவன். எல்லாருடைய பாவங்களுக்கும் அவர்தான் பொறுப்பு. ஆதாமுக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என எப்படி எடுத்துக்கொள்வது?//

அன்பான சகோதரரே! நான் சொன்னதை சற்று கவனமாகப் படியுங்கள்.

//ஆதாமைப் படைத்தவர் தேவனே என்பதால், ஆதாமின் மீறுதலால் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் வந்த மரணத்திற்கு தேவன் மறைமுகமாக பொறுப்பாகிறார். எனவேதான் அந்த மரணத்திலிருந்து மனிதனை மீட்கும் பொறுப்பை தேவன் ஏற்றுக்கொண்டார்.//

ஆதாமின் பாவத்துக்கு தேவன் பொறுப்பு என நான் கூறவில்லை. ஆதாமின் பாவத்தின் விளைவாக அவனுக்கும் அவனது சந்ததிக்கும் வந்த மரணத்திற்குத் தான் தேவன் பொறுப்பாகிறார் எனக் கூறியிருந்தேன். அதிலும் ஒரு திருத்தத்தைக் கூற ஆசிக்கிறேன்.

ஆதாமின் பாவத்தால் ஆதாமுக்கு வந்த மரணத்திற்கு தேவன் பொறுப்பு என நான் கூறியது சரியல்ல. ஏனெனில், “கனியைப் புசித்தால் சாகவே சாவாய்” என ஆதாமிடம் தேவன் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அப்படியிருந்தும் ஆதாம் கட்டளையை மீறியதால், கட்டளையை மீறியதற்கும் அதனால் வந்த மரணத்திற்கும் ஆதாமே பொறுப்பு.

ஆனால் எந்தப் பாவமும் செய்யாமலேயே ஆதாமின் சந்ததியினர் மரணத்தைச் சந்திக்க வேண்டியதிருந்ததால், அந்த மரணத்திற்குத் தேவன் பொறுப்பு எனக் கூறலாம். அதிலும், மரணத்திற்குத் தேவன் பொறுப்பு எனச் சொல்வதைவிட, மரணத்திலிருந்து மீட்பது தேவனின் பொறுப்பு எனச் சொல்வது அதிக பொருத்தமாயிருக்கும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு:
//1. ஆதாமின் பாவத்தால் வந்த ஜென்ம பாவசுபாவத்தால் செய்கிற பாவங்கள்.

2. நாம் சுயமாக செய்கிற பாவங்கள். நாம் சுயமாகவும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கு ஆதாரமாகத்தான், சுயமாக பாவம் செய்த ஆதாமை உதாரணமாகக் கூறியிருந்தேன்.

நாம் சுயமாகச் செய்கிற பாவத்துக்கு ஓர் உதாரணமாகத்தான் “நன்மை செய்யாதிருத்தல்” எனும் பாவத்தைக் கூறியிருந்தேன்.//

சகோதரரே, பாவங்கள் இரண்டு விதம் என்பதும்வேதத்தில் இல்லாத புரிந்துக்கொள்ளுதல்!!

நாம் சுயமாக செய்கிற பாவங்கள் எதினால் தோன்றுகிறது!! ஏனென்றால் நாம் பாவத்தில் பிறப்பதினால் தான்!! நீங்கள் நாம் செய்யும் "சுய" பாவங்களுக்கும் ஆதாம் முதலில் செய்த சுய பாவத்திற்கும் தொடர்பு படுத்தி பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே!! ஆதாம் சுயமாக பாவம் செய்த போது அவனுக்குள் பாவம் கிடையாது!! மனிதன் சுயமாக பாவம் செய்வது அவன் பாவத்தில் பிறந்தான் என்பதற்காகவே!! மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு ஆதாமின் பாவமே காரணம்!! ஆதாம் நன்மை செய்யாதிருந்து பாவம் செய்யவில்லை!! மேலும் நன்மை செய்யாதிருப்பது என்பது மாத்திரமே பாவம் கிடையாது!! நன்மை செய்ய வாய்பு இருப்பவர்கள் மாத்திரமே தான் நன்மை செய்ய முடியும்!!

மனிதனுக்குள் (ஆதாமை தவிர) பாவ என்னங்கள் வந்த காரணமே ஆதாமின் பாவம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டு "சுய" பாவம் என்கிற ஒரு தனி லைன் எப்படி சரியாகும்!! ஆதாம் முதல் பாவம் செய்யும் போது பாவமற்றவனாக இருந்தான், ஆனால் மற்றா எல்லா மனிதர்களும் பாவம் செய்வதற்கு முன்பே பாவத்தில் தான் இருக்கிறகள்!! ஏற்கனவே எழுததியது போல், பாவ ஜீன்ஸ் மனிதனுக்குள் வந்துவிட்டப்படியால் பாவம் செய்யாமல் இருப்பது தான் ஆச்சரியமான காரியமாக இருக்கும்!! இரண்டு விதமான பாவங்களில் வேதம் சொல்லாதது வரை உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை!!

//ஆதாமின் பாவத்திற்கும் அதன் விளைவாக வந்த மரணத்திற்கும் நாம் காரணமல்ல, அல்லது பொறுப்பல்ல. ஆனாலும் நாம் அனைவரும் மரணத்தைச் சந்திக்க வேண்டியதுள்ளது. இந்த மரணத்திலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமெனில் (அதாவது உயிர்த்தெழ வேண்டுமெனில்), ஆதாமின் பாவம் மன்னிக்கப்படவேண்டும், அதன் மூலம் நம்மிடமுள்ள ஜென்ம பாவசுபாவம் நீக்கப்பட வேண்டும். ஆதாமின் பாவத்துக்கும் அதன் விளைவான மரணத்துக்கும் நாம் பொறுப்பல்ல என்பதால், அந்த மரணத்திலிருந்து நம்மை விடுவிக்கும் பொறுப்பை தேவன் எடுத்துகொண்டார்.//

ஆதாமிடம் தேவன் சொன்ன போது, இந்த கனியை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டாரே, இதை நீ புசியாமல் இருந்தால் என்றென்றைக்கும் வாழ்வாய் என்று சொல்லவில்லையே!! மீறுதலினால் உண்டான பாவத்தில் விளைவு என்ன, மரணம் எப்படிப்பட்டது, மரணமென்றால் என்ன என்பதை ஆதாம் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பே இல்லை, ஏனென்றால் மரணம் என்கிற ஒரு விஷயத்தை ஆதாம் பார்த்தும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை, அந்த மரணம் வரும் முன் வரையில் கடந்து வரவேண்டிய வேதனைகளையும் அவனுக்கு தெரியாது!! அந்த வேதனைகள், அந்த தீமையின் பாதையில் ஆதாமின் மூலமாக மனிதகுலம் முழுவதும் நடந்து அந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவனின் சித்தமே!! இதில் தேவன் எந்த ஒரு வித்தயாசத்தை காட்டி சொல்லவில்லை!! அதாவது ஆதாமின் பாவத்தினால் மாத்திரமே மரணம் வரும், மற்ற பாவங்களுக்கு இரண்டாம் மரணம, போன்ற எந்த ஒரு விதிமுறையையும் நியமிக்கவில்லை!! ஆதாம் ஒரு ஆரம்பம், மனிதகுலம் அதன் தொடர்சி!! அவ்வளவே!! ஆதாம் பரிபூர்ண மனிதனாக இருந்து பாவத்தில் விழுந்ததினால் தான் கிறிஸ்து என்கிற பரிபூரண மனிதனின் ஈடுபலி தேவையாக இருந்ததே தவிர, அதினால் எல்லா மக்களிலும் இருக்கும் ஆதாமின் பாவம் மாத்திரமே அவர் நீக்குவார் என்பதெல்லாம் வேதத்தில் இல்லாத கருத்து!!

மற்ற மனிதர்கள் பாவத்தில் விழுவதே, அந்த ஜெனம்சுபாவமான பாவத்தின் விளைவாக தானே!! அப்படி என்றால் அந்த ஒரு மீறுதல் தானே அனைவருக்கும் பாவத்தையும் (பாவங்களையும்) மரணத்தையும் கொண்டு வந்தது!! அப்ப மன்னிப்பு பெறும் போது அந்த மீறுதல் மன்னிப்பு பெற்று விடுகிறது ஆனால் மற்ற பாவங்கள் அப்படியே தங்கி விடுகிறது என்பது வேதத்தில் இல்லாத கருத்து!!

மேலும் கட்டளையை மீறுவதால் வரும் தீமையை (மரணம் என்னவென்று ஆதாமுக்கு தெரியாதபோதும்) தேவன் ஆதாமிடத்தில் சொன்னார், ஆனால் கட்டளையின்படி நடந்தால் அதினால் வரும் நன்மைகள் என்னவென்று தேவன் ஆதாமிடத்தில் சொல்லவில்லையே!! ஏன்? ஏனென்றால் ஆதாம் கட்டளையை மீறி பாவத்தில் விழுந்து அதினால் முழு மனிதகுலமும் தீமை என்கிறதை அனுபவிக்க வேண்டும் என்பது தேவனின் சித்தமே, திட்டமே!! முழு மனுகுலத்திற்காகவும், ஆதாம் பாவம் செய்யும் முன்பே கிறிஸ்துவை நியமித்துவைத்திருப்பது அவர் சர்வ ஞானம் படைத்தவர் என்பதை வெளிப்படுத்துகிறாது, அவருக்கு தெரியும், ஆதாம் பாவத்தில் விழுந்து மரணத்தை பெற்றுக்கொள்வான் என்று!! நீங்கள் எழுதியது போல் இது ஒரு சஸ்பென்ஸாக இருந்திருந்தால், கிறிஸ்து இயேசு அதன் பின்னரே நியமிக்கப்பட்டிருப்பார்!! அல்லது ஆதாம் பாவம் செய்வானோ, செய்யாமல் போவானோ என்கிற சஸ்பென்ஸில் தேவன் அமர்ந்திருந்திருப்பார்!!

ஆதியாகமம் 2:17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

கட்டளை தீமையை மாத்திரமே சொல்லுகிறது, நன்மையை அல்ல, மேலும் இந்த தீமை என்னவென்று ஆதாம் தெரியாதவனாக இருந்தார்!! இந்த அனுபவத்தை முழு மனுக்குலம் அனுபவிக்கவே தேவன் ஆதாமை பாவத்திற்குள் அனுமதித்தார் (மரணம்), ஏனென்றால் நன்மையை அறிந்துக்கொள்ள தேவன் ஒரு காலத்தை வைத்திருக்கிறார் (1000 வருட அரசாட்சியும் அதன் முடிவில் நித்திய ஜீவனும்)!!

மத். 25ம் அதிகாரத்தில எழுத்துப்பூர்வமாக எடுத்துக்கொள்வதால் (ஏனென்றால் அது உவமை இல்லைஎன்கிறீர்கள்), மெய்யாலுமே சிங்காசனங்கள் போடப்படுமா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அவ்வாறெனில், இவ்வுலகில் நடப்பது அனைத்தையும் just வேடிக்கை பார்த்துக்கொண்டு நீங்கள் “சும்மா” இருக்க வேண்டியதுதானே?//

நீங்கள் சொல்லுவதாலும் நாங்கள்  just வேடிக்கை பார்த்துக்கொண்டு “சும்மா” இருந்தாலும் இது தான் நடக்கும்,

2 தீமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

பிறகு ஏன் அப்போஸ்தலர்கள் மாஞ்சுக்கொண்டு ஊழியம் செய்தார்கள் என்கிற கேள்வியை எழுப்ப வேண்டாம்!! அதற்கு காரணம் அவர்களுக்கு கட்டளை இருந்தது!! உண்மையாகவே நாங்கள் வேடிக்கை பார்த்து "சும்மா" தானே இருக்கிறோம்!! யாரையாவது நாங்கள் எழுதுவதை பின்பற்றுங்கள் என்று சொல்லுகிறோமா!! இல்லையே!! நாங்கள் எழுதுவது எங்களுக்கு வேதம் சொல்லிதருவதை, இதை வாசிப்பவர்கள் பல வித போதனைகளில் இருப்பவர்கள் தான், அவர்களும் வேதத்தை வாசிப்பவர்கள் தான், அவர்களிடம் இதை மாத்திரம் பின்பற்ற "நான்" சொல்லுவதால் அது நடக்குமா? இல்லையே!!

1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

தேவனால் நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் என்பவர்களை எனக்கு யார் என்றும் தெரியாது, தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லையே!! இப்பவும் இந்த தளத்தின் வாயிலாக நாங்கள் தெர்நிதுக்கொண்டிருக்கும் சத்தியத்தை எழுதுகிறோம் வேதத்தில் இல்லாதது செய்யப்படுவதை சுட்டி காண்பிக்கிறோம், இதை செய்வதால் நீங்கள் அனைவரும் இங்கே சொல்லுகிறப்படி பின்பற்றுங்கள் என்றோ, நாங்கள் சொல்லுவதை மாத்திரம் கேளுங்கள் என்றோ சொல்லுவதில்லை!! நாங்கள் "சும்மா" வேடிக்கப்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்!! வேதப்புத்தகம் எல்லார் கைய்யிலும் இருக்கிறது, சிலர் அதை ஆதாயத்திற்காக போதிக்கிறார்கள், சிலர் பெயர் புகழுக்காக போதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் அறிந்துக்கொண்ட சத்தியத்தை மாத்திரம் எழுதுகிறோம், தேவனின் நாமத்தை மாத்திரமே உயர்த்த விரும்புகிறோம்!! நாங்கள் உண்மையிலேயே just வேடிக்கை பார்த்துக்கொண்டு “சும்மா” தான் இருக்கிறோம்!!

ரோமர் 11:29. தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

ரோமர் 11:32. எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். 33. ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 34. கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 35. தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? 36. சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

தேவனின் இந்த ஞானத்தையும் இந்த அறிவையும், இந்த ஐசுவரியத்தையும், இந்த நியாயத்தீர்ப்பையும் அவரின் மேன்மையான வழிகளையும் தான் நாங்கள் எழுதுகிறோம், அது எத்துனை பேருக்கு புரியும் என்பதை தேவனே தீர்மானித்து வைத்திருக்கிறார்!! ஆகவே, நாங்கள்  just வேடிக்கை பார்த்துக்கொண்டு “சும்மா” இருந்தாலும், அல்லது "நன்மை செய்", சுவிசேஷம் சொல்ல ஓடு, போன்ற போதனைகளில் இருப்பவர்கள் அதற்காக ஓடினாலும் சரி, தேவனுக்கு ஆலோசனை சொல்லிபவர்கள் யாரும் கிடையாது, அவரது வழிகளில் நாம் நடக்கலாம், அவருக்கு வழியை காண்பிக்க கூடுமோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//பாவங்கள் இரண்டு விதம் என்பதும்வேதத்தில் இல்லாத புரிந்துக்கொள்ளுதல்!!//
//இரண்டு விதமான பாவங்களில் வேதம் சொல்லாதது வரை உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை!!//

நான் சொல்வது வேதத்தில் இல்லை என்கிறீர்கள். அப்படியே இருக்கட்டும். நீங்கள் பின்வருமாறு கூறுவது மட்டும் வேதத்தில் உள்ளதா?

//ஆதாம் கட்டளையை மீறி பாவத்தில் விழுந்து அதினால் முழு மனிதகுலமும் தீமை என்கிறதை அனுபவிக்க வேண்டும் என்பது தேவனின் சித்தமே, திட்டமே!!//

நீங்களும் நானும் வசனங்களை வைத்து நமது புரிந்துகொள்தலின் அடிப்படையில் விவாதம் செய்கையில், “இது வேதத்தில் இல்லை, அது வேதத்தில் இல்லை” எனச் சொல்லி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

இரண்டு விதமான பாவங்களை வேதம் சொல்லவில்லை என்கிறீர்கள். மன்னிக்கவும் சகோதரரே! பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

1 யோவான் 5:16,17 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

இப்பொழுதாவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம், மரணத்துக்கு ஏதுவான பாவம் என இரண்டு விதமான பாவங்களை வேதம் சொல்கிறதென ஒத்துக்கொள்வீர்களா?

எது மரணத்துக்கேதுவான பாவம், எது மரணத்துக்கேதுவல்லாத பாவம் என்பதில் எனது புரிந்துகொள்ளுதல்.

ஆதாமின் பாவத்தால் வந்த ஜென்ம பாவசுபாவத்தால் நாம் செய்கிற பாவங்கள்தான் மரணத்துக்கேதுவல்லாத பாவம்.

மற்றபடி, நாம் சுயமாகச் செய்கிற பாவங்கள்தான் (உதாரணம்: நன்மை செய்யாதிருத்தல்), மரணத்துக்கேதுவான பாவம்.

மரணத்துக்கேதுவான பாவத்தைச் செய்யாதவர்களுக்கு (அதாவது இரக்கமும் அன்பும் உடையவர்களாக நன்மை செய்தவர்களுக்கு), மரணத்துக்கேதுவான பாவங்களிலிருந்து (அதாவது ஜென்ம பாவசுபாவத்தால் செய்கிற விபசாரம் போன்றவற்றிலிருந்து) மன்னிப்பு கிடைக்கும்.  எனவேதான் இயேசு பின்வருமாறு கூறினார்.

மத்தேயு 21:31 இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவ்வசனத்தைக் கூறின இயேசு, தொடர்ந்து கூறியதையும் சற்று படியுங்கள்.

மத்தேயு 21:32 ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.

ஆயக்காரரும் வேசிகளும் யோவானை விசுவாசித்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்டதென்ன? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

லூக்கா 3:10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

மேற்கூறிய அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை நிச்சயமாக நாம் சுயமாகச் செய்யமுடியும். இவற்றை நாம் செய்யத் தவறுவதற்கும் ஆதாமின் ஜென்ம பாவசுபாவத்திற்கும் சம்பந்தமில்லை. எனவேதான் யோவானிடமிருந்து இவற்றைக் கற்றுக்கொண்ட ஆயக்காரரும் பாவிகளும், இவைகள் இல்லாதவர்களான பிரதான ஆசாரியர், வேதபாரகருக்கு முன்பாக பரலோகராஜ்யம் பிரவேசிப்பார்கள் என இயேசு சொன்னார்.

ஆதாமால் வந்த ஜென்ம பாவசுபாவம் மட்டுமே நம் பாவங்களுக்குக் காரணம் என்கிறீர்களே! அப்படியானால் நாம் எல்லோருமே ஒரேவிதமாகத்தானே பாவம் செய்யவேண்டும், எல்லோருமே ஒரேவிதமான குணத்தை உடையவர்களாகத்தானே இருக்கவேண்டும்?

ஆனால், நம்மில் சிலர் மிகவும் கொடூரமாக கொலை செய்பவராக, எல்லையற்ற பணஆசை உள்ளவராக, பிறர் பொருளை இச்சிப்பவராக, வேசித்தன சிந்தை மிகுந்தவராக இருக்கின்றனர். சிலரோ சிறு பூச்சியைக் கூட கொல்லாதவராக, பொருளாசை/பணஆசை சற்றும் இல்லாதவராக, விபசார சிந்தையை வெறுப்பவராக இருக்கின்றனர்.

அப்படியானல் இந்த 2-வது பிரிவினரிடம் ஆதாமின் ஜீன் இல்லையென அர்த்தமா?

நீங்கள்கூட பிறருக்குத் தீங்குசெய்யாதவராக, பொருளாசை/பணஆசை சற்றும் இல்லாதவராக, விபசார சிந்தையை வெறுப்பவராக இருக்கலாமே! அவ்வாறெனில் உங்களிடம் ஆதாமின் ஜீன் இல்லையென அர்த்தமா?

நிச்சயமாக அப்படியில்லை. ஆதாமின் ஜீன் நம்மிடம் இருந்தாலும், நம் சுய விருப்பு/வெறுப்புகளின் அடிப்படையில் ஆதாமின் ஜீனால் செய்யக்கூடிய பாவங்களை செய்யாமலும் இருக்கிறோம்; அதற்கும் மேலாக பல நன்மைகளையும் செய்கிறோம்.

எனவே நம் செயல்கள் அத்தனைக்கும் முழுக்க முழுக்க ஆதாமின் ஜீன் மட்டுமே காரணமல்ல; நம் சுய விருப்பு/வெறுப்புகளும் காரணம்தான்.

நம் சுய விருப்பு/வெறுப்பின்படி செய்கிற பாவங்கள்தான் மரணத்துக்கு (அதாவது 2-ம் மரணத்துக்கு) ஏதுவான பாவங்கள்.

ஆதாமின் ஜீனின் விளைவாக நாம் செய்கிற பாவங்கள்தான் மரணத்துக்கு (அதாவது 2-ம் மரணத்துக்கு) ஏதுவல்லாத பாவங்கள்.

ஆகிலும் ஆதாமின் ஜீனின் விளைவாக நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு, 2-ம் மரணத்திலிருந்து தப்பவேண்டுமெனில், நம் சுய விருப்பு/வெறுப்பின் அடிப்படையிலான பாவங்களை நாம் செய்யாதிருக்க வேண்டும். இதைத்தான் பின்வரும் வசனங்கள் மூலம் இயேசு கூறுகிறார்.

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.



-- Edited by anbu57 on Monday 27th of June 2011 09:23:45 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

 

மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

கிறிஸ்து வெறும் நன்மை செய்ய மட்டும் சொல்லவில்லை. அனுதினமும் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறார். எங்கே இவைகளைச் செய்யும் ஒரு நபரையாவது காண்பியுங்கள் பார்க்கலாம். நன்மை மாத்திரம் செய்யச் சொல்வதற்கு இத்தனை பெரிய வேதப்புத்தகம் தேவையில்லை. உலகத்தின் எல்லா மதங்களுமே அதைத்தான் போதிக்கின்றது.

 

//ஆனால் எந்தப் பாவமும் செய்யாமலேயே ஆதாமின் சந்ததியினர் மரணத்தைச் சந்திக்க வேண்டியதிருந்ததால், அந்த மரணத்திற்குத் தேவன் பொறுப்பு எனக் கூறலாம். அதிலும், மரணத்திற்குத் தேவன் பொறுப்பு எனச் சொல்வதைவிட, மரணத்திலிருந்து மீட்பது தேவனின் பொறுப்பு எனச் சொல்வது அதிக பொருத்தமாயிருக்கும்.//

ரோமர் 3:23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

I யோவான் 1:8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

இவையெல்லாம் நாம் அனைவருமே பாவிகள் என்றும் நற்கிரியைகள் செய்து நாம் தண்டனைக்குத்தப்பித்துக்கொள்ள முடியாது என்றும்தான் எங்களுக்குப் புரிகிறது. ஒருவன் திருடிவிட்டோ, கொலை செய்துவிட்டோ அதற்குப்பதிலாக அன்னதானம் செய்துவிடுகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்? மனிதன் சுயமாக தன்னை இரட்சிக்க முடியாது அதனால்தான் தேவன் ஒரு இரட்சகரை அனுப்ப வேண்டியதாகிவிட்டது.

இரட்சிப்பு இரட்சகர் மூலமாக மட்டுமே...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//மனிதன் சுயமாக தன்னை இரட்சிக்க முடியாது.//

ஆம் நிச்சயமாக. ஆனால் வேதாகமம் இப்படியும் கூறுகிறது.

மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

முடிவுபரியந்தம் நிலைநிற்பதும் நிற்காமல் போவதும் யாருடைய கையில் இருக்கிறது சகோதரரே?

நம் கையில் இல்லையெனில், இவ்வசனத்தை ஏன் இயேசு கூறவேண்டும்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆதாமின் பாவத்துக்காக மட்டும் கிறிஸ்து மரித்திருந்தால் எல்லாருக்கும் எதற்கு கிருபை. தண்டனை கொடுப்பதற்கு கிருபை தேவையே இல்லையே?

 

ஆதாமின் பாவமா பெருகிற்று. அது கீழ்ப்படியாமை என்ற ஒரே பாவம்தானே. பாவம் பெருகினால் தண்டனையல்லவா பெருகியிருக்க வேண்டும் ஏன் கிருபை பெருகவேண்டும்?

கிருபை இருப்பதால்தான் நாம் 'சும்மா' இருந்துகொண்டு ஜீவனை சுதந்தரிக்கப் போகிறோம். ஒருவன் பாவம் செய்வது முழுக்க முழுக்க சிறுவயது முதல் அவன் வளர்ந்த சூழ்நிலைகளைப் பொறுத்தது. காட்டிலே தனியே ஒரு குழந்தையை கொண்டு விட்டால் அது பாவமே செய்யாத டார்ஜானாகத்தான் இருக்கும். சூழலை உருவக்க்குபவர் தேவன். ஒரு பாத்திரத்தை கனத்துக்கும் இன்னொன்றை கனவீனத்துக்கும் படைப்பது அவர் இஷ்டம். மட்பாண்டம் என்ன செய்யும்?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இப்பொழுதாவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம், மரணத்துக்கு ஏதுவான பாவம் என இரண்டு விதமான பாவங்களை வேதம் சொல்கிறதென ஒத்துக்கொள்வீர்களா?//

மரணத்துக்கு ஏதுவான பாவம் என்கிற ஒரு பதத்தை கொடுத்துவிட்டு, அப்போஸ்தலன் அதை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே!! வேதமும் அதை குறித்து ஒன்றும் சொல்லுவதில்லையே!! என் புரிந்துக்கொள்ளுதல், மரணத்துக்கு என்று ஒருவன் நியமிக்கப்பட்டிருக்கிறான், அவன் ஒருவனை தவிர மரணத்திற்குள் (நீங்கள் நினைக்கும் இரண்டாம் மரணம், நான் அதை முற்றுமான அழிவு என்று சொல்லுகிறேன்) வேறு யாரும் செல்வது கிடையாது!! அது என்ன பாவம் என்றால், தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்து எண்ணம் ஒன்றே முற்றிலும் அழிவைக் கொண்டு வரும் பாவம், அதை சாத்தான் ஒருவனே முழு சுயத்தில் செய்திருக்கிறான்!! தேவனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் தான் நீதியில்லை!! ஏனென்றால் நியாயத்தீர்ப்பில் மனிதர்கள் மாத்திரம் அல்ல, தேவதூதர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு!! ஆனால் சாத்தான் ஒருவனுக்கு மாத்திரமே நியாயத்தீர்ப்பு முடிந்து, அவன் ஒருவனுக்கே வேண்டுதல் தேவையில்லை!! அநீதி என்றவுடன் நன்மை செய்வது மாத்திரமே அநீதி என்று நீங்கள் புரிந்திருக்கிறீகள், ஆனால் தன்னை தேவனைவிட உயர்வாக உயர்த்துவதை தான் அநீதி என்பது என் புரிந்துக்கொள்ளுதல்!! நான் புரிந்துக்கொண்டது வரை சாத்தான் ஒருவன் மாத்திரமே அந்த அநீதியை செய்து நியாயத்தீர்ப்படைந்து விட்டான்!!

நீங்கள் அடிக்கடி கூறும் இந்த "சுயத்தினால்" என்பது தான் எப்படி வந்தது என்று கேட்க்கிறேன்!! அதாவது உலகத்தில் பாவம் பிரவேசித்து விட்டதே நீங்கள் உபயோகப்படுத்தும் "சுயத்தினால்"!! இந்த சுயமே அந்த ஜீனின் வெளிப்பாடு தான் சகோதரரே!! மீன் பிடித்துக்கொண்டிருந்த பேதுரு வாள் உருவுகிறார், பின்பு மறுதலிக்கிறார், யூதாஸ் காட்டி கொடுக்கிறார், இது எல்லாம் சுயமாக தோன்றினாலும் முன் குறிக்கப்பட்டவைகள் தான்!! ஆதாமில் தொடங்கிய இந்த பாவம் மனிதர்களை மாத்திரம் இல்லை, இயற்கையையே மாற்றியிருக்கிறது!! ஏன் பாவத்தின் நிலை வேறுப்பட்டிருக்கிறது என்பது தேவனே அறிவார், ஏனென்றால் அவரே சகலத்தையும் கீழ்படியாமைக்குள் வைத்திருக்கிறார்!!

//நம் சுய விருப்பு/வெறுப்பின்படி செய்கிற பாவங்கள்தான் மரணத்துக்கு (அதாவது 2-ம் மரணத்துக்கு) ஏதுவான பாவங்கள்.//

அதாவது இப்படிபட்டவர்கள் முதலில் ஆதாமின் பாவத்திற்காக மரித்து அவர்கள் நன்மை செய்யாத பாவத்துடன் உயிர்த்தெழுவார்கள் பிறகு மீண்டும் அந்த பாவங்களுக்காக இரண்டாம் மரணம் அடைவார்கள் என்கிறீர்களா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

soulsolution wrote:
//மனிதன் சுயமாக தன்னை இரட்சிக்க முடியாது.//

ஆம் நிச்சயமாக. ஆனால் வேதாகமம் இப்படியும் கூறுகிறது.

மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

முடிவுபரியந்தம் நிலைநிற்பதும் நிற்காமல் போவதும் யாருடைய கையில் இருக்கிறது சகோதரரே?

நம் கையில் இல்லையெனில், இவ்வசனத்தை ஏன் இயேசு கூறவேண்டும்?


 மத்தேயு28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

அவர் கூட இருக்கும் பட்சம் எல்லாருமே முடிவுப்பரியந்தம் நிலைநிற்க முடியும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//மத்தேயு28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

அவர் கூட இருக்கும் பட்சம் எல்லாருமே முடிவுபரியந்தம் நிலைநிற்க முடியும்.//

ஆம், நிச்சயமாக. ஆனால் இயேசு எவர்கள் கூட இருப்பதாகக் கூறினார்? தமது சீஷர்கள் கூட இருப்பதாகத்தான் கூறினார்.

யார் இயேசுவின் சீஷர்கள்?

யோவான் 8:31 நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

இயேசுவின் உபதேசத்தில் நிலைநிற்பவர்களே அவரது மெய்யான சீஷர்கள். அந்த மெய்யான சீஷர்களோடு நிச்சயம் இயேசு இருப்பார். அந்த மெய்யான சீஷர்கள் நிச்சயமாக முடிவுபரியந்தம் நிலைநிற்க முடியும்.



-- Edited by anbu57 on Tuesday 28th of June 2011 04:49:37 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:

//அவன் ஒருவனை தவிர மரணத்திற்குள் (நீங்கள் நினைக்கும் இரண்டாம் மரணம், நான் அதை முற்றுமான அழிவு என்று சொல்லுகிறேன்) வேறு யாரும் செல்வது கிடையாது!!//

இரண்டாம் மரணத்தை நான் சொல்லவில்லை; வேதாகமம் சொல்கிறது. அந்த 2-ம் மரணத்தை நானும் “முற்றுமான அழிவு” என்றுதான் சொல்கிறேன்.

முதலாம் மரணம் என்பது முற்றுமான அழிவு” அல்ல; “தற்காலிக அழிவு” மட்டுமே. ஏனெனில் முதாலாம் மரணத்தில் மரித்த அனைவரும் 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுவார்கள்.

ஆனால் இரண்டாம் மரணத்தில் மரித்தவர்கள், அதன்பின் ஒருபோதும் உயிர்த்தெழப்போவதில்லை. எனவேதான் இரண்டாம் மரணத்தை நிரந்தரமான மரணம் என நான் கூறினேன். அதை நீங்கள் முற்றுமான அழிவு” என்கிறீர்கள். நீங்கள் சொல்லும் இந்த விளக்கத்தை நான் அப்படியே ஏற்கிறேன். இந்த முற்றுமான அழிவு”க்கு மனிதர்களிலும் ஒரு பிரிவினர் பங்கடைவார்கள் என நான் சொல்கிறேன். அதற்கு ஆதாரம்:

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;

(இப்பிரிவினர்மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லையென்றால், இவர்களைத் தவிர மற்றவர்கள்மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்றுதானே அர்த்தம்? அந்த அதிகாரம் எவர்கள்மீது செயல்படுத்தப்படுகிறதோ அவர்கள் இரண்டாம் மரணத்திற்கு (அதாவது முற்றுமான அழிவுக்கு) பங்கடைவார்கள் என்றுதானே அர்த்தம்?)

வெளி. 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

வெளி. 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//(இப்பிரிவினர்மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லையென்றால், இவர்களைத் தவிர மற்றவர்கள்மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்றுதானே அர்த்தம்? அந்த அதிகாரம் எவர்கள்மீது செயல்படுத்தப்படுகிறதோ அவர்கள் இரண்டாம் மரணத்திற்கு (அதாவது முற்றுமான அழிவுக்கு) பங்கடைவார்கள் என்றுதானே அர்த்தம்?)//

நீங்கள் வெளிப்படுத்தினவிசேஷத்தை மாத்திரம் இரண்டாம் மரண‌த்திற்கு சாட்சியாக கொடுக்கிறீர்கள்!! வேதம் முழுவதும் மனிதன் ஒரே முறை மரிப்பதும் அதன் பின் நியாயத்தீர்ப்புக்கு எழுவதும் என்று தானே இருக்கிறது!!

மேலும் இதற்கு முன் இதே திரியில் மற்றோர் பதிவில் நான் எழுதியிருந்தேன், அதாவது, முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவோர், முதலாம் தரத்தில் உயிர்த்தெழுவோர் சாவாமையை பெற்று என்றென்றும் வாழ்வார்கள்!! இந்த பூமியில் நித்திய ஜீவனை பெறுவோரை குறித்து நமக்கு முழு வெளிப்பாடும் இல்லை!! மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் இரண்டாம் மரணம் என்பதை வேறு வேறு இடங்களில் வேறு வேறு அர்த்தங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!!

வெளி 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

இப்படி விதவிதமாக இரண்டாம் மரணத்தை குறித்து வேதம் சொல்லுகிறதே!! அப்படி என்றால் மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன என்பதையும் இரண்டாம் மரணம் என்கிறது வேதம்!! நீதியின் தேசத்தில் (2 பேது 3:13) இப்படி எல்லா பாவங்களும் செய்வோர் இருந்துக்கொண்டு இருக்கிறார்களா!! இல்லை சகோதரரே, இவை எல்லாம் சிஸ்டத்தை குறித்தே சொல்லுகிறது!! மேலும் நன்மை செய்யாதவர்கள் போன்றவர்கள் தான் இரண்டாம் மரணத்திற்கு போவார்கள் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள், ஆனால் இங்கே ஆத்துனை பாவங்களும் நிறைந்தவர்கள் என்று உள்ளதே!!

இந்த அதிகாரத்தை தவிர வேதத்தில் வேறு எங்குமே இரண்டாம் மரணத்தை குறித்து சொல்லப்படவில்லை, மற்றவை எல்லாம் யூகங்களிலினால் வருகிறது!! நீங்கள் இரண்டாம் மரணத்தில் பங்கு அடைவார்கள் என்று சொல்லுவதை தான் திரித்துவர்களின் போதனையான "நரகம்"!! என்ன நீங்கள் அதையே கொஞ்சம் வித்தியாசமாக சொல்லுகிறீர்கள்!!

//யார் இயேசுவின் சீஷர்கள்?//

யோவான் 8:31 நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

அப்படி என்றால் கிறிஸ்துவின் உபதேசம் நன்மை செய்வது மாத்திரம் தானா!!

சிலுவை சுமப்பது, தனக்கு இருக்கும் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுப்பது, பூமிக்கடுத்தது ஒன்றும் சேர்த்து வைக்காதது போன்ற மிகவும் கடினமான உபதேசங்கள் இருக்கிறதே, இதை எல்லாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லையா!! ஏனென்றால், நன்மை செய்வோர் கிறிஸ்தவத்தை காட்டிலும் பிற மதங்களிலும் பிற அமைப்புகளிலும் அநேகர் இருக்கிறார்கள்!! இங்கே திருடர்களும் கொள்ளை கூட்டத்தார் மாத்திரமே இருக்கிறார்கள்!! இயேசு என்கிற நாமத்தை சொல்லிக்கொண்டு வியாபாரம் செய்வோர் தான் இருக்கிறார்கள்!!

யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.56. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 57. ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.


இதுவும் நித்தியஜீவனுக்கான காரியமாக இருக்கிறதே, இதை குறித்து ஏன் சொல்லுவதில்லை!! ஏனென்றால் நன்மை செய்வது போன்ற காரியங்கள் எல்லா இடங்களிலும் இருக்கும், ஆனால் இந்த உபதேசத்தை கேட்டு அவரின் சீஷர்களில் சிலரே இது கடினமான உபதேசம் என்கிறார்களே!!

யோவான் 6:60. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//யார் இயேசுவின் சீஷர்கள்?

யோவான் 8:31 நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

இயேசுவின் உபதேசத்தில் நிலைநிற்பவர்களே அவரது மெய்யான சீஷர்கள். அந்த மெய்யான சீஷர்களோடு நிச்சயம் இயேசு இருப்பார். அந்த மெய்யான சீஷர்கள் நிச்சயமாக முடிவுபரியந்தம் நிலைநிற்க முடியும்.//

 

எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

எபேசியர் 1:12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

மாற்கு 3:14 அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,

மத்தேயு 24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

யோவான் 13:18 உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

ரோமர் 9:11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,

ரோமர் 11:5 அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.

ரோமர் 11:7 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

I கொரிந்தியர் 1:27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

I கொரிந்தியர் 1:28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

கொலோசெயர் 3:12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

II தெசலோனிக்கேயர் 2:13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

தீத்து 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,

I பேதுரு 1:2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

I பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு சிறு பிரிவினரைப்பற்றி (சபை) இவ்வசனங்கள் கூறுகின்றன. அவரால் தெரிந்துகொள்ளாத எவனும் 'தற்செயலாக' வெல்லாம் சீஷனாக முடியாது. அவர் உபதேசத்தில் யார் யார் 'நிலைத்திருக்க வேண்டும்' என்பதையும் ஏற்கனவே அவர் தெரிந்து கொண்டுள்ளார். இங்கு தெரிந்து கொள்ளுதல் என்பது ஆங்கில Knowing அல்ல Choosing, Selecting ஆகும்.

எனவே தெரிந்துகொள்ளாத மற்றவர்கள் என்னதான் நன்மை செய்தாலும், மன்னித்தாலும், ஜெயில் விஸிட், ஹாஸ்பிடல் விசிட் செய்தாலும் சீஷத்துவத்துக்குள் வரவே முடியாது.

ஒருவரைத் தெரிந்துகொண்டால் மற்றவர்கள் Rejected என்றுதானே அர்த்தம். பார்லிமென்ட்டுக்குத் தெரிந்துகொள்ளவில்லை என்பதற்காக பிரஜைகளாக இருக்கும் உரிமை பறிபோவது கிடையாதே. மேலும் பிரஜைகளின் நலனுக்காகவே அரசாங்கம்.

இவர்கள் இல்லாவிட்டால் யார் யாரை எதற்காக 'ஆளுகை' செய்யவேண்டும்.

மேலும் நீங்கள் இப்போதிருந்தே நன்மை செய்யக் கற்றுக்கொடுத்து இரண்டாம் மரணத்திற்கு ஜனங்களைத் தப்புவிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நூதன உபதேசம்.

அன்பு அவர்களே கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்; மரித்து உயிரோடெழுந்தவனுக்கு மீண்டும் பாவத்துக்கேதுவான காரியங்களை அனுமதித்து, ஒவ்வொருவனையும் மீண்டும் ஆதாமின் நிலைக்குத்தள்ளி, விலக்கப்பட்ட கனிகளாகிய நன்மை செய்யாதிருத்தல், மன்னியாதிருத்தல் போன்ற மன்னிக்கவே முடியாத, பஞ்சமா பாவங்களை மறுபடியும் செய்யச்செய்து கடைசியில் அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பது அன்பும் அறிவும் நிறைந்த ஒரு தேவன் செய்யக்கூடியது என்று எனக்குத் தோன்றவில்லை.

உங்களுக்குத் தோன்றினாலும் கவலையில்லை. நாங்கள் 'சும்மா' இருக்கவில்லை; இந்த அரும்பெரும் அன்பின் கொண்டாட்டத்தில் மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒருவரும் கெட்டுப்போவது எப்படி பிதாவின் சித்தமில்லையோ அதில் எங்களுக்கும் உடன்பாடு கிடையாது. அப்படி யாராவது இரண்டாம் மரணத்துக்கு ஏதுவானால் அதற்கு பதிலாக என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றுகூட சொல்லத்தோன்றுகிறது. ஏனென்றால் நன்மை செய்தாலும், தீமைசெய்தாலும் என் சகோதரர்கள் என் சகோதரர்களே;
அன்பு சகல பாவங்களையும் மூடும் என்றால் நன்மை செய்யாவிட்டால் மூடாது என்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் நன்மை செய்தல் ராஜ்ஜியத்தில் அன்பிம் நிமித்தமாக நிறைவாக நடக்கும், கட்டளையின் நிமித்தமல்ல‌...
தீத்து 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, 

நித்திய ஜீவனைக்குறித்த நம்பிக்கை இந்த தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டும் உண்டாகும்....
எங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.

 



-- Edited by soulsolution on Tuesday 28th of June 2011 09:35:59 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//இப்படி விதவிதமாக இரண்டாம் மரணத்தை குறித்து வேதம் சொல்லுகிறதே!!//

வசனங்களை எடுத்துச் சொன்னால், இது அப்படிச் சொல்கிறதே, அது இப்படிச் சொல்கிறதே என்று சொல்லி, அவ்வசனங்களை ஏற்க மறுக்கிறீர்கள். உங்கள் கொள்கைக்கு எதிராகத் தோன்றும் வசனங்களையெல்லாம் இப்படி ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துவிடுகிறீர்கள். அத்தோடு "sequence" ஆக பல வசனங்களை மாறி மாறி சொல்லி எதிர் விவாதம் செய்பவரை சலிப்படையச் செய்கிறீர்கள்.

இரண்டாம் மரணத்தைக் குறித்து விதவிதமாக வேதம் சொல்கிறது என்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? அதைக் குறித்த உண்மையை நீங்கள் கண்டறிய முயல வேண்டுமல்லவா? ஆனால் நீங்கள் அதைச் செய்யாமல் (அதாவது நீங்கள் Truth Seeker ஆக இராமல்) Truth Seek செய்யும் burden-ஐ எல்லாம் என் மீதே சுமத்தி விடுகிறீர்கள். மேலும் 2-ம் மரணத்தைக் குறித்து வேறு இடங்களில் சொல்லப்படவில்லை எனச் சொல்லி, அதைக் குறித்து ஆராய்வதில் அலட்சியமாயுமிருக்கிறீர்கள்.

உண்மையில் பழைய ஏற்பாட்டிலேயே பல வசனங்கள் 2-ம் மரணத்தைக் குறித்து கூறியுள்ளன. ஆனால் நீங்கள் “எல்லோருக்கும் நித்திய ஜீவன்” எனும் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே அவ்வசனங்களைப் படிப்பதால், அவ்வசனங்களில் 2-ம் மரணத்தைக் குறித்து கூறியிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.

உதாரணத்திற்கு இவ்வசனத்தைப் படியுங்கள்.

சங்கீதம் 37:22 கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

இவ்வசனம் இம்மையில் பூமியைச் சுதந்தரிப்பதைக் குறித்தும் இம்மையில் அறுப்புண்டு மரிப்பதைக் குறித்தும் கூறுவதாக இருக்கமுடியுமா? நிச்சயம் முடியாது.

ஏனெனில் இம்மையில் யாருமே நிரந்தரமாக பூமியைச் சுதந்தரிக்கவும் முடியாது; இம்மையில் அறுப்புண்டு மரிப்பதிலிருந்து யாருமே தப்பவும் முடியாது.

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்/சபிக்கப்பட்டவர்கள் என்ற வித்தியாசமின்றி எல்லோருமே சில காலம் (மட்டும்) இப்பூமியைச் சுதந்தரிக்கவே செய்கின்றனர்; அவ்வாறே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்/சபிக்கப்பட்டவர்கள் என்ற வித்தியாசமின்றி எல்லோருமே அறுப்புண்டு மரிக்கத்தான் செய்கின்றனர்.

எனவே றுமையில் பூமியைச் சுதந்தரிப்பது மற்றும் அறுப்புண்டு போவதைப் பற்றித்தான் இவ்வசனம் கூறுகிறது. அதாவது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனைப் பெற்று பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; கர்த்தரால் சபிக்கப்பட்டவர்கள் அறுப்புண்டு போய் 2-ம் மரணத்தைச் சந்திப்பார்கள்.

சங்கீதம் 37:22-க்கு நிகராக/இணையாக ஏராளமான வசனங்கள் உள்ளன; அவற்றை நான் எடுத்துக் காட்டவும் செய்துள்ளேன். ஆனால், நீங்களோ அவையெல்லாம் இம்மையின் மரணத்தைத்தான் குறிக்கின்றன என ஒரே வரியில் சொல்லி முற்றுப்புள்ளை வைத்துவிடுகிறீர்கள்.

தொடரும் ....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

வெளி. விசேஷத்தின் சில வசனங்கள் 2-ம் மரணத்தைக் குறித்து விதவிதமாகச் சொல்லியிருப்பதாகக் கூறி, அவ்வசனங்களைக் கணக்கில் சேர்க்க மறுக்கிறீர்கள். எனவே அவ்வசனங்களை நான் சற்று ஆய்வு செய்து கூறுகிறேன்; அதன் பின்னராவது அவற்றைக் கணக்கில் சேர்க்கமுடிகிறதா எனப் பாருங்கள்.

வெளி. 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

பிரச்சனைக்குரிய பல வசனங்களுக்கு மூலபாஷை மற்றும் பிறமொழிபெயர்ப்புகளைப் பார்க்கிற நீங்கள், இவ்வசனத்திற்கான மூலபாஷை மற்றும் பிற மொழிபெயர்ப்பைப் பார்க்கத் தவறியதேனோ?

Rev 20:14 Then death and Hades were thrown into the lake of fire. The lake of fire is the second death. NIV

மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டன; அந்த அக்கினிக் கடல் 2-ம் மரணமாயுள்ளது” என்கிறது இம்மொழிபெயர்ப்பு. இதையேதான் KJV மொழிபெயர்ப்பும் கூறுகிறது.

மூலபாஷையை எடுத்துப்பார்த்தால், இவ்வசனத்தின் 2 வாக்கியங்களிலும் அக்கினிக் கடல் எனும் வார்த்தைகளின் மூலபாஷை வார்த்தைகள் காணப்படுகின்றன.

எனவே வெளி. 20:14-ன் சரியான மொழிபெயர்ப்பு:

மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டன; அந்த அக்கினிக் கடல் 2-ம் மரணமாயுள்ளது என்பதே.

இப்பொழுது விதவிதமான இரண்டாம் மரணத்தை வேதாகமம் கூறுகிறதா என ஆராய்ந்து பாருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard