kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிந்ததும் அறியாததும்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: அறிந்ததும் அறியாததும்...


அன்பு பதிலளிக்கிறார்//15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?

இயேசு கல்லறையைத் திறந்துதான் வெளியேறினார் என எந்த வசனம் கூறுகிறது? இயேசு உயிர்த்தெழுந்தார் என வசனம் கூறுகிறது. தேவதூதர்கள் கல்லைப் புரட்டினார்கள் என்றும் வசனம் சொல்கிறது. ஆனால் உயிர்த்தெழுந்தபின் கல்லறையைத் திறந்துதான் வெளியேறினார் என வசனம் கூறியதாகத் தெரியவில்லை.//

நல்லது கல்லைப்புரட்டாமலேயே வெளியேறினார் என்றால் தேவதூதர்கள் ஏன் கல்லைப் புரட்டினார்கள்?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution கேட்கிறார்:
//கல்லைப்புரட்டாமலேயே வெளியேறினார் என்றால் தேவதூதர்கள் ஏன் கல்லைப் புரட்டினார்கள்?//

இக்கேள்விக்கு வேதாகமத்தில் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே யூகமான பதிலைத்தான் கூற இயலும்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் உறுதிசெய்யப்பட, கல்லறை திறந்திருப்பது அவசியம்; அவரது சரீரம் அங்கு இல்லாதிருப்பதும் அவசியம். இது ஒரு காரணமாக இருக்கலாம்.

கல்லறையில் இயேசுவின் சரீரத்தைப் பார்க்க வந்த ஸ்திரீகள், கல்லைப் புரட்டுவதற்கு சிரமப்படாதிருப்பதற்காக, கல் புரட்டப்பட்டிருக்கலாம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தேவை.//

கேள்விக்கு மட்டும் பதில் தருவதும், எதிர் கேள்வி கேட்பதும், கூடுதல் தகவல் தருவதும் பதிலளிப்பவரின் உரிமையாகும். இவ்விஷயத்தில் நிபந்தனைகளைப் புகுத்தினால், பதில் தர இயலாது எனத் தெரிவிக்கிறேன்.

soulsolution wrote:
//புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தற்போது உயிர்த்தெழவில்லை என்று எப்படி ஆணித்தரமாகக் கூறுகிறாரோ தெரியவில்லை.//

1 கொரிந்தியர் 15:23  அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

soulsolution wrote:
//முதலாம் உயிர்த்தெழுதல் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வசன ஆதாரமுண்டு. இன்னொரு பதிவில் வரும். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சபையாகிய சிறுமந்தைக்கு தகுதியாகவில்லை.//

வசன ஆதாரத்திற்காகக் காத்திருக்கிறேன்.

சிறுமந்தை மட்டுமே முதலாம் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியானவர்கள் என்பதற்கான வசன ஆதாரத்தையும் தரும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நன்று! நான் கேட்டிருப்பது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பற்றி மட்டுமே. அதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்துவிட்டு அதற்குப்பின் கூடுதல் தகவல் தாராளமாகத் தரலாம்.

கிறிஸ்துவின் சபை என்றாலே கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் அப்போஸ்தலரை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்டது என்று சற்றேனும் வேதமறிந்தவர்கள் அறியலாம். 'மணவாட்டி' அந்தஸ்து பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்படவில்லை. அவர்களுக்கு பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களும் வாக்க‌ளிக்கப்பட்டது (இன்னும் நிறைவேறவில்லை எபி11:39) பழைய ஏற்பாடு முழுவதும் காணலாம். அவர்கள் நம்மையல்லாமல்(சபை) பூரணராகாதபடிக்கு என்று எபிரேயர் புத்தகத்தில் வாசிக்கலாம்.
"அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்" எபி11:40.

"... அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" 1தெச4:16.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்துவுக்குள் மரிக்கவில்லை, கிறிஸ்துவை அவர்கள் அறியவே இல்லை என்பது திண்ணம். "புது சிருஷ்டியாகும்" வாய்ப்பு அவர்களுக்கு அருளப்படவில்லை. ஏனென்றால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் மட்டுமே அவன் புது சிருஷ்டியாக முடியும். பழைய ஏற்பாட்டில் அவர்கள் பழைய உடன்படிக்கையில் இருந்தார்கள். புது உடன்படிக்கை கிறிஸ்துவுக்குப் பின் வந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழில் "வருகை" என்கிற வார்த்தைக்கு ஒரே அர்த்தம் தான் இருக்கிறது. ஆனால், கிரேக்க மொழியில் (எதற்கு இத்துனை மொழிப்பெயர்ப்பு, ஏன் ஆராய்ச்சி என்பவர்கள் மண்ணிக்கவும்) வருகை என்று ஒன்று மாத்திரம் இல்லை. சகொ அன்பு குறிப்பிட்ட வசனம் 1 கொரி. 15:23ல் உள்ளது "பரோஷியா" என்கிற கிரேக்க வார்த்தை. இன்னும் இரண்டு வார்த்தைகளுக்கும் தமிழில் வருகை என்று தான் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள், "எப்பிஃபெனி" மற்றும் "அப்போகாலிப்ஸ்". இதை எல்லாம் படித்தால் தான் இரண்டாம் வருகை தெரிய வேண்டுமா, அதான் தேவன் எங்களுக்கு எல்லாம் காண்பிக்கிறாரே என்பவர்களுக்கு இந்த பகுதி நிச்சயமாக வீண் தான்.

சாதாரனமாக புரிய வேண்டும் என்றால், "பரோஷியா" என்பது "உண்மையாகவே ஒரு நபர் வருவதற்கு முன் உள்ள நிலை" அதாவது, நாகர்கோவிலுக்கு பிரதமர் வருகை தருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் அந்த பட்டினத்திற்கு வருவதை முதலாவது அறிவது, கலெக்டர் தொடங்கி சில உயரதிகாரிகள் மாத்திரமே. பிரதமர் வரவில்லை, ஆனால் அவர் வரும் போது, என்ன, எப்படி இருக்க வேன்டுமோ, அதை எல்லாம் அந்த அதிகாரிகள் செய்வார்கள். அதாவது, Presence of someone not physically. The word parousia signifies presence, without in any sense of the word indicating that the presence is visible. ஒருவர் வரும் முன்னமே அவரின் வருகையை உணர்ந்துக்கொள்ளும் ஒரு சூழல் தான் பரோஷியா. அப்படி என்றால் சகோ அன்பு அல்லது இன்றைய ஆவிக்குறிய சபைகள் நினைத்திருக்கிறபடி, இயேசு கிறிஸ்து அனைவரும் காணும்படி மீண்டும் இந்த பூமிக்கு வந்த பின்பு தான் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பது "பரோஷியா" என்கிற இந்த வார்த்தை "தவறு" என்று சுட்டி காண்பிக்கிறது. அவரின் வருகையை நெருங்கும் காலம் பரோஷியா, அப்பொழுதிருந்து "பரிசுத்தவான்கள்" உயிர்த்தெழுதல் தொடங்கிவிடும் என்பது தான் 1 கொரி 15:23 சொல்லுகிறது.தமிழில் மட்டும் வேதாகமம் போதும் ஏனென்றால் இதுவும் பரிசுத்த ஆவியினால் தான் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது எல்லாம் ஒரு வெத்து நம்பிக்கை. "பரோஷியா", "அப்போகாலிப்ஸ்" மற்றும் "எப்பிஃபெனி" என்கிற மூன்று வார்த்தைகளுக்கும் தமிழில் மொழிபெயர்த்து தந்திருப்பது "பரிசுத்த ஆவி" இல்லை மாறாக, தேவனை தூஷிக்கிற ஆவியாக தான் இருக்க முடியும். இதற்காக தான் கிரேக்க மொழியில் உள்ளதையும் சரியான அர்த்தம் தெரிய பார்க்க வேண்டும் என்பது.

மேலும்..
http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=31946486



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//'மணவாட்டி' அந்தஸ்து பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்படவில்லை. அவர்களுக்கு பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களும் வாக்க‌ளிக்கப்பட்டது (இன்னும் நிறைவேறவில்லை எபி11:39) பழைய ஏற்பாடு முழுவதும் காணலாம். அவர்கள் நம்மையல்லாமல்(சபை) பூரணராகாதபடிக்கு என்று எபிரேயர் புத்தகத்தில் வாசிக்கலாம்.
"அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்" எபி11:40.

"... அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" 1தெச4:16.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்துவுக்குள் மரிக்கவில்லை, கிறிஸ்துவை அவர்கள் அறியவே இல்லை என்பது திண்ணம். "புது சிருஷ்டியாகும்" வாய்ப்பு அவர்களுக்கு அருளப்படவில்லை. ஏனென்றால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் மட்டுமே அவன் புது சிருஷ்டியாக முடியும். பழைய ஏற்பாட்டில் அவர்கள் பழைய உடன்படிக்கையில் இருந்தார்கள். புது உடன்படிக்கை கிறிஸ்துவுக்குப் பின் வந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.//


தங்கள் விளக்கம் மற்றும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் உள்ளன. ஆயினும் பழையஏற்பாட்டு பரிசுத்தவான்களில் எவரும் முதலாம் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாக மாட்டார்கள் என்பதை தெளிவான வசன ஆதாரங்களோடு விளக்கினால் நல்லது எனக் கருதுகிறேன்.

தாவீது, யோபு போன்ற பலருங்கூட கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களே எனக் கருதப்பட வாய்ப்புண்டு என்பதற்கு பின்வரும் வசனங்கள் தூண்டுதலாக உள்ளன என்பதை அறிக.

சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

யோபு 19:25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.


பழையஏற்பாட்டு விசுவாசிகளிலும் பரிசுத்தவான்கள் உண்டு என்பதற்கு லேவி. 20:26; எண்ணாகமம் 16:5; உபாகமம் 33:2,3; சங்கீதம் 31:23; 79:2 போன்ற பல வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

(பின்குறிப்பு: எபிரெயர் நிருபத்தின் வசனங்களை ஏற்கலமா என்பது என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறியே.

ஏனெனில் எபிரெயர் நிருபத்தை யார் எழுதினார் என்பது திட்டமாகக் கூறப்படவில்லை.

தேவனால் அல்லது இயேசுவால் நேரடியாக சாட்சி பெறப்பட்டவர்களின் புத்தக/நிருப வசனங்களை மட்டுமே வேதவாக்காகக் கருதவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.)


-- Edited by anbu57 on Monday 23rd of August 2010 08:49:11 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பழைய ஏற்பாட்டு "பரிசுத்தவான்கள்" எனப்படும் கூட்டத்தாருக்கு கூட பரலோகம் வாக்களிப்பதாக எந்த ஒரு வசனமும் இல்லையே!

மத்தேயு 11:11 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.

மாம்சத்தில் பிறந்த யோவானை போல் பெரியவன் ஒருவனும் எல்லை என்றும், ஆனால் பரலோக ராஜியத்தில் இருக்கும் ஒரு சிறியவனும் அவனிலும் பெரியவனாயிருப்பானாம், என்றால், யோவான் (ஸ்நானகன்) பரலோகம் போவதில்லை என்று தானே அர்த்தம். பரலோகம் சபைக்கு தான் வாக்கழிக்கப்பட்டதே தவிர பரிசுத்தவான்கள் என்கிறவர்களுக்கு அல்ல, சபை என்பது இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு தானே. "பாவிகளில் பிரதான பாவி நான்" என்கிறார் பவுல். மேலும் பழைய ஏற்பாடு முழுவதும் பூமியில் கூட்டி சேர்க்கும்  வசனங்கள் தானே உள்ளது.

தாங்கள் கொடுத்த வசனத்திலும் மீட்பர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்பது தானே.

தவறான ஒரு கருத்து, கிறிஸ்தவர்களுக்கு பரலோகம் நிச்சயம் என்பது. பரலோகம் சபைக்கு மாத்திரமே, மற்றபடி பழைய ஏற்பாட்டுடன் புதிய ஏற்பாட்டு "கிறிஸ்தவர்களுக்கும்" இந்த பூமி தான்.

பரலோகம் போகும் தகுதி எத்துனை பேர்களுக்கு இருக்கிறது என்று நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் கிறிஸ்தவர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

இத்திரியில் கேட்கப்பட்டுள்ள எல்ல கேள்விகளுக்கும் எனது பதிலைத் தந்துவிட்டேன். கடைசியாகப் பதில் தந்து 7 நாட்களாகிவிட்டன. இன்னும் எந்த விமர்சமும் வரவில்லை. பிற பதில்களுக்கு உங்கள் விமர்சனத்தைத் தராவிட்டாலும், 50-ம் கேள்விக்கான பதிலுக்கு மட்டுமாவது தங்கள் விமர்சனத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.

எனது பதில்களுக்கான தொடுப்பு:

http://eternal-life.activeboard.com/t36050445/topic-36050445/?page=3&sort=oldestFirst



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்த செம்மறியாடு வெள்ளாடு பகுதியை மாத்திரம் வைத்துக்கொண்டு மீண்டும் மனிதன் கிருபையினால் அல்ல நற்'கிரியை'யினால் இரட்சிக்கப்படுவான் என்று வேதத்துக்கு புதிய ஏற்பாட்டுக்கு எதிராக பதித்துள்ளீர்கள்.

பாவத்தின் சம்பளம் மரணமல்ல பாவத்தின் சம்பளம் உயிர்த்தெழுதல் என்று புது வசனம் கூட சொல்வீர்கள் போலுள்ளது. கிறிஸ்து சர்வலோகத்தின் பாவத்தையும் சுமந்தார் என்ற வசனம் உங்களுக்கு கேலியாகப் படுகிறதுபோலும்.
ஆதாம் செய்த 'பெரும்பாவம்' அவனுடைய குலத்தையே அழித்துப்போட்டது; இரண்டாம் ஆதாம் செய்த புண்ணியம் அவனுடைய குலத்தை மீட்டுக்கொண்டது. வேதம் சொல்வது அவ்வளவே. உயிர்த்தெழுந்து நீதியைக் கற்றுக்கொண்டு நித்தியமாய் இந்த மனுக்குலம் வாழும். ஒரு ஆள் பாக்கியில்லாமல். அவரே நீதிமானாக்குகிறவர்.

இன்னும் நியாயப்பிரமாணப் போதகர்களாக இருக்க விரும்புகிறவர்களுக்கு இது புரிவது கடினமே! ஏற்கனவே பாவம் செய்ததனால் அதன் தண்டனையான மரணத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களை உயிரோடு எழுப்பி மற்ற நீதிமான்கள் முன்பு அவர்களை அவமானப்படுத்தி மீண்டும் ஒரு மரண தண்டனை கொடுப்பதென்பது இம்சை அரசன் 23ம் புலிகேசியால் கூட யோசிக்கமுடியாது.

உங்கள் கோட்பாட்டின்படி கிறிஸ்து மரித்தது ஆதாமுக்காக மட்டும்தானோ?

லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 15:10 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இதில் மனத்திரும்புகிற 'ஒரே பாவி' முழுமனுக்குலம்தான். தேவனே தீமையை அனுமதிக்கிறார், குயவன் கையில் களிமண்ணாக இருக்கும் மனிதர்களில் சிலரை கனவீனத்துக்கும் அவரே நியமிக்கிறார். சகலமும் தேவ சித்தம். தேவசித்தமில்லாத விஷயங்கள் கூட நடக்கிறதென்றால் அவர் தேவத்துவத்தை இழந்துவிட்டதாக அர்த்தம்.

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்பதை நீங்கள் மாற்றி பாவிகளை அல்ல நீதிமான்களை ரட்சிக்க வந்தார் என்பீர்கள் போலுள்ளதே?

 

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தங்கள் தளத்துக்கு வந்தேன். நேர்த்தியாக இருந்தது. திரித்துவத்துக்கு ஜோசப்பின் கட்டுரைக்கு முழு விளக்கமளிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் நற்கிரியைக் கோட்பாடு, மீண்டும் தண்டனை போன்றவற்றில்தான் உடன்பாடில்லை. கிறிஸ்துவைத் தொழுவது சரியல்ல என்ற விஷயத்தை ஏற்றுக்கொண்டேன். உங்கள் பழைய வாதமும் ஒரு காரணம். நன்றி!



-- Edited by soulsolution on Wednesday 22nd of June 2011 12:53:55 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோ.soulsolution அவர்களே!

எனது பதிலை உங்களால் ஏற்க இயலாது என்பது நான் அறிந்ததுதான். அதேவேளையில், எனது பதிலுக்கு உங்களால் எதிர்வாதம் வைக்க இயலாது என்பதும் நான் அறிந்ததுதான். எதிர்வாதம் வைக்க இயலாத நீங்கள், உங்கள் மறுப்பை சற்று இங்கிதமாகக் கூறியிருக்கலாம். அதைவிடுத்து என்னை முட்டாளாக்க முயற்சி செய்துள்ளீர்கள். ஆம், என்னைக் குறித்து நீங்கள் எழுதின கீழ்க்காணும் வரி, என்னை மறைமுகமாக முட்டாளுக்கும் முயற்சியே!

//பாவத்தின் சம்பளம் மரணமல்ல, பாவத்தின் சம்பளம் உயிர்த்தெழுதல் என்று புது வசனம் கூட சொல்வீர்கள் போலுள்ளது.//

பாவத்தின் சம்பளம் மரணமல்ல, பாவத்தின் சம்பளம் உயிர்த்தெழுதலே” என நிச்சயமாக முட்டாள்தான் கூறுவான். எனவே உங்கள் பார்வையில் என்னை ஒரு முட்டாள் என நீங்கள் எடைபோட்டுள்ளீர்கள். நல்லது, அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

மிகவும் எகத்தாளமாக, இத்திரியில் பின்வருமாறு எழுதியிருந்தீர்கள்.

//தனியே தளம் நடத்தும் வேத விற்பன்னர்களுக்கு ஏற்கனவே விட்ட சவால்தான். மீண்டும் சொல்கிறேன். வேதத்தின்படி இக்கேள்விகளுக்கு விடை சொல்லித்தான் பாருங்களேன்.
ஏன் தலை தெரிக்க ஓட்டம்?

வசனம் ஓட வைக்கிறதோ? சத்தத்தையே காணோம்?//

உங்களது இந்த எகத்தாளமான கூக்குரலினிமித்தம்தான் உங்கள் கேள்விகளுக்குப் பதில்தர முன்வந்தேன். பதில் தந்த எனக்கு முட்டாள் பட்டம் கட்டி நல்ல பரிசை அளித்துவிட்டீர்கள். நன்றி.

உங்களால் முடிந்தால் 50-ம் கேள்விக்கான எனது பதிலை வரிக்கு வரி மேற்கோள் காட்டி பதில் தரவும். இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன். இந்த சவாலை சந்திக்க மனமில்லையெனில், இனிமேல் இம்மாதிரி கேள்விகளைக் கேட்டு, மேற்கூறியவாறு எகத்தாளமாகக் கூக்குரலிடாதீர்கள்.

உங்கள் 50-ம் கேள்விக்கான எனது பதிலை இத்தள அன்பர்களும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதனை இங்கும் பதிக்கிறேன்.

//50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?

ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையிலும் அவன் உயிர்த்தெழ முடியுமென்றே வேதாகமம் கூறுகிறது. இதற்கான ஆதாரம், மத்தேயு 25:31-46 வசனங்களில் அடங்கியுள்ளது.

அப்பகுதியின் சுருக்கம்:

31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். .... 40 ... மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். ... 45 ... மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

இயேசுவின் இந்த அறிவிப்பை ஓர் உவமானம் என Kovaibereans தளத்தினர் கூறுகின்றனர். ஆனால் இது நிச்சயமாக உவமானமல்ல. நடக்கப்போகும் சம்பவத்தை அப்படியே இயேசு முன்னறிவிக்கிறார்.

31-ம் வசனத்தில், தமது 2-ம் வருகைக்குப்பின் இறுதி நியாயத்தீர்ப்பிற்காக தாம் வருவதைக் குறித்து இயேசு கூறுகிறார். 32-ம் வசனத்தில் சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகக் கூட்டப்படுவார்கள் எனக் கூறுகிறார். இங்கு கூட்டப்படும் ஜனங்கள் “மரிக்காத ஜனங்கள்” அல்ல. மரித்து உயிர்த்தெழுந்த “சகல ஜனங்கள்தான்” கூட்டப்படுவார்கள் என இயேசு கூறுகிறார். அவர்களை 2 பிரிவினராக பிரிப்பது எப்படி என்பதை மட்டுமே ஓர் உவமானத்துடன் கூறுகிறார். அதாவது மேய்ப்பனானவன் எப்படி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் 2 பிரிவுகளாகப் பிரிப்பானோ அதேவிதமாக மனுஷகுமாரனும் ஜனங்களைப் பிரிப்பார் எனக் கூறுகிறார். இவ்விபரத்தை 32-ம் வசனத்தில் இயேசு தெளிவாகக் கூறுகிறார்.

கோவைபெரியன்ஸின் சகோதரர்கள் பெரியன்ஸ் மற்றும் soulsolution அவர்களே, 32-ம் வசனத்தில், “மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து” என இயேசு சொல்வதை நன்கு படியுங்கள். ஆடுகளைப் பிரிப்பதைப் போல, “அவர்களை அதாவது ஜனங்களை” அவர் பிரிப்பார் என மிகத் தெளிவாக இயேசு கூறுகிறார்.

பிரிக்கப்பட்ட 2 பிரிவினரான அந்த ஜனங்களைப் பார்த்துதான், 34-40 வசனங்களிலும், 41-45 வசனங்களிலும் தமது நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார்.

முதல் பிரிவினர், நற்கிரியைகளைச் செய்தவர்கள்; 2-வது பிரிவினர், நற்கிரியைகளைச் செய்யாதவர்கள்.

நற்கிரியைகளைச் செய்தவர்களை “பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி, ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளும்படி கூறுகிறார்.

நற்கிரியைகளைச் செய்யாதவர்களை “சபிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி, பிசாசுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குப் போகும்படி கூறுகிறார்.

இறுதி வசனமான 46-ம் வசனத்தில், நற்கிரியைகளைச் செய்யாதவர்களாகிய அநீதிமான்கள் நித்திய ஆக்கினை அடையவும், நற்கிரியைகளைச் செய்த நீதிமான்கள் நித்தியஜீவனை அடையவும் போவார்கள் என இயேசு கூறுவதையும் கவனிக்கவும்.

நற்கிரியைகளைச் செய்யாதவர்களை “சபிக்கப்பட்டவர்கள்” எனக் கூறி, அவர்களுக்கு பலனாக நித்தியஆக்கினையை இயேசு கூறுவதால், அவர்களின் கணக்கில் பாவம் இருக்கிறதென்றுதான் அர்த்தம். அவர்களின் கணக்கில் பாவம் இல்லையெனில், அவர்கள் எப்படி “சபிக்கப்படமுடியும்”, எப்படி நித்தியஆக்கினையை பலனாகப் பெறமுடியும்?

எனவே பாவமுள்ளவர்களாகத்தான் அவர்கள் உயிர்த்தெழுந்திருக்க வேண்டும். எல்லா மனிதருக்கும் முதலாம் மரணமென்பது, ஆதாமின் பாவத்தினிமித்தம் கிடைத்ததாகும். ஆதாமுக்குள் மரித்த மனிதர்கள், கிறிஸ்துவின் பலியினால் உண்டான இரட்சிப்பால் ஆதாமின் பாவம் நீக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் உயிர்த்தெழுவார்கள். இதைத்தான் 1 கொரி. 15:22 கூறுகிறது.

இவ்வாறு உயிர்த்தெழுகிற அனைவரின் மீதும் அவரவரின் பாவங்கள் இருக்கத்தான் செய்யும். அவரவரின் அந்த பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமெனில், அவர்கள் இரக்கமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். பின்வரும் வசனங்கள் கூறுவதைக் கவனிக்கவும்.

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.

(இவ்வசனத்திற்கு முன்பாக இயேசு சொன்ன உவமானத்தில், 33-ம் வசனத்தில் “நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ” என எஜமானன் கூறுவதைக் கவனிக்கவும்)

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

நியாயத்தீர்ப்பில் “இரக்கம்” எனும் பண்பு மேன்மைபாராட்டும். அதாவது, ஒருவன் வேறு பாவங்களைச் செய்திருந்தாலும், அவன் “இரக்கமுள்ளவனாக” இருந்திருந்தால், அவனது “இரக்கம்” மேன்மையாகக் கருதப்பட்டு, அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படும்.

எனவேதான் இரக்கம் எனும் பண்பை உடையதான “அன்பை” இயேசுவும் அப்போஸ்தலரும் வலியுறுத்தி போதித்தனர்.

மத்தேயு 22:39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

1 கொரி. 13:13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 யோவான் 4:7  பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 16 தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது;  20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 21 தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

நம்மிடம் அன்பு பூரணப்பட்டால், நியாயத்தீர்ப்பு நாளில் அது நமக்குத் தைரியமுண்டாக்கும். அன்புள்ளவர்கள் மத்தேயு 25:35,36-ல் கூறப்பட்டுள்ள நற்கிரியைகளைச் செய்திருப்பார்கள். எனவே அவர்களின் பிறபாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் நித்தியஜீவனைப்பெற தகுதியாக்கப்படுவார்கள். அன்பில்லாதவர்கள் மத்தேயு 25:35,36-ல் கூறப்பட்டுள்ள நற்கிரியைகளைச் செய்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களின் பிறபாவங்கள் மன்னிக்கப்படமாட்டாது. எனவே அவர்கள் நித்தியஆக்கினையையே பலனாகப் பெறுவார்கள்.

சகோ.பெரியன்ஸ் மற்றும் soulsolution இருவரும், எல்லோருக்கும் இரட்சிப்பு என மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் சரியானதுதான் என்றாலும், மற்றொரு விதத்தில் தவறுமாகும். ஆதாமின் பாவம் நீக்கப்பட்டு, அப்பாவத்தால் உண்டான மரணத்திலிருந்து எல்லோரும் இரட்சிக்கப்பட்டு உயிர்த்தெழுவார்கள் என்ற வகையில் அவர்களின் கூற்று சரியே. ஆனால் உயிர்த்தெழுந்த அவர்கள், மத்தேயு 25:31-41-ல் இயேசு கூறுகிறவிதமாக நியாயந்தீர்க்கப்பட்டு, ஒரு பிரிவினர் இரட்சிப்பைத் தக்கவைத்து, நித்திய ஜீவனைப் பெறுவார்கள்; மற்றொரு பிரிவினர் இரட்சிப்பை இழந்து நித்தியஆக்கினையை அடைவார்கள் எனும் உண்மையை அறியாமல், உயிர்த்தெழுகிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என அவர்கள் கூறுவது தவறே.//

 

சகோ.soulsolution அவர்களே!

இத்தளத்தின் “தீமைக்கு யார் காரணம்? வேத விளக்கம் எனும் திரியில் பின்வருமாறு எழுதியிருந்தீர்கள்.

//வசனம் நைனா, வசனம் பதி!

சும்மா பொலம்பி பிரயோஜனமில்லை!!!

 வசனத்துக்கு வசனத்தின் மூலம் பதிலளித்து நீ பன்றியில்லை என்று நிரூபி!!!//

 

இதே மேற்கோளை நான் தங்களிடம் திருப்புகிறேன். நீங்கள் மற்றவர்களைச் சொன்னபடியே, வசனம் மூலம் எனது பதிலின் ஒவ்வொரு வரிக்கும் பதில் தாருங்கள். நன்றி.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.soulsolution மற்றும் சகோ.பெரியன்ஸ்-ன் கவனத்திற்கு!

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இவ்வசனத்தின் விளைவுகளை சற்று ஆழமாக சிந்தித்துப்பாருங்கள்.

இயேசுவின் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, அவனவன் பிறரது தப்பிதங்களை மன்னித்திருந்தால், அவனவனின் தப்பிதங்களையும் (பாவங்களை) பிதா மன்னித்திருப்பார். ஆனால், பிறரது தப்பிதங்களை மன்னியாதோரின் கதி? அவர்களின் பாவங்களை பிதா மன்னித்திருக்க மாட்டார் அல்லவா? ஆனால் அவ்வாறு மன்னிக்கப்படாதவர்களும் 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுவார்களே! அவ்வாறெனில், அவர்களின் பாவம் மன்னிக்கப்படாத நிலையில்தானே அவர்கள் உயிர்த்தெழுவார்கள்?

உங்கள் கூற்றுப்படி, அவர்களின் பாவம் மன்னிக்கப்பட்டுத்தான் அவர்கள் உயிர்த்தெழுவார்களெனில், “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” எனும் இயேசுவின் கூற்று பொய்யாகிவிடும்.

இப்போது சிந்தியுங்கள்:

இயேசுவின் கூற்று பொய்யா? அல்லது உங்கள் கூற்று தவறா?

மற்றுமொரு வசனத்தைக் கவனியுங்கள்.

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

யாக்கோபு கூறுகிற நியாயத்தீர்ப்பு, மனிதரின் மரணத்திற்கு முன்னானதா, அல்லது மரணத்திற்கு பின்னானதா?

மரணத்திற்கு முன்னானது எனில்,

அந்த நியாயத்தீர்ப்பின் பலன் எதுவாக இருக்கும்? பாவத்தின் சம்பளம் மரணம் எனும் கூற்றின்படி மரணம்தான் இரக்கஞ்செய்யாதவனுக்குரிய பலனாக இருக்கும். ஆனால் இரக்கஞ்செய்பவன், இரக்கஞ்செய்யாதவன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் மரணம்தானே பலனாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது? இரக்கஞ்செய்பவன், இரக்கஞ்செய்யாதவன் ஆகியோருக்கான நியாயத்தீர்ப்பின் பலனில் எந்த வித்தியாசமும் இல்லையே!

எனவே, யாக்கோபு கூறுகிற நியாயத்தீர்ப்பு, மனிதரின் மரணத்திற்கு முன்னானது அல்ல, பின்னானதே என அறிகிறோம்.

சரி, பின்னானது என்றால் என்ன அர்த்தம்? உயிர்த்தெழுதலுக்குப் பின் என்றுதான் அர்த்தம். உயிர்த்தெழாத ஒருவனை எப்படி நியாயந்தீர்க்க முடியும்? எனவே மனிதனின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர்தான் யாக்கோபு கூறுகிற நியாயத்தீர்ப்பு நடக்கும்.

அந்த நியாயத்தீர்ப்பின்போது, “இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்” என யாக்கோபு கூறுகிறார்.

உண்மையில், உயிர்த்தெழுதலின்போது ஒருவனின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருந்தால், பின்னர் அவனிடம் ஏன் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்? பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட ஒருவனிடம், “நீ இரக்கஞ்செய்யாதவன், ஆகிலும் நீ இரக்கஞ்செய்யாதது உட்பட உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன; எனவேதான் நீ உயிர்த்தெழுந்துள்ளாய்; ஆனாலும் யாக்கோபு 2:13-ன்படி உனக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் வழங்குவேன்” என இயேசு சொன்னால் அது தகுதியானதாக இருக்குமா? நிச்சயம் இருக்காது.

எனவே இரக்கஞ்செய்யாமல் இப்பூமியில் வாழ்ந்த ஒருவன், கடைசி நாளில் உயிர்த்தெழுகிறபோது, அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என்பதே உண்மை. அப்படி மன்னிக்கப்படாதவனுக்கு “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பதே பொருத்தமாயிருக்குமேயொழிய, மன்னிக்கப்பட்டவனுக்கு “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது பொருத்தமாயிராது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

புரிந்துக்கொள்ள மிகவும் சுலபமான லாஜிக் உள்ள பதில் தான் இது!!

மனிதன் மரிப்பதற்கு காரணம் பாவம்!! அதாவது பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது வேதம்!! ஒரு வேலை மனிதன் பாவம் செய்திராமல் இருந்திருந்தால் மரிக்காமலே இருந்திருப்பான், அதாவது, உயிர் வாழ சரீரத்தில் பாவம் இருக்க கூடாது!! சரி தானே,

இப்பொழுது இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் யாரும் பாவம் செய்யாதவர்கள் கிடையாது, கிறிஸ்து இயேசுவை தவிர!! இப்படி எல்லா மனிதர்களும் பாவம் செய்து மரிக்கிறார்கள்!! அப்படி என்றால் அவர்கள் உயிர்த்தெழ வேண்டுமென்றால் அவர்களின் சரீரத்தில் பாவம் இருந்தால் எப்படி உயிர்த்தெழ முடியும்!! பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் தான் உயிர்த்தெழுதலே தவிர பாவத்துடன் உயிர்த்தெழுதல் கிடையாது!! பாவங்கள் மன்னிக்கப்பட்டவுடன் எல்லாரும் பரலோகத்திற்கு போவது கிடையாது!! அவர் அவர் இப்பொழுது உயிருடன் இருக்கும் நாட்களில் செய்தவாறு அவர்களுக்கு பரலோகமா அல்லது இந்த பூமியா என்பது தரப்படும்!!

பாவங்கள் மன்னிக்கப்பட்டால் பரலோகம் தான் என்கிற தவறான போதனையின் விளைவு தான் இத்துனை குழப்பங்களுக்கும் காரணம்!! உயிர்த்தெழுதல் நடைப்பெற பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும், ஆனால் உயிர்த்தெழுந்தவர்கள் பரலோகமோ, இந்த பூமியிலோ வாழபோவது அவர் அவர் மரிக்கும் முன் இருந்த நிலையை வைத்து தானே!! அப்படி இந்த பூமியில் உயிர்த்தெழுந்த மனிதர்கள் நீதியை, சத்தியத்தை கற்றுக்கொள்வார்கள் என்று வேதம் கூறுகிறது!! இப்பொழுது இந்த பூமியில் கிறிஸ்துவின் போதனையில், தேவனின் பார்வையில் சீஷர்களாக இருந்தவர்கள் அவரின் தீர்மானத்தின்படியே கிறிஸ்துவின் சபையாக உயிர்ப்பிக்கப்படுவார்கள்!! அவர்கள் ஆவிக்குறிய ஜீவிகளாக இருப்பார்கள், கிறிஸ்து தரித்துக்கொண்ட அழியாமையை (Divinity) தரித்துக்கொள்வார்கள்!!

இந்த பூமியில் உயிர்த்தெழுந்து வரும் மனிதர்கள் நீதியையும் சத்தியத்தையும் கற்றுக்கொண்டு என்றென்றும் வாழ்வார்கள், அதன் பின் என்ன என்பதை வேதம் நமக்கு வெளிப்படுத்தவில்லை, இதை குறித்து தேவ சித்தம் ஒன்றும் வேதத்தில் தெளிவாக இல்லை!!

மேலும் தாங்கள் காண்பிக்கும் மத்தேயு 25:31-46 பகுதியை சொல்லும் போது, இரண்டு விதமாக பிரிக்கப்படுகிற மனிதர்களில் ஒரு கூட்டம் கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யவும் மறு கூட்டம் இந்த பூமியில் வருவார்கள்!! சாத்தான் ஆண்டுக்கொள்ளும்படியாக தானே இந்த பூமி இருந்தது!! இந்த பூமியை அவன் கைய்யில் தானே கொடுக்கப்பட்டிருந்தது!!

இந்த பிரபஞ்சத்தின் தேவன் (2 கொரி 4:4)

இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். (யோவான் 14:30)

மேலும் அக்கினி என்பதும் நித்திய அக்கினி என்பதும்  Figurative Speech தான்!! நீதியை கற்றுக்கொள்ளும் இடம், சுத்திகரிப்பு போன்ற பதங்களை விளக்கவே அக்கினி என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!! Literalஆக‌ எடுத்துக்குகொண்டால் எப்படி என்றென்றும் எரிந்துக்கொண்டு இருக்கும் அக்கினியில் நித்தியத்திற்கும் இருப்பார்கள் என்பதும் விளக்க முடியாத ஒரு விசித்திரம் தானே!!

செம்மறி, வெள்ளாடுகளாக பிரிப்பது, தேவனின் உயிர்த்தெழசெய்பவர்களை பரலோகம் மற்றும் இந்த பூமிக்குறியவர்கள் என்று பிரிப்பதையே காண்பிக்கிறது!!

உயிர்த்தெழும் போது பாவம் இருக்காது, ஆனால் தேவனை அறிகிற அறிவு நிச்சயமாக இருக்காது, ஏனென்றால் வசனத்தின்ப்படி,

ஏசாயா 26:9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

கற்றுக்கொள்ளும் இடமாக இந்த பூமியை வைத்திருக்கிறார், கற்றுக்கொள்வார்கள், ஏனென்றால்,

ஏசாயா 11:9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

கற்றுக்கொண்ட பூமி தேவனை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் என்பதே நடக்கபோகிறது!!

உயிர்த்தெழ சத்தியத்தையோ தேவனை அறிகிற அறிவோ அவசியம் இல்லை, ஆனால் நிச்சயமாக பாவம் இருந்தால் உயிர்த்தெழ முடியாது, ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம் மாத்திரமே!! பாவம் இல்லாமல் உயிர்த்தெழும் மனிதர்கள் இந்த பூமியில் தேவனின் நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி தானே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:

//மனிதன் மரிப்பதற்கு காரணம் பாவம்!!//

இங்குதான் நீங்கள் முக்கியமான தவறு செய்கிறீர்கள். மனிதன் மரிப்பதற்க்குக் காரணம் பாவம் என்பது சரிதான்; ஆனால் யாருடைய பாவம் என்பதில்தான் நீங்கள் தவறுகிறீர்கள். மனிதன் மரிப்பதற்குக் காரணம், அவனவனின் சுயபாவம் அல்ல; ஆதாமின் பாவமே ஒவ்வொரு மனிதனும் மரிப்பதற்குக் காரணம். நீங்கள் அடிக்கடி குறிப்பிடுகிற பின்வரும் வசனம், இதைத் தெளிவாகக் கூறுகிறது.

1 கொரி. 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

bereans wrote:

//ஒரு வேளை மனிதன் பாவம் செய்திராமல் இருந்திருந்தால் மரிக்காமலே இருந்திருப்பான்,//

உங்களது இக்கூற்று தவறு. பாவம்செய்யாத மனிதனும் சாவான் என்பதே வேதாகமம் கூறுகிற உண்மை. இதற்கு ஆதாரமான பின்வரும் வசனங்களைச் சற்று படியுங்கள்.

ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், ...

14 மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

17 ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, ...

18 ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல,...

19 ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ...

ஆதாமின் பாவமே எல்லா மனுஷரின் மரணத்திற்கும் காரணம் என்பது இப்போது புரிகிறதா?

ஆதாமுக்குப் பின்வந்த எந்த மனிதனாக இருந்தாலும், அவன் பாவம் செய்யாவிட்டால்கூட மரிக்கத்தான் வேண்டும்.

ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல ... என 1 கொரி. 15:22 கூறுவதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

ஒரு மனிதனின் மரணத்திற்குக் காரணமான பாவம் எப்போது அவனைவிட்டு நீங்குகிறதோ, அப்போது அவன் அந்த மரணத்திலிருந்து விடுதலைபெற தகுதியாவான்.

கிறிஸ்துவின் பாவநிவாரணபலியால் ஆதாமின் பாவம் எல்லா மனிதரிடமிருந்தும் நீக்கப்படுகிறது. எனவேதான் 1 கொரி. 15:22 கூறுகிறபடி, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

ஆம், நம் மரணத்திற்குக் காரணமான “ஆதாமின் பாவம்” நம்மைவிட்டு நீங்கியதும், நாம் அனைவரும் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாகிவிடுவோம்.

இனி அவரவரின் சுயபாவத்தின் விளைவைப் பார்ப்போம்.

நம் மரணத்திற்குக் காரணமான ஆதாமின் பாவம் நீங்கி உயிர்த்தெழுந்த நாம், அடுத்து நம் சுயபாவங்களுக்குப் பதில் சொல்லவேண்டும். நம் சுயபாவங்களும் இயேசுவின் பாவநிவாரணபலியால் நீக்கப்பட முடியும் என்பது மெய்தான். ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதற்கு மிக முக்கியமான ஒரு நிபந்தனை உண்டு. அது:

1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

இந்த நிபந்தனையை நாம் நிறைவேற்றின உடனேயே, நம் பாவமெல்லாம் நீங்கி நாம் சுத்திகரிக்கப்படுவோம். ஆகிலும் அவ்வப்போது நாம் பாவம் செய்யவும் நேரிடக்கூடும்தான். இப்படிப்பட்ட நமக்காகவும், கிறிஸ்துவை அறியாமல் மரிக்கிற அனேக கோடி மக்களுக்காகவும்தான் பின்வரும் மற்றொரு நிபந்தனையை இயேசு கூறியுள்ளார்.

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

பாவத்தினிமித்தம் நாம் மனஸ்தாபப்பட்டு அறிக்கையிட்டாலும் மறுபடியும் பாவம்செய்ய வாய்ப்பு உள்ளது என்பதை நம்மில் யாரும் மறுக்க இயலாது. ஆகிலும் இரக்கம், அன்பு எனும் பண்புகள் நம்மிடம் காணப்பட்டால், நியாயத்தீர்ப்பின்போது நாம் இரக்கம்பெறுவோம்; நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நம் பாவங்களின் சம்பளமான மரணத்திலிருந்து நாம் தப்புவிக்கப்படுவோம். நம் பாவங்களினிமித்தம் நாம் சந்திக்க வேண்டிய மரணம் தான் வெளி. 21:8 கூறுகிற 2-ம் மரணம்.

முதல் மரணம் ஆதாமில் பாவத்தால் வந்ததாகும்; 2-ம் மரணம் நம் சுயபாவத்தினால் வருவதாகும். முதல் மரணத்திலிருந்து அனைவருக்கும் விடுதலை உண்டு. 2-ம் மரணத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமெனில், மேற்கூறியபடி சில நிபந்தனைகளை நாம் நிறைவேற்றத்தான் வேண்டும்.

பாவத்தின் சம்பளம் மரணமல்ல, பாவத்தின்சம்பளம் உயிர்த்தெழுதல் என்று புது வசனம் நான் சொல்வேன் என soulsolution கேலியாகக் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் பாவத்தின் சம்பளம் மரணமல்ல எனக் கூறுவது அவர்தான்.

எப்படியெனில், ஆதாமின் பாவத்தின் சம்பளமாகத்தான் எல்லா மனிதருக்கும் மரணம் வந்தது. இதன் அர்த்தமென்ன? நம் மரணத்தின்போது, நம் சுயபாவங்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதே. அவ்வாறெனில் நம் சுயபாவங்களுக்குச் சம்பளமான மரணம் எப்போது/எப்படி கொடுக்கப்படும்? இக்கேள்விக்கு soulsolution-ன் பதில் என்ன? அவரைப் பொறுத்தவரை நம் சுயபாவங்களுக்கான சம்பளம், “நம் உயிர்த்தெழுதல்” என்பதே.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:

//செம்மறி, வெள்ளாடுகளாக பிரிப்பது, தேவனின் உயிர்த்தெழசெய்பவர்களை பரலோகம் மற்றும் இந்த பூமிக்குறியவர்கள் என்று பிரிப்பதையே காண்பிக்கிறது!!//

செம்மறியாடு வெள்ளாடுகளாகப் பிரிப்பது உவமானம் அல்ல, நிகழப்போகும் சம்பவமே என ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி.

இச்சம்பவம் நடைபெறப்போவது இயேசுவின் 1000 வருட அரசாட்சிக்குப் பிறகு, அதாவது நியாயத்தீர்ப்புக்கு பிறகு என்றே நான் கருதுகிறேன். வெளி. 20:12-ல் கூறப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பும் இச்சம்பவத்தில் கூறப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பும் ஒன்றே என நான் கருதுகிறேன்.

உங்களுக்கு ஒரு கேள்வி.

பாவமில்லாமல் உயிர்தெழுந்த வெள்ளாட்டுப் பிரிவினரைப் பார்த்து, இயேசு ஏன் இப்படிச் சொல்லவேண்டும்?

மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

பாவமில்லாமல் உயிர்தெழுந்தவர்களைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்களே” எனக் கூறுவது என்ன logic?

அவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட இடமும், பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இடமும் ஒரே இடம் தான்.

பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இடம் எதுவென பின்வரும் வசனம் கூறுகிறது.

வெளி. 20:10 அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்.

இதற்கெல்லாம் நீங்கள் என்ன விளக்கம் சொல்லப்போகிறீர்கள்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு எழுதுகிறார்:

//உங்களது இக்கூற்று தவறு. பாவம்செய்யாத மனிதனும் சாவான் என்பதே வேதாகமம் கூறுகிற உண்மை. இதற்கு ஆதாரமான பின்வரும் வசனங்களைச் சற்று படியுங்கள்.//

சகோ அன்பு அவர்களே, இங்கே மனிதன் என்று எழுதியது ஆதாமை தான் என்று தெரிவித்துக்கொள்கிறேன்!! ஒரு வேளை ஆதாம் பாவத்தில் விழாமல் இருந்திருந்தால் மரணம் வந்திருக்காது!!

ஆதாமின் பாவம் மனிதர்களுக்குள் ஜென்ம பாவமாக ஒட்டிக்கொண்டே இருக்கிறது என்பதை மறுக்கவில்லை!! இந்த பாவம் மனிதர்களுக்குள் பாவ சுபாவத்தை ஏற்படித்தியது!! அது வெறும் ஆதாமின் பாவமாக இல்லாமல், தனிப்பட்ட பாவமாக மாறியது!!

ரோமர் 5:12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

ஆதாமின் பாவம் மாத்திரம் இருந்திருந்தால், எல்லா மனுஷரும் "பாவஞ்செய்தபடியால்" மரணம் எல்லாருக்கும் வந்தது என்கிறதே வசனம்!! ஆதாமின் பாவத்தினால் மரணம் பிரவேசித்தது, ஆனால் அந்த பாவ சரீரத்தில் தனி மனிதன் பாவங்கள் செய்ய தொடங்கினானே!!

ரோமர் 3:10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; 11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

தேடுவது, வழிதப்பி நடப்பது கெட்டுப்போவது நன்மை செய்யாதிருப்பது எல்லாம் தனிப்பட்ட பாவங்கள் தானே சகோதரரே!! எல்லாருமே இப்படி தான் இருக்கிறார்கள் என்கிறாதே வேதம்!! ஆதாமின் பாவத்தினால் மனிதர்களுக்குள் பாவ சுபாவம் வந்து விட்டது!! இந்த பாவமும் மன்னிக்கப்படுகிறது!! ஆகவே தான் உயிர்த்தெழுதல் நடக்க முடியும்!! இனி தனிப்பட்ட பாவங்களினால் தேவனுக்கு விரோதமாக இருந்தவர்கள் இந்த பூமியில் வந்து தேவனை அறிகிற அறிவை பெற்றுக்கொள்வார்கள், இந்த பூமியில் சத்தியத்தை அறிந்தவர்கள் (கிறிஸ்தவ மண்டலம் இல்லை) அதில் நடக்க பிரயாசித்தவர்கள், தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவின் சாயலில் சபையாக மாற்றப்படுவார்கள், ஆவிக்குறிய உயிர்த்தெழுதல் அவர்களுக்கு!! மற்ற் ஆனைவருக்கும் பூமிக்குறிய (மாம்சத்தில்) உயிர்த்தெழுதல் உண்டாகும்!!

ஆதாமின் பாவத்தினால் தான் மரணம் பிரவேசித்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!! ஆனால் அந்த பாவத்தினால் எல்லா மனிதர்களும் பாவசுபாவத்திற்கு வந்து விட்டார்கள், எல்லா மனிதர்களும் இனி ஆதாமின் பாவத்தினால் மாத்திரம் அல்ல, தன் சுய பாவங்களின் பாரத்தின் தான் இருக்கிறார்கள்!!

பாவிகளில் பிரதான பாவி நான் என்கிற பவுலிடம் வெறும் ஆதாமின் பாவம் மாத்திரம் தான் இருந்தது என்று நினைக்கிறீர்களா!!
என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம்தரித்தாள் என்று சொன்ன தாவீது, மரிக்கும் மட்டும் ஆதாமின் பாவத்தில் மாத்திரமே இருந்தானா??

சங்கீதம் 25:7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

சங்கீதம் 103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

ஏசாயா 43:25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.

ஏசாயா 44:22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

எபிரெயர் 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எபிரெயர் 9:26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

I யோவான் 1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

I யோவான் 4:10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

மேலே வசனங்களில் உள்ளவைகள் எல்லாம் ஆதாமின் பாவத்திற்கு மாத்திரம் இல்லை, நாம் செய்யும் பாவங்களும் மன்னிக்கப்படுவதால் தான், அல்லது மன்னிக்கப்படுவதற்கு தான் கிறிஸ்து இயேசு இரத்தம் சிந்தினார்!!

அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

சகல பாவங்கள் என்பது ஆதாமின்பாவம் மாத்திரம் இல்லை சகோதரரே, சகல பாவம் என்றால் நாம் செய்யும் பாவங்களும் தான்!! சத்தியத்தில் இருப்பவர்கள் மாத்திரம் பரிசுத்தவான்கள் அல்ல, அவர்களும் விழுந்து விழுந்து பாவங்களை அறிக்கை செய்து செய்து வாழ்ந்து மரிப்பவர்கள் தான்!!

சகோ அன்பு:
//எப்படியெனில், ஆதாமின் பாவத்தின் சம்பளமாகத்தான் எல்லா மனிதருக்கும் மரணம் வந்தது. இதன் அர்த்தமென்ன? நம் மரணத்தின்போது, நம் சுயபாவங்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதே. அவ்வாறெனில் நம் சுயபாவங்களுக்குச் சம்பளமான மரணம் எப்போது/எப்படி கொடுக்கப்படும்? //

பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற வசனத்தை எப்படி ஆதாமின் பாவத்தின் சம்பளம் தான் மரணம் என்கிறீர்கள்!! ஆதாமின் பாவத்தினால் மரணம் உண்டானது உண்மையே, ஆனால் அதன் பின் அனைவரும் என்ன ஆதாமின் பாவத்தில் மாத்திரமே இருக்கிறார்களா, இல்லையே!! ஆகவே தான் வசனம் சொல்லுகிறது,

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

நம்முடைய பாவங்கள் என்பது ஆதாமின் பாவம் மாத்திரம் கிடையாது சகோதரரே!!

நீங்கள் சொல்லும் அந்த வெள்ளை சிங்காசனம், ஆட்டுக்குட்டியை பிரிப்பது எல்லாம் உயிர்த்தெழுதலின் போது தான்!! அதாவது பரலோகம் மற்றும் பூமியில் உயிர்தெழும் கூட்டமே பிரிக்கப்படுகிறது!!

தொடரும்..............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

சற்று நறுக்குத் தெரித்தாற்போல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இதுவரை நீங்கள் வைத்த கருத்துக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக பின்வருமாறு கூறலாமா?

//ஆதாமின் பாவத்தின் சம்பளமாக எல்லா மனுஷருக்கும் மரணம் (அதாவது முதலாம் மரணம்) கிடைத்தது; அதே வேளையில் நம் சுயபாவங்களுக்கான சம்பளமும் அதே (முதலாம்) மரணம்தான். ஒருவன் துணிகரமாக வேண்டுமென்றே எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்தாலும் அவற்றிற்கான சம்பளம் (முதலாம்) மரணம் மட்டுமே.

பாவத்தின் சம்பளமாக (முதலாம்) மரணத்தைப் பெற்ற அனைவரும், எல்லா பாவங்களும் சுத்திகரிக்கப்பட்டு, பாவமில்லாதவர்களாக உயிர்த்தெழுவார்கள். அதன்பின்னர் அவர்கள் தேவனை அறியும் அறிவைப் பெற்று நித்தியஜீவனைப் பெறுவார்கள். 2-ம் மரணம் என்பது மனிதனின் மரணம் அல்ல (அல்லது 2-ம் மரணத்திற்கு எந்த மனிதனும் தீர்க்கப்படமாட்டான்).//

இவற்றையே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆம், என்றால் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

1. மத்தேயு 5:7-ல் இரக்கமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பாக்கியம் எது? இரக்கமில்லாதவர்கள் இழந்த பாக்கியம் எது?

2. மத்தேயு 6:14,15-ல் இயேசு கூறுகிற நிபந்தனையின்படி பிறரது தப்பிதங்களை மன்னியாதோரின் தப்பிதங்களை பிதா மன்னியாதிருப்பதால் அவர்களுக்கு என்ன நேரிடும்?

தப்பிதங்கள் மன்னிக்கப்படாத அவர்கள் எப்படி உயிர்த்தெழுந்தார்கள்?


3. யாக்கோபு 2:13 கூறுகிறபடி, இரக்கஞ்செய்யாதவனுக்குக் கிடைக்கப்போகிற இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு எது, அது எப்படிப்பட்டதாக இருக்கும்?

4. பாவமெல்லாம் நீக்கப்பட்டு, பாவமில்லாமல் உயிர்த்தெழுந்தவர்களில் ஒரு பிரிவினரைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்கள்” என இயேசு கூறுவார் என மத்தேயு 25:41-ல் இயேசு கூறுகிறாரே, பாவமில்லாதவர்களை அவர் அப்படி ஏன் கூறுவார்? அவர்களுக்கு பரிசாக பிசாசுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட இடத்தைக் கொடுக்கப்போவதாகக் கூறுகிறாரே, பாவமில்லாதவர்களுக்கு ஏன் பிசாசுக்குரிய இடத்தைப் பரிசாகக் கொடுக்கவேண்டும்? இதுதான் அவர்கள் மீது தேவன் காட்டும் கிருபையா?

பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் என ரோமர் 6:23 சொல்கிறது. ஆனால் பாவமில்லாதவர்களாக உயிர்த்தெழுந்த ஒரு பிரிவினரை, “சபிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி, “இயேசுவால் உண்டான நித்திய ஜீவனைக்” கொடுக்காமல், பிசாசுக்காக நியமிக்கப்பட்ட “நித்திய அக்கினியையும்” “நித்திய ஆக்கினையையும்” அல்லவா பரிசாகக் கொடுக்கப்போவதாக இயேசு சொல்கிறார்? அவ்வாறெனில் தேவனுடைய கிருபையால் இயேசுவின் மூலம் உண்டான நித்திய ஜீவனில் அவர்களிக்கு பங்கில்லையா? பின்வரும் வசனங்களைக் கவனமாகப் படித்து பதில் தரவும்.

மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார்.

46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.



-- Edited by anbu57 on Friday 24th of June 2011 11:06:05 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோ. அன்பு அவர்களே,
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள். உயிர்தெழுந்தபின் ஒரு பிரிவினர் (வெள்ளாடு) இரண்டாம் மரணத்துக்குப் போவார்கள் என்பதுதானே. ஆக உங்கள் கூற்றுப்படி கிறிஸ்துவின் ஆட்சியில் கூட ஜனங்கள் மோசம் போவார்கள்.

நியாயப்பிரமாணம் மனிதனை தண்டனக்குள்ளாகத் தள்ளிற்று. ஆனால் கிருபையின் பிரமாணமாகிய புதிய ஏற்பாடு அவர்களை தண்டனையிலிருந்து மீட்டுக்கொண்டது.

தேவ அன்பின் உச்சம்தான் அவரது அளவற்ற கிருபை. மனிதனின் தகுதியின் அடிப்படையில் அமைவதல்ல கிருபை. அது தகுயே இல்லாதவனுக்கு இலவசமாய் வழங்க்கப்படுது.

தேவ அன்பை உணராமல் செம்மறியாடு பகுதியை பிடித்துக்கொண்டு ஒரு கூட்டத்தை நான் அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏகப்பட்ட வசனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.

1.கிறிஸ்துவைப்பற்றியோ, பரிசுத்தமான வாழ்க்கைபற்றியோ அதில் குறிப்பிடப்படவில்லை.
கிறிஸ்துவின் அன்பின் ராஜ்ஜியத்தில் பாவம் இருக்குமா? அந்த் சாத்தானற்ற ராஜ்ஜியத்திலும் மனிதன் பாவம் செய்ய ஏதுவுண்டு என்றால் தேவன் அவனை என்ன நோக்கத்துக்காக உயிர்த்தெழுப்ப வேண்டும்?

2. தீமைக்குக் காரணம் தேவன் என்று ஒரு திரியில் கூறியுள்ளேன். ஏன் சகலமும் தேவனுடைய சித்தமே என்றும் கூறியிருக்கிறேன். தேவன் உண்டாக்கிய மனிதன் எக்காலத்திலும் தவறு செய்தாலும் அதற்கு முழுப்பொறுப்பு தேவனே. பழியை மனிதன்மீது போடவே முடியாது.

3.கீழ்கண்ட வசனங்களையும் கவனிக்கவும்

ரோமர்5:15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.


19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

தேவனே மனிதனுடைய எல்லா நடக்கைகளுக்கும் பொறுப்பாளீ என்பது அவருக்குத் தெரிந்ததால்தான் அவர் அந்தப் பொறுப்பை ஏற்று எல்லாரையும் நீதிமான்களாக்குகிறார்.

ஏதொ அடுத்தவரின் தப்பிதங்களை மன்னித்து, இரக்கம் செய்து, ஹாஸ்பிடல் விஸிட், ஜெயில் விஸிட் எல்லாம் செய்து
அவரிடம் குட் கான்டாக்ட் சர்ட்டிபிகேட் வாங்கினால் நித்தியஜீவன், அப்படிச்செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை என்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

ராஜ்ஜியத்தில் யார் வியாதியஸ்தராய் இருப்பார்கள்?

ஏசாயா 33:24. வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.


எந்த அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்? ஆதாமுக்கு மட்டும்தான் மன்னித்தாரே?

யார் சிறையில் இருப்பார்கள்?


மேலும் உயிர்தெழுதலுக்குப் பின் நடக்கப்போகும் நியாயத்தீர்ப்பை எண்ணி இப்போது நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?

தேவனுடைய ராஜ்ஜியத்திலும் ஒருவன் தவறுகிறான் என்றால் அது அரசனின் தோல்வியே. தார்மீக அடிப்படையில் அவர் பதவிவிலக வேண்டும்...



-- Edited by soulsolution on Friday 24th of June 2011 12:58:22 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.//

இந்த வசனம் தேவனுக்கும் பொருந்துமா சகோதரரே?

சங்கீதம் 51:1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும

சங்கீதம் 78:38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

சங்கீதம் 86:15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

சங்கீதம் 103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

சங்கீதம் 111:4 அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.

ஏசாயா 49:13 வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

ஓசியா 2:23 நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.

மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

ரோமர் 11:31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

தவறு செய்பவனுக்கு தண்டனை கொடுப்பதால் தேவ அன்பு எப்படி அய்யா வெளிப்படும். அதில் என்ன தேவத்துவம் இருக்கும்?

ஏழெழுபதுதரம் மன்னிக்கச்சொன்ன தேவன் ஒரு வியாதியஸ்தரைப் போய் பார்க்கவில்லை என்பதற்காக மரணதண்டனை கொடுப்பார் என்பது ரொம்ப ஓவராயில்ல‌...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.soulsolution அவர்களே!

வசனம் சொல்வதை எடுத்துரைத்தால், என்மீது இப்படியாக பழி சுமத்துகிறீர்கள்.

//தேவ அன்பை உணராமல் செம்மறியாடு பகுதியை பிடித்துக்கொண்டு ஒரு கூட்டத்தை நான் அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.//

இப்படி என்மீது பழிசுமத்தினால் நான் எப்படி வாதிட முடியும்?

மத்தேயு 25:46-ஐக் கூறியது யார்? மீட்பராகிய இயேசுகிறிஸ்துதானே? அவர்தானே வெள்ளாடு பிரிவினருக்கு நித்திய அக்கினி நித்திய ஆக்கினை என்றும் செம்மறியாடு பிரிவினருக்கு நித்திய ஜீவன் என்றும் கூறியுள்ளார்? இதில் நீங்களும் நானும் மல்லுக்கட்டி கங்கணம் கட்டுவதால் என்ன ஆகப்போகிறது? இயேசு சொன்னபடியே நடக்கும் என நான் கூறுகிறேன். நீங்களோ, இல்லை இல்லை அவர் ஏதோ வாய் தவறி சொல்லிவிட்டார், வெள்ளாடு பிரிவினர் செம்மறியாடு பிரிவினர் எல்லோருக்கும் நித்திய ஜீவன் தான் என்கிறீர்கள்.

எதையெடுத்தாலும் வசனம் காண்பி எனச் சொல்கிறீர்கள். வசனத்தைக் காண்பித்தால், அதற்குப் பதில் சொல்லாமல், வசனம் அப்படிச் சொல்லவில்லை என்பது போலவும் நான்தான் ஏதோ கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் பழிபோடுகிறீர்கள். இப்படிச் சொல்லும் உங்களிடம் எப்படி வாதம் செய்யமுடியும்?

இத்தளத்திற்குக் கூறப்பட்டுள்ள 2 பெயர்களும் மிகமிக அருமையானவை. 1. கோவை பெரியன்ஸ், 2. TRUTH SEEKERS.

வேதவசனங்களை ஆராய்பவர்கள்தான் பெரியன்ஸ். உண்மையைக் கண்டறியும் நோக்கத்துடன் வேதவசனங்களை ஆராய்பவர்கள்தான் TRUTH SEEKERS.

ஆனால் நீங்களோ, நான் ஒரு வேதவசனத்தைக் காட்டினால், அதை ஆராய்ந்து பதில் சொல்லாமல், அவ்வசனம் கூறுகிற அழிவு நடந்தாகவேண்டும் என நான் கங்கணம் கட்டுவதாகச் சொல்லி, வசன ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறீர்கள். நீங்கள் இப்படிச் செய்தால் நாம் எப்படி வசனத்தை ஆராய்ந்து விவாதித்து உண்மையைக் கண்டறியமுடியும்? உங்களது செயல் TRUTH SEEKERS எனும் பெயருக்கு சற்றும் ஒவ்வாததாக உள்ளது.

உண்மையில் நீங்கள் TRUTH SEEKERS-ஆக இருந்தால் நான் காட்டியுள்ள வசனங்களுக்கு நேரடியாகப் பதில் தாருங்கள். அதைவிடுத்து நான் தான் அழிவை விரும்புவதாகவும் ஜனங்கள் அழியவேண்டும் என நான் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் பழி சுமத்தாதீர்கள். நாம் இருவரும் இப்படியே மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தால் நம் இருவர் நேரம் மட்டுமின்றி தளத்திற்கு வருவோரின் நேரமும் விரயமாகும். எனவே முடிந்தால் நான் காட்டியுள்ள வசனத்துக்கு நேரடியான பதிலைச் சொல்லி வாதிடுங்கள், இல்லாவிடில் நாம் இருவரும் விவாதத்தை நிறுத்திக்கொள்வோம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//தவறு செய்பவனுக்கு தண்டனை கொடுப்பதால் தேவ அன்பு எப்படி அய்யா வெளிப்படும். அதில் என்ன தேவத்துவம் இருக்கும்?//

இது தேவனிடம் கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் தவறு செய்பவனுக்குத் தண்டனை உண்டு என தமது தாசர்கள் மூலமும் அவரே நேரடியாகவும் கூறியுள்ளார். ஆதாரம் வேண்டுமா? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

சங்கீதம் 37:1,2 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.

சங்கீதம் 37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

சங்கீதம் 37:38 அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

சங்கீதம் 73:3-12,17-19 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.

தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும். ... இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.

ஏசாயா 11:3-5 கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

ஏசாயா 13:11 பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.

எசேக்கியேல் 3:18,19 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

ஏசாயா 57:22 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். (ஆனால் நீங்களோ துன்மார்க்கர் நீதிமான்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் நித்திய ஜீவன் என்கிறீர்கள்)

நீங்கள் காட்டியுள்ள ஏராளமான வசனங்கள் சொல்கிறபடி தேவன் இரக்கமுள்ளவர்தான், மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர்தான்; ஆனால் அது எப்போது?

ஏசாயா 55:7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

இதுபோன்ற பல வசனங்களைச் சொல்லி ஏற்கனவே உங்களோடு விவாதித்துள்ளேன். ஆயினும் இப்போது மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் மீண்டும் விவாதிக்கிறேன்.

soulsolution wrote:
//ஏழெழுபதுதரம் மன்னிக்கச் சொன்ன தேவன் ஒரு வியாதியஸ்தரைப் போய் பார்க்கவில்லை என்பதற்காக மரணதண்டனை கொடுப்பார் என்பது ரொம்ப ஓவராயில்ல‌...//

ஏழெழுபது தரம் மன்னிக்கச் சொன்ன தேவன்தான், பிறரது தப்பிதங்களை மன்னியாதவர்களின் தப்பிதங்களை மன்னிக்கமாட்டேன் என்றும் சொல்லியுள்ளார். இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வியாதிஸ்தரைப் பாராதவர்களுக்கு நித்திய ஜீவன் கிடையாது, நித்திய ஆக்கினையான நித்திய அக்கினிதான் கிடைக்கும் எனச் சொன்னது இயேசு. அவர் சொன்னது ஓவரா இல்லையா எனும் கேள்விக்குப் பதில் சொல்வதோ அவ்விதமாக நினைத்துப் பார்ப்பதோ என் வேலையல்ல. வேண்டுமானல் நீங்கள் இயேசுவிடமே உங்கள் கேள்வியைக் கேளுங்கள்.

soulsolution wrote:
//யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.//

இந்த வசனம் தேவனுக்கும் பொருந்துமா சகோதரரே?//

எனக்குத் தெரியாது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 46  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard