இன்று அநேக,ர் தெரு பிரசங்கியார் முதல் இலட்ச்சக்கணக்கில் கூட்டம் சேர்க்கும் ஊழியர்கள் வரை ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதை பார்க்க முடியும். ஆனால் அது சாத்தியமா என்று கேட்டால், பிரசங்கம் செய்பவர்கள் மாத்திரமே ஆமோதிப்பவர்களாகவும், அந்த ஊழியர்களை குறுட்டு தனமாக பின் பற்றும் கூட்டமும் ஆமாம் சாமி போடுவார்கள்! நேற்றுகூட ஆசீர்வாதம் டீவியில் ஒரு பிரபலமான ஊழியர் பேசும் போது, தேவன் நம்மிடத்தில் எப்படி எல்லாம் பேசுவார் என்றார், எப்படி என்ரால்,
அ. கனவுகள் மூலமாக
ஆ. தரிசனங்கள் மூலமாக
இ. வசனத்தின் மூலமாக.
தேவன் நம்மிடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதற்கு இந்த கிறிஸ்தவ மண்டல ஊழியர்கள் வைத்திருக்கும் இந்த மூன்று ஸ்டாண்டர்ட் வழிகளையே அனைவரும் நம்பி வருகிறார்கள். வேதத்தில் சிலருக்கு நடந்த சம்பவங்கள் நமக்கும் பொருந்தும் என்று குறுட்டு தனமாக நம்புவது அபத்தமாக வேதத்தை புரிந்துக்கொண்டதாக ஆகும். வேதத்தில் இடம் பெறுவதற்காக நேரந்த காரியங்களை வேதத்தில் எழுதப்பட்டிருப்பதை இன்றும் அப்படியே எங்களுக்கு நடக்கும் என்பது முட்டாள்தனமான விளக்கமாகும்.யாக்கோபுக்கோ, யோசேப்புக்கோ அல்லது தானியேலுக்கோ சில காரியங்கள் நடந்தது என்றால் அந்த காரியங்கள் மூலமாக நாம் என்ன கற்று கொள்ள வேண்டியது தான் அன்றி, அதே போல் நம்மிடமும் தேவன் பேசுவார் என்று இல்லை. வேதத்தில் எழுதப்பட வேண்டியும் அதன் மூலமாக வரவிருக்கும் சந்ததிகள் கற்றுக்கொண்டு தேவனின் மகிமையை அறியவேண்டியது தான் அதன் நோக்கமே தவிர, யாக்கோபுடன் பேசினீரே, தானியேலுக்கு கனவு தந்தீரே, என்று இன்றும் சொல்லி வருவதினால் பல வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவன் பேசாமல் இப்பிரபஞ்சத்தின் தேவன் பேச அதிக வாய்ப்பு இருக்கிறது, பெரும்பாலும் அது தான் நடக்கிறது. பல தரிசனங்களை கண்ட பவுல் எழுதுகிறார், II கொரிந்தியர் 5:6. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். என்று, இப்படி கடைசி காலங்களில் தப்பிதமான ஊழியர்கள் வந்து இப்படி எல்லாம் சொல்லுவார்கள் என்று என்னியே அன்றே பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் அப்படி எழுதியிருக்க வேண்டும். அதிலும் தரிசனங்களுக்கு இன்று லிமிட்டே இல்லாமல் போய் விட்டது. யார் அதிக மசாலா கலந்து சொல்லுகிறார்களோ அவர்களே அதிகமாக விற்பனையாகிறார்கள். ஆங்கிளத்தில் பெஸ்ட் செல்லர்ஸ் என்று சில ஆசரியர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஈடாக இவர்களும்.
வேதத்தில் வரும் தரிசனங்கள் நம்பும்படியாக இருந்தது, ஆனால் இன்று இந்த ஏமாற்று கூட்டத்தார் சொல்லும் தரிசனங்கள் விட்டலாச்சாரிய, விக்கிரமாதித்த்யா கதைகளிலும் மோசமாக இருக்கிறது. இவர்களுக்கு தான் இது பிழைப்பு என்றால் இதை நம்பி பெரும் கூட்டம் கும்பல் கும்பலாக ஏமாறுவது அதை காட்டிலும் வேதனையாக இருக்கிறது. வேறு மதங்களில் பலர் இன்று மாட்டிக்கொண்டு வருவது போல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வியாபாரிகளாக இருக்கும் இந்த ஊழியர்களும் நிச்சயம் வெளிச்சத்திற்கு வருவார்கள். அன்றாவது இவர்களை நம்பி மோசம் போகும் கூட்டத்தார் விழித்து எழட்டும். வசனத்தின் மூலமாக தேவன் பேசுகிறார் ஏனென்றால் அந்த வசனமே தேவனின் வார்த்தைகள் தான். ஆனால் இந்த ஏமாற்று ஊழியர்கள் பிரசங்கிப்பது போல், வசனத்தை வாசித்து அதை அவர்கள் இஷ்டப்படி தியானம் செய்து சந்தர்பத்திற்கு தகுந்தார் போல் விளக்குவதும் சரியானது அல்ல. இந்த வசனங்களை ஆறாய்ந்து அறிவது சிறந்த முரையாகும். ஏனென்றால் அதை எடுத்து தியானித்தால் அந்த சூழ்நிலையில் நம் மனது எப்படி உள்ளது அப்படியே தான் நமக்கு விளங்கும். இப்படி தன் இஷ்டப்படி விளக்கி விளக்கி தான் தங்களின் வார்த்தைகளை கேட்கும் கூட்டத்தை இவர்கள் (ஏமாற்று ஊழியர்கள்) அமர்த்திக்கொண்டு ராஜங்கம் செய்து தன் பிழைப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.