kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறாரா?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறாரா?


வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறாரா?

இன்று கிறிஸ்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் வசனத்தின் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார் என்பது. இந்த பழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் ஏறக்குறைய மனநலம் பாதிக்கப்படுமளவு (அதை அவர்களே உணரமாட்டார்கள்) மாறிவிடுகின்றனர். எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு வசனத்தின் மூலம் தேவன் பேசினதாயும் அதற்கு அவர்கள் கீழ்ப்படிவதாகவும் எடுத்துக்கொண்டு மோசம் போய்க்கொண்டும், மோசம் போக்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.

வேதத்தில் தேவன் குறிப்பிட்ட கால கட்டத்தில், குறிப்பிட்ட ஜனங்களுக்கோ, குறிப்பிட்ட மனிதருக்கோ சொன்ன விஷயங்களை தங்களுக்கு என்று எடுத்துக்கொண்டு அதை விசுவாசிக்கிறார்கள். இவை பெரும்பாலும் அவர்களுக்கு சாதகமான விஷயங்களாகவோ, அவர்களை முக்கியப்படுத்தும் சமாச்சாரங்களாகவோதான் இருக்கும். பெரும்பாலான ஆசீர்வாதங்களை இவர்கள் வசனத்தின் மூலமே சுதந்தரிப்பதாக எண்ணுகிறார்கள்.

தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு சாதகமாக வரும் வசனங்களைத் தேடி எடுத்து "சுதந்தரிக்கிறார்கள்".
ஆக தேவன் சாபமாகச் சொன்ன வசங்கள் மட்டும் வேறு யாருக்கோ, ஆசீர்வாத வசனங்கள் மட்டும் இவர்களுக்கு!

இவ்வகை 'சைக்கோ' பேர்வழிகள் இப்படியே வாழ்நாளைக்கழித்துவிடுமளவு இந்த உபதேசத்தில் ஊறிப்போய் இருக்கிறார்கள். என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்ற வசனத்தை பல கார்களில் பார்க்கலாம். தேவாதி தேவனுடைய 'பிரசன்னம்' இவர்கள் காருக்கு முன்பாகச் சென்று இவர்களைப் பாதுகாக்க வேண்டும்!

அதைவிடக்கொடுமை மாருதி 800ல் இவர்கள் God's Gift     என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். முன்பாக திருப்பதி வெங்கடாசலபதி ஸ்டிக்கருடன் 'ஸ்கோடா' சென்றுகொண்டிருக்கும்.

வசனத்தை ஆராயச்சொன்னால் செய்வதில்லை ஆனால் மற்ற எல்லா விஷயங்களுக்கும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
எங்கேபோய் முடியுமோ?




-- Edited by soulsolution on Thursday 29th of April 2010 11:48:00 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard