கோவையில் வருடா வருடம் நடக்கும் பேரின்பப் பெருவிழாவுக்கு வெளியூர்க்கார 'பிரபல'ங்கள் அழைக்கப்படுவார்கள். இதை நடத்தும் கோவை லோக்கல் பார்ட்டி எல்லா நாட்களும் கூட்டம் வரவேண்டுமென்று ஒரு சஸ்பென்ஸ் டெக்னிக்கை வெற்றிகரமாக கடைபிடித்து வருகிறார். நான்கு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டங்களுக்கு லாகன் மோ சிசரஸ், ஜெம் சாபத்துரை, திரூஸ் குவாகரன் போன்றவர்களை அழைப்பார். ஒரு நாள் தானும் தன்னுடைய சேஷ்ட புத்திரனும் 'செய்தி' கொடுப்பார்கள். இதில் யார் எந்த தேதியில் பேசுவார்கள் என்பது ஒரு சஸ்பெஸாகவே இருக்கும். நோட்டீசுகளிலோ, போஸ்டர்களிலோ இதை வெளியிடவே மாட்டார்கள். ஏனென்றால் வெளியூர்க்கார பிரபலங்கள் பேசும்போது போய்க்கொள்ளலாம் என்று உள்ளூர்க்கார 'தேவ செய்தியாளர்களை' ஜனங்கள் உதாசீனப்படுத்திவிடுவார்களே. இந்தக்கூட்ட்ஙகளுக்குப் போகிறவர்கள் எல்லாருமே கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் கொடுக்கும் காணிக்கையில்தான் இவர்கள் 'பேரின்பம்' அடைகிறார்கள்.
தன்னுடைய இரண்டு மனைவிகளையும் பரிகொடுத்துவிட்டு இவர் 'பேரின்பத்தில்' இருக்கிறார். மூன்றாவதுக்கு அடிபோடுகிறாரோ என்னவோ? தன்னுடைய மனைவிகளைக் காப்பாற்ற வக்கில்லாதவன் மற்றவர்களை சுகப்படுத்துகிறானாம். கேலிக்கூத்து! ஆயிரம் ஜாமக்கார புஷ்பராஜ்கள் வந்தாலும் இவனுகளைத் திருத்தமுடியாது.
"பெரின்ப பெருவிழா"விற்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ ஜனங்களின் நம்பிக்கையுடன் இவர்கள் விளையாடுவதை எல்லாம் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இந்த குருடர்களுக்கு தெரியாமல் இருக்கிறது போல். பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்க்கிறார் என்பதை இந்த கூட்டத்தார் புரியும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை. எல்லோரும் ஒரே ஆவியில் நிறைந்தவர்கள் என்று பிதற்றிகொண்டு ஏன் தான் வெளியூரில் இருந்து "அதிக" வல்லமை நிறைந்தவர்களை அழைத்து வருகிறார்களோ. உள்ளூர் ஊழியர்களின் வல்லமை எங்கே போய் விட்டது. சரி வருகிறவர்கள் தான் "இலவசமாக பெற்றோம் இலவசமாக தருகிறோம்" என்று இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு என்று "ரேட்" பேசி தான் கால் ஷீட் கொடுக்கிறார்கள். இது எல்லாம் திரை மறைவிற்கு பின்னால் உள்ள விஷயங்கள். அப்பாவி விசுவாசிகள் இதை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை. காணிக்கையை பிரித்துக்கொள்வதில் ஊழியர்களுக்கு நடுவில் பெரிய தகறார் வருவதை எல்லாம் எழுதினால் வெட்க கேடாகிவிடும். போகட்டும் அவர்கள் "பெரின்பம்" காணட்டும்.
மொத்தத்தில் அரசியல் கட்சிகள் கூட்டனி கூட்டம் போல் ஆகி விட்டது. அதான் பல அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து காமன் மினிமம் ப்ரோக்ராம் வைத்து ஆட்சியை பிடிப்பது போல் இந்த கூட்டத்தார் பல சபைகளை சேர்ந்தவர்கள் தங்களின் முழு கொள்கையை கோட்பாடுகளை சொல்லாமல் ஒரு சில பொது காரியங்களை பகிர்ந்துக்கொண்டு ஆதாயம் தேடுகிறார்கள். அரசியலில் மக்கள் சற்று விழித்திருக்கிறார்கள். ஆனால் இங்கே தேவனை வியாபாரப்பொருளாக வைத்துக்கொண்டு இந்த ஊழிய வியாபாரிகள் விசுவாசிகளை சராமாரியாக ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.