கள்ள உபதேசங்கள் ஏதோ சமீபகாலமாக வந்தவைகள் அல்ல! அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே இது தொடங்கியது! கள்ள உபதேசங்கள் பல விதமாக இருந்தாலும் அப்பொஸ்தலர்கள் பெற்றிருந்த வித்தியாசமான அதிகாரங்கள் மற்றவர்களுக்கு உண்டு என்று நிறுபிக்கும் படியாக அன்று தொடங்கி இன்று வரை, தேவன் என்னிடத்தில் பேசினார், இயேசு கிறிஸ்து என்னை பரலோகம், பாதாளம் கூட்டி கொண்டு கான்பித்தார் என்றும் இன்னும் பல விதங்களில் வேதத்திற்கு புறம்பாக சொல்லப்படும் அனைத்து உபதேசங்களும் கள்ள உபதேசங்களே. பலர் இன்று வரை யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமானங்களை (கடினமானவைகள் அல்ல, சுலபமாக பின் பற்ற கூடியவைகளை மாத்திரம்) பிடித்துக்கொண்டு இருக்கிறார்கல். அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன? வேதம் சொல்லுகிறது,
வாக்குத்தத்தத்தை பெற்ற சந்ததி வருமளவும் அது அது அக்கிரமங்கள் நிமித்தமாக கூட்டப்பட்டு கடவுளுடைய தூதரைக்கொண்டு மத்தியஸ்தர் கையிலே கட்டளையைடப்பட்டது (கலா. 3:19) அப். பவுல் எழுதுகிறார் அந்த சந்ததி கிறிஸ்துவே என்று (கலா 3:16).
விபச்சாரம் செய்பவன் பரலோகம் செல்ல முடியாது என்று பவுல் எழுதுகிறார் என்றால் அதற்கு காரணம் பழைய கற்பனைகள் அல்ல மாறாக கிறிஸ்து விபச்சாரத்திற்கு கொடுத்த புதிய பரிமானமே!! இச்சையுடன் பார்ப்பதே விபச்சாரம் செய்து ஆகி விட்டது என்கிறார் இயேசு கிறிஸ்து, ஆனால் நியாயப்பிரமாணமோ செயலையே விபச்சாரம் என்கிறது.
இப்படி செயலை நம்பிக்கொண்டு ஆவியை பெற்றிருக்கிறோம் என்று எல்லாம் சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை!? தரிசனம் காண்பவர்கள் தான் பெரும்பாளும் ஒரு சபைக்கோ ஒரு கோட்பாடு உருவாக காரணமானவர்கள் என்பது என் கருத்து. வேதத்தை மாத்திரம் வாசித்து சரிவர பின் பற்றியிருந்தால் இந்த அபத்தங்களுக்கு தப்பித்திருக்கலாம். ஆனால் கடைசி நாட்களில் (அதாவது சுவிசேஷ யுகத்தில்) இப்படி பட்டவர்கள் வந்தாக வேண்டும் என்பது தேவ நியமனம்!!