புது புது தரிசனங்களோடு முலைத்து வரும் ஊழியங்களை பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. வேதத்தை அறியாத கூட்டம் இதை தேவன் ஒரு குறிப்பிட்ட ஊழியர்களுக்கு வெளிப்படுத்தும் தேவ கிருபை என்று வியந்துக்கொண்டும், அந்த ஊழியர்கள் பெருமை பாராட்டி வருவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்த வரிசையில் நானும் ஒரு காலத்தில் ஒரு ஊழியத்தில் மும்முறமாக ஓடிக்கொண்டு இருந்த காலம் உண்டு. தேவன் அதன் மூலம் எனக்கு பயிற்சி தந்தார் என்றும், எசேக்கியல் எழுதியது போல் எசே. 8ம் அதிகாரத்தில் தேவன் அவனுக்கு ஆலயாத்தில் நடக்கு சகல அருவறுப்புகளையும் காண்பிக்கும் படி கூட்டி சென்றது போல் தான் என்னையும் தேவன் இப்படி பட்ட ஊழியங்களை காண்பித்து, பின்பு சத்தியத்தை தந்து, பார் நீ சென்று வந்த அறுவறுப்பான பாதைகளை என்று கற்று கொடுத்தார் என்றே எடுத்துக்கொள்ளுகிறேன்.
இன்று அநேக ஊழியர்கள் ஏதோ பாரப்பட்டு தேவனுக்கு உதவி செய்கிறோம் என்று நினைத்து தேவ சித்தத்திற்கு விரோதமாக சாத்தானின் ஊழியத்தை தான் செய்து வருகிறார்கள். உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை குறுகிய நோக்கத்துடன் "இந்தியாவை இரட்சியும்" என்று ஊழிய சர்விஸ் நடத்தி வருகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் என்னவென்று தெரியாத இந்த வேத ஞான சூனியர்கள் எந்த தைரியத்தில் தான் இப்படி பட்ட (அட்)ஊழியம் செய்து வருகிறார்களோ, கேட்டாள் தேவன் இவர்களுக்கு வெளிப்படுத்தின ஊழியமாம் இது. எல்லா மனுஷனையும் இரட்சிக்க தேவன் சித்தமாக இருக்கிறார் என்று வேதம் கூறினாலும் இந்த வேத அறிவு இல்லாத கூட்டம் "இந்தியாவை மட்டும் எங்களுக்கு தாருங்கள்' "Christ for India", போன்ற வாசகங்களையும் ஜெபகுறிப்புகளையும் வைத்துக்கொண்டு உலக இரட்சகரின் மகத்துவத்தை குறைக்கிறார்கள்.
இன்னும் ஒரு கூட்டம் 7 ஆண்டுகள் தேவ வசனம் இந்திய முழுவது சென்று அடையும் என்றும் அதன் பின் 7 ஆண்டுகல் வசன பஞ்சம் வரும் என்றும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். வசன பஞ்சம் காலம் முடிந்து விட்டது என்று கூட அறியாத இவர்களுக்கு தேவன் எப்படி தான் வெளிப்படுத்துகிறாரோ!! இன்று நாம் உபயோகிக்கும் மொபைல் ஃபோனிலேயே பைபிள் வந்து விட்டது. ஒரு காலத்தில் அரபு நாடுகளுக்கு பைபிள் எடுத்து செல்ல கூடாது என்று சட்டம் எல்லம் தளர்ந்து இப்பொழுது அங்கும் ஆலயங்கள் வந்து விட்டது, இந்த நிலையில் இனிமேல் தான் இந்தியா போன்ற நாட்டில் வசன பஞ்சம் வரும் என்பது ஒரு முட்டாள்தனமான எச்சரிக்கை.
ஊழியர்களே, சொந்த கற்பனையில் மிதந்து அதை தேவ சாயம் பூசாமல் தேவனிடத்தில் வசன வெளிச்சத்தை கேளுங்களே!! குறுடர்கள் குறுடர்களை வழி நடத்துவது போல் இல்லாமல், காதுள்ளவனாக இருங்கள். மத்.15:14; லூக் 6:39