இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் ஊழியர்களே, சத்திய விரும்பிகளே, இதோ 2 கொரி 3ம் அதிகாரத்தை வாசித்து பாருங்கள். நியாயப்பிரமானம், யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட சில சுலபமான கட்டளைகளை பின் பற்றி கள்ள உபதேசம் செய்கிறவர்கல், பழைய ஏறபாட்டையும் புதிய ஏற்பாட்டையும் போட்டு குழப்பி பிறரையும் குழப்பி ஊழியம் (!!) செய்கிறவர்களின் உபதேசங்களை பவுல் எழுதிய இந்த பகுதி ஒரு சாட்டையடி போல் இருக்கும், ஆனால் அவர்கள் சுயமாக இருந்து வாசித்தால் இது அவர்களுக்கு புரியாது. சற்றே தங்களின் மேன்மை பாராட்டுதலையும், தங்களின் புரிந்துக்கொள்ளுதளை தளர்த்தி வாசித்தாலே புரியும் என்று நினைக்கிறேன்.ஆக்கினையும் தண்டனையை மனதில் வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த பகுதி ஜீரனிக்க சற்று கடினம் தான்! நரகத்தை பார்ப்பவர்களுக்கு என்ன சொல்லுவது?