நமக்கு ஏற்படக்கூடிய சோதனை எவ்விதம் இருக்கும் என்பதை அது நம் பேரில் வரும்வரை தெளிவாகப்புரிந்து கொள்ளமுடியாது.
நாம் அதை அறிந்திருப்போமேயானால் அது மிக லகுவாகவே காணப்படக்கூடும்.
நாம் எப்பொழுதும் தயாராக இருந்து விழிப்புடன் ஜெபத்திலே தரித்திருப்பது விபத்தை விளைவிக்காது.
ஏனென்றால் நம் எதிராளியான சாத்தான் யாரை விழுங்கலாமென்று வகை தேடித்திரிகிறான்.
நம் பெலவீனங்களை அறிந்து அதை ஆதாயப்படுத்திக் கொள்வான்.
நாம் ஒவ்வொருவரும் இவனை மேற்கொள்ள் நம் இருதயத்திலே தேவ கிருபையின் ஆவியை உடையவர்களாக இருந்து எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாக ஜெபத்திலே தரித்திருப்பது அவசியமானது.