" விசுவாசத்தில் நல்லப் போராட்டத்தைப் போராடு. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டாய், அனேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். " ( 1 தீமோ. 6:12 )
நம் வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் போர் வெளிப்படையாகவோ அல்லது அந்தரங்கமாகவோ இருந்தாலும் அது ஒரு போராகவே கருதப்படவேண்டும்.
இந்த யுத்தத்தில் நாம் முன்னேறி வெற்றி பெறவேண்டும்.
இல்லையேல் நாம் சகலத்தையும் மேற்கொண்டவர்களாக தேவனாலே அங்கீகரிக்கப்பட முடியாது. மற்றொரு காரியம் நம் அனைவரின் சிந்தனையில் இருக்க வேண்டும்.
நம்முடைய பிரயாசையினால் அல்ல பரிசுத்தாவியின் தூண்டுதலினால் நாம் எந்த அளவுக்கு இந்த யுத்தத்தில் முன்னேறுகிறோம் என்பதையே தேவன் மதிப்பிடுகிறார்.
இதனால் நாம் செலுத்தும் காணிக்கைகளும், பலியும், பூரண அன்பும் பக்தியுள்ளதுமாக இருந்து பேர் புகழ்ச்சிக்காக நாம் எதையும் செய்யாமல் தேவன் பேரில் அன்புள்ளவர்களாக அதை உண்மையான அன்போடு செய்ய வேண்டும்.