kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாபிலோன் சபை!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பாபிலோன் சபை!!


இன்று எத்துனையோ சபைகள் இயேசு கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி வந்திருந்தாலும் எதிலும் ஒரு ஒற்றுமை இல்லையே!! அமேரிக்கா தான் பாபிலோன், ரஷ்யா தான் பாபிலோன் என்று சொல்லும் சபைகள் இருக்கிறது, தாங்களே அந்த பாபிலோன் சபையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள் என்பதை மறந்து அல்லது தெரியாமல் இருக்கிறார்களே!

இராபோஜனம் என்கிற கர்த்தர் பந்தியை எடுத்து பார்க்கலாமே! ஒரு கன்வென்ஷன் என்றால் ஒன்று சேரும் இந்த பல்வேறு சபைகள் இந்த இராபோஜன விஷயத்தில் மன்னுக்கும் வின்னுக்கும் உள்ள வித்த்யாசம் கொண்டிருக்கிறார்கள். முதல் காரியம் இவர்களில் ஒரு சபைக்கூட இந்த இராபோஜனம் என்கிற இந்த வார்த்தைக்கு தகுந்தாற் போல் இரவில் நடத்துவது இல்லை. ஒரு சபைக்கூட இல்லை (ஒரு வேளை 0.1% இருக்கலாம்). இப்படி ஒரு முக்கியமான விஷயத்தை அதுவும், நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து "இதை நான் வரும் மட்டும் என்னை நினைவு கூறும் படி செய்யுங்கள்" என்று சொல்லியும் ஒரு சபைக்கூட அவர் சொன்னபடி செய்வதில்லை, ஆனால் நாங்கள் தான் உண்மையான சபை, நாங்கள் சொல்லுவது தான் சத்தியம் என்று மாத்திரம் சொல்லிவருவதில் தயங்குவதில்லை!! இராபோஜனம் என்றாலே இரவில் உண்டான ஒரு விஷயம் "தமிழ் வேதாகமம்" மாத்திரம் போதும் என்று சொல்லுபவருகளுக்கும் புரியவில்லை போல். இந்த ஒரு விஷயத்தில் எல்லா சபைகளும் குருட்டாட்டம் தான் கான்பித்து வருகிறார்கள். பாபிலோன் சபை என்று இவர்களை சொல்லுவதில் என்ன தவறு?

வாரம் ஒரு முறை
மாதம் ஒரு முறை
பெரிய பாஸ்டர் வந்தால் மாத்திரம்
அனுதினமும்
ஒரு நாளில் எத்துனை முறை வேண்டும் என்றாலும்

ஆனால் இவைகளில் ஒரு சபைக்கூட "இராபோஜனம்" அனுசரிப்பதில்லை என்பதே சரியாகும். இத்துனை குழப்பம் நிறைந்த இந்த சபைகளை ஏன் பாபிலோன் சபை என்று கூறக்கூடாது? கணவுகள் காட்சிகள், தரிசனங்கள் பார்பவர்களுக்குக்கூட இந்த வெளிப்பாடு இன்னும் (இன்று வரை) கொடுக்கப்படவில்லயா? சபையின் வசதிக்காகவோ அல்ல‌து ம‌க்க‌ளின் வ‌ச‌திக்காக‌வோ அல்ல‌து பாஸ்ட‌ரின் வ‌ச‌திக்காக‌வோ இத்துனை பெரிய‌ ஒரு க‌ட்ட‌ளையை மாற்றிய‌வ‌ர்க‌ள் "பாபிலோன் ச‌பை" என்ப‌தில் என்ன‌ த‌வ‌று?



-- Edited by bereans on Monday 29th of March 2010 09:54:17 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:01:58 PM

__________________
"Praying for your Success"


Executive

Status: Offline
Posts: 425
Date:

அப்போஸ்தலர் 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், .....

1 கொரிந்தியர் 11:26-31 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் (வாரம் ஒருமுறையானாலும் சரி, மாதம் ஒருமுறையானாலும் சரி, அனுதினமுமானாலும் சரி, ஒரு நாளில் எத்தனை முறையானாலும் சரி) கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் (எவன் பாத்திரமானவன், எவன் அபாத்திரமானவன்?) கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.


-- Edited by anbu57 on Tuesday 30th of March 2010 04:30:07 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என் கேள்வியின் நோக்கத்தை சரி வர புரியாவிட்டாலும் இரு நண்பர்களின் பதிவுகளுக்கு நன்றி. கர்த்தர் "நினைவு கூறுதலாக" செய்ய சொன்ன ஒரு கட்டளை இந்த பந்தி. நினைவ படுத்தும் படியாக வருடத்தில் ஒரு முறை தான் என்பதை நாம் யூதர்கள் மட்டும் அல்ல அனைத்து மார்க்கங்கள்/ மதங்கல்/ கலாச்சாராங்களிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள முடியும். கர்த்தர் ஏன் விசேஷமாக "பஸ்கா பண்டிகையின்" அந்த நாளை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்தே இந்த நினைவுகூறுதலின் அர்த்தம் துவங்குகிறது.

என் கேள்வியே ஒரு விஷயத்தை / கட்டளையை ஒரே மாதிரியாக புரிந்துக்கொள்ளுவதில் நியாயம் இருக்கிறது, சபைக்கு சபை வேறு மாதிரி பின்பற்றுவது எப்படி ஒரே அர்த்தமாகிறது! இது குழப்பம் இல்லையா!! இப்படி பட்ட ஒரு உன்னதமான நினைவுகூறுதலை ஒவ்வொரு சபையும் தங்களின் இஷ்ட்டபடி செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பதே என் கேள்வி!

அப்போஸ்தலர் 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், .....

அப்ப‌ம் பிய்த்து விட்டால், ப‌ந்தி நிறைவேறி விட்ட‌து என்று அர்த்த‌மா? ஏன் பாத்திர‌ம் அங்கு இல்லை! அப்ப‌டி என்றால் இந்த‌ அப்ப‌ம் பிட்கும் செய‌ல் "க‌ர்த்த‌ரின் ப‌ந்தியா"
இந்த‌ வ‌ச‌ன‌ம் யூத‌ர்க‌ளின் "வார‌த்தின் முத‌ல் நாளை" குறிக்கிற‌து. அந்திகிறிஸ்து முறைமின்ப‌டி உருவான‌ நாள் அல்ல‌. அதாவ‌து, வார‌த்தின் முத‌ல் நாள் என்றால் ஞாயிறு காலை அல்ல‌, மாறாக‌ வ‌ச‌ன‌த்தின்ப‌டி அது ச‌னிக்கிழ‌மை சாய‌ங்காள‌ம், அதுவே யூத‌ர்க‌ளின் வார‌த்தின் முத‌ல் நாள்

"On Saturday evening we gathered together for the fellowship meal" Acts 20:7 (Good News English Bible). இன்று ச‌பைக‌ள் பிர‌ச‌ங்கிப்ப‌து போல் இது க‌ர்த்த‌ர்ப‌ந்தி அல்ல‌ மாறாக‌ ஒரு விருந்தோம்ப‌ல், கூடி சேர்ந்து சாப்பிடும் ஒரு இர‌வு உண‌வு.

"1 கொரிந்தியர் 11:26-31 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் (வாரம் ஒருமுறையானாலும் சரி, மாதம் ஒருமுறையானாலும் சரி, அனுதினமுமானாலும் சரி, ஒரு நாளில் எத்தனை முறையானாலும் சரி) கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்."

() குறிப்பீடிற்குள் இருப்ப‌து தான் இன்றைய‌ ச‌பைக‌ள் வைத்திருக்கும் நிலைப்பாடு என்றும் அது த‌வ‌றான‌து என்றும் இந்த‌ கேள்வியே எழுப்பினேன். வ‌ச‌ன‌த்துட‌ன் அதை சேர்த்து அது ஏதோ வேத‌த்தில் உள்ள‌து போல் எழுதியிருக்கிறீர்க‌ளே.ஒரு ப‌ண்டிகையை வருடத்தில் ஒரு முறை அனுசரிப்ப‌து நியாய‌ம், நாள்தோறும், அல்ல‌து ஒரே நாளில் எத்துனை முறை வேண்டும் என்றாலும் ஒரு ப‌ண்டிகையை ஆச‌ரிப்ப‌து குழ‌ப்ப‌த்தின் உச்ச‌மே!!

I கொரிந்தியர் 5:7,8 "7. ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்"

ஆக‌வே இந்த‌ ப"‌ண்டிகையை" எந்த‌ வித‌மான‌ குழ‌ப்ப‌மும் இல்லாம‌ல் ப‌ண்டிகை போல் வ‌ருட‌த்தில் ஒரு முறை அதுவும், அந்திக்கிறிஸ்து மார்றிய‌ நேர‌மும் காலாமும் அல்லாம‌ல் தேவ‌னால் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ கால‌மும் நேர‌மும் உள்ள‌ கால‌ண்ட‌ரையே பின் ப‌ற்றுவோம்.

"இயேசு இராப்போஜனம் மேற்கொண்ட நாளும் நேரமும் நம்முடைய வாழ்வில் வரப்போவதில்லை;ஆனால் அந்த நிகழ்வும் அதன் நோக்கமும் நெஞ்சில் நிறுத்தினாலே போதும்..!"

நெஞ்சைதொட்டு சொல்ல‌வேண்டும், அந்த‌ நிகழ்வும் நோக்க‌ம் இன்று ச‌பைக‌ளில் பின் ப‌ற்ற‌ப்ப‌டுகிறதா என்று?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:01:45 PM

__________________
"Praying for your Success"


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

அப்போஸ்தர் 20:7-ஐப் பொறுத்தவரை தங்கள் விளக்கம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால், இன்ன நாளில் இன்ன நேரத்தில்தான் இராப்போஜனத்தை ஆசரிக்கவேண்டும் எனும் உங்கள் கருத்துக்கு, போதுமான வேதஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

1 கொரி. 11:26-ல், “இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம்” எனும் பவுலின் வாசகம், ஒரு குறிப்பிட்ட நாள்/நேரத்தை மட்டுப்படுத்தாமல், “எப்போதெல்லாம் பானம்பண்ணுகிறோமோ அப்போதெல்லாம்” எனக் கூறுவதாகவே உள்ளது. எனவேதான் அடைப்புக்குறிக்குள் “வாரம் ஒருமுறையானாலும் சரி, மாதம் ஒருமுறையானாலும் சரி, அனுதினமுமானாலும் சரி, ஒரு நாளில் எத்தனை முறையானாலும் சரி” எனும் இணைப்பைச் சேர்த்திருந்தேன்.

உங்களைப் பொறுத்தவரை வருடம் ஒருமுறை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இராப்போஜனம் ஆசரிப்பது போதுமானது எனக் கருதினால், நீங்கள் தாராளமாக அப்படியே செய்து கொள்ளலாம். ஆனால், உங்கள் அனுசரிப்புக்கு மாறாக ஆசரிப்பவர்களை “பாபிலோன் சபை” என விமர்சிப்பது சரியல்ல.

ஏனெனில், இயேசுவின் இராப்போஜனக் கட்டளையைப் பொறுத்தவரை “அவரது மரணத்தை” நினைவுகூறுவதுதான் முக்கியமேயன்றி, போஜனபானம் பண்ணுவது முக்கியமல்ல. தம்மை நினைவு கூரும்படி இராப்போஜனம் பண்ணச் சொன்ன இயேசு, அதை ஒரு கட்டாயமான கட்டளையாகவோ கற்பனையாகவோ கூறவில்லை.

மெய்யாகவே நாம் இயேசுவின்மீது அன்புகூர்ந்தால் அவரது கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே அதை வெளிப்படுத்தமுடியும் (யோவான் 14:15). ஆனால், கற்பனைகளைக் கைக்கொள்வதைப்பற்றி போதிக்க வேண்டியதில்லை எனக்கூறும் நீங்கள், இராப்போஜன ஆசரிப்பு விஷயத்தில் மட்டும் துல்லியமாக நாள்/நேரம் பார்த்து ஆசரிப்பதுதான் மெய்யான ஆசரிப்பு என்றும், மற்றவையெல்லாம் பாபிலோனிய சபை ஆசரிப்பு என்றும் கூறுவதுதான் வினோதமாக உள்ளது.

இராப்போஜனத்தையும் புளிப்பில்லா அப்பப்பண்டிகையையும் தேவையின்றி இணைத்துள்ளீர்கள். அதற்கு ஆதாரமாக 1 கொரி. 5:7,8 வசனங்களைக் கூறியுள்ளீர்கள். ஆனால், அவ்வசனங்களில் பவுல் கூறுகிற புளிப்பில்லா பண்டிகை மாம்சத்திற்குரியதாக இராமல் ஆவிக்குரியதாக உள்ளது. ஆம், துர்க்குணம் பொல்லாப்பு எனும் புளித்தமாவு இல்லாமல், உண்மை துப்புரவு எனும் புளிப்பில்லாத மாவால் ஆன அப்பத்தைப் புசித்து பண்டிகை ஆசரிக்கவேண்டும் என அவர் கூறுகிறார்.

எனவே பவுல் கூறுகிறபடி நீங்களும் நானும் பண்டிகை ஆசரிக்கவேண்டுமெனில், மாவினால் ஆன அப்பத்தைப் புசிக்காமல், உண்மை துப்புரவு போன்ற நற்கிரியைகளைச் செயல்படுத்துவதுதான் மெய்யான பண்டிகை ஆசரிப்பாகும்.

எனவே, சடங்காச்சாரமாக அப்பம் புசித்தல், பானம் பண்ணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையும் பாபிலோனிய சபை எனத் தீர்மானிக்காமல், உண்மை துப்புரவு எனும் கிரியைகளின் அடிப்படையில் யார் பாபிலோனிய சபை, யார் கிறிஸ்துவின் சபை என்பதைத் தீர்மானிப்போம்.

உண்மை துப்புரவு எனும் கிரியைகள் இல்லாமல் இராப்போஜனம் ஆசரிப்பவனைத்தான் அபாத்திரமாய் பானம் பண்ணுகிறவன் என 1 கொரி. 11:26-31 வசனங்களில் பவுல் கூறுவதாக நான் கருதுகிறேன்.

எனவே நாள்/நேரம் பார்த்து இராப்போஜனம் ஆசரிப்பதை முக்கியப்படுத்தாமல், பாத்திரமுள்ளவனாக அதை ஆசரிக்கிறோமா என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்போமாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

இப்படி ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு மாதிரி அனுசரிப்பதினால் இந்த‌ புரிந்துக்கொள்ளுதலின் குழப்பத்தை தான் முன்வைக்கிறேன். இயேசு கிறிஸ்து நேரடியாக பின்பற்ற சொன்னதை, செய்ய சொன்னதை தாங்கள் கற்பனை அல்லது கட்டளை என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்கள் இஷ்டமே!!

இப்படி ஒரு விஷயத்தில் இத்துனை குழப்பம் வைத்திருக்கும் சபைகள் எப்படி ஒரே விசுவாசத்தில் இருக்க முடியும் என்பதனால் தான் பாபிலோன் சபைகள் என்று எழுதுகிறேன், யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. உங்களுக்கு தப்பு என்று படுவதை தாங்கள் எழுதுவது போல் தான் நானும் எழுதுகிறேன். நான் என் கருத்தை எழுதுகிறேன், எனக்கு அதற்கான சுதந்திரம் இல்லையோ!!

"நினைவு கூறுதலை" நாங்கள் வருடம் ஒரு முறை என்று எடுத்துக்கொள்கிறோம். அவ்வளவே! ஒரே ஆவி, ஒரே விசுவாசம் என்று சொல்லி வரும் இந்த சபைக்களுக்கு ஏன் இத்துனை வேற்பாடு என்பதால் தான் இந்த கேள்வியே! அதற்கு உண்டான விளக்கம் இருந்தால் சொல்லுங்கள்!! எப்படி வேண்டும் என்றாலும் அனுசரிக்கலாம், எப்பொழுது வேண்டும் என்றாலும் அனுசரிக்கலாம் என்பவர்கள் தாராளமாக செய்துக்கொள்ளட்டும். வேதத்தில் இப்படி பட்ட குழப்பம் நிறைந்த சபைகளை தான் பாபிலோன் சபைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



-- Edited by bereans on Wednesday 31st of March 2010 10:10:41 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம் அவர்களே,

தங்கள் பதிய நினைப்பதை இந்த தளத்திலே பதியுங்களே! ஏன் உங்கள் தளத்தில் போய் எங்களை கள்ள போதகர்களும், கள்ள உபதேசங்கள் தருபவர்களும் என்று சொல்லி வருகிறீர்கள். தயவு செய்து அடுத்த பதிவிலிருந்து தொடுப்பு தராதீர்கள். தொடுப்பு இருந்தால் அது நீக்கப்படும் என்று தெரிவிக்கிறேன்.

என் கேள்வி மிகவும் சுலபம், அதை போய் ஏன் கலாச்சாரம் அது இது என்று மிகை படுத்துகிறீர்கள். கர்த்தரின் இராபோஜன பந்தியை இந்த சபைகள் ஒரே ஆவியில் இருக்கிறோம், ஒரே விசுவாசத்தை தான் கொண்டிருக்கிறோம் என்றேல்லாம் சொல்லிக்கொண்டு இத்துனை குழப்பத்துடன் இருக்கிறார்களே என்பது தான்!

மேலும் கொலோ. 2:16ல் சொல்லப்பட்ட போஜன பானத்திற்கும் பண்டிகைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கர்த்தரின் இராபோஜனபந்தியை அவர் நினைவாக செய்ய சொல்லியதை உங்களுக்கு சாதாரன போஜன பாணத்திற்கு ஒப்பிட முடிந்தால் பரவயில்லை, தொடர்ந்து அப்படியே செய்யுங்கள். பவுல் இங்கு சொல்லுவது யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியிருந்தாலும், பழைய நியாயப்பிரமான பண்டிகைகள் மற்றும் உணவு பழக்கத்தை மாற்றமுடியாமல் இருப்பவர்களை குறித்து தான். சம்பந்தமே இல்லாத ஒரு வசனதத்தை இராபோஜனப்பந்தியுடன் ஒப்பீட்டிருக்கிறீர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:01:26 PM

__________________
"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard