" நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்................ இவர்கள் யாவரும் ஒன்றாயிருக்கவும்........ ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும்........... நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவ்ர்களிலும் அன்பாயிருக்கிறதை உலகம் அறியும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். ( யோ. 17 : 20 - 23 )
இது எப்படி இருக்கும் ? என்று திகைப்புடன் நாம் கேட்கக்கூடும்.
நம் இரட்சகர் தம் பிதாவோடு பூரண இணக்கமுள்ளவராகவும் அவர் மகிமையை பிரதிபலிக்கக் கூடியவராகவும் இருந்தார்.
நாம் பாவிகளாய் நம்மில் அன்பில்லாததால் அவரைப் போல இருக்க முடியாது.
ஆகிலும் நாம் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின் பூரணமற்ற நம்மை அவருடைய பார்வையில் பூரணராகச் செய்து நம் இருதயத்தை ஆராயக்கூடிய அவரிடம் ஒன்றுபடுத்துகிறார்.
நம் இருதயம் குற்றமற்றதும் பூரண சிந்தையுள்ளதுமாக மாற்றப்பட்டபின் நம் பெலவீனங்களிலும் நாம் அவர் சித்தத்தை நிறைவேற்ற உறுதியுள்ள மனமுடையவர்களாக அவர் பேரில் நம்பிக்கை வைத்து நடப்பது அவசியமானது.
விழுந்து போன மனிதன் மீட்கப்பட்டப் பிறகு தேவன் தம் அன்புக்கு பாத்திரமுள்ளவனாக அவனை அங்கீகரிக்கிறார்.