லூக்கா 6:26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
1. சத்தியத்திற்கு விரோதமாக செயல்ப்படுவோரை "தேவ ஊழியர்கள்" என்று அழைப்பதே பெரிய தவறு.
2. சகோ சுந்தர் அவர்கள், ஆயர்/பேராயர்/பிஷப்/ ரெவரண்ட வரிசையில் "மெய்பர்" என்கிற பாஸ்டரை மட்டும் ஏன் விட்டு விட்டாரோ!?
3. இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த நாட்களில் உள்ள ஊழியர்களை அவர் "வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்" என்று சொல்லிவந்தார், அந்த வரிசையில், இன்றைய பகட்டு ஊழியர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
4. குறி சொல்லுவது தான் தீர்க்கதரிசனம் என்றால் இவரும் (பால் தினகரன்) அந்த பட்டத்திற்கு ஏற்றவரே. உலகலவில் இன்று போட்டி போட்டு நடைப்பெறும் ஒரு முக்கிய "தொழில்" இது.