" ஆகையால் பிரியமானவர்களே இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால் அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு, உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவ்ரை அறிகிற அறிவிலும் வளருங்கள். " ( 2 பேது. 3:17 - 18 )
நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை அறிந்து இவைகளை விசுவாசத்துடன் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும்போது நாம் ஞானத்திலே வளர்கிறவர்களாக இருக்கிறோம்.
நம் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தங்கள் எவ்விதம் நிறைவேறும் என்றும், இதன் மூலம் நாம் எந்த அளவுக்கு கிருபையிலே வளருகிறோம் என்றும் உணராவிட்டால் ஞானத்திலே நாம் அடுத்து முன்னேற முடியாது.
சில சந்தர்ப்பங்களில் நாம் பின் தங்குகிறவர்களாகவும் இருப்போம்.
நாம் ஞானத்தை இழக்கும் போது கிருபையையும் இழந்து போகிறோம்.
இதனால் ஞானத்தில் குறைவு பட்டு இருள் நம்மை மேற்கொள்ளும்போது தேவனுடைய வார்த்தைகளிலும் அவர் வாக்குத்தத்தங்களிலும் நம் நம்பிக்கை மங்கி உலக் வழிகளிலும் பாவத்திலும் இழுத்துச் செல்லும்.