"முந்தின நாட்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தை சகித்தீர்களே, அப்படி நடத்தப்பட்டவர்களுக்கு பங்காளிகளுமானீர்கள். "( எபி. 10: 32 - 33 )
பலமுள்ள சகோதரருக்கும் சில உதவிகள் தேவை.
சிலரின் ஆதரவும் உற்சாகமும் அவசியமானது.
நாம் எவ்வளவாக கிறிஸ்துவின் மேல் சார்ந்தவர்களாக அவர் ஊழியத்தில் ஈடுபட்டாலும் நம்முடைய சுய பலம் நமக்குப் போதாது.
நம் உடன் ஊழியர்களின் ஒத்துழைப்பும், உற்சாகமும், அன்பும், கருணையும் இவ்வூழியத்தில் இருக்க வேண்டுமென்பதே தேவதிட்டம்.
தேவ ஊழியத்தில் ஈடுபட்டு உழைக்கும் ஒவ்வொரு வேலையாளும் இக்கருத்தை ஏற்க வேண்டியது அவசியமானது.
தேவ ஊழியத்தில் தங்களை அதிகமாக ஈடுபடுத்தக் கூடாதவர்களுக்கும், தாலந்திலே குறைவுபட்டோருக்கும் இது ஓர் அரிய சந்தர்ப்பம்.
இவர்கள் உடன் ஊழியர்களாக மற்றவர்களுக்கு அவ்வூழியத்தில் உதவி ஆட்களாக இருக்க வேண்டும்.